About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Saturday, January 30, 2010

குழந்தைகளின் எண்ணமும் செய்கையும்
வரிசையாக அணி வகுத்து நிற்கும் பத்து பூனைகளையும் பெயர் வைத்து அறிமுகம் செய்து வைத்தாள்  பேத்தி .


புரிந்து கொள்வாள் என்று எதிர்பார்த்து கணினியில் தெரியும் தாத்தி தாத்தாவைப் பார்க்கிறாள் எங்கள் (இப்போதைக்கு) கடைசிப் பேத்தி.
இரண்டு வயது நிரம்பியாச்சு.வெள்ளிக்கிழமை வந்தால் தாத்தியும் தாத்தாவும் இந்தப் பெட்டிக்குள் வந்துவிடுவார்கள் என்று எப்படித் தெரியுமோ.:)முதலாவதாக அப்பா அலுவலக உடை அணியவில்லை,
சூ (ஷூ) அணியவில்லை. span>
வெள்ளிக்கிழமை வந்தால் தாத்தியும் தாத்தாவும் கம்ப்யூட்டரில் வருவார்கள்
என்று எப்படித் தெரியுமோ.

முதலில் அது விடுமுறை நாள் என்று எப்படித் தெரிந்து கொள்கிறாள் என்று
மகன் சொல்லித் தெரிந்து கொண்டேன்.
வழக்கமாக அலுவலகத்துக்கு அணியும் சூட் கோட் அவன் அணியாமல் இருந்தால், ஷூ போடாவிட்டால் ,
மொபைல் போன்,ஐடி கார்ட் என்று எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளாமல் அப்பா இருந்தால்
சரி இன்று ஹாலிடே ஜாலிடே என்று ஒரே உற்சாகம் அவளைப் பிடித்துக் கொள்ளுமாம்:)

கிரீக் பார்க் அழைத்துப் போவார். பூவா,(பூ) புத்தா ( புறா )(பூனை) காக்கா எல்லாம் பார்க்கலாம் என்று யோசனை ஓடுகிறது. அப்போ அப்பாதான் தனக்குச் சாப்பாடு கொடுக்கப் போகிறார்.நல்லா ஏமாத்தலாம் ,அப்பாவுக்கு வாயில மம்முவைத் திணிக்கப் பிடிக்காது :)


ஜோசு புத்தா , தூது புத்தா ,திதா புத்தா எல்லாத்தோடையும் விளையாடலாம் . இந்த எண்ணமெல்லாம் முகத்தில் சிரிப்பாய் விளையாட அப்பாவைச் சுற்றி வருகிறாள்.
கைக்குள்ள அடக்கமாக இருக்கிற ஜோஜோ புத்தாவையும் , இருக்கிரதிலியே பெருசா இருக்கும் தூது புத்தாவையும் எடுத்துக் கொண்டு கட்டிலை விட்டு இறங்கி கணினி முன்னால் வந்து அப்பாவின் நாற்காலி அருகில் நின்னாச்சு.
தாத்தி வரலியே !!

அப்பாவும், பாப்பா செய்யற வேலைகளைப் பார்த்து ரசித்துக் கொண்டு இருக்கிறார். சரியாக பன்னிரண்டு மணி சென்னை நேரத்துக்கு ,பாப்பா சாப்பிட்ட பிறகு ,அப்பா மடியில் உட்கார்ந்து கொண்டு எல்லாப் பூனைகளையும் அறிமுகப் படுத்துகிறது பாப்பா.

அப்பாவுக்கும் பெண்ணுக்கும் உரையாடல் கீழே.

''யார் வந்துருக்காம்மா.

தாத்தா தாத்தி.

பாப்பா கைல என்ன இருக்கு. ஜோசு புத்தா .

பாப்பா ஹேப்பி பர்த்டே எப்ப?
தத்தித்து (முப்பதாம் தேதி)

பாப்பாக்கு என்ன புடிக்கும்
புத்தா.

அப்பா பேரு என்ன
பாபு.

அம்மா பேரு
கியா .
டாங்கி எப்படி கத்தும்?
தோச்சு தோச்சு.:))
டாக்கி?(நாய்)பவ் பவ் !!

இப்பப் பூனை விவரங்கள்.
பால் மாதிரி வெள்ளையாக இருப்பது தூது புத்தா ,
கண்ணை மூடித் திறப்பது ஜோஜோ ,
சத்தம் போடுகிற பூனை தத்துப் புத்தா:) மத்தப் பூனை விவரங்கள் சொல்ல அம்மாவுக்கு அலுத்துவிட்டது. தாத்தி தாத்தாவுக்கு பைபை சொல்லி ஓடிப் போய் விட்டது..
எல்லோரும் வாழ வேண்டும்.

18 comments:

கீதா சாம்பசிவம் said...

பிள்ளையோட இருக்கீங்க??? பேத்தியின் மழலையா?? அருமையான அறிமுகம். ஆசிகள் குழந்தைக்கு.

கீதா சாம்பசிவம் said...

