Blog Archive

Thursday, March 29, 2007

சித்திர ராமன்..15..சுந்தரகாண்டம்.விச்வரூபம்,லங்கா தகனம்











ஸ்ரீராமனைப் பற்றிய சிந்தையிலிருந்து
சற்றே மீண்ட
ஜானகி,
'அனுமா, இத்தனை சிறிய உருவங்கொண்ட நீ எப்படி அத்தனை பெரிய சமுத்திரத்தை த் தாண்டி வந்தாயப்பா?'என்று கேட்க
அனுமனும் தன் விச்வரூபத்தைக் காட்டினான்.
மண்ணூம் விண்ணும் தொட, வெகு ப்ரகாசமாய் மலை போல வளர்ந்து நிற்கும் ஆஞ்சனேயனைப் பார்த்து சீதை வியக்கிறாள்.
'என் கணவன் திரிவிக்கிரமனாக எடுத்த அவதாரத்தில் கூட இத்தனை வளர்ச்சி இல்லையெ. இவன் எத்தனை யோக வலிமை படைத்தவன்' என்று மகிழ்கிறாளாம்.
கம்பர் சொல்லும் வார்த்தை, எப்போதுமே கணவன் பெருமையைவிடத் தன் குழந்தையின் பெருமை உயர்த்தியாக ஒரு பெண்ணுக்குத் தோன்றுமாம்.
அன்னை ஜானகி உலக மாதாவுக்கும் அப்படியே தோன்ற,
அனும, கண்கூசும் இந்த வடிவிலிருந்து சிறியவனாகவே என் முன் வா' என்கிறாள்.
அனுமனும் சீதையின் அருகில் வந்து ஒரு விண்ணப்பம் வைக்கிறான்.
அம்மா, நீங்கள் இப்போதே என் முதுகில் ஏறுங்கள். ஸ்ரீராமனிடம் உங்களைச் சேர்க்கிறேன்.
ஒரு நொடியில் போய்விடலாம்'
என்று சாதிக்க,
சீதை முறுவலிக்கிறாள்.
அனுமா உன் முதுகில் ஏறி என்னால் வரமுடியாது.
நீயோ வேகமாகப் பயணிப்பவன்.
தாண்டுவதோ சமுத்திரம்.
வானத்தில் இருந்து கடலைப் பார்க்க எனக்குப் பயம். நான் கீழே விழுந்தால் என்ன செய்வாய்?
மேலும் அரக்கர் துரத்தினால் , நீ என்னை எங்கே வைத்துவிட்டு ,அவர்களுடன் போர் புரிவாய்,?
இன்னும் ஒரு காரணமும் உள்ளது,.
பரபுருஷனை நான் தொட முடியாது.'
என்று சொல்லி நிறுத்தும் சீதையைப் பார்த்து சிரிக்கிறான் ஆஞ்சனேயன்.
'அம்மா முதலில் நான் பரபுருஷன் இல்லை. உன் புதல்வன்.
யாராவது புத்திரனைத் தொட மறுப்பார்களா?
இரண்டாவது என் விச்வரூபத்தைப் பார்த்தீர்கள். அதனால் உங்களைச் சுமப்பது பெரிய வேலையில்லை.
அதனால் அரக்கர்களை வெல்லுவதும் எனக்கு சுலபமே.
மூன்றாவதாக, உங்களுக்குக் கடலைப் பார்த்தால் பயம் இருப்பதாக நான் நம்பமுடியாது. நீங்களே அலைமகள் அல்லவா. கடலும் தாயகம்.
உங்கள் நாயகன் வசிப்பிடம் பாற்கடல்,,
வேறு உண்மைக் காரணத்தைச் சொல்லுங்கள். என்று அனுமன் வினவ,
மைதிலி அவனுடைய கூர்மையான சிந்தனையைப் பாராட்டி,
அனுமா, இந்த ராவணனை ஒழிக்க ராமனின் வில் வரவேண்டாம். என் சொல் ஒன்றே போதும்.
இந்த இலங்கையே எரிந்துவிடும்.
என்னால் அப்படிச் செயல்பட முடிந்தாலும்
ராமன்
என்னை வந்து மீட்பதையே நான் விரும்புகிறேன்.
என் சொல்லுக்கும் மேல் நான் ராமனின் வில்லையே நாடுகிறேன் என்றவள் முன், அனுமன் மெச்சி நிற்கீறான்.
இதுதான் பூரண சரணாகதி என்பது என்று புரிந்து அமைதியாகிறான்.
