About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Saturday, February 02, 2008

264 திருமங்கலம் காம்ப்....


நின்று நிதானமாக அசை போட்டு எழுதுவது என்று தீர்மானம் போட்டதில்(உதவி....இ.கொ, மதுரையம்பதி:)...)


திருமங்கலத்தில் காம்ப் போட வேண்டிய நிலை.
திருமங்கலத்திலிருந்து 12 மைல் தொலைவில் பழங்கானத்தம்.


அங்கே தாத்தா பாட்டி, சித்தப்பா,சித்தி அவர்களுடைய மூன்று குட்டிக் குழந்தைகள்.
தாத்தா எல்லாத் தாத்தாக்களையும் போலக் கண்டிப்பானவர். அதில் என் பெரிய தம்பியை மட்டும் ரொம்பவே பிடிக்கும்.


கேட்ட கேள்விக்கு டக் டக்னு பதில் சொல்வானாம்.


அதுவும் டார்ச் ஆன் செய்ததும் வெளிச்சம் வருகிறாப்போலப் பளிச்சுனு சொல்லிடுவானாம்:))
அதனால் தாத்தா பக்கம் அதிகம் நானும் சின்னவனும் போகமாட்டோம்.


அநேகமாகக் காலை தினமணி படிக்கவேண்டியது என் வேலை. காலைப் பால் குடித்ததும் கிணற்றங்கரை.


அங்கு கிணர்ரிலிருந்து தண்ணீர் இழுகும் வேலை தாத்தாவுடையது. அவர் அங்கேயே குளித்து தன் துணிமணிகளைத் தோய்த்து விடுவார்.


அவர் தண்ணீர் நிரப்பும் குடங்களையும் வாளிகளையும் வீட்டுக்குக் கொண்டு வருவது எங்கள் பொறுப்பு.


தாத்தாவுக்கு அப்போது வயது எழுபத்தைந்து. பாட்டிக்கு எழுபது.

அபூர்வமான தம்பதிகள். பாட்டிக்கு வெடுக் நிறைய உண்டு.

எங்கள் சாப்பாடு முடிந்ததும் என்னை அழைப்பார். 'தாத்தா தூங்கியாச்சா பாரு ''என்பார்.

பூனையாய் தாத்தா அருகில் போய், அந்த ஈசிசேர் அருகில் நின்று,

தாத்தாவின் விசிறி இப்படி அப்படி போகிறதா,

இல்லை தாத்தா மேல இருக்கா என்று பார்ப்பேன்.


ஒரு நாளாவது தாத்தா கண் திறந்து என்னைப் பார்க்காமல் இருந்தது இல்லை.:)


'என்ன வேணும்? உங்க பாட்டிக்கு டவுனுக்குப் போணூமா?

என்று கேட்பார்.

'ஆமாம்னு சொல்லுனு' பின்னாலிருந்து குரல் வரும்.


வடக்கில மின்னலடிக்கிறது. காத்தோட மழை வரும். நாளக்குப் போலாமே சுண்டைக்காயும் மணத்தக்காளியும் நாளைக்கும் இருக்கும்'' என்பார்.

பாட்டியிடமிருந்து பதிலே வராது.

ஒரு அழகிய அரக்குப் பட்டுப்புடவை கட்டி எப்பவோ பாட்டி ரெடி.

அவருக்குத் தங்கைகள் மதுரை புதுத்தெருவில் குடியிருந்தார்கள். வாரத்தில் இரண்டு நாட்கள் அங்கே போய் அரட்டையும் டிபனும் உள்ளே போக வேண்டும் பாட்டிக்கு.

அநேகமாக நெல்லையில் ஒருவருமே இல்லாத நிலையாகி விட்டது.


பாட்டியின் வயது ஒத்தவர்கள் வக்கீல் புதுத்தெரு, நாயக்கர் புதுத் தெரு, சொக்கிகுளம், நரிமேடு,வசந்தநகர் என்று

குடி புகுந்து விட்டார்கள்.


