டிஸ்கிப்பா.
துபாயில ஹெரிடேஜ் மியூசியம்னு ஒண்ணு இருக்கு.பழம் களப் பெருமைகள் அழகாக எடுத்து வைத்து விளக்கப்படும் இடம்.
இந்தப் பதிவில நான் சொல்ல வருவது அதைப் பத்தி அல்ல.
துபாய் ஹெரிடேஜ் கிராமம் ஒண்ணு எங்க வீட்டிலேருந்து கொஞ்சம் தொலவில் இருக்கு.
மம்சா பார்க்குக்கு அந்த வழியாப் போகும்போது நாந்தான் பையனிடம் இங்க ஒரு பழமையான கிராமத்தைக் கட்டி வைத்திருக்கிறார்களாமே.அதுவும் பவுர்ணமி அன்னிக்கு ரொம்ப அழகா இருக்குமே போலாமேப்பா என்றேன்.
தாய் சொல்லைத் தட்ட விரும்பாத மகனும் அப்பா மறுப்பதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் வண்டியைப் பார்க்கிங் லாட்டில் நிறுத்தினான்.
ஒரு பெரிய காம்பவுண்ட். அதற்குள் ஒட்டகங்களின் கனைப்புச் சத்தம், ஏதோ ஒரு அதீத இனிப்பு வாசனை காத்தில மிதந்து வந்தது.
ம்ம். நல்ல சாப்பாடும் இருக்கும் போல என்று நினைத்துக் கொண்டு ,நீளக்கால் ஜன்மங்கள்(என் புத்திரனும்,அவனைப் பெற்றவரும் தான்:)) உள்ளே சீக்கிரமாகப் போய் விட்டன.
மெதுவாக ஆடி அசைந்து கொண்டு அந்த இனிப்பு வாசனை வந்த இடத்துக்கு வந்து விட்டேன்.
பௌர்ணமினு சொன்னேன் இல்லையா. அங்கே நிஜமாகவே கிராமத்துப் பவுர்ணமி.
விளக்கே இல்லை. பெட்ரொமாக்ஸ் வெளிச்சத்தில் புஸ் புஸ் என்று மூச்சு விட்டுக் கொண்டு நாலைந்து ஒட்டகம். அதுக்குச் சற்றுத் தள்ளி அடுப்புகள். அடுப்புகள் முன்னால் கறுப்பு புர்கா தரித்த அழகுப் பெண்கள் அவர்கள் ஊர்த் தின்பண்டம் ஆட்டா மாவில் ரொட்டி மாதிரி செய்து அதை திறந்த அடுப்பில் வாட்டி எடுத்து அதன் மேல் பேரீச்சம்பழ சிரப்பை ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் செய்யும் அழகைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு நிமிர்ந்தால்
அப்பனையும் பிள்ளையையும் காணொம்.
சுற்றிவர ஒட்டகமும் பாஷைதெரியாத பெண்களும் இருட்டும் தான்.
இருட்டுக்கு அப்பால் சிரிப்பும் சத்தமுமாக சில யூரோப்பியர்கள்.
அந்தப் பெண்கள் செய்யும் பலகாரத்தைச் சாப்பிட்டு ஏதோ கதை பேசிக்கொண்டிருந்தார்கள்.
(இந்த ஊரில் தனியாக ஒரு பெண் நடந்து போவது அதுவும் அந்த இருட்டில்
தப்புதான். சந்தேகத்துக்கு இடமாகிறது)
நான்கு புறமும் பார்த்தபோது இன்னோரு கட்டிடம் தெரிந்தது. மெதுவாக வெளிச்சம் தெரிந்த அந்தக் கட்டிடத்துக்குள் போனதும் ஒரு குதிரையின் ஓவியத்தின் முன்னால் இவங்க இரண்டு பேரும் அலசிக் கொண்டிருந்தார்கள். பையன் நிலைமை புரியாமல் என்னம்மா அப்படியே M&B காலத்துக்குப் போயிட்டுயா அப்படீனு கேலி செய்கிறான்.
