About Me

My photo

Just one more correspondent.  9/4/1948   பிறந்தநாள்

Monday, June 21, 2010

மாமியாருக்கு ஒரு சேதி


மகனுடைய திருமண ஆல்பத்தைப் புரட்டிப் பார்த்து

எல்லா உறவுகளையும் மீண்டும் பார்த்த சந்தோஷத்தில் ஆல்பத்தை மூடி
வைத்து உறையில் போட்டேன்.


ஒரு அழகான ஆனந்தத்தை மட்டுமே பிரதிபலிக்கும் அந்த இரண்டு நாட்களை நிறைவாகப் பதிவு செய்த புகைப்படக் காரரை மனம் வாழ்த்தியது.
மணமக்களைச் சுற்றியே படங்களை எடுக்காமல் வந்தவர்களையும்
முக்கியப் பட்டவர்களை விட்டுவிடாமல்
எடுத்திருந்தார்.
முதன் முதல் வீட்டுக்கு வந்தபோது அவரிடம் விவரமாக உறவினர்கள் பற்றிச் சொல்லி இருந்தேன்.
திருமணங்கள் நிச்சயிக்கப் படும்போது,
கவனிக்க வேண்டிய பல விஷயங்களில் இந்த வீடியோவுக்கு மிகவும் பிரதான இடம் கொடுக்கப் படுவது நமக்குத் தெரியும்.

பல திருமணங்களில் தாலி முடியப்பட்ட அடுத்த நிமிடம் ஒரு படை திருமண மேடையை நோக்கி விரையும்.
அன்பு உறவினர்கள்தான்.


முன்பு இந்தக் கும்பலில் நானும் இருப்பேன்.:)

கால் தடுக்கி விழும் வாய்ப்புகள் அதிகரிக்கவே நான் கீழே நின்றே திருமணம் செய்துகொண்ட தம்பதிகளை அட்சதை தூவி ஆசீர்வாதம் செய்வதை வழக்கப் படுத்திக் கொண்டேன்.
முக்கால்வாசி வீடியோக்காரர்கள் தலையில் விழும்:)

இதைத் தடுக்கவே எங்கள் முதல் மகன் திருமண வீடியோக்ராஃபரிடம் அவரையும் அவரது கொற்றக் குடை தூக்கி(அதான் விளக்குப் பிடிப்பவர்)யையும் கொஞ்சம் இடம் பார்த்து நின்றுகொண்டு வருபவர்களை மறைக்காமல் தம்பதிகளையும் தொந்தரவு செய்யாமல், என்ன செய்யலாம் என்று கலந்தாலோசித்தோம். நல்ல் திர்மானக்களோடு அட்வான்ஸ் தொகையையும் வாங்கிச் சென்றார்.
அந்தப் பையன் மகா ஆர்வம் காட்டி படங்கள் எடுத்தார். என்னை அளவுக்கு அதிகமாகவே பலப்பல முகபாவங்களில் எடுத்திருப்பதைப் பிறகு தான் தெரிந்து கொண்டேன்.
இந்தத் திருமணம் அவரது இரண்டாவது ப்ராஜெக்ட். மிகக் கவனமாக வேலைகளைச் செய்தார்.
திருமணம் முடிந்து மகனும் மருமகளும் தேநிலவு போய் வந்த பிறகு
எல்லோரும் உட்கார்ந்து வீடியோக்களையும் பட ஆல்பங்களையும் பார்த்துக் களித்தோம்;)
அப்பதான் வந்தது சங்கடம்.:(

பெண் வீட்டுக்காரர்களின் படங்கள் குறைவாகவே இருந்தன. முக்கியமாக மாலை மாற்றும் ஒரே மாமாவே பல இடங்களில் இருந்தார். இன்னும் இரண்டு மாமாக்களைக் காணவில்லை. அதே போல மருமகளின் அப்பாவும் அம்மாவும்
திருமணக் களைப்பில் ஓய்வாக இருந்த போதும், பசி அளவு கடந்து போய்க் கடைசி பந்தியில் அவர்கள் உண்ணும் போதும் எடுத்திருந்தார்.