தாத்தாவிற்கு பூஜையும் ராமனும் அவன் நாமமும் போதும்.

அவரைப் பார்க்க எல்லோரும் வந்த வண்னம் இருப்பார்கள். அதனால் உலக செய்தி அத்தனையும் அவருக்கு வந்துவிடும்.


தனது நெருங்கிய செல்வந்தராயிருந்த உறவிடம், அவர் வாங்கிக்கொண்ட உதவி டிவிஎஸ் பஸ் பாஸ் ஒன்றுதான்.

அதுவும் பாட்டிக்கு மட்டும்.

தான் எங்கயாவது போக வேண்டும் என்றால், சித்தப்பாவிடம் சொல்லி வண்டி ஏற்பாடு செய்து கொள்ளுவார். அதுவும் வெகு அபூர்வம்.
மிக உயர்ந்த கொள்கைகள். நேர்மை., இவைதான் தாத்தாவின் அடையாளங்கள்.
எங்கேயிருந்தெல்லாமோ தாத்தாவுக்குத் தபால் வரும்.
பாரதீய வித்யா பவன் பத்திரிகை பவன்ஸ் ஜர்னல்.
மஞ்சரி பத்திரிகை,ஜே அண்ட் ஜே டீசேன் என்ற மருத்துவ பத்திரிகை. இவைகள் எல்லாம் சில.
இந்த மருத்துவத்தில் அவருக்கு இருந்த நம்பிக்கை ,அம்மா வழியாக எங்களையும் பிடித்துக் கொண்டது.
பழங்கானத்தத்திலிருந்து திருப்பரங்குன்றம் வரை நடந்தே வருவார்.
அங்கிருக்கும் தபால் அலுவலகத்திலிருந்து, எங்கள் தந்தாஇயுடன் கட்டுக் கட , கட தந்தி மொழியில் பேசுவார்.;))
எங்களுக்கும் அதை எப்படி மொழி பெயர்ப்பது என்று சொல்லியும் காட்டுவார்.
பாட்டிக்கு அப்போது மண் சட்டிச் சமையல் தான் வழக்கம்.
அதில் செய்யும் கீரைக் குழம்பும்,தோய்த்த கட்டித் தயிரும்,
ம்ம்ம்.நினைக்கத்தான் வேண்டி இருக்கிறது.
கைமுறுக்கு, திரட்டிப்பால் இதெல்லாம் பாட்டி கையால்
செய்து வந்து வெண்கலப் பானையில் அடைக்கலமாகும்.
பரணுக்கு ஏறிவிடும்.
தினம் மதியம் மூன்று மணிவாக்கில் ஆறு குழந்தைகளுக்கும்,
இரண்டு சிறுமலைப் பழங்களும் வாழைச்சருகில் திரட்டிப்பாலும்,இரண்டு முறுக்குகளும் விநியோகம் ஆகும்.:)
ஆறு மணிக்கு விளையாட்டு முடிந்தால் கைகால் கழுவி சஹஸ்ரநாம பாராயணத்துக்கு வந்து விட வேண்டும்.
ஏழரை மணிக்கு பாட்டி பெரிய அரிக்கஞ்சட்டி நிறைய மோர் சாதம் பிசைந்து கூடத்துக்குக் கொண்டுவருவார்.
நாள் முழுவதும் ஆடின ஆட்டம் வயிறு கூப்பாடு போடும்.
பக்கத்தில் சித்தி உட்கார்ந்து மாய மோதிரம், மந்திரக்குதிரை என்று கதைகள் சொல்ல, எல்லோர் கைகளிலும் சோறு வைத்து நடுவில் குழித்துக் கொண்டால்
மதியக் குழம்போ,இல்லை மாவடுவோ கிடைக்கும்.
சாப்பிட்ட இடத்தைச் சுத்தம் செய்ய(செய்யாமலிருக்க:)))
எனக்கும் தங்கைகளுக்கும் வாக்குவாதம் நடக்கும்.
தாத்தா சிரிப்புடன் எங்களை விலக்கி டைம்டேபிள் போட்டுக் கொடுப்பார்.
பிறகென்ன, ஒரு பெரிய கல்யாண ஜமக்ககளம் விரிக்கப்பட்டு ஒரு தலையணைக்கு இருவர் என் , தாத்தா கட்டிலருகில் படுப்போம்.
தாத்தா ராம நாமம் சொல்ல உறங்கிவிடுவோம்.
அடுத்த பதிவில் திண்டுக்கல்லுக்குப் போகலாமா:)
15 comments:

