குழந்தைகள் தோட்டத்தில் வேப்பமர ஊஞ்சலில்
விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களிட வந்த ராதா, நிதின்,நிகில் ரெண்டு பேரும்
மாமாவைப்
பார்த்தச் சந்தோஷமாப் பேசிண்டிருக்கணும் வாங்க.
அவருக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லை. அதனால் அங்க
இருக்கிற இடத்தில கேம்ஸ் ஏதாவது அதிக சத்தம் இல்லாமல்
விளையாடுங்கள் என்று அவரவர்களுக்கு உண்டான விளையாட்டு
வீடியோ கேம்ஸ்களை எடுத்துக் கொடுத்தாள்.
பட்டம்மா வரையா செல்லம்.என்றதற்கு அங்க போகக் கூடாதுன்னு
அம்மா சொல்லி இருக்காங்க. நான் வரலை அத்தை
என்றது அந்த சின்னப் பெண்.
''தாத்தாவைப் பார்த்தால் தாத்தாவுக்குச் சந்தோஷமாக
இருக்கும் மா, வாடா செல்லம்
நான் அழைச்சிண்டு போறேன் என்று மூன்று குழந்தைகளையும்
அழைத்துக் கொண்டு அண்ணனின் அறைக்குள்
நுழைந்தாள். இரண்டு பேரன்களையும் பார்த்து ஒரு கையை மட்டும்
நீட்டினார். அண்ணா.
முகம் முழுக்கப் புன்னகை. அவர்களும் அச்சமில்லாமல் பக்கத்தில்
சென்று தங்களை அறிமுகம் செய்து கொண்டார்கள்.
கதவு பக்கத்தில் நிற்கும் தன் பேத்தியைப் பார்த்துத்
தலை அசைத்து அழைத்தார். மெதுவாக
உள்ளே வந்த பட்டுவின் முகத்தில் கலவரம்.
தாத்தா நீ வெளில முன்ன மாதிரி வரமாட்டியா, என்னைக்
கோவிலுக்கு அழைச்சுண்டு போமாட்டியா'
என்று கேட்டாள்.
அவர் வாயத் திறந்து பேசுவத்ற்குள்,அவளுடைய
புது சிநேகிதர்கள், தாத்தாவின்
உடல் நிலையின் பொதுவான அசௌகரியத்தைச் சொல்லி
அவளைச் சமாதானப் படுத்தினார்கள்.
இப்பொழுது தாத்தாவின் அருகே வந்து குட்டி பட்டு'' தாத்தா
உன்னை நான் பாத்துக்கறேன்.
பயப்படாதே உனக்கு கைகாலெல்லாம் சரியாகி விடும்'' என்று
பெரிய
மனுஷியாகிப் பேசுவதைக் கேட்டது,ஸ்ரீனிவாசன் சற்றே
உணர்ச்சி வசப்பட.
பாமா கண்காட்டினாள்,புரிந்து கொண்ட
மாப்பிள்ளை ஸ்ரீராமும் ,கண்ணனும்
மாமா நாங்கள் சாப்பிட்டுவிட்டு வருகிறோம்.
உங்களோடு செஸ் விளையாடி
ரொம்ப வருஷமாச்சு''
என்று குழந்தைகளோடு வெளியேறினார்கள்.
கட்டிலின் இரு புறமும் ராதையும், பாமாவும் மெல்லிய குரலில்
பழங்கதைகளைப் பேச ஆரம்பித்தார்கள். அந்த இதமான தொனியில்,
தங்கையின் கைகளைத் தன் கையில் பிடித்தவாறே கண் அயந்தார் ஸ்ரீநிவாசன்.
பேச்சை நிறுத்திய இருவரும் கண்மூடி தங்களைச் சுற்றியுள்ள
தெய்வங்களின் படங்களில் மனதை லயிக்க விட்டு
முழுமனதுடன் பிரார்த்தனை செய்தார்கள்.
ஒரு அரைமணி நேரம் அப்படியே இருந்துவிட்டு,
சம்பத்தை அருகில் இருக்கச் சொல்லிவிட்டு இருவரும் வெளியே வந்தனர்.
இப்போ சொல் உனக்கும் பிள்ளைகளுக்கும் என்ன பிரச்சினை.
அப்பா இவ்வளவு சீரியசான நிலைமையில் இருக்கும்போது
அவர்களுக்கு வெளியே போக மனம் வந்ததா.
அவர்கள் துணைக்கு இருந்தால் அவருக்கு இன்னும்
தைரியம் வரும் இல்லையா
என்று படபடத்தாள் ராதா.
அப்படி என்ன அண்ணாக்கு வயசாகி விட்டது. அறுபத்தைந்து தானே.
என்றவளை அயர்ச்சியுடன் பார்த்தாள் பாமா .
11 comments:
EXCUSE ME FRIENDS.
SHALL COME BACK AND RECTIFY THIS POST.:(
டெம்ப்ளேட் சரியா இருக்கு, படங்களைச் சின்னதாக்கி இருக்கலாமோ? பிகாசாவையே கேளுங்க, சொல்லுவார். :))))))
padangal
படங்கள், பதிவு அனைத்தும் நன்றாகவே வந்துள்ளது வல்லிம்மா.
படங்கள் போட்டாச்சு.எல்.கே:)
நன்றி சுமதி. மின் வெட்டு அடிக்கடி வருகிறது. பாதியில் நிறுத்த வேண்டி வரும்போது படங்கள் விபரீத அளவில் வந்தன.அவற்றை எடுத்துவிட்டேன்.
ம்.........அப்புறம்?
யானை சூப்பர்மா:-)))))
ஓகே மா. கதை வருது மா.:)
கதை நல்ல வந்திருக்குமா:))). ஸ்ரீரங்கம் யானையாமா? ரங்கமன்னார் நாச்சியாராமா? மேலே வெக்காளியம்மன் ஜோர் !thank you !!
வாங்கம்மா ஜயஷ்ரீ. ஆமாம் மா.அவங்க ரங்க நாச்சியார் தான் மா. யானையும் ரங்கமன்னாரோடதுதான்மா.
வெக்காளியம்மன் இல்லாம நோய்க்கு வேறு மருந்து ஏது மா? பத்துமா வருமான்னு பார்த்தேன் பத்மா போட. அஞ்சு மா தான் வந்திருக்குமா:)))))
பத்துமா வருமான்னு பார்த்தேன் பத்மா போட. அஞ்சு மா தான் வந்திருக்குமா:)))))
:)))))))))))))))))))))))))
மிச்சம் வருமா?
Post a Comment