இவளே பரிபூர்ண அன்னை. ராமனுக்கு ஏற்ற சொல் திறம், சிந்தனை,திண்மை கொண்டவள்.
என்று மீண்டும் அஞ்சலிஹஸ்தனாய்
நிற்கிறான்.
அவன் புறப்பட ஆயத்தமாவதைப் பார்க்கும் சீதைக்கு மீண்டும் துயரம் கவ்வுகிறது.
ஆஞ்சனேயா இன்னும் ஒரு நாள் இருக்கலாமே.
நீயும் சென்று ராமனும் வரவில்லையானால்
என் சோகம் அளவுகடந்து போய்விடும்.;
என்று தீனமாக உரைப்பவளிடம்,
அனுமன் உறுதி கூறி
'இன்னும் முப்பது நாளில் உங்கள் துயரம்
தீரும் தாயே. தளர வேண்டாம். ராமன் காப்பான்.
நாங்கள் அத்தனை ஆயிரம் பேரும்,கரடிகளும் இன்னும் எல்லாவிதமான யோக,ஞானம் பொருந்திய பலவான்களுமிங்கே ராமலக்ஷ்மணர்களோடு வந்து இலங்கையை அழித்து உங்களை மீட்போம்.
ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கு வேறு நினைவே கிடையாது.
அவரது சினம் என்னும் தீயில் விழுந்து இறக்கப் போகிறான் ராவணன்'
என்று அவளுக்கு வீரம் ஊட்டும் சொற்களைச் சொல்கிறான்.
'அன்னையே விடை கொடுங்கள்.
நீங்கள் ஸ்ரீராமனுடன் சேரும் நாளைப் பார்த்துக் களிக்கக் காத்து இருக்கிறேன்.
மன உறுதியோடு இருங்கள். இதோ விடியல் அருகில் வந்துவிட்டது.
எல்லாத் துக்கமும் துயரமும் நீக்கக் கதிரவன்
போல ஜானகிமணாளன் வருகிறான் அம்மா'
என உரைக்க சீதையும் அவனுக்கு ஆசீர்வாதங்கள் வழங்கி எச்சரிக்கையுடன், க்ஷேமமாகப் போய் வரச் சொல்லுகிறாள்.
அவளைக் கீழே விழுந்து வணங்கி விடைபெறும் அனுமன், அந்த நந்தவனத்தின் தோரண வாயிலில் ஏறி உட்கார்ந்து யோசிக்கிறான்.
வந்த வேலை முடிந்தது,.
இத்துடன் போய்விட்டால் அது சரியில்லை.
அது ராமதூதனின் லட்சணம் அல்ல.
இங்கே ராவணனைப் பார்த்து சொல் ஆடிவிட்டு
செல்லவேண்டும்.
அதற்கு முதல் வழி இந்த வனத்தை அழிப்பதுதான்,
என்று மேலே எழுகிறான் வீர ஆஞ்சனேயன்.
ராவணனுக்கு மிகவும் பிரியமான அசோக வனத்தை
மேலிருந்து கீழே பார்க்கிறான்.
அவனுள் ராமமகிமை பொங்குகிறது.
கோபம் தளை மீறி,பாய்ந்து சென்று மரங்களை வேரோடு பிடுங்குகிறான். வரிசையாக எல்லா மரங்களையும் உலுக்குகிறான்.
மரங்கள் பேரோசையோடு விழுகின்றன.
பூமி அதிர்கிறது. மலர்களும் கனிகளும் வாரி
இறைகின்றன. சீதை உட்கார்ந்திருக்கும் மேடையைத்தவிர அத்தனை இடங்களும் நாசமாக்கப் படுகின்றன.
அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்திருக்கும் அரக்கிகள் (எழுநூறு பெயர்களாம்)
ராவணினடம் ஓடி குரங்கு செய்யும் அட்டகாசத்தைச் சொல்லிமுறையிடுகிறார்கள்.
இது
ஒன்றையும் சகிக்க முடியாத ராவணன்
சபையைக் கூட்டி ஆலோசனை
செய்கிறான்.
வந்திருப்பது ஒரு குரங்கு. அது செய்யும் அலங்கொலமொ
பெரியது.
நமது மந்திரிகுமாரர்களை அனுப்பி அதை வதம் செய்துவிடலாம் என்று அனுப்புகிறான்.
