Blog Archive

Saturday, January 12, 2013

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்

அருள்திரு பார்த்தசாரதி
நன்றி திரு கேசவபாஷ்யம்.  .மஞ்சள்நீராட்டத்துக்குக் கிளம்பும் கோதை
நீராடக் கிளம்பும் கோதை
மாடு மேய்க்கும் கண்ணா

 திருமாலின் அன்பிற்குப் பாத்திரமான தாயே கோதா தேவி
உன்னருள் எங்கும் பொலிக.
*************************************************************


// கறவைகள் பின்  சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும்  இல்லாத ஆய்க்குலத்து  உந்தன்னைப்
பிறவிப் பெருந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைஒன்றும் இல்லாத கோவிந்தா உன்னோடு
உறவேல் நமக்கு இங்கு  ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைப்
சிறுபேர் அழைத்தனம்  சீறி அருளாதே
இறைவா நீ தாராய்    பறையேலோர் எம்பாவாய்//
***********************************************************

கறவைகள்பின்சென்று  கானம் சேர்ந்து உண்போம்.
 கூடாரைவென்றவனை  கோவிந்தனை அழைத்துக் கொண்டு அவன் உகந்த தயிரும் பாலும் கலந்த அன்னத்தை உண்ண கோதைக்கு தாளாத விருப்பம்.


கண்ணா, கோவிந்தா,பார்த்தசாரதி, எம்மை உடையவனே
நாங்களோ  ஆய்க்குலப் பெண்கள். ஆசார அனுஷ்டானங்கள் அறியாதவர்கள்.
எங்களுக்கு எங்கள் குலத்தில் வந்து பிறந்ததே பெரிய  தனம்.
புண்ணியம் செய்து  உன்னைப் பெற்றோம்.
குறையே இல்லாத   நிஷ்களங்கனான  பூர்ணத்துவம் பெற்ற  கோவிந்தனே உன்னோடு எங்களுக்கு  உறவில்லை  என்றால்  வேறு கதியே இல்லை. உன்னையே சரணடைகிறோம்.

அறியாமல் நாங்கள் செய்த பிழைகளைப் பொறுத்துக் கொள்வாயாக. உன்னை ஒருமையில் அழைப்போம். ஆச்சார்யவள்ளல்களைப் போல   உன்னை உயர்த்திப் பேசத்தெரியாது. எங்களவனாகவே நீயிருந்து எங்களோடு  நீ  பசுக்களை மேய்க்கும்  வனத்துக்குச் சென்று

தயிரன்னம் உண்ணவேண்டும் அப்பா.
எங்கள்  குறைகள்  உனக்குக் கோபம் அளிக்காது. நாங்கள் உன் தோழிகள். சீறாமல் எங்களுக்கு    அருள்வேண்டும் கண்ணா என்று சரணடைகிறாள்.

எங்கள் கோதா நீ காட்டின வழியிலியே  அடக்கமும் பக்தியும்
சேர   கண்ணனை அடைய எங்களுக்கு வழிகாட்டிவிட்டாய்.
தாயே நீ என்றும் எங்களைக் காப்பாய்.



 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


22 comments:

துளசி கோபால் said...

தச்சு மம்மு சூப்பர்!!!!!

மார்கழி முடியப்போகுதேன்னு இருக்கு எனக்கு.

தினம்தினம் சூப்பர் படங்களாகப் பார்த்து அனுபவிக்கிறேன்.

ஸ்ரீராம். said...

துளசி மேடம் சொல்வது போல இந்த மார்கழிக்கு உங்கள் வலையில் அசத்தி விட்டீர்கள் வல்லிம்மா...

இராஜராஜேஸ்வரி said...

இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by a blog administrator.
வெங்கட் நாகராஜ் said...

படங்கள் அனைத்துமே அருமை. ஒவ்வொரு நாளும் ஒரு பதிவு எழுதி அசத்தறீங்கம்மா....

தச்சு மம்மு பார்க்கும்போதே சாப்பிடத் தோணுது! இங்கே அடிக்கும் குளிரில் தயிர் பார்த்தாலே பயமா இருக்கு!

வல்லிசிம்ஹன் said...

எனக்கும் தான் துளசி. நாளைக்கே மற்ற இரண்டு சாற்றுமுறைப் பாசுரங்களையும் நாளைக்கே வலையேற்றவேண்டும்.
தை அடுத்தநாள் வந்துவிடுகிறாள்.அவனுக்குக் கை காண்பிச்சுட்டுச் சாப்பிட்டால் எல்லாமே அமிர்தம்தான்:)

வல்லிசிம்ஹன் said...

ஆஹா ஸ்ரீராம், கோதாம்மா எழுதிய பாசுரங்களைத் தொடுவதே ஒரு புண்ணியம். இந்த நினைப்பு வந்ததற்கும் அவள் தான் காரணம்.
நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் இராஜராஜேஸ்வரி. உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தைதிருநாள் வாழ்த்துகள் அம்மா. மங்களம் பெருகட்டும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் வெங்கட்.
சூடா கூடத் தயிர்சாதம் சாப்பிடலம். ரொம்ப அருமையா இருக்கும்மா.சுடு சாதத்தில் உப்பு போட்டு,கடுகு பச்சைமிளகாய்த் தாளித்துக் கொத்தமல்லி இலை தூவிய பிற்கு தயிர் சிறிதே சேருங்கள்.
சூப்பர் தயிர்சாதம் ரெடி.:)

பூந்தளிர் said...

