About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Tuesday, June 17, 2008

கண்ணே என் கண்மணியே கண்ணம்மா தாலேலோ

எப்பவோ ஜன்மங்கள் முன்னால் தூளியில் ஆடிய நினைவு உண்டு. அதுவும் மாமா' சின்னஞ்சிறு கிளியே பாடு

என்று சொன்ன நினைவும் இருப்பதால்,கொஞ்சம் இரண்டு வயதாவது ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன்அதற்கப்புறம் எங்க குழந்தைகளுக்குத் தூளியெல்லாம் பழக்கப் படுத்தவில்லை.
பெரியவனுக்காவது தொட்டில் இருந்தது. அடுத்தது ரெண்டும் தரைதான்..
எப்படியோ தூங்கி வளர்ந்து இப்ப அவர்கள் குழந்தைகள் காலத்தில் க்ரிப்தான்
முழக்கம்.
அது விளையாடுவதை விடத் தூக்கிக்கோ அழுகை,சிணுங்கல் நிறைய.:)
ஸ்விஸ்ல இருக்கிறது ஓடி ஓடிக்களைத்து அப்புறம் தூங்குகிறது. இங்க இருக்கிறதுக்கு பாட்டு போடணும்,இல்லாட்டா தள்ளுவண்டியில் போட்டு பாடிக் கொண்டே நடக்கணும்.
எனக்கு நல்ல பயிற்சி ஒத்துக்கறேன்.
ஆனால் சில பாட்டுக்குத்தான் தூக்கம் வரது அதுக்கு. எம். எஸ். அம்மா பாட்டுக்களிலியே டோலாயாம், க்ஷீராப்தி கன்யககு இரண்டு பாடல்களுக்கும் கொஞ்சம் எஃபெக்ட் உண்டு. நர்சரி ரைம்ஸ் போட்டால் கொட்ட கொட்ட விழிக்கிறது.
நீ மாட்டு தள்ளு நான் மாட்டுக் கேக்க்கறேன் என்கிற மாதிரி முகத்தில எக்ஸ்ப்ரஷன்.
அங்க சிகாகோல இருக்கிற பேரன் பாம்ம்பே சகோதரிகளின் அற்புதமேன்னு தொடங்குகிற பாட்டைப் போட்டால் தான் தூக்கம் வருகிறது என்று மழலையில் சொல்கிறான்.
இன்னோரு வாட்டி போடுன்னு ஆறு தடவை இன்னோரு வாட்டி போட்ட பிறகுதான் கண் சொக்க ஆரம்பிக்கும்.
அதுவரை அம்மாவோ அப்பாவோ தூக்கிக் கொண்டு நடக்கணும்.
இதுக்காகவே தூக்கம் ஏன் வரலைனு இணையத்துக்குப் போய்ப் பார்க்கிறாங்க.
அதிலேருந்து என்ன விஷயம் பார்க்கிறாங்களோ படிக்கிறாங்களொ கொஞ்சம் சமதானம் ஆகும்.
நாம சொல்றதெல்லாம்'இப்படித்தானிருக்கும் ஒண்ணரை வயசானா எல்லாம் செட்டில் ஆகிடும்'
என்று சொன்னால் 'அப்படியெல்லாம் விடமுடியாதும்மா.
எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும்.கண்டு பிடிக்கணும்.''
சரிம்மா,சரிப்பானு விட்டு விட வேண்டியதுதான்.
போதாக்குறைக்கு பேரண்டிங்.காம் வேற இருக்கா.
அதில என் பொண்ணு,பையன் ராத்திரி தூங்க மாட்டேங்கறது என்ன பண்ணலாம் அம்மான்னு வேற கேள்வி போடுவாங்க. அதில ஒரு திருமதி படேலோ,அகர்வாலோ, ராஜலக்ஷ்மியோ வந்து ரெண்டு மூணு யோஜனையைக் கொடுப்பாங்க.
தூங்கறத்துக்கு முன்னால கொஞ்சம் பால் கொடுங்க.
எட்டுமணிக்குத் தொட்டில்ல போட்டுட்டு வெளில வந்துடுங்கோ. அது அழுதாலும் எட்டிப் பார்க்ககூடாதுன்னு இப்படிப் போகும்.
இவங்க பாலும் கொடுப்பாங்க. தொட்டில்லயும் போடுவாங்க.
ஆனா முணுக்னு அது சிணுங்கறத்துக்கு முன்னால போய் நின்னுடுவாங்க.:)
மடியில் போட்டுத் தட்டினாத் தானே தூங்கிடும்.அதுக்கு என்ன வேணும். டயப்பர் காய்ஞ்சு இருக்கணும்.வயிறு ரொம்பி இருக்கணும், அவ்வளவுதானே. !!! வயித்துவலியும் இருக்கக் கூடாது, அது ரொம்ப முக்கியம்.
இரண்டு வயது வரை இப்படித்தான் இருக்கும்.அதுக்கு அப்புறம் வேற மாதிரி
பேச்சு,பழக்கம்,சாப்பாடு மாறியதும் அதுவும் சமர்த்தாயிடும்:)
நம்புவோம்.