அவர்கள் அலங்காரமகத் தேர்களில் வரும்போது வனமழிந்த கோலத்தைக் காண்கிறார்கள். மனம் அதிர்ச்சியடைகிறது.
அவர்களைப் பார்த்த மாருதி வீர கர்ஜனையோடு
வானில் உயரெ எழுகிறான்.
கேட்போர்
அங்கமெல்லாம் கதிகலங்குகிறது.
!!ஸ்ரீராமனுக்கு ஜெயம். சீதாராமனுக்கு ஜெயம்.
வீழ்கிறது லங்கை''
என்று முழங்கிக் கொண்டு பெரிய வானுயர்ந்த மரங்களுக்கிடையே ஊஞ்சலாடுகிறான்
அஞ்சனை மைந்தன்.
ராவணனால் அனுப்பிவைக்கப் பட்ட சேனைகள் அழிகின்றன.
பாறைகளாலும், மரங்களாலும் அனைவரையும் மோதி அழிக்கிறான்.
ஜம்புமாலி, மந்திரிகுமாரர்கள்,அக்ஷயகுமாரன்
இவர்கள் ஒருவர் பின் ஒருவராக
வந்து அனுமனின்பலத்துக்கு முன் நிற்கமுடியாமல் மடிகிறார்கள்.
பாறைகளைத் தகர்த்து அவர்கள் இடித்து வீழ்த்துகிறான்
தேர்களை உடைக்கிறான்.
வில்லிலிருந்து புறப்படும் அம்புகளளவ்அன் மேனியில் பட்டு உடைகின்றன.
இவர்கள் கதை முடிந்தபின் க்அம்பீரமாக வருகிறான் இந்திரஜித். ராவணின் மூத்த மகன். அருமைத் தம்பி மடிந்து மண்ணில் கிடப்பதைக் கண்டு
மனம் ஆவேசப் பட்டலும் நிதானமாக் யோசித்துச் செயல்படுகிறான்.
மாய வேலைகளால் இந்தக் குரங்கைப் பிடிக்க முடியது.
அஸ்திர பலமே சிறந்தது என்று பிரம்மாஸ்திரத்தைப் பூட்டி அனுமனின் மேல் எய்கிறான்.
அனுமனை இந்த அஸ்திரம் ஒரு முகூர்த்த நேரமே கட்டி வைக்கும்.
அதை எஎற்ருக் கொண்ட டானுமன் ட்ஹரையில் விழ, சுற்றி வரும்மரக்கர் கூட்டம்,
அவனைத் துன்புறுத்துகிறது.
அஸ்திர மகிமை அறியாத அரக்கர் அனுமனை ம்ஏலும் கயிற்றால் கட்ட, பிரம்மாஸ்திரம் அவனை விட்டுப் போகிறது.
விடுதலை ஆனாலும் ,ராவணனைப் பார்த்துப் பேச வேண்டும் என்ற ஒரே காரணத்தால் அனுமன் காத்து இருக்கிறான்.
இராவணன் மந்திரிகளும் விபீஷணனும் புடை சூழ ப்ரமிக்கத்தக்க அலங்காரங்களுடன் கம்பீரமாக வீற்றிருக்கிறான்.
அனுமனை ஏறெடுத்துப் பார்த்து, மந்திரியை
விசாரிக்கும்படி கட்டளையிடுகிறான்.
அவர் வந்து,
நீ யார்?
உனக்கு ஏது இத்தனை பலம்,
விஷ்ணுவோ,சிவனோ,நான்முகனோ இங்கு வரத் தோது கிடையாது.
உனக்கும் எனக்கும் என்ன பகை.
நந்தவனத்தை அழித்தது ஏன்/
என்று சரமாரியாகக் கேள்விகள் விழ
அனுமன் தெளிவாக ராவணனை நேருக்கு நேர்
நோக்கி கிஷ்கிந்தையில் அரசாளும் சுக்ரீவ மகராஜாவின் அமைச்சன்.
வாயுபுத்திரன்.
ஸ்ரீராமனின் தூதன்.
ராவண, நீ எங்கள் தலைவன் ராமனின்தேவியைச் சிறைபிடித்து இங்கே வைத்து இருப்பதாகத் தெரிய வந்தது.
அவளைப் பார்த்து உன்னையும் கண்டு அவளை சிறை மீட்கவே வந்தேன் என்று கேட்பவர் மனம் அதிரும்
கம்பீரக் குரலில் அறிவிக்கிறான்.
''ராமசாமியின் தூதன் நானடா ராவணா என்றான்''
அந்த ஆஞ்சனேயனுக்கு ஜே.

