Blog Archive

Saturday, October 22, 2011

சம்சாரம் ஒரு சமுத்திரம்(மீள் பதிவு)












மருமகளாக இருப்பது கஷ்டமா, மாமியாராக இருப்பது கஷ்டமா:)
அது புரிதல், அம்மா அப்பா வளர்த்தவிதம், அம்மாவின் மாமியார் எப்படி நடந்து கொண்டார்கள் அத்தைகள் சாம்ராஜ்யம் எப்படி இருந்தது என்பதையெல்லாம் பொறுத்தது.

நான் வேணும்னால் உலகத்தைலியே பெஸ்ட் அத்தை நான் தான்னு நினைத்துக் கொள்வேன்.
மருமானைக் கேட்டால் சொல்லுவானாயிருக்கும். அத்தை மகா டென்ஷன் பார்டி. பேசிக்
கொ
ண்டே இருப்பாள். என் கிட்டப் பேசிப் புதுப்பாடல்கள் தெரிந்துகொண்டு என்னிடமே விமரிசிப்பாள்:)
என்று சொல்லுவானாயிருக்கும்!!!!!!


ஸ்வர்கலோகி மாமியாரின் மாமியாரைக் கேட்டால்,
''அது சமைக்கத் தெரிந்த அளவுக்கு வீட்டைப் பார்த்துக் கொள்ளத் தெரி:யாது. எப்பப் பார்த்தாலும் லைப்ரரின்னு ஓடிக் கொண்டு இருக்கும்'' அப்படின்னு :)

இப்ப நாம மாமியார் தகுதி அடைந்த பிறகு என் மருமகள்கிடமே ஒரு சர்வே நடத்தினேன்.
என்னைப் பார்த்து உங்களுக்குப் பயமா இல்லையே. என்னை ஒரு தோழி மாதிரி நினைத்துக் கொள்ளுங்கள். உங்க விஷயங்கள்ள தொந்தரவு செய்ய மாட்டேன்.
நீங்க எப்ப வேணும்னாலும் வெளில போலாம். தூங்கலாம்.
நோ அப்ஜெக்ஷன் என்று தலைக்கு மேல் ஒரு ஒளிவட்டம் சுற்றுவது போல நினைத்துக் கொண்டு,
ஒரு அம்மன் டைப் புன்னகையோடு நின்று கொண்டிருந்தேன். இது 2004 லில் நடந்தது.
அப்போது அவர்கள் சொன்ன பதில்தான் எனக்கு ஆச்சரியம்.
'அம்மா,ரிலாக்ஸ். நாங்கள் எப்பவுமே ஃப்ரீதான்.
யாரையும் ...(எங்கள் கணவரைக்கூட ) போவது வருவது சொல்லிவிட்டுப் போய்க் கொண்டே இருப்போம். அதனால் நீங்கள் எங்களைப் பற்றி யோசிக்கவே வேண்டாம்.
அதனால் உங்கள் மூலம் எந்தத் தொந்தரவும் எங்களுக்கு வர வாய்ப்பே இல்லைன்னுட்டுப் போய்விட்டார்கள்.
அடடா, ஒரு அருமை முதலமைச்சர் பதவியை இழந்துட்டோமேன்னு ஒரு நிமிட வருத்தம் தோன்றியது.
அடுத்த நிமிடமே பொறுப்பு இல்லைன்னால் பிரச்சினையும் வராதுன்னும் புரிந்து விட்டது.
இப்போ எல்லோரும் அவரவர் வழி.
இங்க இருக்கிற குட்டிப் பேத்தி கூட,, கையைத் தூக்கி வாவா காட்டினால் தான் நான் வாக்கிங்கே போறேன்:)





45 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லாத்தெளிவா குழப்பிட்டீங்க வல்லி :(
:))

நானானி said...

இப்ப என்னதான் சொல்ல வர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்றீங்க?
"நீங்க நல்லவரா? கெட்டவரா?"
தெர்லீயாப்பா!!
எனக்கு மருமகள் வரப்போற நேரம் ஏதோ உருப்படியாயிருக்குமென்று வந்தால்....!

நானானி said...

மீ த செகண்டா?

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா கயல் முத்து,

குழப்பியாச்சு இல்ல. இனிமே நல்லது தெளிவாத்தான் தெரியும்:)

மெளலி (மதுரையம்பதி) said...