ஆமாண்டா வெள்ளைக் குதிரையும் ஆரப் ரோபும் போட்டுக் கொண்டு யாரோ வந்த மாதிரி இருந்தது. லட்சியம் செய்யாம ,என்ன இருந்தாலும் தமிழ்ப் பொண்ணாச்சேனு இங்க வந்தேன். என்ன ஆச்சர்யம் நீங்க இங்க இருக்கீங்க!!!!!
அப்படீனு பல்லைக் கடித்தபடி சொன்னதும், பையன் ஓஹோ டேஞ்சர் சிக்னல் என்று அனுமானித்தபடி,
என் கையைப் பிடித்துக் கொண்டு இன்னோரு அறைக்கு அழைத்துப் போனான். அதில் 400 வருடங்களுக்கு முன்னால் இருந்த ராஜா ராணி படம், வெள்ளைக்காரன், நாணயங்கள் எல்லாம் வரிசையாக இருந்தது. கூடவே அந்தக் காலத்தில் பயன் படுத்திய வாட்கள் எல்லாம்(படு கோரம்)
இருக்கவே இருவரும் மீண்டும் அங்கேயே மூழ்கி விட்டார்கள்.
சரி நாம் அடுத்த அறைக்குப் போகலாம் ,அவங்க வெளில வரும்போது சட்டுனு வெளில வந்து சேர்ந்து கொள்ளலாம் என்று நல்ல வெளிச்சமாக இருந்த அறைக்குள் போனேன்.
அங்கே ஏற்கனவே ஒரு அராபியக் குடும்ப வாசனைத் திரவியத்தில் குளித்து குஞ்சு குளுவான்களோடு குடும்பமாக பேசிக் கொண்டிருந்ததும்
நான் மறுபடி வெளியே வந்துவிட்டேன்.
இங்கதான்பா தப்பாப் போச்சு.
நான் வெளீயே வந்த அறைக்கும் உள்ளே வந்த அறைக்கும் சம்பந்தமே இல்லை. இந்த அறையிலிருந்து இன்னோரு வாசல்... அது வழியாப் போனா இன்னோரு குட்டி அறை. அதுக்கு வாசலே இல்லை.
அது பிரேயர் செய்யற இடம் போலிருந்தது.
ஆத்தாடீனு பைத்தியம் பிடிச்ச மாதிரி ஒரு ஒரு அறையாப் போக ஆரம்பித்தேன். முதல் ரூமைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை.
அந்தப் பத்து நிமிஷத்தில் எனக்கு மூச்சு நிற்கும் அளவிற்குப் பயம் தொற்றிக்கொண்டது.
மெல்ல ''பாபு'' என்று கூப்பிட்டால் ஒரு குட்டிக் குழந்தை எட்டிப் பார்த்தது. அது எப்படியும் பெற்றோரோடுதானே இருக்கும்னு அது பின்னால் போனால் அந்தப் பழைய ஒட்டக,பலகாரம் செய்கிற இடம் வந்தது.
அங்க இருக்கிற பெண்ணிடம் '' ஹமாரா பதி தேகா??'' என்று கேட்டேன். அவள் சிரித்தாள். இங்க்லீஷ் நோ நோ. '' அடப்பாவி. நீ உருது பேசுவாய், உனக்கு இந்தி தெரியும்னுதானே கேட்டேன்.
என்று நொந்தபடி லம்பா டால் பாபா,சோடா புத்தர் என்றேல்லாம் சொல்லிப் பார்த்தேன்.
தூகான் கயா?? என்றாள். ஆஹா, என்று கொஞ்ச தூரத்தில் பார்த்தால் வாட்கள், ஓவியங்கள் என்று விற்கும் கடைகள் வரிசையாக இருந்தன.
அதில் சிங்கத்தோட குரல் சத்தமாகக் கேட்டதும், கோபம் பாதி,அழுகை பாதி என்று விரைந்து அங்கே போய் நின்றேன்.
இருவரும் என்னைப் பார்த்து ஏம்மா திருப்பித் தொலஞ்சு போயிட்டியே.
அந்தக் கட்டிடமெல்லாம் பூட்டறதுக்கு முன்னாடி வந்தியே என்றனர்.