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

21 comments:

ambi said...

//அதுவரை அம்மாவோ அப்பாவோ தூக்கிக் கொண்டு நடக்கணும்.
//

என்ன இப்படி வயத்துல புளிய கரைக்கறீங்க? ஹிஹி, ஜுனியரை இப்பவே தரைல போட்டு தூங்க வைக்க பழக்கப்படுத்த சொல்றேன். :))

ambi said...

இல்லாட்டி நாலு மாசம் கழிச்சு மாசத்துக்கு ஒருத்தரா வந்து தூளி ஆட்டிட்டு போங்க. பெங்களுர் அட்ரஸ் தரேன். :p

ராமலக்ஷ்மி said...

புதிதாகத் தந்தையானவர்களையும், தந்தையாகப் போகிறவர்களையும்,
வாழ்த்திய கையோடு அவர்களுக்கு பல டிப்ஸ் வழங்கும் நல்ல பதிவு.

வல்லிசிம்ஹன் said...

அம்பி, குட்டி அம்பி சமர்த்தாத் தானிருக்கு.
அது படுத்தாதுன்னு நினைக்கிறேன்.

இங்க நடக்கிறதைச் சொல்றேன்மா. பொதுவா அப்பா குசும்பு பண்ணினா குழந்தை ரொம்ப சமத்தாக இருக்கும்னு லாஜிக்.:))

வல்லிசிம்ஹன் said...

வரோம் வரோம்.

இன்னும் கல்யாணப்பட்டுப் புடவையே எடுத்துக்கலை. உங்க பீரோல மேல் தட்டுல பட்டுத் துணில சுத்திவச்சிருக்கே அந்தப் புடவையைத்தான் சொல்றேன்.:)
ஒரு தடவை தூளி ஆட்டினா ரெண்டு நாள் தங்குவோம்.

வல்லிசிம்ஹன் said...

ராமலக்ஷ்மி,
ஒவ்வொரு பதிவையும் எப்படித்தான் லின்க் செய்து பின்னூட்டம் இடறீங்களோ.
நன்றிம்மா.

டிப்ஸ் நாம கொடுத்தாச் செல்லுபடியாகிற காலமில்லை இது:0)

இணைய காலம். அப்பப்போ போனாப் போகிறதுன்னு ஓகேயாகும்:0)
உண்மைலயே புத்திசாலிகள் இந்தத் தலைமுறைப்பசங்க.

அபி அப்பா said...

##அம்பி, குட்டி அம்பி சமர்த்தாத் தானிருக்கு.
அது படுத்தாதுன்னு நினைக்கிறேன்.

இங்க நடக்கிறதைச் சொல்றேன்மா. பொதுவா அப்பா குசும்பு பண்ணினா குழந்தை ரொம்ப சமத்தாக இருக்கும்னு லாஜிக்.:))

##

என்னவோ லாஜிக் இடிக்குதே! நம்ம வீட்டு கதை விஷமம் டபுலா இருக்கே வல்லிம்மா:-)))

கவிநயா said...

