About Me

My photo

Just one more correspondent.  9/4/1948   பிறந்தநாள்

Saturday, March 24, 2007

சித்திர ராமன் 14,சுந்தர காண்டம்....கணையாழி கொடுத்தல்
ஸ்ரீராம தூதன்,சீதையை அணுகும்போதே நடுங்குகிறாள் தாயார்.ஒருவேளை இவன் ராவணாக இருக்குமோ. இவ்வளவு அருகில் வரவிடக் கூடாதே என்று பயப்படுகிறாள்.

அவளின் பயத்தை பார்க்கும் உணரும் அனுமன் அப்படியேவணக்கத்துடன் நிற்கிறான்.


வினயமும்,பக்தியும் ஆதரவும் ஒன்று சேர நிற்கும் அவனைக் கண்டு, சீதை'ஸ்ரீராம நாமத்தை உச்சரிக்கும் உன்னை நம்புகிறேன்.என் பதியைப் பற்றிய அங்க அடையாளங்கள்,நீங்கள் சந்தித்த விவரம், எப்படி நீ நூறு யோசனை கொண்ட சமுத்திரத்தைத் தண்டினாய்.


எல்லா விஷயங்களையும் சொல்லி என் உள்ளத்தின் தாகம் தணிக்கும் வார்த்தைகளைச் சொல்''என்று சொல்கிறாள்.


அனுமனும் அவள் வார்த்தையைக் கேட்டுரிச்யமுக பர்வத்தில் நடந்த செய்திகளைச் சொல்கிறான்.


ராமனி வர்ணிக்க முற்படும்போதுதான் திணறுகிறான்.திகைப்பாக இருக்கீறது.'ராமனை வர்ணிக்க வார்த்தைகள் ஏது சீதே.தாமரைக் கண்கள் என்றால் உதடுகள் கோவித்துக் கொள்ளும்.நாங்கள் தாமரைக்கு சளைத்தவர்களா என்று கேட்கும்.


பற்களோ முழுநிலவைத் துண்டம் செய்து கோர்த்தது போல இருக்கும்.கழுத்தோ சங்கின் திடம் கொண்டு பருத்து வளைந்துதோள்களில் இணையும்.கழுத்தில் ஆடும் அளகபாரமோ சொல்லி முடியாது.கறுத்து,நீண்டு,சுருண்டுகருத்த நீல வண்னம் கொண்டு இடைவரை தொங்கும்ராமனின் தோள்களின் வலிவு உனக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.நம்பி என்ற சொல்லுக்கு உரியவன் அவனே..96 அங்குல உய்ரம்.நீண்ட கைகள் முழங்காலைத் தொடும் புருஷ லட்சணம் கொண்டவன்.


இப்பொது கூட இருந்து கவனித்துக் கொள்ள தேவி இல்லாததால்வறண்டு,சடைபிடித்த முடியோடு சோகத்தில் ஆழ்ந்து இருக்கிறான்.உண்ணுவதில்லை.உறங்குவதில்லை. அப்படியே உறங்கிவிட்டாலும் மறுபடியும் சீதா என்று அழைத்துக்கொண்டே எழுந்துவிடுவார்..""


என்றெல்லாம் அனுமன் சொல்லச்சொல்ல சீதைக்கு ராம்ன தன்னை மறக்கவில்லை என்று இன்பம். மறுபக்கம் அவன் துயரப்படுகிறானே என்று துன்பம்.இரண்டு உணர்ச்சிகளையும் சமாளிக்க முடியாமல் மீண்டும் அனுமனை நோக்கி ன் ரரமன் அடையாளம் ஏதாவது கொடுத்தாரா என்று கேட்கிறாள்


அனுமன் 'இதோ' என்று ராமா' என்று நாமம்பொறிக்கப்பட்ட கணையாழியைக் கையில் வைத்து அன்னை முன் நீட்டுகிறான்.


ஆயாசம் தாங்காமல் உட்கார்ந்த சீதை அதைத் தன் கையில் வாங்குகிறாள்.ராமனே எதிரில் நிற்பதாக ஒரு கணம் அப்படியேஆனந்தத்தில் மூழ்குகிறாள்.கையிலே கொண்ட மோதிரத்தை அப்படியே அணைத்துக் கொண்டு கண்களில் நீர் வழிய ஏதேதொ சொல்லிப் புலம்புகிறாள்.கண்ணில் ஒற்றிக் கொள்ளுகிறாள்.ஒரு கணம் பரவசம்.மறுகணம் துக்கம். கணையாழியைப் பார்த்தவுடன்பழைய நினைவுகள்.

