Blog Archive
Sunday, May 23, 2010
நன்றி, மீண்டும் வருகிறோம்
எல்லோரும் வாழ வேண்டும்.அமீரகம் வந்ததும் கிளம்புவதும் உடனே உடனே நடப்பது
போலத் தோன்றுகிறது;)
அறிந்தே நடைபெறும் வாழ்க்கை நாடகம். எதுவுமெ சிறிய அளவில் இருந்தால்
இனிமையாக இருக்கும் என்பதற்கு இந்த விடுமுறை ஒரு உதாரணம்.
சௌகரியம்,வாகன வசதி,வாசலில் கதவைத்தட்டித்
தொந்தரவு செய்யாத விசாரணைகள்,
படிக்க இன்னும் நேரம்,எல்லாவற்றுக்கும் மேல்,
எதிர்பார்க்காமல் அன்பு வழங்கும் மழலை.
வந்தபிறகு ஒரெ ஒரு அபுதாபிப் பதிவர் அனன்யா மஹாதேவனை இரண்டு தடவை சந்திக்க முடிந்தது.
மற்றுமொரு இனிய நட்பு ஹுசைனம்மா. பார்க்க முடியவில்லை. இருந்தும் தொலைபேசியிலியே
அன்பும் பாசமும் நிறைந்த வார்த்தைகளால் மனம் இனிமையானது.
இங்கே இருந்து கொண்டு இணையத்தில் சாதனை
பதித்திருக்கும் ''மனொ சாமிநாதன்'' அவர்கள்.
ஜலீலா,ஸாதிகா இவர்கள் அறிமுகமும் கிடைத்தது.
பழைய நண்பர்கள் பினாத்தலார் அவர்களிடம் தொலைபேச முடிந்தது.
தொலைபேசியிலும் கோபிநாத்தைப் பிடிக்க முடியவில்லை:)
மற்றவர்களின் எண்கள் என்னிடம் இல்லாததால் அவர்களிடமும் பேச முடியவில்லை.
பேசாவிட்டால் என்ன. நண்பர்கள் எப்பொழுதும் நண்பர்கள் தான்.:)
வருகிறேன் நண்பர்களே. கடவுளின் இஷ்டப்படி
மீண்டும் பார்க்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
உங்கள் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்
அதுக்குள்ள கிளம்புற நேரம் வந்தாச்சா? எப்படியாவது வந்துறணும்னு நினைச்சேன். முடியலை. சரி, அடுத்த முறை வரும்போது பாத்துட்டாப் போச்சு, இறைவன் நாடினால்.
அம்பியின் தம்பியை மறக்காமல் இங்கே சொல்லவேண்டும். அதே போல தோழி சுந்தரா. அடுத்த தடவை பார்க்கலாம்:)
அன்பு ஹுசைனம்மா,
எழுத்துக்களில் தானெ நம் நட்பு வளர்கிறது. அதனால் இறைவன் இஷ்டப்படியே எல்லாம் நடக்கும்.கிடைக்கிற விடுமுறையில் வீட்டைச் சரிசெய்யவே உங்களுக்கெல்லாம் நேரம் சரியாக இருக்கும்.
நன்றிம்மா.
அன்பு எல்.கே,
தவறாமல் பின்னூட்டம் இட வந்துவிடுகிறீர்கள்.
என்னால் தான் நேரம் கிடைத்து இணையத்துக்கு வர முடியவில்லை. இந்த அன்புக்கு நன்றிப்பா.
தொடர
அன்னை பூமிக்கு அன்புடன் வரவேற்கிறோம். எங்கே இருந்தாலும் நம்ம ஊரு போல வருமா? சொர்க்கமே என்றாலும் சொந்த ஊர் போல வருமா!
welcome back
Like all others, You too published one side of Dubai. You should have posted photos where 10 bachelors share one room, one toilet, one washing machine, where 2 or 3 families share 1 kitchen,where the kids live within a 200sqft room.
That would definitely help the next generation to make a decision of NO TO DUBAI, MALYSIA,SINGAPORE.
அன்பு கீதா, நம்ம ஊர் மாதிரி எந்த ஊரும் வராது.
சுதந்திரம் ஒரே வார்த்தை.
மருமகளுக்காகவும் மகன் ,குழந்தைக்காகவுமே வந்தோம்.
எங்களுக்கும் இந்த வெய்யில், வீட்டில் முடங்குவது இரண்டும் பரிச்சியமில்லை. சிங்கத்துக்குக் கட்டாயம் பிடிக்கவில்லை.
எப்போதும் போல வாழ்க்கையில் இரண்டு திசைகளுக்குப் பெண்தானே பதில் சொல்ல வேண்டி இருக்கிறது;)
அன்பு தென்றல் நன்றிம்மா.
