About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Friday, December 22, 2006

கோவில்கள் தரிசனம்

இராமனும் சீதையும் ,இலக்குவன் குடில் அமைத்துத் தர இருந்த இடம் கோதாவரி நதியின் புண்ணியம் வாய்ந்த கரையில்.
பத்ராசல ராமனை
நினைத்து இராமதாசர் பாடிய பாடல்கள் எல்லோருக்கும் தெரிந்ததே.

அதுவும் ஸ்ரீ பாலமுரளிக்ருஷ்ணா இந்தப் பாடல்களைப்
பாடி கேட்கவேண்டும்.

''அம்மா சீதா நீ இராமனுடன் உலவுப் போகும்
போது என்னைப் பற்றிச் சொல்லு.
என் கஷ்டம் தீரும்படி சிபாரிசு செய்''

என்று பாடும்போது மனம் உருகி விடும்.
அவரே தெலுங்கு தெரிந்தவர் என்பதால் இப்படி
மனம் இழைந்து பாட முடிகிறது என்றுதான் நினைக்கிறேன்.

எனக்கு அந்தப் பாடல் வரிகள்
நினைவு இருந்தாலும் நீங்களே


இந்தப் பாடலைக் கேட்க வேண்டும் என்று
விண்ணப்பிக்கிறேன்.
இந்தப் பதிவில் தொட்டமளூர் கண்ணன் படமும் கொடுத்து இருக்கிறேன்.

இவனைத் தான் இராமனுஜ மஹாமுனி
மிகவும் செல்லம் பாராட்டுவாராம்.

ஏற்கனவே அவருக்குச் செல்லப் பிள்ளை
திருநாரயணபுரம் சம்பத்குமாரன்.
அவரோடு இந்தக் குட்டித் தவழும் கண்ணனையும்
கொஞ்சுவாராம்.
நம்ம வீட்டிலே புதுக் கண்ணன் வந்து இருக்கிறானே.
இவனையும் பார்ப்போம் என்று நினைத்தேன்.

அவனைப் பார்த்த வேளை எனக்குத் தமிழ்
எழுத்தும் மீண்டும் கிடைத்து விட்டது.

கண்ணன் நாமம் வாழி.
வாழி பத்ராசல ராமன் நாமம்.


paRnasalai.and Bathraachalam Raamar.

7 comments:

கோவி.கண்ணன் [GK] said...

கிடைபதற்கறிய படங்கள் !
நன்றி.

வல்லிசிம்ஹன் said...

Thank you Kannan.
thamizh fonts disappeared suddenly.
download seyya mudiyalai.
so saamy padanggaL paakka poyitten.
you name the God and we get the pictures in Google.
so really no problem.
this is what they call padam podarathu?:-)

குமரன் (Kumaran) said...

அருமையான படங்கள் அம்மா.

தமிழில் எழுத வேண்டும் என்றால் இந்த வலைப்பக்கத்திற்குப் போய் பாருங்கள் அம்மா. கீழே இரண்டு கட்டங்கள் இருக்கும். முதல் கட்டத்தில் தங்கிலீஷில் தட்டச்சினால் இரண்டாவது கட்டத்தில் தமிழில் தெரியும். அதனை பிரதியெடுத்து உங்கள் பதிவிலோ பின்னூட்டத்திலோ ஒட்டி விடலாம். இதனைத் தான் நான் தொடக்கத்திலிருந்து பயன்படுத்துகிறேன்.

http://www.suratha.com/leader.htm

வல்லிசிம்ஹன் said...

கண்ணன் பேரைச் சொன்னதும் எ-கலைப்பை கிடைத்தது.
இது புதிய கணினியாக இருப்பதால்
கொஞ்சம் திகைத்தேன்.

தானெ கண்ணன் வந்து சரிசெய்து விட்டான்.

நீங்களும் பதிவு போட்டு விட்டிர்கள். கண்ணன்.

வல்லிசிம்ஹன் said...

குமரன், மிக்க நன்றி.
இ-கலைப்பை ஐகான் சில சமயம் ஓடிப் போய் விடுகிறது.
கண்ணனைப் போலவே:-)

நீங்க சொன்ன படியும் செய்கிறேன்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

தொட்டமளூர் குட்டிக் கண்ணன் அழகோ அழகு.
அதுவும் தவழ்ந்த நிலையில் கருவறையில் காண்பது மிகவும் அரிது!

பத்ராசலம் ராமன் ஒருவன் தான் அமர்ந்த நிலையில் அருளுகிறான். அருகில் இலக்குவனும் அழகோ அழகு!

நன்றி வல்லியம்மா!
வீட்டுக் கண்ணன் என்ன் செய்து கொண்டு இருக்கிறான்? ராமானுஜ முனி போல் செல்லம் பாராட்டுகிறீர்களா?:-)

வல்லிசிம்ஹன் said...

வாங்க ரவி,
இவன்தான் ராமனுஜமுனி நட்சத்திரத்திலேயே பிறந்து இருக்கிறான்.
அதனால் எல்லா பெரியவர்கள் அருளும்
அவனுக்கு நல் அறிவு ஆரோக்கியம் கொடுக்க வேண்டும்.
நம் கும்பகோணம் இராமசாமிக் கோவிலிலும் ராமர் சீதை எல்லோரும் உட்கார்ந்து இருப்பார்களே.
http://naachiyaar.blogspot.com/2006/06/blog-post.html
இந்தப் பதிவில் நீங்கள் பார்க்கலாம்.
உங்க ஷ்ரவணுக்கு எப்படிப் பொழுது போகிறது?
இல்லையில்லை, அவன் அம்மாவுக்கு பொழுது போதுகிறதா:-)