Blog Archive

Thursday, September 25, 2014

நவராத்திரி ஆரம்பம் கூடிக் களிப்போம். மீள் பதிவு சென்ற வருட நவராத்திரி

விளக்கேற்றி வைக்கிறோம் விரைந்தோடி வாருங்கள்
கிருஷ்ணா  நீ  பேகனே  பாரோ
25 வருடங்களாக  வருடா வருடம் வந்துட்டுப் போறோம். நீங்களும் வாங்க.
அம்பிகை

 ஆவணி மாத பௌர்ணமியை அடுத்து வரும்
பதினைந்து நாட்களும்

வீட்டுப் பெரியோர்களை நினைத்து வழிபடவேண்டிய நாட்கள்.
அவை முடிந்து வரும் மஹாலய அமாவாசை புரட்டாசியில் நாளைவருகிறது.

நம் வீட்டில் காலையில்  பித்ருக்களை வழிபட்டபிறகு. மதியத்துக்குப் பிறகு

பொம்மைகள் படியிறங்கி வரும்:)
ஆமாம் மாடியில் ஒரு வருடம் தூங்கியவர்களை எழுப்பிச் செல்லம் கொஞ்சிக் கீழே கொண்டு வரவேண்டும் இல்லையா!!

மேலே உள்ள பொம்மைகள்  25   வருடங்களுக்கு முன் ஒரு
கண்காட்சியில் வாங்கியது.
அதற்குப் பிறகு எவ்வளவோ மாற்றங்கள்.
இந்த வருடம் சிறிய அளவில் நிறைவாகச் செய்யவேண்டும்.

அம்பிகை சரண் புகுந்தால் அனைத்து வரமும் அருள்வாள்.

அனைவருக்கும்  தொடங்கவிருக்கும் நவதின நாயகியருக்கான வாழ்த்துகள் .




 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Friday, September 12, 2014

வாழ்க்கையின் பாடங்களைக் கற்றுத் தந்தவர்கள்

அப்பா  இரண்டாவது ஆசிரியர்
என்றும் கருணையும்  கவனமும்  எல்லாக்  குழந்தைகளுடனும்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
இந்தப் பள்ளி போலத்தான் என் பள்ளிக்கூடமும் இருக்கும்.                                            பிறந்ததிலிருந்து  போற்றி வளர்த்த தாய்,  முதல் குரு. அவள் இல்லாமல் என்ன தெரிந்திருக்கும் நமக்கு.  எந்தத் தவறையும்   மன்னிப்பாள். எந்தத் தப்பையும் திருத்துவாள்.. வாதம் செய்யும் துடுக்குப் பெண்ணை   அணைபோட்டு நல்வழிப் படுத்தின அம்மாவுக்குத்தான் முதல்  வணக்கம்.  இதுபோலத்தான் என் ஆசிரியர் தினப்  பதிவை   ஆரம்பித்தேன். நினைவுகள் அலை மோத பிறகு எழுதவில்லை.                                  




பள்ளியில் கொண்டு சேர்த்த அப்பாவின் கைகளின்    ஆதரவை  இன்னும் மறக்கவில்லை. வாழ்வின் முதன் அரண். அவரே  என்னை    கணவரிடம் ஒப்படைக்கும் போது தெரியாமல்  ஏதாவது    தப்பாக நடந்தால் நீங்க பெரிசா எடுத்துக் கொள்ளக் கூடாது  என்று சொல்லி அதற்கு நல்ல  பதிலையும் வாங்கிக்   கொண்டவர். மாப்பிள்ளையும் தன் பிள்ளையாக உயர்ந்த   இடத்தில் வைத்து  கடைசி வரை   மரியாதை காத்தவர். இவரிடம் கற்ற பாடங்கள் எத்தனை. ஒழுக்கம்,நேர்மை,நேரம் தவறாமல் இருத்தல்,பெரியோர் சொல் கேட்பது எல்லாம் தினம் சொல்லும் அறிவுரை.  அப்போது  அந்த இடத்தைவிட்டு ஓடத்தோன்றும். ஆனாலும் மனம் பதிந்து கொண்ட நாட்கள்.+


