|
அருள் தரும் அம்மாஜி:) |
|
தண்ணீர் சத்தம் கேட்க வேண்டும்!! |
|
Add caption |
|
Add caption |
வாஸ்து டால்ஃபின்
Feng shui எனும் ஃபங் ஷ்வே என் வாழ்க்கையில் புகுந்தது எப்போதுனு யோசித்தேன்...உட்காரப் போனேன்...............உடனே
ஓஹோ வடக்குப் பார்த்து உட்காரக் கூடாதோ!!!
தெற்கே பார்த்துத் திரும்பி உட்கார்ந்து கொண்டேன். அம்மா சாமி கும்பிடுதுனு மினிம்மாவும் விடை வாங்கிக்கொண்டு வீட்டுக்குப் போனாள்.
ஒரு ச்சின்ன ஸ்டூல். அதில ஒரு கண்ணாடி பௌல். தண்ணீர் நிரப்பி அதில் இரண்டு கல்லு,கொஞ்சம் எண்ணை,ஒரு ஃப்ளோட்டிங் தீபம், கொஞ்சம் பூக்கள் உதிர்த்துப் போட்டுக் கண்திருஷ்டிக்கு ஒரு வேப்பிலை, பக்கத்திலேயே ஒரு சிங்கப்பூர் சாம்பிராணி.. இன்ஸ்டண்ட் மாயாலோகம்.
த்யானம் செய்ய வசதியா, ஒரு நாற்காலி,போற வறவங்களுக்கு இடைஞ்சலா வெளி வாசல் ,பின் வாசலுக்கு நடுவில் தான் இதெல்லாம் இருக்கும்.
கைல ஜபமாலை. ,கழுத்தில ருத்த்ராட்சம்.. போதுமா. இப்பவே ஒரு பிக்சர் கிடைத்திருக்குமே. எல்லாம் நம்ம விஷுவலைசேஷனோட பெருமை.......
இது ஒரு பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்னால் வீட்டுக்கு நலம்னு நான் கத்துக்கிட்ட சீன வாஸ்து.
வீட்டில ஏதவது நல்லது நடக்கணும்னால் இது போல தீபம்,தியானம் ,சி (chi) சக்தி,,சிவப்பு ,பச்சை,கறுப்பு,மஞ்சள் நிறங்களோட மகிமை,
யின் அண்ட் யாங், நான் எலியா,புலியானு ஆராய்ச்சி....
அதாவது இந்த வருஷம் பிறந்தா இந்த மிருகம்னு சைனீஸ் ல இருக்கும்
அது பிரகாரம் நான் எலினு தெரிஞ்சுது., எங்க வீட்டுக்காரர் முயல்னோ வேற ஏதொ போட்டு இருந்தது. எலியும் பூனையும்னால் கூட ஒத்துக் கொள்ளலாம்.
எலியும் முயலும் சினேகமா இருக்குமான்னும் அப்போது திடீர்னு சந்தேகம். ஆனால் நாங்க சகித்துக் கொள்கிற சதிபதியா இருந்ததால எலியும் முயலும் தோழமை சக்திகள்தானு உறுதிப் படுத்திக் கொண்டேன். :)))
அப்படி ஒரு வாஸ்து பிரமை ஒரு பத்து மாதம் வரை ஆட்டி வைத்தது. வாஸ்து சாஸ்திரம் தப்பு என்றோ சைனீஸ் மட்டம் என்றோ சொல்ல வரவில்லை. நான் வாஸ்து விஷயத்தில் நடந்து கொண்டவிதம் கொஞ்சம் விபரீதம்..
நம்ம வீட்டுக்கு வரவங்க போறவங்களுக்கெல்லாம் வாஸ்து அறிவுரைகளை வாரி வழங்குவோம்.
தாராளமாக வழங்கப்படும்.இந்த அறிவுரைகளைக் கேட்டு,அவர்கள் சுற்றிய ரீலோடு அது திருப்பி எனக்கேஇன்னும் சொல்லப் போனனல் வரவங்க எல்லார் மூலமாவும் எனக்கு ஹிண்ட்ஸ் வர ஆரம்பிச்சுது..
"ஏங்க இந்த டைனிங் டேபிள் கிழக்கு மேற்கா இருக்கலாமே,
தெற்கு பார்த்து சோஃபாவைப் போடலாமே. சம்பந்தம் பேச வரவங்களுக்கு மேல்கையா நீங்க இருக்கணும்.(அப்போது எங்க பையன்களுக்குத் திருமணம் முயற்சிகள் செய்து கொண்டிருந்தநேரம் )
இதென்ன ரம்மியா, நான் ட்ரம்ப் கார்டு விளையாட. மேல் கை,கீழ் கை என்றுபேச.
காம்பவுண்ட் சுவருல பிள்ளையார் வரஞ்சிடலாம். தெருவில இருந்து கண் போடறவங்க கிட்டே இருந்து தப்பிக்க வழி.
வீடு கட்டின விதமே சரியில்லீங்க, ஒரு மாதிரி அகல நீளமெல்லாம் ஆராயம கட்டிட்டாங்க."
இதெல்லாம் சொன்னவங்க, வீட்டுக்குப் பெயிண்ட் அடிக்க வரவங்க,ஏசிக்காக சுவரில இடிச்சுக் கட்டினவங்க, குளிக்கிற அறையில டைல்ஸ் போட்டவங்க,காண்ட்ராக்டர்.....இவங்களைத் தவிர புதிசா வீடு கட்டினவங்களும் அடங்கும்.