''இல்லடா அம்மா இஸ் கோயிங் த்ரூ அ டஃப் பீரியட். மறந்து போயிடறது பாவம் ''
என்று கேலி செய்கிறார் இவர்.
காருக்குப் போகும் வரை ஒன்றும் பேசவில்லை நான்.
காருக்குள் வந்து கதவைச் சாத்தியதும் இருவரையும் நான் போட்ட போடில் பையன் வாயே திறக்காமல் வண்டியை எடுத்து ஒரு நல்ல பானிப்பூரி கடை முன்னால் நிறுத்தினான்.
பசியினால் அம்மாவுக்குக் கோபம்னு நினைக்கும் மகனை என்ன செய்ய!!!.
கடவுளே காப்பாத்து என்று நெற்றியில் தட்டிக் கொண்டு
கீழே இறங்கினேன்.:)
40 comments:
ஹா! ஹா!
அப்ப பசியில்லையா??
ஆகா. இப்பத்தானே புரியறது. உலகத்தில எல்லாப் பசங்களும் ஒரே மாதிரித்தான் யோசிப்பாங்க போலிருக்கே.
குமார் நான் நடுங்கி ஆல்மோஸ்ட் மயக்கம் போடாத குறை.
இதூ நினைத்தாலே நடுக்கம் பதிவு சார்:)
mmmmm........ninaithaley inikkum....antha arabic sweet sonnen....athu peru "kulkula" appidinnnu arabi pennoruthi sonnanga.enakku dubaila piditha idangalil "Heritage village"um onru!!!
அட! சூப்பர் சுத்தல்:-))))))
இப்ப இனிக்கிறதா?
ஹாஹாஹாஹா:-)
ஆமாம் சிற்பி , சாப்பிட நல்லாத்தான் இருந்தது. கொஞ்சம் இஷ்க் பிஷ்கென்று ஒட்டிக் கொண்டது.
அந்த maze la மாட்டினதுக்கப்புறம் இந்த வாசனை நமக்கு இனிக்க மறுக்கிறது:)
துளசி!!
நாலுதடவை அந்தப்பக்கமாகப் போனோம். பையன் 'என்னம்மா இன்னோரு தடவை போலாமா.இன்னும் பார்க்க வேண்டிய க்ரௌண்ட்ஸ் நிறைய இருக்கு' என்று சொல்லுவான்.
அப்படியே மனசில சில்லுனு இருக்கும்:)
பசியினால் அம்மாவுக்குக் கோபம்னு நினைக்கும் மகனை என்ன செய்ய!!!.//
நல்லா இருடாப்பான்னு சொல்லிட்டு கிடைச்சதை சாப்பிட வேண்டியதுதான்!!
வல்லிம்மா...சூப்பர் கொசுவத்தி ;))
\\வல்லிசிம்ஹன் said...
ஆகா. இப்பத்தானே புரியறது. உலகத்தில எல்லாப் பசங்களும் ஒரே மாதிரித்தான் யோசிப்பாங்க போலிருக்கே.\\
வல்லிம்மா..இங்க தான் நீங்க பசங்களை புரிஞ்சிக்கனும்...சின்ன வயசுல பிள்ளைகள் அழும் போது அய்யோ பசிக்கு தான் அழுவுறாங்கன்னு சாப்பாடு போடுவிங்க இல்ல...அது போல தான் இப்போ அம்மா கோபம் பசியினால்ன்னு புரிஞ்சிக்கிட்டு இருக்காரு...இதுக்கு போயி..;)))
\\ஆமாண்டா ஏதாவது வெள்ளைக் குதிரையும் ஆரப் ரோபும் போட்டுக் கொண்டு யாரோ வந்த மாதிரி இருந்தது. என்ன இருந்தாலும் தமிழ்ப் பொண்ணாச்சேனு இங்க வந்தேன்\\
இந்த வசனம் புரிகிறது..ஆனா புரியல..;))
வரணும்மா கொத்ஸ். உண்மையாப் பார்த்தால் பசியும் இருந்தது:)
இருந்தாலும் இந்த மனுஷங்களுக்குப் பின்னாடி ஒரு அம்மா வராங்களே, எங்கயாவது தொலைந்து போயிடப் போறதேன்னு ஒரு நினைப்பு வேண்டாமா. மகா மோசம். என்னமோ இவங்க அந்தச் சரித்திரத்தைப் படிக்கலைன்னால்
துபாயே நொந்து போய்விடும்கிற மாதிரி ஒவ்வொரு இடமா நின்னு நின்னு எங்கயோ போயிட்டாங்க.
