About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Wednesday, March 21, 2007

நானொரு 'வியர்டூ'ங்க


வியர்டூ என்கிற வார்த்தையே எனக்குத்தான் சொந்தம்னு ந்இனைச்சேன்.
பார்த்தால் இணணயத்தில் எல்லோருமே கிட்டத்தட்ட நம்ம சைடு தான்.
ஒவ்வொருபதிவாப் படிச்ச்ட்டு
வரும்போது ரரகவனின் தனி மெயில் வந்தது.
கிடைச்ச சான்சை விடலாமா/
நன்றி ராகவன்.
மனம்,சொல், நடவடிக்கை எல்லாமே ஒரு
மொத்தமான ''டொரிக் டொரிக் '' கும்பலைச் சேர்ந்தவள் நான்.
இந்த 'டொரிக்' வார்த்தை எங்களுக்குப் ப்இடித்ததற்குக் காரணமே பால் மணம் மாறாப் பச்சைபிள்ளையாக எங்களைப் பாவித்துக் கொள்ளுவதுதான்.
வார்த்தை உபயம்.....ஆஸ்டரிக்ஸ் காமிக்ஸ்.
நெர்ட் என்று சிறில் எழுதி இருந்தார்.
அது கொஞ்சம் அறிவார்ந்தவர்கள் உபயோகிக்கும் சொல்.
நான் எழுத வேண்டுமானால் கொஞ்சம் கன்ஃப்யூஸ்ட்.
எதிலேயும் தயக்கம்.
முடிப்போமா மாட்டோமா என்று.
எல்லாவற்றையும் பிள்ளையார் தலையில் போடுவதும் உண்டு.
அவருக்கு வேண்டிகொண்டால் ஒரெ ஒரு தேங்காயில் விஷயம் பூர்த்தியாகிவிடும்.
முடித்தால் நன்றாக இருக்குமா என்று மற்றுமொரு சந்தேகம். முடிந்ததற்குப் பின்னால்போனால் போகட்டும் போடா சொல்வதும் உண்டு.
பேசுவதும் அனேகமாக வம்பில் முடியும்.
திருமணமான ஆதிநாட்களில் இவருக்கு என்னை வெளியில் அழைத்துப் போகவே பயம்.
அதுவும் கடைக்கு.
கோயம்பத்தூரில் குளிர் மிகுதியாக இருக்கவே ஹீட்டர் வாங்க ஒரு கடைக்குப் போனொம்.
'ராகொல்ட் வாங்குங்க சார்' இது புதுசு''
(அப்போது) கடைக்காரர்.
என்ன விலை/--நான்
2150ரூபாய்மா.
இவர் வாயைத் திறக்கும் முன்னால்
நான்'' எங்களுக்கு அவ்வளவுதான் போனசே'(bonus)
வேணாம்பா'
எப்படி இருந்திருக்கும் இவருக்கு. அப்போதுதான் அவர் வேலை பார்த்த பெரிய 'கார்'க் கம்பனியில்
டாப் போஸ்ட் கிடைத்து இருந்தது'
அனேகமாக இவரைத் தெரிந்தவர்கள் நிறைய வரப் போக
இருப்பார்கள்.
கடையை விட்டு வெளியில் போய் ஜீப்பில் ஏறி உட்கார்ந்துவிட்டார்.
கடைக்காரர் முகத்தில் ஒரு knowing Smile.
அப்புறம் எங்க சமாதானக் கொடி பறக்க 10 நாளாச்சு.
இப்போ நினைப்பைப் பார்க்கலாம்.
'செண்டி,செமி' இது குடும்பத்தில் எனக்கு
உள்ள பட்டம்.
குளிர், திருட்டு பயம் வாசலில் கோலம் விடிஞ்சப்புறம் போடலாம்னால்,
சூரியன் உதிக்கும் போது அவர் முதலில் எங்க வீட்டுக்குத் தான் வருவதாக நினைத்துக் கொண்டு
கோலம் போடுவது.
பயம் இல்லாமல் இல்லை. அப்படித்தான் ஒரு தரம்,
கோலம் போட்டு நிமிர்ந்தால் யாரோ கருப்புப் போர்வை போத்திக் கொண்டு ஒரு ஒருவம்.
அம்மானு கரகர குரல்.
அடுத்த நிமிடம் கோலமாவு டப்பா கீழே.
செம்மண்ணில் காலை வைத்து வழுக்கி நானும் கீழே....
போச்சு!கால் உடஞ்சாச்சு,அவன் வர்ப் போறான். இன்னிக்குப் பாத்து சங்கிலி வேற கழட்டலை.
'அய்யாய்யோ ஆபத்து ஆபத்துனு'கத்த நான் என்ன மதுரை வீரன் ஈ.வி.சரோஜாவா!
'அய்ய அம்மா உழுந்திட்டீங்களெ, 'நாந்தான் கரும்பெடுத்து வந்தேமா. செல்வம்னு ' அவன்
போர்வையைக் களைய ,படபடப்புக் குறைந்து
தத்தி தத்தி உள்ள வந்தேன்.
எண்ணம்னு பார்க்கப் போனால்
விபரீதமாகத் தான் எல்லாம் தோன்றும்.மூடநம்பிக்கை கிடையாது.:-) சிம்பிள் டிடக்ஷனில் இது நடந்தால் அதுவரும். அந்த மாதிரி.
போன் அடிக்கும்போதே இவர்தான் கூப்பிடுகிறார்
என்று சொல்வேன்.
ஒரு பாட்டுக் காதில் கேட்டுக் கொண்டே இருக்கும்
ரேடியோவைப் போட்டால் அந்தப் பாட்டு வரும்.
இதுக்கெல்லாம் சமாதானங்களும் உண்டு தெரியும்.
இருந்தாலும் நமக்குத் தனி பவர் இருக்கு
என்று நம்புவதில் எனக்கு ஒரு திருப்தி.
காக்கா கத்தினால் விருந்தாளி உண்டு.
தென்னைமரக் கீற்று ஒரு மாதிரி ஆடினால் எங்கிருந்தோ நாகைப் புயல் வர சாத்தியக் கூறுகள் உண்டு.
கடல்பக்கம் போய் நின்றால் ஆனந்தம் ,துக்கம் இரண்டும் வரும்.
ரயில் பயணங்களில் ஜன்னலோரத்தில்
உட்காரும்போது அந்தத்தாளம் என் பாட்டிற்கு இசைவதாகவும்
தோன்றும். இன்னும் நிறைய கோளாறுகள் உண்டு.
வயசாயிடுச்சு இல்லையா. தெளிந்துவிட்டேன்.
மறந்தும் விட்டேன்.:-0)
நான் 'வியர்டூ' பற்றி எழுத அழைக்கும் நபர்கள்
தேசிகன்,
துளசிகோபால்,
தி.ரா.ச,
கீதா சாம்பசிவம்,
பிரேமலதா
கண்டிப்பாக நல்லாவே சொல்லுவார்கள்
.
ஐய்யொ இல்லைப்பா நான் யாரையும் weirdu னு சொல்லலை.
வந்து எழுதினால் நல்லா இருக்கும்.
டிஸ்கியும் போட்டுடலாம்.
எழுத வது ஒரே வருடம் ஆவதாலும், கோர்வையாக எழுதத் தெரியாத அரகுறை நினைப்பினாலும்
இந்தப் பதிவு எப்படி வந்திருந்தாலும்
நீங்க எல்லாரும் நல்லா இருக்குனு மட்டும் சொல்லிடுங்க.:-)


