எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
1977இல் தன்னுடைய சொந்த வொர்க்ஷாப் ஆரம்பித்தார். சிங்கம்
அவரது பலமே அவரது கஸ்டமர்கள் தான். இப்பொழுது இருக்கும் இடத்தில்தான்
நல்ல ஸ்திரமான உயரக் கொட்டகை போட்டு நான்கு வண்டிகள்
நிற்கும் அளவிற்கு தரையெல்லாம் கெட்டித்து ஆரம்பித்தாகி விட்டது.
அப்போது வீட்டில் மாமனார்,மாமியார்,பாட்டி,எங்கள் குடும்பம் எல்லாம் ஒரே சுறு சுறு என்றிருக்கும்.
வந்தவர்கள் போகிறவர்கள், தொழிலாளிகள், உறவினர்கள்
என்று கலகலப்பு.
வீட்டில் எங்கள் சமையலறை தனி. காப்பி டீ, வெங்காயம்,முருங்கை
இதெல்லாம் சமைக்கத் தனி அடுப்புகள்.
மெயின் சமையலறையில் பெரியவர்களுக்கான சமையல்.
எப்படி இவ்வளவு வேலைகளையும் சமாளித்தோம் என்று இப்போது
மலைப்பாக இருக்கிறது.
இதன் நடுவே அரிசி புடைப்பது,பயறு திரிப்பது, என்று ஆட்களும் நானும் மாமியாரும்
செய்து கொண்டே இருப்போம்..
திரட்டிப்பால் செய்வதானால் பத்துலிட்டர் பாலாவது பெரிய அரிக்கஞ்சட்டியில்
ஏற்றப் படும்.
அதே போல நிலக்கடலை வந்து இறங்குனதுதான் தாமதம்.
பாட்டி வந்துவிடுவார். எல்லோருக்கும் கொடுத்தனுப்பியது போக வீட்டுக்கு வேண்டும் என்கிறது
பெரிய பித்தளை சம்புடங்களில் அடைக்கப் படும்.
அடுத்த நாள் எழுந்திருக்கும் போதே வெல்ல வாசனை வரும்.
சமையல் செய்பவர் நிலக்கடலை வறுத்துவைக்க மாமியார்
வெல்லம் பதம் பார்த்துக் கொண்டிருப்பார்., சரியான பதம் வந்ததும்
வேர்க்கடலையை அதில் கொட்டி கிளற ஆரம்பிப்பார்.
அரைமணி நேரத்தில் எல்லாம் முடிந்துவிடும். அத்தனை பெரிய பாத்திரத்தை இறக்க உதவிக்கு ஆள் வந்ததும் தாம்பாளங்க்களில் கொட்டி சிக்கி வகுந்து வைக்கப் பட்டப் படும். கொஞ்சம் கடலை உருண்டைகளும் பிடித்து வைக்கப் படும். வீடே ஏலக்காய்
வாசனையில் மிதக்கும்.
இதெல்லாம் என்மனத்தில் ஓடின.காரணம் பேரன் கட்டமைத்த
சோஃபா கம் பெட் தான். டே பெட் என்று சொல்வதை , பெரிய பையன் எனக்காக வாங்கி வைத்துவிட்டுப் போனான்..
தாத்தா செய்வது போலவே அதன் கூடவே வந்த மானுவலைப் பார்த்து, அழகாக செட் செய்துவிட்டான்.
அரை மணி நேரத்தில் முடித்து விட்டான். பதினாறு வயதில் செய்யக் கூடிய வேலைதான்.. இருந்தும் எனக்கு
எங்க வீட்டுக்காரர் நினைவுதான் வந்தது..அவரைப் போலவே
இவனும் வாழ்வில் முன்னேற வேண்டும். தைரியம், நேர்மை,விடாமுயற்சி எல்லாம்
சேர்ந்து வெற்றி பெற வேண்டும்.