|
நான் இளவரசிதானா? |
|
அரசு முத்திரை(Talisman) |
|
இளவரசியாக இல்லாவிட்டாலும் இவளை மணப்பேன்! |
|
எதிர்காலம் என்ன? |
|
இளவரசியாக ஆகணுமா!!!! |
|
போஸ்டர் |
|
இளவரசன் பால் உடன் நடனம் |
|
ட்சார் வம்ச கடைசி ராஜகுமாரி |
அனஸ்டேஸியா திரைப்படம்
ரஷ்யாவின் கடைசி அரச வம்சத்தினர் புரட்சியாளர்களால் கொல்லப் படுகிறார்கள்.
அதில் அனஸ்டேசியா எனும் ஆன்னா ,ராஜ விஸ்வாசிகளால்
காப்பாற்றப்பட்டு வேற்றுநாட்டுக்குக் கடத்தப் படுகிறாள்.
ஏற்கனவே சுவாசக் கோளாறினால் அவஸ்தைப் படுகிறவளுக்கு
அரண்மனை கொளுத்தப்பட்டு அந்தப் புகையும் பயங்கரமும் சேர்ந்து
நுரையீரல் கோளாறும் அம்னீஷியா என்ற மறதி நோயும் வருகிறது.
மறதியின் காரணமாக தான் ஒரு இளவரசி என்பதையும் மறந்து வீதிகளில் திரிந்து கொண்டிருப்பவள்
பொர்ரக்நின் என்கிற இளைஞன் கண்ணில் படுகிறாள்.
அவனுக்கு வாழ்வில் எப்படியாவது முன்னேறவேண்டும். பணம் சம்பாதிக்கவேண்டும்.
அரசியலில் முன்னணிக்கு வரவேண்டும் என்ற துடிப்புள்ளவன்.
அவனும் அவனைச் சார்ந்த அரசியல் அமைப்புகளும் அவளது முகம்
தோற்றம் அனைத்தையும் வைத்து
அவளையை இளவரசியாகப் பிரகடனம் செய்வது என்று தீர்மானிக்கிறார்கள்.
இந்த இளவரசியின் பெயரில் ஸார் மன்னன் ஒரு பெரிய தொகையை இங்கிலாந்து வங்கி ஒன்றில் போட்டு வைத்திருக்கிறான். அதுதான் அவர்களுக்கு வேண்டும்.
ஒன்றும் அறியாத நிலையில் அடுத்தவேளைச் சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாத ஆன்னா அவர்கள் கட்டுப்ப பாட்டுக்குள் வருகிறாள்.
அடுத்து அவர்கள் செல்ல வேண்டியது
பாரீஸிற்கு.
அங்கேதான் அரச வம்ச சீமாட்டி ஒருவர்
அவரது பேத்தியாக உறவு முறை உள்ள ஆன்னாவை அடையாளம் கண்டு கொண்டு இவள்தான் அரசகுமாரி என்று
முத்திரை குத்த வேண்டும்.
ஆன்னாவிற்கு அரசகுமாரியாக எப்படியெல்லாம் நடந்து கொள்ளவேண்டும் என்றெல்லாம் பயிற்சி அளிக்கப் படுகிறது..
இயல்பாகவே அழகும் கம்பீரமும் சேர்ந்த உருவம் கொண்ட ஆன்னாவிற்கு எல்லாம் சுலபமாக இருக்கிறது.
சிலசமயம் போர்க்நினையே மிரட்டும் அளவிற்கு அவள் கம்பீரம் இருக்கிறது.
அவனுக்குள் ஒரு சந்தேகம் முளைக்கிறது. இவள்தான் உண்மையான ராஜ குமாரியோ என்று.
பாரீசை நோக்கிப் புறப்படுகிறார்கள்.
அங்கே டோவேஜர் மூதாட்டி,அனஸ்டாஷியாவின் பாட்டி யைச் சந்திக்க ஏற்பாடு .
அவர் மறுக்கிறார். இது போலப் பல பெண்களைச் சந்தித்து அலுத்து விட்டார்.
நம் கதாநாயகியைச் சந்திக்க மறுக்கிறார்.
பாடுபட்டு ஒரு நிகழ்ச்சியில் சந்திக்க முயற்சிக்கிறார்கள் . பாட்டி பாலே பார்த்துக் கொண்டிருக்கும் போது பேத்தி உள்ளே நுழைகிறாள் .
அதிர்ச்சி அடையும் பாட்டிக்கு, இந்தப் பெண்ணின் மேல் இரக்கமும் இனம் புரியாப் பாசமும் வருகிறது. இருந்தாலும் மீண்டும் ஒரு போலியாக இருக்கக் கூடும் என்று அச்சமும் வருகிறது. எழுந்து சென்று விடுகிறார் .
மீ ண்டும் முயற்சிக்கிறார் போர்க்னின். அவர்களது அபார்ட்மெண்டிற்கே வருகிறார் . பாட்டியம்மா. தான் அனஸ்தீஷியா என்று சொல்லி முடிப்பதற்குள் ஆன்னாவிற்கு இருமல் வந்துவிடுகிறது.
பாட்டிக்கு உடனே அன்பு சுரக்கிறது பேத்தியிடம் .
உண்மையில் இந்த இருமல் தன் பேத்திக்கு மன அழுத்தம் வரும் வரும்போதெல்லாம் இந்த இருமல் வருவது நினைவுக்கு வருகிறது . அங்கீகாரம் கொடுத்துவிடுகிறாள்.
போர்க்னினுக்கும் ஆன்னா வுக்கும் இடையில் மலர்ந்திருந்த காதலைக் கண்டுபிடித்ததும் பாட்டியின் மனம் வேறு திட்டம் போடுகிறது. அருமையாக ஏற்பாடு செய்து இருவரையும் சேர்த்து வைத்து வேறு நாட்டுக்கு அனுப்பி வைத்துவிடுகிறாள் கண்ணில் கண்ணிருடன்.
அருமையான திரைப்படம். மீண்டும் கிடைத்தால் பார்க்கலாம்.
எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்