//இவங்க பாலும் கொடுப்பாங்க. தொட்டில்லயும் போடுவாங்க.
ஆனா முணுக்னு அது சிணுங்கறத்துக்கு முன்னால போய் நின்னுடுவாங்க.:)//

ஆமா, சரியா சொன்னீங்கம்மா. நம்மாலல்லாம் குழந்தையை தனியா விடவே முடியாது :)

//இதுக்காகவே தூக்கம் ஏன் வரலைனு இணையத்துக்குப் போய்ப் பார்க்கிறாங்க.//

என்ன கணக்கு போடணும்னாலும் கால்குலேட்டர் எடுக்கற மாதிரி, என்ன கேள்வி வந்தாலும் இப்பல்லாம் இணையம்தான் துணை :)

இலவசக்கொத்தனார் said...

எங்களுக்காக இப்போ டிப்ஸா? நடக்கட்டும். நன்னி!

துளசி கோபால் said...

குழந்தையை ராத்திரி பூராவும் மடியில் போட்டுக்கிட்டேத் தூங்குவதில் கோபாலை மிஞ்ச முடியாது.

தூக்கு தூக்குன்னு அதுக்கப்புறம் என் உயிர்.......

குழந்தையைச் செல்லம் கொடுத்து கெடுப்பதில் அப்பாக்குத்தான் முதலிடம்.

அப்பா...வெறுமனே தூக்கி வச்சுருந்தால் போதும். அம்மா..?

பால் கரைப்பதில் இருந்து எல்லா வேலையும் செஞ்சுக்கிட்டுத் தூகியும் வச்சுக்கணும் 24 மணி நேரம்.

ஆகுற கதையா?

இணையம் வந்ததோ நான் பொழைச்சேனோன்னு இருக்கு. பேரக்குழந்தைகளை அது வளர்த்துக்கும். இல்லையா வல்லி?

வல்லிசிம்ஹன் said...

அபி அப்பா,
நட்டு குட்டிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்.

அவன் ஏன் குசும்பு பண்ண மாட்டான்.? அப்பா அம்மாவைச் சதாய்க்கிறதைப் பார்த்து இருப்பான்,ஓகோ நான் அப்பா வாரிசுனு தந்தை வழில தனயன் சார் நடக்குறாரோ என்னவோ:)))

வல்லிசிம்ஹன் said...

சரியாச் சொன்னீங்க கவிநயா.

இணையம் அவசியமான மருந்தாப் போச்சு. அளவோட பார்த்தா பயன் இருக்கும்.

நானே மாதச் செலவெல்லாம் அதில பதிஞ்சு வச்சுக்கிறேன்.
என்னைவிடச் சின்னவங்களுக்கு அதுதான் கடவுள் மாதிரித் தெரியறதுல அதிசயம் இல்லை:))

வல்லிசிம்ஹன் said...

சாமி, கொத்ஸ் சாரே,
டிப்ஸ் நஹி நஹி.

பெற்றோர் இரண்டு(6 ன்னு) பேரும் டெக் சாவ்வி.

அதனால் இணையமும் இன்னோருத்தர் புத்தகம் போட்டு(your baby's first year,what to expect) இருக்காரே அவர்தான் குரு,மாதா,பிதா எல்லாம்.:)))))

வல்லிசிம்ஹன் said...

இணையம் வந்ததோ நான் பொழைச்சேனோன்னு இருக்கு. பேரக்குழந்தைகளை அது வளர்த்துக்கும். இல்லையா வல்லி?//

அய்ய, கனவு காணாதீங்க. இப்பவும் தூக்க உங்களைத்தான் கூப்பிடுவாங்க.
கொஞ்சி,சிரிச்சு முடிச்சதும்
வெளில போகணும்னா பாட்டி,தாத்தா வேண்டி இருக்கும்.
ரெடியா இருங்க.:)

Vijay said...

ஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.

"கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்
போராளியின் வெற்றிப்பேரிகை"

http://pugaippezhai.blogspot.com/2008/06/blog-post_3130.html

அன்புடன்,
விஜய்
கோவை

கீதா சாம்பசிவம் said...

//மடியில் போட்டுத் தட்டினாத் தானே தூங்கிடும்.அதுக்கு என்ன வேணும். டயப்பர் காய்ஞ்சு இருக்கணும்.வயிறு ரொம்பி இருக்கணும், அவ்வளவுதானே. !!! வயித்துவலியும் இருக்கக் கூடாது, அது ரொம்ப முக்கியம்.
இரண்டு வயது வரை இப்படித்தான் இருக்கும்.அதுக்கு அப்புறம் வேற மாதிரி
பேச்சு,பழக்கம்,சாப்பாடு மாறியதும் அதுவும் சமர்த்தாயிடும்:)//

சூப்பருங்கோ, அம்பி பேச்சைக் கேட்டுட்டு பங்களூர் போயி மாட்டிக்காதீங்க, குழந்தை சமத்தாத் தான் இருக்கு,! சும்மா தூங்கறதுக்காக வரச் சொல்லுவார். :P குழந்தை தூங்க இல்லை, தான் தூங்க! அவரே ஆட்டட்டும் தூளியை!

வல்லிசிம்ஹன் said...

சூப்பருங்கோ, அம்பி பேச்சைக் கேட்டுட்டு பங்களூர் போயி மாட்டிக்காதீங்க, குழந்தை சமத்தாத் தான் இருக்கு,! சும்மா தூங்கறதுக்காக வரச் சொல்லுவார். :P குழந்தை தூங்க இல்லை, தான் தூங்க! அவரே ஆட்டட்டும் தூளியை!
//

ஓ, கீதா குசும்பு ரொம்ப ஜாஸ்தியா இருக்கே:)
நான் பாட்டுப் பாடினா அவர் எழுந்துடுவார். கவலையே வேண்டாம்.
அவர் மிரண்டு, குழந்தை மிரண்டு உடனே ஒரு கார்ல சிட்டி ஸ்டேஷன்ல ஏத்திவிட்டுடுவார்.:)

சின்ன அம்மிணி said...

என்னை எங்கப்பா 4 வயசு வரைக்கும் தொட்டில்ல போட்டு ஆட்டி தூங்க வைப்பாராம். எனக்கு அவ்வளவா ஞாபகமில்லை. நல்லா பிடிச்சு ஆட்டுங்கப்பான்னு சொல்வேனாம்

வல்லிசிம்ஹன் said...

Hi Ammini,
sorrypa .english comen ukku.
I can just imagine you asking yr father.
because I also remember asking my mama,who was just 12 years older than me:)

cheena (சீனா) said...

வல்லிம்மா - இது உலகம் முழுவதும் உள்ள பிரச்னை - தானாக வரும் - தானாக சரியாகும். கவலைப்பட வேண்டாம்.

ஆமா உங்க பேத்திக்க்காக மயிலு கதை எங்க தங்க்ஸ் எழுதி இருக்காங்க - படிச்சுச் சொல்லுங்க - மறக்காம பேத்தி என்ன சொன்னான்னும் சொல்லணும் ஆமா

http://pattarivumpaadamum.blogspot.com

வல்லிசிம்ஹன் said...

ஆமாம், சீனா சார். புரிகிறது.
என்ன இருந்தாலும் ஆத்தாமை சொல்லிக்க நாலு பேரு இருந்தா இப்படி எழுதி ஆத்திக்கிறேன்:)

தங்க்ஸ் எழுதிட்டாங்களா. உடனே பார்க்கிறேன். இந்தப் பசங்களுக்கு ஒரு வரி பிசகாம சொல்லணும். இல்லேன்னா பாட்டி நீ கதையை மாத்திட்டேனு கூவும்:)
ரொம்ப நன்றிம்மா.