26 comments:

கோவி.கண்ணன் said...

//நாகைப் புயல் வர சாத்தியக் கூறுகள் உண்டு.//

வந்துட்டேன்.
:)

G.Ragavan said...

வாங்க வாங்க. ஒங்களையும் ஜோதியில இழுத்தாச்சு. :-)

நல்ல வியர்டுதாங்க நீங்க. போனஸ் எல்லாம் வெளிய சொல்வாங்களோ! பாவம் அவர். :-))))

இப்படித்தான் ஒரு பெரியவர்...எங்க ஊர்ல என்னோட பக்கத்துல வந்து உக்காந்தாரு. என்ன தம்பி...என்ன பண்றீங்கன்னாரு. சொன்னேன். எடுத்த எடுப்புலயே இவ்வளவு இருக்குமா சம்பளம்னு கேட்டாரு. அத விடக் கூடன்னு சொன்னேன். அவர் ஏற்கனவே சொன்னதுல கொஞ்சத்தக் கூட்டி...இவ்வளவு இருக்குமான்னு திரும்பக் கேட்டாரு. இல்ல..இதவிடக் கூடன்னு சொன்னேன். இப்பிடியே அவரு கேக்கக் கேக்க...கடைசி வரைக்கும் சொல்லவே இல்லையே. என்னத்துக்குக் கேட்டாரோ!