வல்லி சிம்ஹன் அம்மா சூடு சூடாக தயிர் சாதம் சாப்பிட வந்துட்டேன். அழகான படங்களுடன் கோதை நாச்சியார் கலக்கலா இருக்காங்க. பகிர்வுக்கு நன்றிம்மா. நம்ம பக்கம் வந்து பாயசம் சாப்பிட்ட அச்தில இருக்கீங்களாம்மா? அப்புரம் நம்ம பக்கம் வரவே இல்லியே அதான் கேட்டேன்.

கோமதி அரசு said...

இந்த மார்கழி மாதம் அருமையாக இருந்தது.

தயிர் அமுதும் அருமை.

படங்கள் எல்லாம் அருமை.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்.

ADHI VENKAT said...

படங்களும், விளக்கமும் அருமை அம்மா.

நானும் இன்று கண்ணாடி அறை சேவையில் வனபோஜனம் அழகாக அமைத்திருந்ததை பார்த்து விட்டு வந்தேன்.

தத்தியோன்னம் சூப்பர்...

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி தொடர்ந்து வருகை தந்ததற்கு நாந்தான் நன்றி சொல்ல வேண்டும்.
எல்லோர் வீட்டிலும் பால் நன்றாகப் பொங்கிச் சந்தோஷம் பெருகவேண்டும். விவசாயிகளின் துயரம் தீர நல்லமழையோ தண்ணீரோ கிடைக்கவேண்டும்.
உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் நல்வாழ்த்துகள் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஆதி, வனபோஜனம் பார்த்தது மிகவும் மகிழ்ச்சி. இதையெல்லாம் எத்தனை ஆசையாக ஏற்றுச் செய்கிறார்கள்.இறைவனின் அருள்தான்.
உங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் எங்கள் பொங்கல் வாழ்த்துகளை அனுப்புகிறேன்.

Ranjani Narayanan said...

இந்தமுறை மார்கழி மாதம் உங்களது பதிவுகளினால் புதிய பொலிவு பெற்றது.

இனிக்கும் பொங்கல் திருநாள் எல்லோருக்கும் இனிமையைத் தரட்டும்.

பால் பொங்குவதுபோல எல்லோர் மனதிலும் அன்பு பொங்கட்டும்.

பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

இந்த அழகுப் படங்கள் பார்ப்பதற்கே
அடிக்கடி உங்கள் வலைப்பக்கம் வரலாம் அம்மா....

வல்லிசிம்ஹன் said...

அன்பு தளிர், இந்தப் பாவைப் பாடல்களைச் சரியாக எழுத வேண்டும் என்ற ஆதங்கம் என் நேரத்தை விழுங்கிவிடுகிறது. நிறையப் பதிவுகளைப் படிக்கவே இல்லை. சாரி மா.இனி படிக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ரஞ்சனி,உங்களைப் போல மிக கற்றவர்கள் நடுவில் நானும் எழுதப் புகுந்தேன். நீங்களும் ஆதரவாகப் பின்னூட்டம் இட்டீர்கள்.இன்று அவள் பூர்த்தி செய்ய உதவினாள்.அரங்கனைத் திருமணம் செய்யும் நாள். வாழி வாழி என்று ஒளிபரப்பாகப் போகும் கல்யாணத்தைப் பார்க்கக் காத்திருக்கிறேன்.
11 மணிக்கு ஜயா டிவி. நன்றி மா ரஞ்சனி.
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

Geetha Sambasivam said...

அருமையான எளிமையான விளக்கம். அதுக்குள்ளே எல்லோருமே வந்துட்டுப் போயிருக்காங்களே!!!!!!!!!!!!!!!!

வல்லிசிம்ஹன் said...


அன்பு கீதா இதெல்லாம் 2013 லில் வந்த பின்னூட்டங்கள் பா.நீங்கள் தான் அருமையாகக் கடைசி வாய் கட்டி மாம்பழப் பின்னூட்டம் இட்டு இருக்கிறீர்கள். வல்லிம்மா எழுத்து அலுத்துப் பல நாளாகிவிட்டது

துளசி கோபால் said...

//வல்லிம்மா எழுத்து அலுத்துப் பல நாளாகிவிட்டது //

முதலில் இந்த எண்ணத்தை மாற்றணும்.

யாரு சொன்னா அலுத்துப்போச்சுன்னு?

மீண்டும் புதிதாக எழுத ஆரம்பியுங்கள் வல்லி.

வல்லிசிம்ஹன் said...

ஹா ஹா.தப்பாக எழுதிட்டேன் துளசி. வல்லிம்மாவுக்கு எழுத்து அலுத்துவிட்டதுன்னு எழுதப் போய் வேற மாதிரி வந்துவிட்டது. எழுதினால் போச்சு.