About Me

My photo

Just one more correspondent.  9/4/1948   பிறந்தநாள்

Tuesday, March 01, 2016

தலை தப்பியது....3

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
ஒரு வழியாக உமாவைத் தயார் செய்து. கொண்டையலங்காரத்துடன் அவளைப் பார்த்தால் எனக்கே பிரமிப்பாக இருந்தது. இத்தனை அழகையும்  எப்படி சின்னாளப்பட்டிப் புடவையில்

அடக்கி   வாசிக்கிறாய் என்று கேட்டேன்.
சு போடி. என்று அலுத்துக் கொண்டாள்.
கொஞ்சம் சிரி.முகத்தை  இனிமையா வச்சுக்கோ.
 ராஜியோடு கலகலப்பா பேசு. சுந்தரம் பக்கத்தை விட்டு
நகராதே. இன்னும் இது போல 24 வயதுப் பெரிய மனுஷி
32  வயது அக்காவுக்குச் சொல்லிக் கொடுத்தேன். அன்றைக்கு இன்னோரு விருந்தாளியும் வந்தார். அவரும் ஒரு மார்க்கெடிங்க்  மேனஜர். பெயர் குப்புசாமி. மஹீந்த்ரா அண்ட் மஹீந்த்ராவிலிருந்து வந்திருந்தார்.
எல்லோரும் அவரவர்  வண்டியில் கிளம்பினோம்.
இவர் அப்போ ஒரு புல்லட் வண்டி வைத்திருந்தார்.
குழந்தைகள் மூவரும் + நாங்கள் ...ஐந்து பேரும் அதில் போன நாட்கள் பசுமை நிறைந்தவை.
சுந்தரம் வண்டியை உதைத்து ஸ்டார்ட் செய்ய அலுங்காமல் நலுங்காம்ல் தேவதை போல உமா ஏறிக் கொண்டாள். பெண் அம்மா முன்னாலும் ,பிள்ளை அப்பாவுக்கு முன்னால் நின்று கொண்டும்   கௌரிஷங்கர்   ஹோட்டலுக்கு விரைந்தோம்.
எங்கள்   பின்னால் பெரிய வேனில் சந்திரன் குடும்பமும் குப்புசாமியும் வந்தார்கள்.
      சிங்கம் முதலில் போய்  14  நபர்கள் உட்கார இடம் சொல்லிவிட்டு வந்தார்..

 சின்னவனை நான் மடியில் வைத்துக் கொள்ள எனகள் இருவருக்கு நடுவில் பெண்ணும்,பையனும் அமர்ந்தனர்.
எதிர்புறம் சுந்தரம் உமா அமர இருபக்கமும் அவர்கள் பெண்ணும் பையனும் உட்கார் மற்ற இடங்கள் சந்திரன் குப்புசாமி ராஜி அவள் குழந்தைகள் அனைவரும் உட்கார
மெனு பார்த்து ஆர்டர் செய்யத் தொடங்கினோம். எல்லோரையும் கவர்ந்தது உமாவின் கச்சிதமான அழகும் கம்பீரமும் தான்.
சந்திரன்,முதலில் காம்ப்ளிமெண்ட் கொடுத்தார். குப்புசாமி பின்பாட்டு பாட சுந்தரம்
கண்டு கொள்ளவில்லை.
சிங்கம் டேய் ,என்னடா கண்ணைத் திறந்து பாரேண்டா. என் பொண்டாட்டி எத்தனை கஷ்டப் பட்டு
இந்த  ஹேர்டூ  செய்து இருக்கிறாள்.
என்று சொல்லவும்
தாங்க் யூ ரேவதி என்று சாப்பிட ஆரம்பித்தார்.
 எல்லோரும் அப்போது வெளிவந்திருந்த ஆராதனா,மெக்கனாஸ் கோல்ட்
படங்கள் பற்றிப் பேச ஆரம்பிததும் கொஞ்சம் கலகலப்பு களை கூடியது.
 போகிறவர் வருகிறவர்கள் அபனைவரும் உமாவை இரண்டு தடவை
பார்த்துவிட்டுப் போனார்கள். எனக்குப் பெருமையாக இருந்தது.
   சாப்பாடும் முடிவுக்கு வந்தது.
பீடாவெல்லாம் போட்டுக் கொண்டதும் நான் சின்னவனைச் சுத்தம் செய்ய
 வெளியே வந்தேன். பின்னால் யாரோ வருவதைப் பார்த்துத் திரும்பினேன். ராஜி
விரைவாக வந்தாள். ரேவதி நீயா இத்தனை அழகாக் கொண்டை போட்டுவிட்டாய் என்று கேட்டதும், நானும் ஃபெமினாவில்  வந்த படங்களைப் பார்த்துப் போட்டுப் பழகினேன். சுலபம் தானே என்றேன்.
சுந்தரத்துக்கு உமா பட்டிக்காடாக  இருப்பதாக  நினைப்பு என்று சிரித்தாள்.
இல்லையே அடுத்த தடவை நீங்கள் அவளுடைய  நல்ல குணங்களை எடுத்து சொல்லுங்கள். பெண்களுக்குப் பெண்கள்  தானே  சப்போர்ட் என்றேன்.
    சொன்னால் போச்சு. நாமும் கணவர்களை  சகித்து வழிக்குக் கொண்டு வரணும் என்றாள்..
 எனக்கு அது ஏற்கவில்லை. போலாமா என்றபடி குழந்தையைத் தூக்கிக் கொண்டு
நகர  மற்ற எல்லோரும் வெளியே  வருவதைப் பார்த்தோம்.
  உமாஎன்னிடம் வரவும், இவரும் வந்தார்,ரேவ்  நாம் எல்லோரும்  மலம்புழா போய் வரலாமா
என்று  கேட்டபடி  வந்தார்.
Add caption