About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Wednesday, March 28, 2007

ஓராயிரம் நாமம்எந்த ஒரு நாமத்தைச் சொன்னால் ஆயிரம் நாமம் சொன்னதால் கிடைக்கக் கூடிய வீடு பேறு கிடைக்குமோ
அந்த நாமம் ராமா உன்னுடையது தான்.
ராம,ராம ராம என்னும் சொல்லும் பாக்கியம்
நினைக்கும் புண்ணியம்
என்றும் எல்லோருக்கும் வேண்டும்.
ஸ்ரீராமன் பிறந்தான்.
புல்லும் எறும்பும் கூட முக்தி பெறும்விதமாகத் தன்னுடன் அழைத்துச் சென்றவன், அயோத்தி மக்கள் உய்ய வழி செய்த எம் பெருமான் நாமம்
வாழிய வாழியவே.

22 comments:

இலவசக்கொத்தனார் said...

இன்னிக்கு ராம நவமி ஸ்பெஷல் பதிவுகள் நிறையா வரும் அப்படின்னு நினைச்சேன். நீங்க, கேஆர்எஸ், ராமநாதம் போட்ட பதிவுகளைப் படிச்சாச்சு.

ராம ராம ராம ராம ராம ராகவா
சீதா ராம ராம ராம ராம ராம ராகவா!

ambi said...

ராம நாமத்தின் மகிமையே மகிமை.
நான் கூட கொஞ்சம் கிறுக்கி இருக்கேன். முடிந்தால் படிச்சு பாருங்கோ!
ஜெய் ஷ்ரிராம்!

துளசி கோபால் said...

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே....
சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.

ராமன் பெயரைச் சொன்னாலெ சகஸ்ரநாமம் படிச்ச ( சொல்லிய)
புண்ணியம், பலன் எல்லாம் வந்துரும்.

மதுரையம்பதி said...

ஓ! உங்களுக்கு சற்று தாமதமாக அவதரித்தாரோ?.....புரிகிறது.

குமரன் (Kumaran) said...

பரமேஸ்வரனே பார்வதியிடம் சொன்ன கருத்தல்லவா இது? ஆயிர நாமத்தை எளிதாகச் சொல்ல என்ன வழி என்று கேட்டதற்கு இராம நாமம் சொல்வதே வழி என்றல்லவா ஈஸ்வரன் சொன்னார். தாரக மந்திரமான இந்த இராம நாமத்தைத் தானே காசியில் இறப்பவர்கள் காதில் சொல்லி முக்தி தருகிறான் விசுவநாதன்.

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமுயும் சிதைந்துத் தேயுமே
சன்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்றிரண்டெழுத்தினால்

நாடிய பொருள் கை கூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியதாக்கும் வேரியம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறு பட்டழிய வாகை
சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவார்க்கே

வல்லிசிம்ஹன் said...

வரணும் கொத்ஸ்.
ஆமாம் எல்லா பதிவையும் நானும் படிச்சேன்.

ராமன்,ராஜீவ லோசனன்,ராகவசிம்ஹம்
எல்லோரையும் காப்பாத்துவான்.

வல்லிசிம்ஹன் said...

அம்பி, வரணும்.
உங்க பதிவையும் படிச்சுட்டேன்.
இப்படியொரு பக்கம் அம்பிக்கு இருக்கா?

கோவிலுக்குப் போக முடிஞ்சுதா?

வல்லிசிம்ஹன் said...

துளசி ,
ராமருக்கு எத்தனை வேலை பாருங்கோ.
கிழக்கிலேருந்து ஆரம்பிச்சு, இந்தியா,
நடுநாடு,அப்புறம் இந்த ஊருக்கு வந்தார்.:-)

வல்லிசிம்ஹன் said...

மௌலி வரணும்.

ஆமாம், இங்கே சூரியக் குல மன்னவன் சூரியன் உதித பிறகுதானே வரணும்.
அவர் தேர் இங்கே வர 12 மணிநேரம் ஆகிவிடுகிறது.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் குமரன்.
அந்த ஸ்லோகத்தையே தமிழில் எழுதினேன்.
இங்கே ஒருபுத்தகம் கொண்டுவந்தேன். அதில் விவரமாக
சஹஸ்ரநாம உரை போட்டிருந்தது.

இவ்வளவு கஷ்டப்பட்டு
(இருபது நிமிஷம்:-)) சொல்லாட்டாப் போகிறது.
ராமா என்றாவது சொல்லுங்களேன்
என்று எழுதி இருந்தது.
நன்றி குமரன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

வல்லியம்மா நல்ல நாளில் இந்த ஸ்லோகத்தை அளித்ததற்கு நன்றி.
பார்வதி தேவி கூறுகிறாள்
விஷ்னுவின் ஸஹஸ்ரநாமம் எப்போதும் ஞானவான்களால் எந்த உபாயத்தால் எளிதில் ஜபிக்கப்ப்டுகிறதோ அதை நான் சிவபெருமானான் உங்கள் வாயால் கேட்கப் பிரியப்படுகிறேன்.
ஈஸ்வரன் கூறுகிறார்:-
அழகிய முகத்தினளே."ஸ்ரீ ராம ராம ராம" என்று மனத்திற்கு இனியவனான ராமனிடத்தில் நான் ரமிக்கிறேன். அந்த ராமா நாமம் ஸ்கஸ்ரநாமத்திற்குச் சமம். அழகிய முகத்தினளே ஸ்ரீ ராம நாமமே ஸகஸ்ரநாமத்திற்கு சமம்.