பதிவு உண்மையா இல்லாட்டா என்ன?..நீங்க எழுதிய விதம் //ஒரு அம்மன் டைப் புன்னகையோடு நின்று கொண்டிருந்தேன். இது 2004 லில் நடந்தது.// கற்பனை பண்ணிப் பார்த்தேன்..சூப்பர் :-)

பாச மலர் / Paasa Malar said...

தலைப்புலதான் சூட்சுமம் இருக்கு இல்லியா வல்லை மேடம்?

Geetha Sambasivam said...

பேத்திக்குச் சுத்திப் போடுங்க முதல்லே, அப்புறம் மாமியார், மருமகளா இது என்ன புதுக்கதை?? அப்படி ஒண்ணு இருக்கு??? :))))))))


அமீரகத்தில் குளிர்தானே இப்போ? வெயில் ஒண்ணும் இல்லையே? :P:P:P

ராமலக்ஷ்மி said...

//அடடா, ஒரு அருமை முதலமைச்சர் பதவியை இழந்துட்டோமேன்னு ஒரு நிமிட வருத்தம் தோன்றியது.//

ஹா ஹா, சரிதான் இந்தக் காலத்தில் அவரவர் அவரவர் வழியில், ஆனால் கொடுக்க வேண்டிய மரியாதைக்கும் அளிக்கின்ற அன்புக்கும் காட்டுகின்ற அக்கறைக்கும் குறைவில்லாமல்.

//அடுத்த நிமிடமே பொறுப்பு இல்லைன்னால் பிரச்சினையும் வராதுன்னும் புரிந்து விட்டது.//

இதுதானே வேணும்.

[டிஸ்கி ஒரு அப்பட்டமான பொய் என்று எடுத்துக் கொள்ளணுமா? தெளிவாய்தான் சொல்லிடுங்களேன். பாருங்க, எல்லோரும் குழம்பிட்டாங்க:)!]

குமரன் (Kumaran) said...

இந்த இடுகையை உங்க மருமகள்(கள்) படிப்பாங்களா இல்லையா? :-)

கோபிநாத் said...

பதிவுல தெளிவு..டிஸ்கியில குழப்பம்...;))

சதங்கா (Sathanga) said...

வல்லிம்மா,

பொய்யோ, மெய்யோ ... இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்று ஆசைப் பட வைக்கும் பதிவு. எழுதிய விதம் அட்ட...ஹா...ஹா...ஹா...ஹா...சம் ... :))))

இலவசக்கொத்தனார் said...

டிஸ்கியை நம்பிட்டோம்!! கீதாம்மாவிற்கு ஒரு ரிப்பீட்டேய்!

துளசி கோபால் said...

//தலைக்கு மேல் ஒரு ஒளிவட்டம் சுற்றுவது போல நினைத்துக் கொண்டு,
ஒரு அம்மன் டைப் புன்னகையோடு நின்று கொண்டிருந்தேன்.//

ஹாஹாஹாஹா

சுதந்திரம் கம்ஸ் வித் பொறுப்பு.

ஆதலால்...... பொறுப்பு இல்லைன்னா பிரச்சனையே இல்லை:-)

அந்த டிஸ்கியைப் பார்த்தால்....

எங்கம்மா குதிருக்குள் இல்லைன்னு நானே நம்பறேன்:-))))


பாப்பா....பயங்கர படிப்புக்காரி போல.
பேப்பரைப் புடிக்கும் விதமே சொல்லுதே:-)))

வல்லிசிம்ஹன் said...

வரணும் மௌலி, எப்படியோ எழுத நினைச்சு எங்கியோ
பதிவு போய்ட்டது. !! எல்லா மாமியாரும் நல்லவங்களேன்னு
ப்ரூஃப் கொடுக்கணும்னு முடிச்சுட்டேன்:) அதுக்குத்தான் சேஃப்டி டிஸ்கி!

வல்லிசிம்ஹன் said...

வரணும்பா பாசமலர்.


கண்டுபிடிச்சுட்டீங்களா.
சமுத்திரமே சம்சாரம். ஒரு அலை ஓய்ந்து வெளில
வந்தோம்னா இன்னோரு அலை உள்ள இழுத்துவிட்டுடும்.
காலம் காலமா அதே கதை:)

வல்லிசிம்ஹன் said...