ஆரம்பத்தில் சில வார்த்தைகள் விடுபட்டிருக்கின்றன வல்லி, அதான் நீங்க பிள்ளையிடம் போயிருக்கீங்க எனத் தவறாய்ப் புரிந்து கொண்டேன். :))))))))


//வரிசையாக அணி வகுத்து நிற்கும் பத்து பூனைகளையும் பெயர் வைத்து அறிமுகம் செய்து வைத்தால் தாத்தி புரிந்து கொள்வாள் என்று எதிர்பார்த்துச் கணினியில் தெரியும் தாத்தி தாத்தாவைப் பார்க்கிறாள் எங்கள் (இப்போதைக்...//

இந்த வரிகள் என் டாஷ்போர்டில் தெரிகிறது, உங்க பதிவில் இல்லை!நேரம் இருக்கும்போது கொஞ்சம் பாருங்க என்னனு!

தக்குடுபாண்டி said...

இவா கூட நாம எவ்வளவு நேரம் இருந்தாலும் அலுப்பே தட்டாது!...:)

கோபிநாத் said...

நேரடியாக பார்த்த உணர்வு :)

சந்தனமுல்லை said...

சோ க்யூட்! குழந்தைகள் மொழியே மொழி! :-)

துளசி கோபால் said...

வேர் ஈஸ் மை கப்பு புத்தா & கோகி புத்தா?


ரொம்பவே ரசிச்சேன்:-)))))


குழந்தைக்கு எங்கள் ஆசிகள்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கீதா. வேறு பதிவாகப் போட்டு விட்டேன்.
அந்தப் பதிவின் விஷயம் தான் ஆனால் வரிகளும் வார்த்தைகளும் வேறு.
நன்றிம்மா. கவனித்துச் சொன்னதற்கு.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் தடுக்குபாண்டி.
குழந்தைகளோடு இருக்கும் நேரம் களங்கமில்லாதது.

வல்லிசிம்ஹன் said...

நேரம் வந்தால் நேராகவும் பார்க்கலாம்.
காத்திருக்கலாம் . நன்றி கோபிநாத்.

வல்லிசிம்ஹன் said...

துளசி, கப்பு புத்தா, கோகி புத்தா எல்லம் நாந்தான் வங்கிக் கொடுக்கவேண்டும். அது ஜாலியா வாங்கிக்கும்.
அவ்வளவு பூனைகள் மேல மோகம்.:)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா முல்லை. இந்தத் த' னா மேல இவ்வளவு ஆசை. எதை எடுத்தாலும் ஒரு தா 'வைக் கூடப் போட்டு
விடுகிறது.

தக்குடுபாண்டி said...

//உண்மைதான் தடுக்குபாண்டி.//

வல்லியம்மா! நான் தக்குடுபாண்டி! தடுக்குபாண்டி இல்லை!....:) புதுசா கடை தொறந்து இருக்கேன். வந்து ஒரு பார்வை பாத்துட்டு போங்கோ!

ஹுஸைனம்மா said...

இத நான் ரீடர்ல பாத்தேன். அதில உள்ள “(இப்போதைக்கு) கடைசி பேத்தி” என்ற வரியை ரொம்பவே ரசித்தேன் வல்லிம்மா. எங்க இருக்காங்க பேத்தியார்? வெள்ளிக்கிழமை லீவுன்னா, இங்க அரபுநாடுகளாத்தான் இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

ஹுசைனம்மா வாங்க வாங்க. அவங்க துபாயிலதான் இருக்காங்க. நீங்களும் அங்கதானா.

ராமலக்ஷ்மி said...

மழலை இனிது இனிது. அருமை வல்லிம்மா. தாத்தி சரிதானே:)? சின்ன வயதில் ஏன் ‘தாத்தி, ஆச்சன்’ என ஏன் இல்லை என்போம்:)!!

வல்லிசிம்ஹன் said...

நானும் எங்க அம்மாவோட அம்மாவை சீனிம்மான்னு தான் அழைப்பேன்.
இரண்டு பாட்டிக்கும் வித்தியாசம் வேண்டும் என்பதற்காக;)
நீங்கள் கேட்டது அருமையான கேள்விதான்:)

செழியன் said...

எங்கள் பகுதியில் அம்மம்மாவை ஆயா என்றும் அப்பம்மாவை அப்பத்தா என்றும் அழைப்போம்.பாட்டி என்றால் அம்மம்மா அல்லது அப்பம்மாவின் அம்மா என்பது ஆகும். மழலைச் சொல்லுக்கு மயங்காதவர் யாருமில்லை( பாட்டி உட்பட)

வல்லிசிம்ஹன் said...

வாங்க செழியன், முதல் வரவுக்கு நன்றி. மதுரையில் இருக்கும்போது இந்த விளிச்சொற்களைக் கேட்டிருக்கிறேன்.எந்தப் பெயரை வைத்தால் என்ன. அம்மா, அப்பாவைவிட அதிகம்
பாசம் கொடுப்பவர்கள் அவர்களுடைய பெற்றோர்கள் தான்:)