ஒருமுறை ஸ்கஸ்ரநாமம் சொன்னால் ராமா என்று சொன்ன பலன் என்று எடுத்தக்கொள்ளக்கூடாது.ஆயிரம் முறை விஷ்ணுவின் நாமங்களைச் சொன்ன பலன் தரும்.
இதுவே ராம் நாமத்தின் மகிமை.

வல்லிசிம்ஹன் said...

வாங்க தி.ரா.ச.
கலியுகத்தில் வேற என்ன வேணும்?
நாம சங்கீர்த்தனம் தான்.

இவ்வளவு சுலபமாக ராமநாமா
காத்திருக்கிறது!
அயோத்தியின் புல் பூண்டு,எறும்பு முதற்கொண்டு அத்தனை உயிர்களையும் பதினோரு ஆயிரம் ஆண்டுகள் நல்லாட்சி புரிந்து
தன்னுடனே அழைத்துச் சென்ற மகானுபாவா ராமா உன்னை நினைக்காத நொடியும் இருக்கலாமோ.

ambi said...

//இப்படியொரு பக்கம் அம்பிக்கு இருக்கா?//

:)
ஏற்கனவே சில பதிவுகள் எழுதி இருக்கேன்.

//கோவிலுக்குப் போக முடிஞ்சுதா?
//
முடியலை. வீட்டுலேயே விளக்கேத்தி உம்மாச்சி கும்டாச்சு! :)

இன்னிக்கு ஒன்னும் எழுதலையா?

வல்லிசிம்ஹன் said...

அம்பி,
சம்சாரம் வரும் வேளையில் ஜானகிராமனை நினைப்பது நன்மைதான்.

எல்லாவித சௌபாக்கியங்களும் உங்கள் வாழ்க்கையில் நடக்கும்.
உங்கள் அம்மா அப்பாவுக்கும் தம்பிக்கும் வாழ்த்துக்கள்.

ambi said...

//எல்லாவித சௌபாக்கியங்களும் உங்கள் வாழ்க்கையில் நடக்கும்.
உங்கள் அம்மா அப்பாவுக்கும் தம்பிக்கும் வாழ்த்துக்கள்.
//
Thank U very much ammaa! i'm sooo grateful to U!
By aAll your blessings!

வல்லிசிம்ஹன் said...

அம்பி ,
இனிமேல்தான் எழுதணும். குடும்பம் இல்லையா.
ஆணியோ, சுத்தியோ
எல்லாமே நாமதான்.
இந்த மாதிரிக் கேக்கிறவா இருக்கும் போது எழுத கசக்குமா:-)

செல்லி said...

//அந்த நாமம் ராமா உன்னுடையது தான்.
ராம,ராம ராம//
நல்ல நம்பிக்கையோடு சொல்லுவோருக்கு அதன் மகிமை தெரியும்.
கொள்ளை கொள்ளும் படங்களுடன் நல்லதொரு ராம நவமி விசேட பதிவு!
நன்றி, வல்லி

ambi said...

//குடும்பம் இல்லையா.
ஆணியோ, சுத்தியோ
எல்லாமே நாமதான்.//

உங்காத்துலயும் மாமா தான் சமையல்!னு நினைத்தேன், கீதா மேடம் வீட்டில் சாம்பு மாமா தானாம்! TRC சார், கண்ணபிரான் ரவி தான் சொன்னார்கள். :p

//இந்த மாதிரிக் கேக்கிறவா இருக்கும் போது எழுத கசக்குமா//
:))

வல்லிசிம்ஹன் said...

வாங்க செல்லி.
ராமன் என்று நினைத்தாலே மனதில் பயம் இன்றிப் போகும் என்று எங்கள் தந்தை சொல்லிக் கொண்டிருப்பார்.
நமக்கும் ஒரு துணை கிடைத்தது.
நீங்கள் தொடர்ந்து படிப்பதற்கு நன்றி செல்லி.

வல்லிசிம்ஹன் said...

அம்பி, சமையல் மத்திரம் இங்கெ சிங்கத்துக்குத் தெரியாது.

மற்றபடி எல்லா வேலைகளையும் பார்த்துக் கொள்ளுவார்.:-)

தி. ரா. ச.(T.R.C.) said...

வல்லியம்மா எவ்வளவு நல்லா ராமயாணப் ப்ரசங்கம் செய்துகொண்டு இருக்கும்போது அம்பி நீ என்ன நடுவிலே அதிகப்பிரசங்கம் செய்யரது.
இரு இரு இன்னும் 15 நாள் தானே உன் ஆட்டமெல்லாம்.
வல்லியம்மா அம்பி கேஸ் எப்படி தெரியுமா ஸ்ரீரமானைத் தேடி சீதாலக்ஷிமி வருகிறாள்.

வல்லிசிம்ஹன் said...

பிரசங்கம்னே முடிவு செஞ்சாச்சா?:-)
தி.ரா.ச, வாங்கோ.
அம்பிக்குக் கல்யாணமா?

இன்னும் 15 நாட்களா?
அடடா. அதுதான் புடவை சூடாமணினு பதில் போடறாரா.

சித்திரை பிறந்ததும் முதல் முகூர்த்தமோ!!
நன்றாக இருக்கணும்.
எங்கள் எல்லோரிடமிருந்தும் அமோக வாழ்வு கிடைக ஆசீர்வதங்கள் அம்பிக்கு மனசர அனுப்புகிறோம்.
நல்ல சேதிக்கு நன்றி தி.ர.சா.
நீங்களெல்லோரும் கல்யாணத்தின் போது எங்களையும் நினைத்துக் கொள்ளுங்கள்.