கீதாவுக்குத் தெரியாத மாமியார் கதையா.:)

எல்லாம் அப்படி இப்படி போயிட வேண்டியதுதான். பேத்திக்கு நிறைய பேப்பர் பிடிக்கும்.
நல்லாக் கசக்கிக் கிழிச்சுப் போட்டுடலாம்.

சுத்திப் போட்டாச்சு

வல்லிசிம்ஹன் said...

ராமலக்ஷ்மி, டிஸ்கி ஒரு பாதுகாப்புக்குத்தான்.

சம்பந்தப்பட்டவங்க படிக்கச் சான்ஸ் இருக்கு.

அதுக்காக:)

உண்மையாவே ரொம்ப நெருங்காதவரைக்கும் வம்பு வராதுப்பா.

அனுபவித்தால் தெரிந்துவிடும்..

வல்லிசிம்ஹன் said...

குமரன், நல்லாவே தமிழ் தெரியும் . படிப்பாங்க.

மனசிருந்தா.!!!!
அத்ற்கே இந்த அறிவிப்பெல்லாம்:)

வல்லிசிம்ஹன் said...

கோபிநாத், நல்லவேளை பதிவே குழப்பி இருந்தா எவ்வளவு கஷ்டம்!!!

எல்லாம் உங்களுக்கும் காத்து இருக்கு:)

வல்லிசிம்ஹன் said...

சதங்கா


இப்ப நீங்க குழப்பறீங்க.

நீங்க யாரு கட்சின்னு புரிஞ்சு போச்சு:)
நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

வருக வருக,
கொத்ஸ்!

டிஸ்கி ஆரம்பிச்சு வச்சவரே ரிப்பிட்டும் போட்டுட்டாரு.

எல்லாம் ஒரே அலைவரிசை.:)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துளசி, பேப்பரையும் வச்சுண்டு போஸ் கொடுக்கும்.:)


கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை கதைதான்.

இங்க கதையெல்லாம். பொறுப்பும் எடுத்துக்கணும்.
சுதந்திரமும் கொடுக்கணும். ஏன்னும் கேக்கக் கூடாது.

உலக முச்சூடும் அப்படித்தான்.:)

பெற்ற பெண்ணையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்!!

Kavinaya said...

//பதிவுல தெளிவு..டிஸ்கியில குழப்பம்...;))//

ரிப்பீட்டேய்...

குட்டிப் பாப்பா ச்சோ க்யூட் :) இன்னொரு முறை சுத்திப் போடுங்க!

வல்லிசிம்ஹன் said...

நன்றி கவிநயா.
குளிரெல்லாம் எப்படி இருக்கு அங்க.

குட்டி பாப்பா சாப்பாட்டு விஷயத்தைத் தவிர மத்ததில சுட்டி. சம்த்து.
மீண்டும் சுத்திப் போட்டுடறேன்:)

நட்புடன் ஜமால் said...

ஹி ஹி ஹி

நல்லாதான் குழப்பியிருக்கீக

வல்லிசிம்ஹன் said...

உங்களையுமா:)
வாங்க அதிரை ஜமால்.



என்னை மாதிரி ஒரு நல்ல
மாமியார் பார்க்கவே முடியவே முடியாதுப்பா:)0)

ambi said...

//மருமகளாக இருப்பது கஷ்டமா, மாமியாராக இருப்பது கஷ்டமா//

ரெண்டுமே ஈசி தான்.

அம்மாவுக்கு புள்ளையாகவும், தங்கமணிக்கு ரங்கமணியாகவும் இருப்பது தான் கஷ்டம். :)))

பொதுவாச் சொன்னேன், சொந்த அனுபவமா?ன்னு கிண்டக் கூடாது. :p


குட்டிப் பாப்பாவுக்கு எட்டு மாசம் இருக்குமா? செம க்யூட்.

வல்லிசிம்ஹன் said...

அதென்னவோ கரெக்ட் தான் அம்பி. பிள்ளைகள் பாடு பாவம். அதுவும்
சமயத்தில அம்மா என்ன பேசறாங்கன்னும் புரியாது. தனக்கு சப்போர்ர்ட்டா இருக்கிற ஒரு ஜன்மமும் எதிர்க் கட்சி ஆகிடுத்தோன்னு ஒரு கவலை வந்துடும்.
இதெல்லாம் சொந்த அனுபவந்தான். நான் மருமகளாக இருந்த காலத்தில்:))
baby is exactly 9 months old.thanks mamanu solliththu,.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நீங்க பொய்யே சொன்னாலும் உண்மை மாதிரியே தான் இருக்கும்மா.