இப்ப மருமகள் வந்தாட்டு கொஞ்சம் தேவலை. கூட நிக்க ஆளு கிடச்சிருக்கு:)
அதுவா கோபிநாத். இந்தப் பழைய கதைகள்ளா எல்லாம் ஒரு ஏழைப் பொண்ணு இருப்பாள். அவளுக்குத் திடீர்னு அரபு தேசத்தில ஒரு ஆயா வேலை கிடச்சிடும். குழந்தைகளை வெளில பார்க் அப்படி இப்படி அழைத்துக் கொண்டு போகும்போது அந்த அரபு நாட்டு ராஜாவே ஒரு வெள்ளைக் குதிரைல ,அவரோட மேல்அங்கி காற்றில பறக்க வருவார். அட ரொம்ப அழகா இருக்கியே வில் யூ மாரி மீ? அப்படீனு ஒரு கேள்வி கேட்பார். அதுவும் சரின்னு சொல்லும். இதைத்தான் என் பையன் கிண்டல் பண்ணும்போது சொன்னேன்.
அப்படி அங்க நிறைய பேர் உலாத்தினாங்க. ஆனா யாரும் என்னனு கூட கேக்கலை:))))) ஆளைவிடு.!!!
இந்த பதிவுக்காக உங்களை ஸ்பெஷலா "அம்மா"ன்னு சொல்லப் போகிறேன். எங்க அம்மா எழுதி நான் படிச்ச மாதிரி இருந்தது:-) AND :-(
என் அம்மாவும் இப்படி தான், நின்ன இடம் பார்த்த இடம்னு காணாம போயிடுவாங்க! ("காணாமப் போன அம்மா, திரும்பி வா"ன்னு மைக்ல, தமிழ்ல, அமெரிக்காவில, நிறை மாசமா, கண்ணீரோடு அனௌன்ஸ் பண்ணினது நான் ஒண்டி தான்!). இதில அம்மாவுக்கு ஊர் சுத்திப் பாக்கணும்னு ஆசை உண்டு வேறு! அம்மாவும் பெண்ணும் ஊர் சுத்த கிளம்பினா, ரங்கமணிக்குக் கவலை தான்!
என்ன இப்போ, பெண்கிறதால், அம்மாவுக்குக் கோபம் வந்தா பஜ்ஜி செஞ்சு கொடுப்பேன்.., பானி புரி இல்லை;-) அம்மா நினைவு கிளப்பி விட்டுட்டீங்களே...:-(
வாங்க பொண்ணே. உங்க ஊருக்கு வந்ததும் போன் செய்ய்யறேன். நம்பர் அனுப்புங்கோ:)
எனக்கும் இடம் இடமாப் போய்ப் பார்க்கப் பிடிக்கும். பொண்ணு என்னை விட்டு நகர மாட்டா. கைல பேரன் வேற இருப்பானே. அதனால் நான் தொலைய சான்ஸே கிடையாது.:)
இந்தப் பெரியவன் அப்பா டீம் தான்
படுத்தற கட்சி.
அமெரிக்கால க்ராண்ட்கான்யான் பார்க்கும்போதுதான் ஒரெ ஒரு தடவை பின் தங்கிட்டேன்.:)
உங்க அம்மாவுக்கு பஜ்ஜி போடும்போது என்னையும் நினைச்சுக்குங்க.:) நன்றிப்பா.