கொடுத்த இடமும்  பாந்தமாக  அமைந்தது.அதிர்ந்து பேசாமல்  தன் வழிப் படுத்தும் குணம் கொண்டவர்  கணவராக வாய்த்தது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம்.தன் உழைப்பால் உயர்ந்தவர்  என்னையும் அதே  வழியில் ஈடுபட வைத்ததே  ஒரு சாதனை.  சொல்லிப் புரிய வைப்பதைவிடா வேலைகளைச் செய்தே  புரிய வைப்பார்.எந்த வேலையும் தாழ்ந்ததில்லை என்ற கொள்கை என்  மனதில் புகுத்தியவர்.சுத்தம்,அகத்தூய்மை,புறத்தூய்மை என்று  எல்லாவிஷயங்களிலும்  குரு அவர்தான். அவர்    எதிர்பார்த்தபடி நான் இல்லையென்றாலும் வருந்தமாட்டார்,. அந்த வேலையைத் தானே  செய்துவிடுவார்,. அவரது குணத்தை எங்கள் குழந்தைகளிடம் காண்கிறேன்.



We  had a great father maa.   என்றுதான்  இன்றும் அவர்கள் சொல்வார்கள்.  வலைப் பதிவு என்று ஆரம்பித்தபிறகு    அவருடன் செலவிடும் நேரம் குறைந்தது கண்டு இப்போது யோசிக்கிறேன்.  அவர் தன் தோட்டம் செடி என்றிருந்தால் நான் வீடு,கணினி என்று இருந்துவிட்டேனோ என்ற  ஏக்கம் படிகிறது. யாருக்குத் தெரியும் சொல்லாமல் கொள்ளாமல்    சென்றுவிடுவார் என்று. அதிலும் ஒரு பாடம் சொல்லிவிட்டுத்தான் போயிருக்கிறார். நேரம் எவ்வளவு குறுகியது.அதில் நேசம் எவ்வளவு முக்கியம் என்று. இப்பொழுது  நான் எவ்வளவோ மாறிவருகிறேன்.புதுப் பாடங்களுக்குப் பிஞ்சுகள் தயாராக இருக்கிறார்கள்.அவர்களும் கற்றுக் கொண்டு எனக்கும் கற்பிக்க  அவர்கள் தயார்.





இணைய நட்புகள் தினம் புதுப்புது தகவல்கள் தந்து  அதிகம் படிக்காத  எனக்கு ஆசான்களாக  மாறுகிறார்கள். ஒவ்வொருவரிடம் அயராத உழைப்பு.எடுத்த வேலையை முடிக்கும் தீவிரம். உடல் நோவோ,மனக் கஷ்டமோ  எதையும் பாராமல் மீண்டு எழும் ஃபினிக்ஸ் பறவைகள் போல என்  தோழிகள் துளசி கோபாலும்,கீதா சாம்பசிவமும்.
**********************************************************
முதிர்ச்சி அடைந்த எழுத்துக்குச் சொந்தக்காரர்களும் விரிவான கண்ணோட்டம் கொண்டவர்களுமாக   தேனம்மையும் பவளசங்கரியும் உலா வருகிறார்கள்.இன்னும் கற்கவேண்டியது எத்தனையோ  .இவர்கள் காட்டும் வழியில் போனாலே போதும்.
****************************************************


நட்பு வட்டங்களில் இன்னும் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம்,வெங்கட், மின்னல்வரிகள்   கணேஷ்,சத்தியப்ரியன்  ஜி, ரிஷபன்  அவர்கள்,வை.கோபு ஜி,,காவிரியாகப்  பாயும் நடை கொண்ட   ஆர்விஎஸ், தோட்டக்காரர்  ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி  ,திடம் கொண்டு போராடும் சீனு,  திண்டுக்கல் தனபாலன்,,  உழைத்து விவரங்கள் சேர்க்கும்,பதியும்   கோமதி அரசு  என்று     நீண்டு போகிறது என் அன்புக் கூட்டம்.  இன்னும் பெயர்கள்  நிறைய விட்டுப் போயிருக்கின்றன. சட்டென வரும் அயற்சி  கணினியிலிருந்து கை எடுக்க வைக்கிறது.    என் ஆசிரியர்கள்   அனைவருக்கும் வணக்கங்கள்    .அனைவரும்  நலமாக இருக்க இறைவனிடம்  வேண்டுகிறேன்.


Tuesday, September 09, 2014

வானம் தரையில் ஒரு வானம் பிட் செப்டம்பர் தலைப்பு

முழுநிலா ஆவணி மாதம்
விமானத்திலிருந்து எடுத்தது புதுக்காலை
காலை வானம்
வானமும் பூமியும்
பதினான்காம் நாள் நிலாவும் வானமும்
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
தரையில் மலர்ந்த பூக்கள்