About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Tuesday, August 17, 2010

இரவும் வரும் பகலும் வரும்....1


இந்தப் பதிவு என்னுடைய வில்லிபுத்தூரில் பதிவிட்ட கதையின் ஆரம்பம்.
தமிழ்மணத்தில் சேர்க்க முடியாததால்
நாச்சியாரிடம் சரணடைந்தேன்:0) தொடர். பயப்படவேண்டாம். மூன்று பதிவுக்கு மேல் போகாது என்று நினைக்கிறேன்:)


கதை ஆரம்பம்.

***********************
''வாழ்வென்றால் சிரித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்று ஏதாவது சட்டம் போட்டு இருக்கா என்ன? எனக்கு கோபம்தான். அதைக் காண்பிக்க எனக்கு ரைட்டு இருக்காக்கும் ''
முணுமுணுக்கும் ஜானு என்கிற ஜானகியை அலுப்போடு பார்த்தேன்.
'பின்ன என்ன முணுக்'னால் பிறந்த வீட்டுக்கு ஓடறது எந்த விதத்தில நியாயம்?
புருஷன் பொண்டாட்டிக்குள்ள இதுவரை சண்டையே வந்தது கிடையாதா .


அப்படிப் போவதானால் நானே நானூறு தடவை காரைக்குடிக்கு ஓடி இருக்கணும்.'

'எதுடி, அப்ப எல்லாம் நீ பொட்டி கட்டரத்துக்குள்ள ,சின்னத்துக்கு சளி பிடிச்சுக்கிம்,
பெரிசுக்கு வயத்தவலி வந்துடும்.
சரி நாளைக்குப் போலாம்னு பொத்துன்னு உட்கார்ந்துடுவே.
கார்த்தால உனக்கு கோவம் வந்தது கூட நினைவில்லாம, இட்லி வேக வைத்துண்டு இருப்பன்னுதும் ஜானுவுக்கே சிரிப்பு வந்தது. கூடவே சுய பச்சாத்தாபமும் சேர்ந்து கொண்டது.

அடச்சே கோவிச்சுக்கரத்துக்கூட நேரமில்லாமல் என்ன தான் குப்பை கொட்டினேனோ'' என்றாள்.
சரி 35 வருஷம் கழிச்சு இப்ப வருத்தப் படாதே. எதுக்காக இவ்வளவு கோபம்.
சனி ஞாயிறு வந்தால் நடக்கிற கூத்துதானே.?

''வாராவாரம் நடக்கணும்னு எங்கயாவது காலட்சேபத்தில கேட்டுண்டு வந்தீர்களா,
அதென்ன அகங்காரம். ?
நாளைக்கு எனக்கு அறுபது வயசாகப் போகிறதுன்னு தெரியாதா.
பிரமாதமா பட்டும், வைர நெக்லஸும் கேட்டேனா.

எல்லாரும் ஒண்ணா இங்க இருக்கற மதுராந்தகத்துக்குப் போய் வரலாம்னு தானே

சொன்னேன்.
புளிக்காய்ச்சல் கூட காய்ச்சி வச்சுட்டேன். இட்லிமாவு பந்து பந்தா உருட்டி
வச்ச மாதிரி அரைச்சு வைத்தாச்சு. ராத்திரி சாதம் வடிச்சு, தயிர் சாதத்துக்கு

ரெடி செய்யணும். அவ்வளவுதான்.

இப்ப இந்த வெள்ளிக்கிழமை சாயந்திரம் ரெண்டு பையன்களுக்கும்
காரைக் கிளப்பிக் கொண்டு மாமனார் மாமியாரை
அழைத்துக் கொண்டு அந்த ரிசார்ட் ,இந்த ரிசார்ட்னு போகணுமா.?""
குமுறியவளை அநுதாபத்தோடு பார்ப்பதைத் தவிர என்னால் ஒன்றும் முடியவில்லை.
அவளது ஆற்றாமைக்கும் காரணம் உண்டு.

இரண்டு பிள்ளைகளக் கொடுத்த கடவுள் இன்னோரு பெண்ணையும்
கொடுத்திருக்கலாம்.
பெற்றோர்கள் நாலு பெற்றுக் கொண்டால் , eங்கள் காலத்தில் இரண்டு பெற்றுக் கொள்வது தான் அளவாக இருந்தது.!!
ஜானுவின் உடல் நிலையும் ஒத்து வரவில்லை. அதனால் இரண்டோடு
போதும் என்று நிறுத்தி ஆச்சு .

15 comments:

துளசி கோபால் said...

ஆஹா.... அருமையான தொடக்கம்.

பிடிச்சிருக்கு....எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு......

ஹுஸைனம்மா said...

ஆரம்பமே சுவாரஸ்யமாருக்குது. தொடருங்க!!

சந்தனமுல்லை said...

ஓ..சுவாரசியம்!! :-) நல்லா எழுதறீங்க வல்லியம்மா!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அருமையான தொடக்கம் வல்லி தலைப்பே களைகட்டுது..:)

வல்லிசிம்ஹன் said...

ஓஹோ கதை சொல்லும் ஆளுக்கே பிடிதச்சிடுச்சா:)
இனி என்ன !துளசி, சந்தோஷமிகு சவாரி போவோம் சலோ சலோ.

வல்லிசிம்ஹன் said...

வாங்க ஹுசைனம்மா.
இன்னிக்கு என் திருமணத்துக் கொடுத்த டிரன்க் பெட்டியை சரிசெய்து அதே பச்சை கலர் அடிக்கச் சொல்லிக் கொடுத்தோம். பெர்யியை எடுக்கும் போதே உங்கள் நினைவு வந்தது. நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் முல்லை.பிடிச்சிருக்கா:) வருவதும் நல்ல எழுத்தா வரட்டும்:)

திவா said...

என்னது எல்லாரும் கதை எழுத ஆரம்பிச்சுட்டாங்க! மர்மக்கதை எழுதலையா அக்கா?

Sumathi said...

கதை நன்றாக உள்ளது வல்லிம்மா:))))

வல்லிசிம்ஹன் said...

தம்பி வாசுதேவன் வரணும்.... மர்மக் கதையா. வேண்டாம். மர்மம்கிற வார்த்தையே நமக்கு டெர்ரர்:))
இது ஒரு கதா காலம்னு பாடப் போகிறேன்:))

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா கயல் முத்து. உண்மையாவே சுவாரஸ்யம் நம் வாழ்க்கைதான். வேற எங்கயும் தேடிப் போக வேண்டாம்.:) நன்றிம்மா

கோமதி அரசு said...

ஆஹா தொடர் அருமை.

தொடருகிறோம்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா சுமதி. மூன்றாவது நாளைக்குப் போடுகிறேன். இன்னிக்கு இன்னோருத்தருக்குப் பிறந்தநாள் அவருக்கு உங்க வாழ்த்துகளைச் சொல்லிடுங்க:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் தங்கச்சி. கதைன்னு ஆரம்பிச்சால் அது இழுக்குதுமா:)
கோமதியோட கதைகள் படிக்க ஆசை. நடக்குமா.!!

கோமதி அரசு said...

உங்கள் வாழ்த்து இருந்தால் நடக்கும்.கதை நிறைய இருக்கு உங்களை போல் கோர்வையாய் எழுத கை வர வேண்டும்.