நாங்களா கேப்போம்.....??என்னிக்காவது கேட்டு இருந்தாத்தானே.......
அதற்குப்பதில் மௌண்ட்ரோடுக்குப் படையெடுத்தேன்,அப்ப ஒரு புகழ்பெற்ற ஃபங்ஷுவே கடை அங்கே இயங்கிக்கொண்டிருந்தது.(இப்ப மூடிட்டாங்கன்னு கேள்விப்பட்டேன். :)))
ஆஹா, அந்த அனுபவத்த இப்ப நினைச்சாலும் கலங்கறது மனசு.
எவ்வளவு பெரிய முட்டாளை எங்க அம்மா அப்பா உலகத்துக்கு
வாரி வழங்கி இருக்காங்கனு.
அங்க இருந்த கடை சொந்தக்காரங்க நான் உள்ள நுழைந்ததும் ஒரு நல்ல நாற்காலியில் உட்கார வச்சாங்க. நானும் சுத்திமுத்திப் பார்த்தேன்.
கொஞ்சம் இருட்டு,வாசனை மெழுகுவர்த்திகள் வெளிச்சம் கொடுத்தன.
அத்தனூண்டு சின்னக் கடைக்குள்ள,மணிகள்,விண்ட்சைம்ஸ்,விதவிதமான ஆமை,டிராகன்,தவளை,சிரிக்கிற, குண்டா இருக்கிற புத்தா பொம்மைகள், மாலைகள்,வர்ணம் நிறம்பிய கூழாங்கற்கள்,திபேத்தியன் இசையோடு,சாம்பிராணி வாசனையோடு,பக்கத்திலேயெ சிவலிங்கம், குட்டி மீன்கள்,மோதிரங்கள்......
ஒருமாதிரி அம்மனொ சாமியோ(இப்பத்தி மொழிப்படி மந்திரிச்சுவிட்ட ஆடு) நிலைமைக்குப் போகும்போது
அந்த அம்மா உங்களுக்கு என்ன மாதிரி பிரச்சினைனு என்கிட்ட சொன்னா நான் தீர்த்துவைக்கிறேன்.
இடிக்க வேணாம்,கட்ட வேணாம். ரெய்கி,சைனீஸ் வாஸ்து இதில சொல்லப் படாத நிவாரணமே இல்லை.அப்படின்னு சொல்லி விதமான மணிமாலைகள்,மோதிரங்கள்,சிகப்பு வெல்வெட் பைகள்,விசிறிகள்,பறக்கிற வாத்துகள் படம், பெரிய பொம்மைமீன் சிகப்புக் கண்ணோட,டர்ட்டில் டோவ் இன்னும் சில பொருட்கள் மறந்துவிட்டது. (எல்லாப் பொருட்களையும் ஒரு கணிசமான
விலைக்கு வாங்கிக் கொண்டேன், வாங்க வைக்கப் பட்டேன்:))))
அதற்கும், அதாவது என் மறதிக்கும் ஏதோ மந்திரிச்சுக் கொடுத்தாங்க.)
அப்புறம் என் நடவடிக்கையே மாறிவிட்டது.
சும்மா இருந்த வீட்டு வரவேற்பறை வண்ணக்குவியலாக மாறியது
வீட்டு வாசலைப் பார்த்து வெங்கடாசலபதி படம்,பக்கத்துலேயே பிள்ளையார்
அவங்க படத்துக்குக் கீழே ஒரு சிகப்பு வெல்வெட் சக்கரம்,
அதுக்கும் கீழே மஞ்சள்தங்கக் கலரில் ஓம்,
பேரனுக்காகக் கட்டின ஊஞ்சலில் மயிலிறகுக்கொத்து.
அத்ற்கு மேலெ காற்றில் ஆடினால் சத்தம் செய்யும் விண்ட்சைம்.
அது சரியா,சிங்கம் வந்து உட்கார்ந்து டிவி ஃபான் போட்டதும்
கிளின்க் க்ளாங் சத்தம் போட ஆரம்பிக்குமா.டிவீல "டை ஹார்ட்" cinema
பார்ப்பாரா,
இந்தக் கசமுசாவைக்கேட்பாரா.....
அதுக்கு ஒரு ரப்பர்பாண்ட் போட்டுவிட்டார். விஷயம் தெரியாத நான்
''கோவில்மணி ஓசைதன்னைக் கேட்டதாரோனு பாடிக்கொண்டு
கூடத்துக்கு வந்தால் அது வாய் மூடி மௌனியாக இருக்கு.
இந்த கட்டறதும்,அவுத்துவிடறதும் ஒரு நான்கு நாட்கள் நடந்ததும்
நான் அந்த விண்ட்சைம்ஸை மாடிக்கு மாற்றினேன்.
அடுத்தாற்போல இந்த ஆசைகளை எழுதி கயிற்றில்கல்லோடு சேர்த்துக் கட்டி
சுவர்மூலையில் தொங்கவிடுவது,அதுவும் தெற்குமூலை
இரு பசங்களுக்கும்
சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் என்று எழுதி ஒரு கத்திரிப்பூ கலர் தாளில் சுற்றி
அதில் ஒரு அமெதிஸ்ட் கல்லையும் கட்டி பட்டு நூலில் ஜன்னல் கம்பிகளில் கட்டி வைத்தேன். மீதியை நாளை பார்க்கலாம்:))))))))))
எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்