டிசம்பர் மாதம் பிறந்தது. வேடந்தாங்கலில்   பறவைகள் கூடின. 
பாட்டும் பரதமும்     , காண்ட்டீனுமாக அலையும்   மக்கள்.
அவசியத்துக்காகவும், ஆதரவுக்காக்கவும் சில விருந்தாளிகள் வரவு.
இவையெல்லாம் செய்திகள்.
இவையெல்லாம்  நம்ம வீட்டுக்கும் பொருந்தும்.
முக்கியப்பட்டவங்க ஒரு மூணு வாரம் தங்குவதற்கு வரோம்
அப்படீனு சொன்னதும்
நாம   தட்ட ஆரம்பித்த தூசி  வெளில  போகிற மாதிரி போயிட்டுத் திரும்ப வந்து உட்கார்ந்து கொள்ளுகிறது.
இப்பதான் கொசுக்களும் சொந்தம் கொண்டாட ஆரம்பிக்கின்றன. என்ன இருந்தாலும் சென்னை ரத்தத்துக்கும், சிகாகோ ரத்தத்துக்கும் வித்யாசம் கண்டுபிடிக்க வேண்டுமே:)
பாதி படித்த  புத்தகங்களை எல்லாம்  ஒரு பெரிய பையில் போட்டு   கட்டிலுக்கு அடியில் தள்ளியாச்சு.
நாலு வாரம் கழித்துத் தேடும்போது மறந்து தொலைக்கும்.
வரவங்களுக்கு   கெமிக்கல்ஸ் நெடி ஆகாது.
அதனால இரண்டு நாட்கள் முன்னாடியே பேகான்  ஸ்ப்ரே  அடித்து
அவங்க தங்குமிடத்தைச் சுத்தம் செய்தாச்சு.
ஓடாத ட்ரெட்மில்லை ஓரம் தள்ளி  அதன் மேல் பாய் படுக்கைகளைச் சுத்தி வச்சாசு.
பேரன் அது மேல ஏறி தேகப் பயிற்சி செய்ய ஆரம்பித்தால்...அந்தப் பயம்தான்.!!
தாஜ்மகால்   பார்க்க அழைச்சுண்டு போறியா பாட்டி?
 நம்ம ஊர்லியே நிறைய இடங்கள் இரூக்குப் பா. அதைப் பார்க்கலாம்.
ஓகே.
இஸ் இட் ஸ்டில்   ரெயினிங் பாட்டி.?
சின்னவனின் ஆசை. தண்ணீரில் ஆட.
 இல்லை ராஜா.
ஒ:)
அதனால இன்னும் மூணு வாரத்துக்கு உங்க எல்லாருக்கும் என்  கவிதை,கதை,கட்டுரை எல்லாவற்றிலிருந்தும் விடுதலை கொடுக்கிறேன்.
எஞ்சாய்  மக்களே:)
                                                                
எல்லோரும்    இனிதாக வாழ வேண்டும்