அங்கு வந்து பேசலாம்.
அன்பு ராம்ஜி யாஹு,
நானும் அந்த லேபர் காம்ப் பற்றிப் படித்தும்,கேட்டும்,பார்த்தும் இருக்கிறேன்.
நான் இங்க வந்து இருப்பது என் மகனின் விருந்தாளியாக.
வந்த இடத்தில் ஏறுக்கு மாறாக எழுதி எந்த விதமான சங்கடத்தையும் உண்டாக்க விரும்பவில்லை.
மேலும் நான் அங்கே போய் அவர்களைப் பார்த்துச் செய்யக்கூடியது என்னவோ அதை மகனும் அவனது சினேகிதர்களும் செய்கிறார்கள்.
இது உலகறிந்த உண்மை.
இங்கே கள்ளத்தனமாகப் பிழைப்பவர்கள் ஊருக்குச் செல்லும்போது விரிக்கும் வலையில் விவரமறியாத இளைஞர்கள் விழுகிறார்கள்.
இங்கு வந்து சிலர் தப்பான வழிகளையும் கற்றுக் கொள்கிறார்கள்.
இதற்குப் பெரிய நாவல் எழுதலாம்.
அதையும் யாரும் படிப்பார்களா என்பது சந்தேகமே.
பணம் கண்ணை மறைக்கும்.
நல்லபடியா ஊர் வந்து சேருங்க. பயணம் இனிதாக இருக்கும்.
சின்ன் அளவு..... ரொம்பச் சரி.
விருந்தும் மருந்தும் மூணுநாள்ன்னு பெரியவங்க சொல்லிட்டுப் போயிருக்காங்க:-)))))
ஆகா..பேக் டூ சென்னையா!படங்கள் அழகு..ஹெட்டர் உள்பட..:-)
நல்லபடியாக திரும்பி வாங்க வல்லியம்மா!
சென்னை பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்!
குழந்தைகளை பிரிய கஷ்டம் தான்.
படங்கள் அருமை.
உங்கள் அறிமுகம் கிடைத்தது எனக்கும் மிக்க் மகிழ்சி
படங்கள் மிக அருமையாய் இருக்கின்றன. ராம்ஜி யாஹூ பதிலிலுருந்து அந்த அடுத்த பக்கத்தை தெரிந்து கொண்டதோடு அதற்கு உங்கள் பதிலையும் ரசித்தேன்.
பத்திரமா வாங்க. பேத்தியை பிரியறது கஷ்டமாத்தான் இருக்கும்.
அன்பு துளசி,பத்திரமாய் வந்திட்டோம்:)
ஆனாலும் ஆட்டம் போடுதுப்பா விமானம். குடல் எல்லாம் பத்திரமா இருக்கான்னு செக் செய்து கொண்டேன்:)
அன்பு முல்லை,
நீங்க பார்த்து நல்லா இருக்குன்னு சொன்னாத்தான் மனசுக்கு சமாதானம்.:)
ரெண்டு நாள் ஆச்சுப்பா. இன்னும் வீடு சுத்தம் முடியலை.
இனி பதிவுகளை மேயலாம்:)
அன்பு கோமதி நல்ல படியா வந்துட்டோம். பேத்தி முகம்தான் கண்ணில நிக்கிறது. சமத்துக் குடம்.
மத்தபடி அங்கைக்கு இங்க வெய்யில் பரவாயில்லை:)
அன்பு ஜலீலா உங்களை எல்லாம் பார்க்க முடியவில்லை. வருத்தம் தான். இறையருளில் அடுத்த தடவை சந்திப்போம்.:)
வரணும் ஸ்ரீராம்.
யதார்த்தத்தைத்தான் சொன்னேன்.
அது நாம் பிழைக்கப் போன இடம்.
சக மனிதர்களிடம் நேயம் காட்டத்தான். வேண்டும். மருமகள் ஒருவிதத்தில் சில பேருக்கு உதவி செய்கிறார். மகன் வேறு விதத்தில் செய்கிறார்.
மற்றபடி மேற்படி சமாசாரங்களில் தலை நுழைப்பது புத்திசாலித்தனம் இல்லை.
முதல் வருகைக்கு மிகவும் நன்றி.
கூர்ந்து மற்றவர்கள் எழுதீ இருப்பதையும் படிப்பது இன்னும் மெச்சத்தக்கதும்மா. நன்றி.
வாங்கப்பா சாரல். மும்பை எப்படி இருக்கிறது. அங்கயும் டிரை ஹீட் இருக்கும் இல்லையா.
உண்மைதான் பேத்தி உறங்கும் போது சத்தம் போடாமல் கிளம்பி வந்து விட்டோம்.
:(
Post a Comment