About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Monday, February 19, 2007

எங்க மீனாட்சி.
இந்த மீனாட்சி வீட்டுக்கு வந்து 5 வருடம் ஆகிறது.
4 இன்ச் அளவில் அவள்/அவன் வந்த போது எனக்கு கொஞ்சம் சந்தேகம் தான்.
எவ்வளவு நாள் வாழ்வோ என்று.
ஏனெனில் அவ்வப்போது எங்கள் வீட்டுக்கு திடீர் மீனயோகம்
அடிக்கும் நேரம்.
மீன்கள் வரும். இரண்டு மூன்று நாட்கள் இருக்கும்.
பிறகு பக்கத்து வீட்டுப் பூனைக்கு உணவாக ஆகிவிடும். இதே போல் வாள மீன் விலாங்கு மீன் தவிர மத்த மீன் வகையறாக்கள் வருவதும்,
''பெல்லி அப் ''செய்வதும் நாங்கள் வருத்தப் படுவதும் நடந்து வந்தது.
அக்கம்பக்கம் பசங்க எல்லாம் "யாய்!! மீன் வந்திருக்கு " என்று வந்து பார்ப்பதும், 'அச்சச்சோ இதுவும் போயிடுத்தா ' என்று உச்சுக் கொட்டுவதும் வழக்கமாகி விட்ட வேளையிலே....
எங்க எஜமானரோட ஜிம் சினேகிதர் மீன்
வளர்ப்பது பற்றீ ரொம்பவே சொல்லி,
அடையாரிலிருந்து இந்த 'ஐய்யம்மா'வைக் கொண்டுவந்தார்.
ஏதோ ஒரு பழைய தொட்டியில் போடலாம், ஒரு வாரம் போன பிறகு இருந்தால்(?)
கவனிக்கலாம் என்று நான் மெத்தனமாக இருந்தால்
வீட்டுக்கு வந்த இன்னோரு சினெகிதர், 'அட! இது வாஸ்து மீன் சார். போற இடமெல்லாம் செல்வம் கொழிக்கும்.
கெட்டவங்களை உள்ளயே விடாது.'
நெகடிவ் பீப்பிள் வந்தாங்கன்னா கலரெ மாறிடும் சார்,
ஒரே சிகப்பாகி விடும்.
அப்படியே அவங்களை வாசலோடு வெளில தள்ளிடும்'
என்றெல்லாம் சொல்வதை நான் ஆ' என்று கேட்டுக் கொண்டிருந்தேன்.
போன ஜன்ம பாத்தியதை இருந்தால் தான் இதெல்லாம் வீட்டுக்கு வரும்' என்று சொல்லி விட்டுப் போனார்.
நான் புது மரியாதையோடு மீனம்மாவைப் பார்த்தேன்.
விரல் நீளத்துக்கு மீனைப் பார்த்து சந்தேகம் தான்.
உடனே வண்டியை எடுத்துக் கொண்டு ப்ராட்வே போய்
ஒரு மீன்தொட்டி, கொஞ்சம் மணல், முன்ன இல்லாத
காத்து சுத்தம் செய்யும் மெஷின், குட்டி மீன் பொம்மைகள்
ஒரு பச்சை ப்ளாஸ்டிக் செடி
எல்லாம் வாங்கி வந்து ராகு காலமில்லாத நேரத்தில்
குடி வைத்தாச்சு.
விட்ட உடனே நீந்தின வேகத்தைப் பார்க்கணுமே!!
சாப்பாடு வகையறா என்னன்னு விசாரிச்சா
50பைசா மீன் வாங்கிப் போட்டட ஜீரணமாகும் என்றார்
விற்றவர்.
மீன் வாங்கிப் போடணுமா.இதென்ன அசைவ வகையறாவா,
என்று கேட்டதும் எங்க வீட்டு சிங்கம் சொல்லறார்,ஆமாம்மா அது சொல்ல விட்டுப் போச்சு என்றார்.
எத்தனைதான் இப்படி விட்டுப்போச்சோனு
மீன்கள் விக்கிற கடைக்குப் போய்
ப்ளாக் மோலி என்கிற வகை குட்டிகளை வாங்கி வந்தால் மீனாட்சி என்கிற மீனாட்சிசுந்தரம்
கபளீகரம் செய்கிறார்.கும்னு வளர்ந்து
இப்போ மூன்று அடிக்கு வந்துட்டார்.
முன்பு போட்ட பதிவில் தீர்மானமாக மீனாட்சி எண்றுதான் எழுதி இருந்தேன்.
இப்போது எந்த ஜெண்டர் என்றே தெரியவில்லை.
அது பாட்டுக்கு நீயாரோ இங்கு நானாரோ
என்று நிம்மதியாக இருக்கிறது.
ஒரு சின்னக் கடையில் (pet shop) விட்டு விட்டு
வந்திருக்கிறோம்.
மத்சயாவதாரம் என்று நினைத்துக் கொள்ளவேண்டியதுதான்.
இல்லையென்றால் மதுரை மேல் பாசம் அதிகம் என்பதால் மீனாட்சியம்மா தான் வந்துட்டாங்களோ.
பிள்ளைகள் எல்லோரும் அவங்க அவங்க வேலையைப் பார்த்துக் கொண்டு வெளியூர் போவதால் துள்ளி விளையாட வந்த கிழவனோ தெரியாது.
ஆகக்கூடி நம்ம யாருக்காவது
ஏதாவது செய்ய விட்டுப் போனால் இந்த ரூபத்தில் வருவார்கள் என்பது நிச்சயம்:-)