இவன் ராமதூதன் தான் என்னும் மகிழ்ச்சி.


ஐயோ ராமனைப் பார்க்க வேண்டிய நாம் அவன் நாமம் பொதிந்த கணையாழியைப் பார்த்து சந்தோஷிக்க வேண்டிய நிலை வந்ததே என்று துயரம்.


மோதிரத்தையாவது பார்த்தோமே என்ற ஆறுதல்


அவனை மீண்டும் பார்ப்போமா என்ர விசாரம். பார்ப்போம் என்ற உறுதி தரும் மனத் திண்மை.தன்னிலைக்கு வந்து அனுமனை மீண்டும் வாழ்த்துகிறாள் ஜானகி.உயிர் போக வேண்டிய தரூணத்தில்ராமநாமம் சொல்லி என்னை மீட்டஅனுமனே உனக்கு நான் என்ன சொல்லிகைமாறு செய்யமுடியும்.


நீ நீடுழி வாழ வேண்டும்.என்று அவள் சொல்வதை அனுமன் ஏற்று நிற்கிறான்.மீண்டும் தன்னை நிதானப் படுத்திக் கொண்டு,


''உங்கள் இருவருக்கும் எப்படி நட்பு சாத்தியமானது?''என்று அனுமனை விசாரிக்கிறாள்.
ஆதியோடு அந்தமாக விவரிக்கிறான்.
லக்ஷ்மணனின் க்ஷேம லாபங்களை ஒரு தாயின் பரிவோடு கேட்கும் சீதைக்குத் தான் அவனிச் சுடுசொல்லால் விரட்டியது ந்இனைவுக்கு வர மீண்டும் வருந்துகிறாள்.
இது உன் புதல்வன் என்று எண்ணி சுமித்திரா தேவி ஒப்படைத்த செல்வனை நான் கோபித்தேனெ.
அதனால் தான் எனக்கு இந்தத் தண்டனையோ என்றும் சொல்கிறாள்.
அனுமன் அவள் அழுது ஓயட்டும் என்று அமைதியாகிறான்.
சீதை ''விதி என்பது அந்த மான் உர்வில் வந்து என்னை நாயகனிடமிருந்து பிடித்தது. இனிமேல் நடப்பதை யோசிக்கலாம். அனுமா, ராமலக்ஷ்மணர்கள் சுகமாக இருக்க நான் விழைகிறேன் எண்று. இன்னும் ஒரு மாதம் கெடு கொடுத்து இருக்கிறான் இந்த அரக்கன்.
அதாற்குள்ளென்னை வந்து மீட்காவிடில் நான் உயிர் தரியேன்.
என்னிடம் நீ கொடுத்த இந்த கணையாழி நான் ராமனுடன் மகிழ்ந்த இருந்த நாட்களை மீட்டுக் கொண்டு வ்அருகிறது. இது எங்கள் திருமணத்தின் போது அணிவிக்கப் பட்ட மோதிரம்.
எங்களுக்குள் ஊடல் ஏற்படும்போதெல்லம் இது எப்படியாவது எங்களைச் சேர்த்து வைத்துவிடும்.
அயோத்தியில் நந்தவனத்தில் ஊஞ்சலாடும் போது
விளையாட்டாக என் நெற்றியில் கும்குமத்தைக் கலைத்ததும் எனக்குக் கோபம் வந்து ஸ்ரீராமனுடன் பேசாமல் ,வார்த்தையாடாமல் இருந்தேன். இருவருக்கும் தன்மானப் பிரச்சினையாகி விட்டது.
இரண்டு நாட்கள் கழிந்ததும் ராமனுக்குத் தன் சிறுதவறு புரிந்து மறுபடி என்னைச் சமாதானப் படுத்த,
இந்த மோதிரத்தைத் தரையில் நழுவ விட்டு
விட்டு,''அடடா திருமண மோதிரத்தைக் காணோமே''
என்று அழைக்க, நானும் உடனே மோதிரத்தைத்
தேடி அவரது விரலில் பொருத்தி அழகு பார்க்க
மீண்டும் சிரித்துப் பழக ஆரம்பித்தோம்''
ராமா, இத்தனை நாளாக இந்த மோதிரம் இருந்து
என்னை உங்களுக்கு நினைவூட்டும்,