வல்லிசிம்ஹன் said...

அதெல்லாம் நின்னு நிதானமா எழுதியாச்சு. இனிமே ஒருத்தரும் மூச்!அப்டினு சொல்ல வேண்டி வராது:))

பாட்டியும் நானும் மதுரை வலம் வந்தது விட்டுப் போச்சு. சேர்த்துக்கொள்ளவும்:))))))
அத்தோட ஏகப்பட்ட எழுத்துப் பிழைகளும் இருக்கு. மாப்புப்பா.

பாச மலர் said...

கொஞ்சம் கொஞ்சமா நகர்ந்து வந்து என் ஊர் திருப்பரங்குன்றத்தைத் தொட்டுட்டீங்க..

தாத்தா பாட்டி செல்லமே ஒரு இனிய அனுபவம்தான்..

வல்லிசிம்ஹன் said...

பாசமலர்,
என்னப்பா.
எனக்குத் தெரிஞ்சவங்களா இருப்பாங்க போலிருக்கே உங்க அத்தை!!
நாங்களும் அதே மீனாட்சி அம்மன் கோவில் தெருவில்,
அங்குவிலாஸ்னு எழுதின கட்டிடத்தில் தான் இருந்தோம். அதாவது அந்த புகையிலை
:))கோடௌனுக்கு அடுத்த வீடு.!!!
ரொம்ப நன்றிப்பா. இவ்வளவு சீக்கிரம் படிச்சுடீங்க. அதுவும் சனிக்கிழமை!!!

delphine said...

நல்ல நிதானமா , நிறுத்தி, நிறைய இடம்விட்டு அழகாக எழுதிருக்கீங்க வல்லி.

பாச மலர் said...

சனிக்கிழமை எங்க ஊர்ல(சவுதி அரேபியா) வாரத்தின் முதல் வேலைநாள்...

அத்தையை உங்களுக்குத் தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்..1985ல் தான் அந்த வீட்டு மருமகள் ஆக வந்தார்கள்.
பெரும்பாலும் ஆசிரியையாக திருநெல்வேலியில் இருந்தவர்கள்..

வல்லிசிம்ஹன் said...

வரணும் டெல்ஃபீன்.

நிறைய இடம் விட்டு எழுத்துகள் பதிவாகி இருக்கு.:)
பாராவுக்கும் இன்னொரு பாராவுக்கும்
ஒரு மைல் தூரம் இருக்கும் போல!!!

வல்லிசிம்ஹன் said...

1985 ஆ???
பாசமலர் சான்சே இல்லை.:)

ஏதோ அல்ப ஆசை. பழைய நட்பு ஏதாவது காத்திருக்கிறதோ என்று.

நல்லதொரு வாரம் அமைய வாழ்த்துகள்.

தி. ரா. ச.(T.R.C.) said...

தாத்தா கட்டிலருகில் படுப்போம்.
தாத்தா ராம நாமம் சொல்ல உறங்கிவிடுவோம்

கொடுத்து வைத்தவர் நீங்கள்
அடபழங்கநத்தமா அங்கே குமரகம் பஸ் ஸ்டாப்பு கிட்டே 5 வீடுகள் ஒரே ஸ்டோரிலிக்குமே தெரியுமா?