14 comments:

இலவசக்கொத்தனார் said...

இரண்டாவது போட்டோ யாரு வந்த பொழுது எடுத்தது? இவ்வளவு சிகப்பா நிறம் மாறிடிச்சே, ரொம்பவே வேண்டாதவங்களோ!! :))

SK said...

இதுவே சிதம்பரமாயிருந்தால், நடராஜன்னு எழுதியிருப்பீங்களோ!

நிஜமாவே 3 அடியா; இல்லை கப்ஸாவா?

தொட்டி எவ்வளவு பெருசு?

என்ன சாதி இது?
பெட் ஷாப் விலாசம் வேணும்.

ஆளை அனுப்பி செக் பண்ணச் சொல்லணும்!

:))

மேல்விவரங்கள் தேவை!
:D

வல்லிசிம்ஹன் said...

அதுதானே தமாஷ்! யாரு வந்தாலும் அது ஒண்ணும் கலரெல்லாம் மாறவில்லை.
இது நவராத்திரி விளக்குகள் போட்ட போது மீனாட்சி மேல் பட்ட கலர்.
யாராவது அதுக்கு வேண்டாதவங்கனு சொல்லணும்னால் எங்க வீட்டுக்குப் பசும்பால் கொண்டுவர கன்னையா தான்.
அவன்தான் எத்தா பெரிய மீனுன்னு பெட்டியைத் தட்டுவான்.அது ஓடும்.:-)

வல்லிசிம்ஹன் said...

ஆஹா.எஸ்.கே.சார். நல்ல கேள்வி போட்டிங்களே. சிதம்பரமாயிருந்தால்
கோவிந்தராஜன்னு வைத்திருப்பேனோ.
சிந்திக்க வேண்டிய விஷயம்தான்;-)

அந்தப் பெட்ஷாப் பேரு ரூப்ஸ் கார்னர்.மந்தைவெளில இருக்கு.
மீனாட்சியோட வசிப்பிடம் 5'பை 2'
எங்க வீட்டுக் கூடம் 15 பை 15
இப்போ எல்லாம்(பொட்டி,ஏர் ப்யூரிஃபையர்,உள்ள இருக்கிற விளக்கு எல்லாம் ரூப்ஸுக்குப் போயிருக்கு.
இனிமேல் மீனாட்சியைப் பார்த்துக்கிறது சிரமம்.
யாராவது அதுக்கு பொறுப்பு ஏற்றுக் கொண்டால் கொடுத்துட வேண்டியதுதான்.
சாதி அரொவானா.அமேசான்ல தான் இருக்குமாம்.
இன்னிக்கு சிகாகோ அக்வேரியம் இவர்கள் போனார்கள். அங்கெ மீனாட்சியோட அப்பா,தாத்தாவெல்லாம் இருக்கிறார்களாம்:-)

துளசி கோபால் said...

//யாராவது அதுக்கு பொறுப்பு ஏற்றுக் கொண்டால் கொடுத்துட வேண்டியதுதான்//

நான் ரெடி. நீங்க ரெடியா? :-))))

நான் கேக்கணுங்கறதை நம்ம கொத்ஸ் கேட்டுப்பிட்டார்.
பதிலும் கிடைச்சிருச்சு. இங்கே இந்த வகையைப் பார்த்த ஞாபகம் இல்லை.
ஆனா 'ஃப்ளெஷ் ஈட்டிங் ஈல்ஸ்' ஒரு இடத்துலே பார்த்தேன். 125 வயசு மீன்கள்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் துளசி.
போன வருஷத்துக்கு இந்த வருஷம் மீனாட்சியோட அகல அளவு நிறைய ஆகிவிட்டது.
எப்படி அதை அனுப்பட்டும்/
ஒரு பெரிய சிப்லாக் பையிலே போட்டா உங்க ஊருக்கு வந்துடுமா?
அது வெளில குதிச்சதிலிருந்து எங்க ரெண்டு பேருக்கும் கவலை வந்துவிட்டது.
கண்ணு முன்னால அது நல்லா இருக்கணுமேங்கிற கவலை.
நீங்க ராம்ஜி பாத்தீங்களே அவங்க வீட்டில ஒரு கார் விபத்து ஏற்பட்ட போது அவங்க வீட்டு அரொவானா முதல் நாளெ கண்ணாடில மோதி பயங்கரமா அடிபட்டுடுத்தாம்.
ஷோபனா ராம்ஜி சொன்னாங்க.
எனக்கு இதைப் பார்த்தால் பாவமாத்தான் இருக்கு. ஒண்ணும் மந்திரம் மாயம் தெரியவில்லை.