இப்பப் புரிந்திருக்குமே. நான்,என் கணவர் மற்ற மூன்று பிள்ளைகள் எல்லோரும் பளாபளா என்று நிறையப் படங்களில் சந்தோஷப் புன்னகையோடு போஸ் கொடுக்கச் சில படங்களில் மட்டுமே

மணமகளும் வீட்டவரும் காட்சி அளித்தார்கள். முகம் சோர்ந்து, ஒரு துளி சிரிப்பு கூட இல்லாமல்....
இதைப் பார்த்த புது மருமகள் முகத்தில் ஈயாடவில்லை.

ஏதோ திட்டமிட்டு இது நடந்த மாதிரி ஆகிவிட்டது.
உடனே வீடியோக்ராபரை அடுத்தக் கல்யாணத்துக் கிளம்பும் முன்னால்
பிடித்தோம்.
வந்தவரைப் பிடித்து உலுக்கிவிட்டான் புது மாப்பிள்ளை.

இது எப்படி ஆச்சு. அவங்க வீட்டுக்காரங்களை இப்படிக் கவனிக்காம விட்டீங்களே.திருமணம் இரண்டு வீட்டு பிணைப்பு இல்லையா. அதுக்கு அடையாளமாத் தானே ஆயிரக் கணக்கில் உங்களுக்குக் கொடுத்துப்
படங்கள் எடுக்க வைத்தது என்று அடுக்கவும்,
அந்த இளைஞன் நடுங்கிவிட்டார்.

பொதுவா பொண்ணு வீட்டுக்காரங்களோட வீடியோக்ராபர் அவங்களைக் கவனிப்பார். நான் உங்க வீட்டு பக்க ஆளுங்களையே எடுத்தேன் சார்.
அவங்க வீட்டிலயும் இப்படித்தான் அந்தப் போட்டோக்காரரும் செய்தார்''னு அவர் சொன்னதும்தான் ,
நாணயத்தின் அடுத்த பக்கம்(மணிரத்னம் கூட இந்த ஃப்ரேஸை உபயோகப் படுத்தினார்,ராவணன் முன்னோட்டத்தின் போது:) ) தெரிந்தவனாக,தெளிந்தவனாக
தன் புது மனைவியைச் சமாதானப் படுத்த உள்ளே விரைந்தான்.

மாமியாராக முதல் முதலாகச் சந்தித்தப் பிரச்சினையை எளிதில் ஊதித் தள்ளிய எங்க வீட்டுக்காரருக்கு நன்றிகள் சொல்லிவிட்டு, அவர்கள் வீட்டு வீடியோவைக் கொடுத்தனுப்பும்படி சம்பந்தியம்மாவுக்குப் போன் செய்தேன். அடையாரிலிருந்து ஒரு இரண்டு மணி நேரத்தில் அவங்களும் மத்த இரு பெண்களோடவும் , மனம்,முகம் கொள்ளாத சிரிப்போடு சம்பந்திகள் வந்தார்கள். வீடியோவோடுதான்.
ஒன்று இல்லை இரண்டு இல்லை நாலு சிடீக்கள்!!!
பார்க்கப் பார்க்க என்னுள் ஏதோ மிரள ஆரம்பித்தது.:)
நாங்கள் முதலில் பந்தலில் நுழையும் போது இருந்தோம்.
ஆரத்தி எடுத்து படிகளில் ஏறியதற்கப்புறம்,
ஊஞ்சல் காட்சிகளில் எங்கள் தலைகள் மட்டும் தெரிந்தது:)


தாலிகட்டும் நேரம் தவிர மற்ற நேரத்தில் எங்கள் யாரையுமே(மாப்பிள்ளை தவிர) பார்க்க முடியவில்லை.!!!!
அப்பாடா தானிக்கு தீனி என்று மனசு அமைதி அடைந்தது:))))))

இப்போது எல்லாம் உனக்கு நீ எனக்கு நான் என்ற சந்தோஷமான லைன் ஆஃப் கண்ட்ரோலில் சம்பந்திகள் இயங்குகிறோம்.:)


எல்லோரும் வாழ வேண்டும்.
Posted by Picasa