About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Friday, March 13, 2015

பாட்டி --திக்குத் தெரியாத ஊரில் January 2007

நாம்தான் முன்ஜாக்கிரதை முத்தண்ணா ஆச்சே. பெண்  பேறு காலம் நெருங்கிவிட்டது

வேணும்கிற வீட்டுப் பொருள் எல்லாம் வாங்கி வைத்துக்கலாம்.

பால் கொண்டா,தயிர் கொண்டானு தேட வேண்டாம்னு வெளில காய்கறி ' டாமினிக்ஸ் ' கடைக்கு வந்தோம்.
பெண் காரிலேயே இருக்க நான் உள்ளே போனேன்.
முதலில் கவர்ந்தது வெள்ளைப்பூசணி.சேப்பங்கிழங்கு,
சாதா கத்திரிக்காய், பெரிய கத்திரி,
சௌசௌ அப்படியே காய்ஞ்ச மாடு கம்பன்கொல்லை
டைப்பில்,

போடு வண்டிக்குள்ள,(கார்ட்)
இப்படியே ஒரோர் பக்கமா நின்னு நின்னு
வண்டி நிறைந்து போச்சு.
மஞ்சள்கிழங்கு கொட்டி வைத்து இருந்தது.தை மாதம் வந்தா வெத்திலைபாக்கு வச்சு கொடுக்கலாமேனு அதை ஒரு கிலோ வாங்கினேன்.

வேர்க்கடலை வறுத்த மாதிரி ஒண்ணு இருந்தது.
நம்ம ஊரு காரக்கடலை போல இங்கேயும் இருக்கே என்று அது ஒரு கிலோ. (அள்ளு அள்ளுனு மனசில பாட்டு வேற):-)

அப்படியே நம்ம நீல்கிரீஸ் போன உற்சாகத்தில் கவுண்டருக்கு வந்து
ஹை! சொல்லி கணக்குக் கூட்டி கழிச்சுப் பார்த்தால் வந்த
பில்,
கையிலிருந்ததற்கு ஐம்பது $ மேலே!:-)

பேபேனு சொல்லாத குறைதான்.
அந்தப் பெண் புருவத்தை உயர்த்துகிறாள்.

 எங்க 'செலக்ட் ஸ்டொரா' இது.
வீட்டுக்குப் பையனை அனுப்புப்பா.
மீதிப் பணம் அனுப்பறேன்னு சொல்ல.

அவளிடம் (கவுண்டர் பெண்:-0))
வேண்டாத சில(பல) பொருட்களை விட்டு விட்டு
கவனமாக எண்ணிக் காசைக் கொடுத்துவிட்டு

மண்டைகாய வெளியில் வந்தேன்.
துளசி(நம்ம டீச்சர்தான்) சொல்லற மாதிரி இருபது கைகள் போதாது அடித்துக் கொள்ள!
பெண் வண்டியைக் கொண்டுவந்து பக்கத்தில் நிறுத்த
அவளுக்கு ஒரே சிரிப்பு.
கடைலே ஏதாவது பாக்கி இருக்காம்மா?
என்ற கேள்வியோட பொருட்களை உள்ளே தள்ள:-)

உதவி செய்தாள். அடுத்த வருஷம்
பெரிய டிரக் வாங்கரேன்மா,
நீ சந்தோஷமா ஷாப்பிங் செய்யலாம்னு
கேலி செய்த வண்ணம் வண்டியைத்
திருப்பினாள்.
பெட்ரோல் போட்டுவிட்டு வீட்டுக்குப் போலாம்னு
வண்டியை அந்த இடத்தில்
நிறுத்தும்போது நினைத்தேன்.
நல்ல வேளை இங்கே காசு வேண்டாம். கார்டு போதும்
நாம பண்ண அசட்டுத்தனம் வீடு போய் சொன்னால் போதும் என்று.

அதன் பிறகு என்னைக் காய்கறி,குரோசரி
என்று ஒரு இடம் கூடத் தனியாய் விடுவதில்லை!!

11 comments:

இலவசக்கொத்தனார் said...

இனிமே பொண்ணையும் உள்ள கூட்டுக்கிட்டுப் போங்க. அவங்க அட்டையைத் தேய்க்கட்டும், நீங்க சந்தோஷமா வாங்குங்க! :))

துளசி கோபால் said...

நாட்டுக்கு நாடு நம் மக்கள் இதெல்லாம் செய்யாம இருப்போமோ!!!!

