அக்டோபர் 31.
இன்றோடு 60 வருடங்கள் பூர்த்தியாகித் தொடர்கிறது எனக்கும் சிங்கத்துக்குமான
மானசீக உறவு.
இப்போதும் அவர் எப்போதும் விரும்பும் பாடல்களைக் கேட்டுக்கொண்டு
அவர் இங்கிருந்தால் எத்தனை இனிமையாக இருந்திருக்கும் என்று எண்ணி
இதுவும் கடக்கும் என்று நடந்து கொண்டிருக்கிறேன்.
இதைப் பரிபூரணம் என்று சொல்லாவிட்டாலும்
மறுபாதியாக அவர் நினைவு என்னிடம் எந்தத் தருணத்திலும்
இருந்து கொண்டே இருக்கிறது.
ஆதரவாக என்னைச் சுற்றி இருந்தவர் சட்டென விலகினாலும்
ஒரு சிறு சிரமம் கூட அனுபவிக்காமல்
மறைந்தார்.
மீண்டும் நாங்கள் சந்திப்போம் நம்பிக்கையுடன்.
அனைவரும் நலமாக இருக்க வேண்டும்.