என்னது? கருப்பு முக்காடு போட்ட உருவமா? அடேங்கப்பா! நல்லாவே பயந்திருக்கீங்க.

சரியா அஞ்சு பேரைக் கூப்பிட்டிருக்கீங்க. அவங்களும் வந்து கலக்குவாங்கன்னு நம்புவோமாக.

இலவசக்கொத்தனார் said...

நீங்க வியர்டோதான்!
எல்லா சாதாரண மனுஷங்க மாதிரி!!

வல்லிசிம்ஹன் said...

அது சரி. மழையே இல்லைனு சொன்னாங்க நம்ம ஊரில.
நீங்க வந்தச்சு இல்லை. இனிமேல் கவலை இல்லை.:-)
நன்றி கண்ணன்.

வல்லிசிம்ஹன் said...

ரொம்ப நன்றி ஜி.ரா.

எல்லோரும் ரொம்ப அழகாக எழுதி வருகிறார்கள்.
உண்மையிலேயே கோளாறக இல்லாதவர்கள் அவ்வளவு புத்திசாலியா இருக்க முடியாது என்பது என் தீர்மானம்:-0)
ஆமாங்க இன்னும் அவருக்கு மறக்கலை.
இன்னும் அதைப் பத்திப் பேசினா அவரே பாய்லராயிடுவார்.:-)
சாமர்த்தியம் எல்லாம்' பால் மாதிரி போட்ட முடியாது பாருங்க.!
அதி சூப்பர் உஷார் பார்ட்டி நீங்கதான்.!

வல்லிசிம்ஹன் said...

ஆளையே காணோமே.

வியர்டூ' க்கு மூக்கில வேர்த்து விட்டதோ:-0)
நான் வியர்டூதான். படிக்கிறவங்க??????

தருமி said...

//நல்லா இருக்கு //
(வேற ஏதும் சொல்லக்கூடாதுன்னு சொல்லிட்டியல்லா..?)

வல்லிசிம்ஹன் said...

தருமியே சொல்லலேனா எப்படி?
இத்தனைக்கும் எல்லா நிகழ்ச்சியும் நான் எழுதவில்லை.

பரவாயில்லை வந்ததே போனஸ்தான்.:-)

தென்றல் said...

நல்லா இருக்கு-ங்கோ ..;)

துளசி கோபால் said...

படிச்சுச் சிரிச்சுக்கிட்டே வந்தேன். கடைசியிலே நம்மளை இப்படி மாட்டி விட்டுட்டீங்களே!

வியர்டுக்கெல்லாம் வியர்டா நான் இங்கே குந்திக்கிட்டு இருக்கறது உங்களுக்குத்
தெரிஞ்சுபோச்சேப்பா....:-)

வல்லிசிம்ஹன் said...

துளசி,நீங்க வியர்டூ திலகம்னு வேணா பேரு கொடுத்துடரேன்..:-) நான் ஒண்ணும் சொல்லலை.
எழுதிடுங்க.
உங்களை இன்னும் கேக்காம விட்டு வச்சாங்களே. இல்லைனா நான் எங்கே போறது ஆளுக்கு.
நன்றி துளசி.
இதுதான் ஜோதிலே ஐக்கியமா!!!

வல்லிசிம்ஹன் said...

உண்மையாவா. இன்னும் எழுதாமப் போனேனே. ரொம்ப அசட்டுத்தனம் சொல்லிடக் கூடாது. நமக்கும் ஒரு மதிப்பு இருக்கில்ல.:-)

கீதா சாம்பசிவம் said...

ம்ம்ம்ம்ம், நான் weirdனு சொல்லணும்னு சொன்னா அது பதிவு போடற விஷயத்திலே மட்டும் தான். என்னையும் அழைச்சிருக்கீங்க! சரி, பார்க்க்றேன். தனி மெயில் அனுப்பி ரொம்ப நாளா உங்க கிட்டே இருந்து பதிலே வரலை! மெயில் வந்ததா இல்லையா?

ambi said...

நரசிம்ஹர் இல்லையா? அதான் மூக்குக்கு மேல கோபம். பரவாயில்ல விட்டு விடுங்க.

//இந்தப் பதிவு எப்படி வந்திருந்தாலும்
நீங்க எல்லாரும் நல்லா இருக்குனு மட்டும் சொல்லிடுங்க.:-)
//
நல்லா எழுதி இருக்கீங்க.

