
எல்லோரும்
  
இனிதாக வாழ வேண்டும்
|  | 
| முன்பொரு காலத்தில் என்று நினைக்க வைக்கிறது இந்தக் கொலு. கொலு  நாட்களின் முதல் நினைவுஏழு வயதில் ஆரம்பித்தது.  அக்கம்பக்கம் ஓட
 ஆண்டாள் கோவிலில் கொலு பார்க்க, கடைவீதிகளில் மலர் மணம் வீச பட்டுப் பாவாடை ,குஞ்சலம்   கட்டிய பின்னல் ஆட  குதித்தோடிய   நாட்கள்.
 
 சின்ன கொலு,பெரிய கொலு,பணக்கார வீட்டு கொலு,சாதாரண வீட்டுக்கொலு
 என்று பல ரகம். எல்லாவீடுகளுக்கும் விஜயம் சிறு வயதுத் தோழிகளோடு.
 எல்லாவீட்டிலும் சுண்டல் உண்டு. குங்குமம் உண்டு. பாட்டு உண்டு.
 அருட்புரிவாய் கருணைக்கு கடலே   பாடல் உண்டு.
 புதிதாகப் பாட்டுக்கு கற்றுக் கொள்ளும் கமலி கூட அம்பா நீ இறங்காவிடில் புகலேது பாடுவாள்.  நான் மட்டும் ஓஒ   தேவதாஸ் பாடிச் சிரிப்பையும் வாங்கி கொள்வேன்.
 
 அடுத்து ஏதாவது பாடச்  சொன்னால் பூமாலை   நீயென் புழுதி மண் மேலே  என்பதற்குள் எனக்கே அழுகை வந்துவிடும் ஆதலால் அந்தவீட்டுக்காரர்கள் சாக்கலேட் கொடுத்து நிறுத்திய நாட்களும் உண்டு. .]]]
 
 திருமங்கலம் வந்த பிறகு எங்கள் வீட்டிலும் கொலு ஆரம்பித்தோம்.
 கடைசிப் படியில் மறையானை,ரப்பார் வாத்து, தம்பியுடைய தேர்   எல்லாம் இடம் பெரும்.
 வாசலில் பொம்மை விற்பவரிடம் வாங்கிய வெள்ளை ரங்க நாதர், கிளிகள்,
 குட்டிக் குருவிகள், தெப்பக்கு குளம் எல்லாம் கால ஓட்டத்தில்  எங்கோ போயின.
 அப்பா தீப்பெட்டிகளில் இணைத்து செய்த  பீரோ, மேஜை, நாற்காலிகள், பூங்கொத்துகள், வண்ணத்தோரணங்கள் என் பதினாறு வயது வரை இருந்தது .
 
 என் வாழ்வில் எனக்கான ராமன் வந்ததும்,   நவராத்திரி  கொலு ,மழைக் குட்டையாகவும், ரயில் நிலையமாகவும், குழந்தைகள் கார்கள் நிற்கும்  நிலையமாகவும் மாறியது,.
 
 வாழ்க்கையைப் பிரதி பலித்ததோ .  மீண்டும் பார்க்கலாம்.
 
 
 
 
 
 |