வீட்டுலேயே பர்ஸை மறந்து வச்சுட்டுப்போய் இங்கே ஒரு நாள் கவுண்ட்டரில்
'அம்போ'ன்னு நின்னு, 'தோ.... இப்ப வரேன்'னு சொல்லி வீட்டுக்குப் போய்வந்த
கதையை...............(-:

முந்தி மெட்ராஸில்( அப்ப எல்லாம் ச்சென்னை இல்லைப்பா) வேற மாதிரி கதை.

வல்லிசிம்ஹன் said...

கொத்ஸ் ,
அதுதான் நடக்கிறது இப்போது.
அப்போ போன போது ஒரே ஆர்வக் கோளாறு.
பனிவரப் போறதுனு வேற சொன்னாங்களா.
மெட்ராசில காண்டில், தீப்பெட்டி வாங்கி வைப்போம் '' வங்கக் கடலில் புயல்சின்னம்''
உருவானால்.
அந்த ஞாபகம்.:-)

வல்லிசிம்ஹன் said...

துளசி, அப்போவெல்லாம்
ரொம்பக் கணக்கா இருந்ததாலே தான் இப்போ இப்படி ஆகிவிட்டேனொனு கவலையா இருக்கு.:-0)
வெளிநாடுனா இதானே.
நம்பளை அவங்களூக்குத் தெரியாது.
நம்பிக்கையும் கிடையாது.(எப்படி வரும்)
//மறந்து வச்சுட்டுப்போய் இங்கே ஒரு நாள் கவுண்ட்டரில்
'அம்போ'ன்னு நின்னு, 'தோ.... இப்ப வரேன்'னு சொல்லி வீட்டுக்குப் போய்வந்த
கதையை......//
ஐயோ பாவம்பா. போனாப் போறது.இனிமே கிழிச்சுற மாட்டீங்க!!!!
வளைச்சுப் போட்டுடலாம்.

திண்டுக்கல் தனபாலன் said...

ஒரு டிரக் பத்துமா...? ஹிஹி...

கரந்தை ஜெயக்குமார் said...

நல்ல அனுபவம்

Geetha Sambasivam said...

ஹாஹா, இப்படி வாங்கி வைக்கிற பழக்கம் எனக்கு இல்லை! :) இருக்கிறதை வைச்சே ஓட்டி அதிலேயே கல்யாணமும் பண்ணற டைப்! :)))) என்னை அங்கெல்லாம் ஷாப்பிங், பர்சேஸ்னு கூட்டிட்டுப் போயிட்டு என் பொண்ணு, மாட்டுப் பொண்ணு எல்லாம் நொந்து நூலாகிடுவாங்க.

இப்போ ஜனவரியில் மாட்டுப்பொண்ணோடு துணிகள் பர்ச்சேஸுக்குப் போயிட்டு, நான் பாட்டுக்குக் கீழேயே ஒரு நாற்காலியைக் கேட்டு வாங்கி உட்கார்ந்துட்டேன். அப்புறமா ஆர்வம் குறைஞ்சு ரங்க்ஸும் வந்துவிட அவங்க ரெண்டு பேரும் மெதுவாப் பர்ச்சேஸை முடிச்சுட்டுத் திருப்தி இல்லாமல் மறுநாள் அவங்க ரெண்டு பேரும் மட்டும் தனியாப் போய் ஷாப்பிங்கை அரை மனசா முடிச்சாங்க. :))))

Geetha Sambasivam said...

அது என்னமோ தெரியலை, ஷாப்பிங் பண்ணணும்னாலே ரொம்ப அலுப்பா இருக்கும். அநேகமா நான் வரலைனு தான் சொல்லிடுவேன்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் டிடி.பெண்ணின் பேறு காலம். அப்போது. வண்டியை விட்டு இறங்க முடியாத நிலை.
இல்லாவிட்டால் கடிவாளம் போட்டு நிறுத்தி இருப்பாள். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஜெயக் குமார்.

வல்லிசிம்ஹன் said...

கீதா,
நானும் இப்பொது அப்படித்தான் இருக்கிறேன். பேரங்களுக்கு எதாவது வாங்கணும்னு கிளம்புவாள். எந்த மாடிக்குப் போகிறாளோ அங்கயே ஸோஃபாவில் உட்கார்ந்துவிடுவேன். சின்னவனுக்குப் பொறுமை இருக்காது. பாட்டி ஏதாவது விளையாடலாம் வான்னு தூணுக்குத் தூண் ஒளிஞ்சு கொண்டு ஆட்டம் போடுவான்.>}}}} இது உடம்பில தெம்பிருந்த போது செய்த விவகாரம்.