மதுரையம்பதி said...

நல்லாத்தான் எழுதியிருக்கிறீர்கள்.....இன்னுமா வியர்டு, ஏதோ திருமணமான புதிதில் வேணா இருந்திருக்கலாம்.....இப்போ திரு. சிங்கம் அல்லவா அப்படி ஆகியிருப்பார்.

வல்லிசிம்ஹன் said...

கீதா மறுமெயில் அனுப்பி இருக்கேன்.
சொல்லிவிடுங்க எதானாலும்.:-)

வல்லிசிம்ஹன் said...

அம்பி,
நரசிம்மம் பொறுமையின் சின்னம்னு நினைப்பு.

யாராயிருந்தாலும் என்னை மாதிரி அம்மாக்களைப் பாத்துக்கிறது சிரமம்தான். எந்த நேரத்தில் என்ன சொல்லுவேனோனு என் பசங்க கூட திகிலாப் பார்க்கும்.
நல்ல வார்த்தை சொன்னிங்கக்ங்க க.:-)

வல்லிசிம்ஹன் said...

மௌலி , என்னிக்கு ஒரு வியர்டூ தான் வியர்டூனு ஒத்துகிட்டு இருக்கு.
நான் ஏதோ இப்படி இருக்கேன் என்றால் அதுக்குக் கூட இருப்பவங்கதான் காரணம்.
என்னாலே அவர் ஆனாரா. அவராலே நான் ஆனேனா?
ரெண்டு பேருமே ஒத்துக்க மாட்டோம்.:-0)

நாகை சிவா said...

////நாகைப் புயல் வர சாத்தியக் கூறுகள் உண்டு.//

வந்துட்டேன்.//

அடுத்த நாகையின் மைந்தனும் வந்தாச்சு.

நாகை சிவா said...

//அது சரி. மழையே இல்லைனு சொன்னாங்க நம்ம ஊரில.
நீங்க வந்தச்சு இல்லை. இனிமேல் கவலை இல்லை.:-)
நன்றி கண்ணன். //

நம்ம ஊரா, மெய்யாலுமாங்க....????

மார்ச் மாதத்தில் நம்ம ஊரில் எப்ப மழை பெய்தது சொல்லுங்க ;-)

வல்லிசிம்ஹன் said...

சூடான் ல வேணா அப்படி இருக்கலாம். மாதம் மும்மாரி இல்ல நம்ம ஊரு.!!
தெரியாதா உங்களுக்கு??
லேசான இடியுடன் கூடின மழைனு தினமும் ரேடியோவில சொல்லுவங்களே. கேட்டதில்லையா.
என்ன கூடவே லாம் லாம்னு சேத்துப்பாங்க.

வல்லிசிம்ஹன் said...

வியர்டோனு போடாத வியர்டூவே!!

சேதுக்கரசி said...

இதில் பங்கேற்க வாருங்கள், உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்:

அன்புடன் கவிதைப் போட்டி
ப்ரியன் வலைப்பதிவில் தகவல்கள்

பங்கேற்று வெற்றி பெற வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

சிவா, உங்க பேரைப் போட மறந்துட்டேன்.:-) விட்டுப் போச்சு.
இப்போ போட்டாச்சு.
இது கூட 'அந்தக்' கேஸ்தான். செய்யரதையும் செஞ்சிட்டுப் பின்னாலேயே ஒரு நோட் போடரது.

செல்லி said...

வல்லி
மனசில உள்ளதெல்லாம் ஒண்ணுவிடாம புட்டுப் புட்டு வைச்சிருக்க்றீங்க.
//இணணயத்தில் எல்லோருமே கிட்டத்தட்ட நம்ம சைடு தான்.//
இப்ப தெரிஞ்சுதா நாம எல்லாம் ஒறே கட்ட்சிதான்.
வியேட் எல்லாரிடமிருந்தும் நல்லாவே போய்க் கொண்டிருக்கு. வாசிக்க சந்தோஷமாயிருக்கு, அல்லவா!.

வல்லிசிம்ஹன் said...

வாங்க செல்லி,மனசு லேசாக இவ்வளவு பேரும் எழுதறதைப் படிச்சாலே போறும்.
நீங்களும் கூப்பிடறதனாலே இரண்டாவது எழுதலாமானு யோசிக்கிறேன்.அப்புறம் படிக்கிறவங்க பாடு.:-)