பேத்தி அழகு, பேர் சொல்லுங்களேன்.

பொறுப்பு இல்லைன்னால் பிரச்சினையும் வராதுன்னும் புரிந்து விட்டது.//

ரொம்ப சரிதான் இல்ல.

சந்தனமுல்லை said...

:-)

வல்லிசிம்ஹன் said...

பொறுப்பு கொடுப்பாங்க.

யூஸ் செய்ய முடியாது.:)
உங்களுக்கு எதுக்கும்மா பொறுப்பு. வயசான காலத்தில சும்மா இருக்கலாமேன்னு..............................

பாப்பா பேரு நாராயணி.

வல்லிசிம்ஹன் said...

நன்றிப்பா. பப்பு அம்மா.

Thamiz Priyan said...

எனக்கு இந்த பதிவு நல்லாவே விளங்கியது..... :)
ஒருக்கால் இந்த விடயத்தில் அடிபட்டு,மிதிபட்டு நொந்து நூழாய் போனதால் இருக்குமே...:(

துளசி கோபால் said...

நொந்து நூழாய் = நொந்து நூலாய்

:-))))

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா தமிழ்.

சிலசமயம் நோவது உண்டு. அது நமக்கு நிலைமையைச் சரியாப் புரிந்து கொள்ளத் தெரியவில்லையே
என்ற ஆதங்கம்தான்.
சின்னப் பிள்ளைகள் கிட்ட நோகக் கூடாது. நாங்கதான் பதம் பார்த்துப் பழகணும்.

அது ஏற்கனவே பெரியவங்க கிட்ட வாங்கிக் கட்டிக்கிட்டு இருக்கோம் இல்லையா,அதனால் இப்ப கொஞ்சம் சுதந்திரம் எடுத்துக்கத் தோன்றும். அதை ஆரம்பத்திலியே அடக்கிக் கொள்ளவேண்டும்.:))))

வல்லிசிம்ஹன் said...

ரீச்சர் வந்துட்டீங்களா.

சரித்திர வகுப்பும் தமிழ் வகுப்பாச்சே:))

திவாண்ணா said...

அழகா பொய் சொல்றிங்களே!

வல்லிசிம்ஹன் said...

வாசுதேவன், நீங்களே இப்படிச் சொன்னா எப்படி.

பொய் சொன்னால் நல்லது நடக்கும்மனால் பொய் சொல்லலாம்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க.

அதனால நிறைய பொய் சொல்லுவேன் நான்:)

geethasmbsvm6 said...

என்று தலைக்கு மேல் ஒரு ஒளிவட்டம் சுற்றுவது போல நினைத்துக் கொண்டு,
ஒரு அம்மன் டைப் புன்னகையோடு

ஸ்ரீராம். said...

எல்லா மாமியாரும் நல்லவங்களே...எல்லா மருமகளும் நல்லவங்களே...
அவங்கவங்களுக்கு ....! (பழைய பாலாஜி பாட்டு (பி பி எஸ்) 'நல்லவன் எனக்கு நானே நல்லவன்' மாதிரி!) :))

மாதேவி said...

:))))

தி. ரா. ச.(T.R.C.) said...

நோ அப்ஜெக்ஷன் என்று தலைக்கு மேல் ஒரு ஒளிவட்டம் சுற்றுவது போல நினைத்துக் கொண்டு,
ஒரு அம்மன் டைப் புன்னகையோடு நின்று கொண்டிருந்தேன். இது 2004 லில் நடந்தது.

2004 ஏப்படியோ 2009 நான் பார்த்தபோது அப்படியேதான் எனக்கு தோன்றியது.உண்மையான பதிவு 6ஆவது நாளும் ஜமாய்ச்சுட்டீங்க

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஜலீலா.வருகைக்கும் கருத்துக்கும்.
நன்றி ஸ்ரீராம்.
நன்றி மாதேவி.

வல்லிசிம்ஹன் said...

பொறுமையா இரண்டாவது தடவை படித்ததற்கும் நன்றி கீதா.

வல்லிசிம்ஹன் said...

திராச சார் இது உங்களுக்கே ஜாஸ்தியா தெரியலையா.:)

ஒளிவட்டம்லாம் போய் ரொம்ப நாளாச்சு. நார்மல் ஆகிவிட்டேன்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் சாரங் பையாவுக்கு.