முத்துலெட்சுமி said...

\\ஒரு மீன்தொட்டி, கொஞ்சம் மணல், முன்ன இல்லாத
காத்து சுத்தம் செய்யும் மெஷின், குட்டி மீன் பொம்மைகள்
ஒரு பச்சை ப்ளாஸ்டிக் செடி
எல்லாம் வாங்கி வந்து ராகு காலமில்லாத நேரத்தில்
குடி வைத்தாச்சு.//


நல்ல கதை அதுக்கும் ராகு காலம் பார்த்தீங்களா?மீனாட்சி(சுந்தரம்??) புது வீடு குடிபுகுந்த விழாவுக்கு எத்தனை பேரக் கூப்பிட்டீங்க.:)

Mathuraiampathi said...

என்னமோ போங்க, உங்களுக்கு பொழுது போக்க இது வந்து மாட்டிக்கொண்டது.....இப்போ எதோட வாலையோ பிடித்தமாதிரி நீங்க திண்டாடுவதாகத்தான் எனக்கு தெரிகிறது. :-)

வல்லிசிம்ஹன் said...

பாயிண்ட் பிடிச்சாச்சு லட்சுமி.
அதே தான். புலிவால் தான்.
விடவும் முடியலை.பிடிக்கவும் முடியலை.

அதுங்க வழக்கப் படி ,குடி இருக்கும் ஆற்றிலிருந்து 10 அடி மேலே எழும்பி தன்னுடைய இரையைப் பிடிக்கணும்.
இந்த மீனாட்சிக்கும் அப்பப்போ தான் சௌத் அமெரிகாலே இருக்கோம்னு தோணிடும் போல.
ஒரே ஜம்ப். மேலே இருக்கிற மூடியைத் தட்டிவிட்டு நம்மவீட்டு ஹாலில் தரைக்கு வந்து படபடவென்று அடித்திக் கொண்டு இருந்தது.
காலை 5 மணி இருக்கும்.
வினோதமா சத்தம் கேட்கிறதெ என்று படுத்து இருந்த அறையிலிருந்து வெளில பார்த்தால் எனக்கு மூச்சே நிற்கும்போல ஆச்சு.
அவசரமா இவங்களை எழுப்பி பெரிய டர்க்கி டவலால் அதைப் பிடித்து மறுபடியும் தொட்டிக்குள் போட்ட பிறகுதான் சரியாச்சு.
நிறைய உப்புக் கல்லை தொட்டித் தண்ணிக்குள்ள போட்டொம். இப்போ நல்லா இருக்கு.

வல்லிசிம்ஹன் said...

வாங்க மௌலி,
ஆமாம் . கிருஷ்ணா, ராமானு கிடக்கறதை விட்டு இந்த மாதிரி அட்வென்சர் செய்வதில் எங்க சிங்கத்தை யாரும் மிஞ்ச முடியாது.
பெறாத புள்ளை இது.:-)
பசங்க கூட கேலி செய்யற அளவில்தான் இருக்கு.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வல்லி!
இந்த மீன் வகை சுமார் 5 அடிக்கு மேல் வளரும்; அத்துடன் இவை அமேசன் நதியை ஒட்டிய
காடுகளிலுள்ள மரங்களில் உள்ள வண்ணத்துப்பூச்சி,சிலந்தி போன்றவற்றை ;நீர்மட்டத்துக்கு மேல் சுமார்
10 அடி உயரம் பாய்ந்து வந்து கவ்விச் சாப்பிடும்;தன்மை கொண்டது.
தொலைக்காட்சி விவரணப் படத்தில் பல தடவை பார்த்துள்ளேன்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் யோகன்,

டிஸ்கவரி சானலில் நாங்களும் பார்த்தோம்.
43 வயது வரை இருக்கும் என்று சொன்னார்கள்.
எனக்குத் தான் நம்ம கிட்ட இது வந்துவிட்டதே சரியாப் பார்த்துக்க வேணுமே என்று கவலை.
நன்றி யோகன்.

குமரன் (Kumaran) said...

உங்க மீனாட்சியைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டேன் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

ஆறுதல் அபிராமி போல் எனக்கு இந்த மீனட்சி வந்தது.
பெட்டி பக்கத்துல போய் உட்கார்ந்தாப்போதும். அப்படியே கண்ணாடி கிட்ட வந்து பார்க்கும்.
நன்றி குமரன்.