இப்போது இதுவும் இல்லாமல் நீங்கள் கவலைப் படுவீர்களே'
என்றும் அரற்றுகிறாள்.
வேறு ஏதாவது அடையாளம் சொல்லுங்கள் அம்மா
என்று அனுமன் வினயமாகக் கேட்க,
காகாசுரனின் விருத்தம் சொல்கிறாள் சீதை.
நாங்கள் சித்திர கூடத்தில் மகிழ்ச்சியாக இருக்கும் காலத்தில் ஒருநாள் ஒரு மரத்தடியில் ராமன்
என் மடியில் தலைவைத்துத் தூங்கும் நேரம் நானும் கண்ணயர்ந்தேன்.
அப்போது பொல்லாத காகம்மொன்று அருகே வந்து
என்னைக் குத்தித் தொந்தரவு செய்ய ஆரம்பித்தது. நானும் பலவாறு முயற்சி செய்தும்மென்னை விடுவதாக இல்லை.
ஸ்ரீராமன் ட்ஹுயில் கலையக் கூடாதே என்று கவனமமக நான் இருந்த போது அந்தக் காகம்
என் மார்பின் சதை பிய்ந்து போகும் வண்ணம் குத்திக் கிளறி விட்டு,
என் ரத்தத்துளிகள் அவர் மேல் தெறித்தன.
சட்டென்று எழுந்த அவர் சீதே உன்னை வருத்தியது யார்.
இப்போதே சொல் என்று சினம் கொண்டார்.
அவர் பார்வை அடுத்த கணம் அந்தக் காக்கையின்
மேல் விழ, அது நொடியில் பறந்தது.
உடனே அருகில் இருந்த புல்லில் அஸ்திரப்
பிரயோகம் செய்ய, ராமாஸ்திரம் ஜயந்தன்
என்னும் அந்த தேவேந்திரன் மக்அனைத் துரத்த ஆரம்பித்தது.
ஈரேழு பதினான்கு உலகங்களிலும் அடைக்கலம் தேடிக் கிடைக்கத அந்தக் காகம் ராமா சரணம்
என்று ராமனின் கால்களில் விழுந்தது .
சராணமடைந்தாலும் செய்த தவறு பெரியது ஆகையால் அதன் இருகண்கலில் ஒன்றை அஸ்திரத்துக்கு இலக்காக,
ராமன் சொல்ல உயிர் பிழைத்து ஓடியது அந்தக் காகம்.
அனுமனே கேவலம் ஒரு காக்கை என்னைத் துன்புறுத்தியதைப் பொறுக்காத என் நாயகன்,
இப்போது என்னைப் பாராமல் இருக்க நான் எத்தனை பாபம் செய்தேனோ?
இனி என் உயிர் பிழைப்பது உன்கையில்
என்று சொல்லி அதுவரைத் தன் புடவைத் தலைப்பில்
முடிந்து வைத்து இருந்த 'சூடாமணி' என்னும் தலையில் சூட்டிக் கொள்ளும் ஆபரணைத்து எடுத்து
''இந்த அடையாளத்தோடு நீ ராமனிடம் சென்று என் வார்த்தைகளையும் சொல்லி என் துன்பம் போக்கும் வழியைக் காண்பாய்''
என உரைக்கிறாள்.
மகா பக்தியுடன் சூடாமணியை பெற்றுக் கொள்கிறான் ஆஞ்சனேயன்.
கண்களில் அதை ஒற்றிக் கொண்டு
இன்னும் வேறு ஏதாவது விஷயம் இருக்கிரதா அம்மா
என்றும் கேட்கிறான்.
இன்று 27/3/2007 ஸ்ரீராமன் ஜனனம் செய்த நாள்.
எல்லோருக்கும் அவன் அருள் பரிபூர்ணமாக அமைய வேண்டுகிறேன்.
லோகாபி ராமம் ரணரங்கதீரம்
ராஜீவ நேத்ரம் ரகுவம்ஸ நாதம்/
காருண்ய ரூபம் கருணாகரம்தம்
ஸ்ரீராமச் சந்திரம் சரணம் பிரபத்யே//
அன்னையும் நீயே தந்தையும் நீயே
உறவும் நீயே துணையும் நீயே/
கல்வியும் நீயேகல்விப் பயனும் நீயே
சகலமும் நீயே எங்கள் ராமா.//