கோபிநாத் said...

வல்லிம்மா

சுவரஸ்சியமாக இருக்கிறது மேலே செல்லுங்க...தமிழ்நாட்டையே ஒரு ரவுண்டு அடிச்சிங்க போல.! ;))

துளசி கோபால் said...

அருமைப்பா. அதிலும் வட்டமா புள்ளைங்க எல்லாரும் உக்காந்து கையிலே சாதம் வாங்கி.....

கொசுவத்தி ஏத்திவச்சிருக்கு மனசு.

திருமங்கலம், பழங்காநத்தம், மதுரை, திருப்பரங்குன்றம் இதெல்லாம் பக்கம் பக்கமா இருக்குன்னு இப்பத்தான் தெரியுது.

அந்தக் காலத்தில் இதெல்லாம் தொல்லைதூர இடங்கள்ன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்:-))))

வல்லிசிம்ஹன் said...

வரணும் தி.ரா.ச.

நாங்க இருந்த பழங்காநத்தத்தில், பஸ் ஸ்டாப்பிற்கு எதிரே கல்லறை (க்ரேவ்யார்ட்) இருக்கும்:)

அந்த ஸ்டாப்புக்கு அப்போ பழங்கானத்தம்னு தான் பேரு.

பாட்டி தாத்தா இருந்த இடம் சௌடாம்பிகா லாரி சர்வீஸ் பக்கத்தில ஒரு பெரிய தோட்டமும் பங்களாவுமாக இருந்த இடம். அந்தத் தோட்டத்துக்கும் வயல்காடுக்கும் நடுவில் ஆறு வீடுகள் கட்டி விட்டிருந்தார்கள்.அந்தப் பங்களாவுக்கு சொந்தக் காரங்க கர்நாடகாக்காரங்கனு ஞாபகம்.. நினைக்கிறேன்.
சின்ன வயசினால எல்லாம் பெரிய அளவில் சொல்லமுடிகிறது:)
அந்த இடத்திற்குப் பெயர் கோகுலமா, த்வாராகாவானு நினைவில்லை:)
நல்ல மனிதர்கள். மீண்டும் போய்ப் பார்த்தால் தெரியும்.நன்றி சார். நீங்களும் அங்கே இருந்துஇருக்கீங்களா.??

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கோபிநாத்.
நெல்லையில் ஆரம்பித்து,
இப்போ இருக்கும் சென்னை வரை எல்லா இடங்களையும் பார்த்தாச்சு.
தேனி,பெரியகுளம் இவை எல்லாம் தவிர.

போரடிக்குதுனு விடாம படிக்கிறீங்களே!!!!!:)

வல்லிசிம்ஹன் said...

துளசி,
நான் எந்த ரோடை உலக மகா பெரிய சாலைனு நினச்சேனோ,
அதை 36 வருஷம் கழிச்சு பார்த்தபோது, அதுவா இதுனு போயிடுத்து.

ஆமாம் கைசாதம் மகிமை எதற்கும்
வராது. கொசுவத்திக்கு என்னப்பா குறைச்சல்:))

கீதா சாம்பசிவம் said...

பழைய சாதம், இப்போ நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது, அதுவும் கல்சட்டி மோர் வாசனையே தனி இல்லையா? ரொம்ப வருஷங்களுக்கு நாங்களும் அதையே விடாமல் பிடிச்சுட்டு இருந்தோம். :(

வல்லிசிம்ஹன் said...

நான் இன்னும் பழைய சாதமெல்லாம் விடவில்லை கீதா.

கல்சட்டியெல்லாம் போச்சு. ஊறுகாய்ப் போட்டு வைக்கும் கல்சட்டியில் இப்போ பொன்சாய் எலுமிச்ச மரம் இருக்கு:)