வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
அனைவருக்கும் இனிய நவராத்திரி நாட்களுக்கான வாழ்த்துகள். மக்கள் இன்பமும் இனிமையும் நிறை வாழ்வு வாழ
அம்பிகை அருள வேண்டும்.
நல்ல வேளை எழுதி வைத்தேனே என்று என்னை நானே பாராட்டிக் கொண்டேன்:}))))))
அம்மா ,அப்பா,தம்பிகள் அவர்களின் மனைவி குழந்தைகள்
அப்பாவழி தாத்தா பாட்டி,சித்தப்பா சித்திகள் குழந்தைகள் கொலு நாள் கொண்டாட்டங்கள்,
அம்மா வழி பாட்டி, மாமாக்கள் மாமிகள், அவர்கள் பெற்ற செல்வங்கள் என்று சேகரித்த நினைவுகள்,பரிசுகள்,புத்தாடைகள்,
வாங்கிய பொம்மைகள், புக்ககம், முதல் கொலு மகளுடன் சேகரித்த துர்கா, கிருஷ்ணா, ரங்க நாதர். இன்ன பிற நினைவுகள். சுண்டல் சேகரிப்பு, உறவினர் அக்கம்பக்கத்தார் கலகலப்பு, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள். நிறை பண்டிகைகள் அத்தனையையும் அளித்த இறைவனுக்கு
நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