12 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

உள்ளேன் அம்மா, முழுவதும் படித்தபின் மீண்டும் வருவேன்.

VSK said...
This comment has been removed by the author.
வல்லிசிம்ஹன் said...

வரணும் வி.எஸ்.கே.
எழுத்துப் பிழை வருகிறது. வேறு யாராவது பதிவுகளூக்கு அப்பால் சொல்கிறேன்., இதைச் செய்தல் தமிழ் எழுதும் அழகைப்பார் என்று சீறுவேன்.
இப்போது இந்தக் கீபோர்டை நான் குறை சொல்லவில்லை. இருந்தாலும்....
சில பல சமயங்களில் கண்ணைத் தாண்டி போய்விடுகிறது.
நீங்கள் தாரளமாகச் சொல்லலாம்.
செய்வன திருந்தத்தானே செய்ய வேண்டும்.
நீண்ட பதிவு ஆயாசமாகப் போய்விடுகிறது.
பப்ளிஷ் பட்டன் அழுத்தும்போஒது ஏதோ நெட் ப்ரச்சினையினால் நின்றுவிட்டது.

வந்ததற்கும் சொன்னதற்கும் ரொம்ப நன்றி.

VSK said...

சுந்தர காண்டத்தின் சாறை பதமாக, இனிதாகப் பிழிந்தெடுத்துத் தந்திருக்கிறீர்கள்.
படிக்கும் போதே மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது.

மிக்க நன்றி.

இவ்வளவு சீரிய பதிவில் இருக்கும் எழுத்துப்பிழைகள் ஒரு தடையை உண்டாக்குகிறது என்பது என் கருத்து.

தயவு செய்து, எழுதி முடித்ததும் மீண்டும் ஒரு முறை படித்து, சரி செய்து வெளியிட்டால் நலம்.

ஒவ்வொரு வரிக்கும், அல்லது பத்தி பிரிக்கும் இடத்தில், ஒரு முறை 'எண்டெரை'[Enter] அழுத்தினால், ஒரு இடைவெளி கிடைக்கும்.[இதோ நான் செய்திருப்பது போல!]

அதன் மூலம் ஒரு நீண்ட பதிவைப் படிப்பது போலத் தோன்றாமல் தவிர்க்கலாம்.

மன்னிக்கவும்.

வல்லிசிம்ஹன் said...

வாருங்கள் மௌலி. மெதுவாகவே வாருங்கள்.:-)

வல்லிசிம்ஹன் said...

வி.எஸ்கே போட்ட பின்னூட்டம் காணவில்லையே.

துளசி கோபால் said...

வல்லி,

நேத்து நமக்கும் சுந்தரகாண்டத்தில் அனுமன் லங்கையை எரித்தது வரை
படித்தாயிற்று.

இப்போது உங்க பதிவுலே ரிவிஷன் ஆச்சுப்பா.

ராமன் கதையை எத்தனைமுறை கேட்டாலும் அலுக்குமா என்ன? :-))))

வல்லிசிம்ஹன் said...

dear thulasi,
thank you.
will write to you after the small vacation.

ambi said...

ஆஹா! அருமையாக வந்துள்ளது பதிவு. அனுமன் துவம்சம் செய்ததை விவரித்ததாலோ என்னவோ எழுத்துக்களும் சிதறி உள்ளது. ஒன்னும் தவறில்லை. :)

waiting for the next part! :)

//எங்கள் எல்லோரிடமிருந்தும் அமோக வாழ்வு கிடைக ஆசீர்வதங்கள் அம்பிக்கு மனசர அனுப்புகிறோம்.
//
நன்றி அம்மா. 15 நாளில் எல்லாம் ஒன்னும் Marriage இல்லை. என்னுடைய சீதா தேவி, தாயகம் திரும்புகிறாள் from US. :)
maariage is on may 14 th only.

மொய்யேல்லாம் கிடையாதா? டாலரில்(அய்யப்பன் டாலர் இல்லை, US Doller) தந்தால் போதும். :p

//will write to you after the small vacation. //
இரண்டாம்(?) தேனிலவா? :)

ambi said...

ஆஹா! அருமையாக வந்துள்ளது பதிவு. அனுமன் துவம்சம் செய்ததை விவரித்ததாலோ என்னவோ எழுத்துக்களும் சிதறி உள்ளது. ஒன்னும் தவறில்லை.

நன்றி அம்மா. 15 நாளில் எல்லாம் ஒன்னும் marriage இல்லை. என்னுடைய சீதாதேவி தாயகம் திரும்புகிறாள் from US.

மொய்யேல்லாம் கிடையாதா? டாலரில்(அய்யப்பன் டாலர் இல்லை) US doller தந்தால் போதும்.
//will write to you after the small vacation.
//
இரண்டாம் தேனிலவா?

வல்லிசிம்ஹன் said...

அம்பி,
மே 14 கல்யாணமா.
வாழ்த்துக்கள்.
தேவி ,அம்பிக்கு ரொம்பப் பொருத்தமாதான் இருப்பா.

அதிலென்ன சந்தேகம்.சீக்கிரம். ஏற்பாடெல்ல்லாம் ஜருராக நடக்கும்.:-)
கல்யாணம் சென்னையிலா?

வல்லிசிம்ஹன் said...

ஆமாம். அம்பி நெட் பிரச்சினையினாலே இந்தப் பதிவு கொஞ்சம் மாறி மாறி வந்துவிட்டது.
அடுத்தது சுருக்கமா போடறேன்.
நீங்க சொன்ன மாதிரி அனுமன் புகுந்து விளையாடிவிட்டார் போலிருக்கு:-)
குடும்பத் தேனிலவு போய் வந்தோம். பக்கத்து ஊருக்கு:-0)