நல்ல காமடியா போச்சு போங்க, நீங்க திரு திருன்னு முழிச்சுகிட்டு நிற்பதை மனசால நெனச்சுகிட்டேன்:-)) (நானும் மகன் கட்சியாக்கும்)
துபாய் அனுபவங்களைத் திலில் பறக்கச் சொல்லியிருக்கீங்க...
நம்ம ஊர் அளவுக்கு இங்கே பயப்படவேண்டியதில்லை வல்லிஅம்மா...செல்போன் நம்பர்களை மட்டும் எப்பவும் நினைவில் வச்சுக்கோங்க போதும் :)
:) நல்லவேளை... தப்பிச்சு வந்துட்டீங்களே. கடைசீல பானீபூரி சாப்டீங்களா? இல்லையா?
கெக்கே பிக்குணி கஷ்டமா இருந்ததுப்பா நீங்க எழுதினதைப் படிக்கும்போது.
சில சமயம் ரோல் ரிவர்சல் நடந்துடறது இல்ல.:(
அபி அப்பா, திரு திருனு முழிக்கிற சௌகார்ஜானகி முகம் எப்படி இருக்கும்:)
கையில ஒரு பூனையும் கொடுத்துட்டா ஒரு கச்சேரியே நடத்தி இருக்கலாம்.
பிள்ளைங்க கட்சி நிறையவே இருக்கு. பொண்ணுங்க நம்பர்தான் குறைவு. சேத்துடலாம்:)
வரணும் சுந்தரா.
அப்போ என்கிட்ட செல்போனும் கிடையாது. நாட்டுப்புறம்தான்:)
நம்ம ஊரில எங்க வேணா போயிட்டு வருவேன்பா.
இங்க இருட்டும், இடம் தெரியாத பயமும் நம்மளைத் திகிலில் மாட்டிவிட்டது. கொஞ்சம் யோசிச்சு செயல் பட்டு இருக்கலாம்:))
வாங்கப்பா ராகவன். கொஞ்சம் அப்படி இப்படி பிகு செய்துட்டு ,
பானிப்பூரியும், வேற என்ன எல்லாமோ சாட் வகையறாவும் சாப்பிட்ட பிறகு, கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கிட்டேன்:)
இனிமே என் மகன் ,என்னைக் கண்ட இடத்துக்கு கூட்டிப் போறதில்லைன்னு மனசில தீவிதமா திண்ணமா முடிவெடுத்து இருப்பான்:)
ஏம்பா இதுவெ ஒரு நகைக் கடைல உட்கார்த்தினால் நான் வெறும பார்த்துட்டு உட்கார்ந்திருப்பேன்(வாங்கணும்னு அவசியமில்லை):)
எங்க வீட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவுபடுத்துவது போல இருந்தது...
//என் மகன் ,என்னைக் கண்ட இடத்துக்கு கூட்டிப் போறதில்லைன்னு மனசில தீவிதமா திண்ணமா முடிவெடுத்து இருப்பான்:)//
அச்சோ ஏன்ம்மா இப்படி சொல்றீங்க...
ஒரு செல்போனை வாங்கிக் கைல குடுத்துடுவோம் :)
மௌலி, சும்மாஅக்கோசரம் சொல்றது. அதெல்லாம் நினைச்சபோது வண்டியை எடுத்துண்டு ஊர் சுத்த அவ்ன் ரெடி. என் எனர்ஜி லெவல் சரியா இருந்தா நானும் போவேன்.
அதுக்காக ஒரு ஹார்வேர் ஷாப்பில நின்னுண்டு ஸ்பானரையும்,ஏணியையும் பாத்துக் கொண்டு நிக்க என்னால முடியது. அக்கடானு ஒரு நாற்காலில உட்கார்ந்து புத்தகம் படிக்க ஆரம்பிச்சிடுவேன்:)
உலகத்துலிய்யே மஹா கஷ்டம் இந்த அம்மாக்களைத் திருப்திப் படுத்தறதுதான்!
கெட் ஓவர் இட் வல்ல்யம்மா!
நல்லா சாப்பிடுங்க!
வெகு குறைந்த நேரமே நான் துபாயில் இருந்தாலும் என் நண்பர் திரு.சுல்தான் இந்த இடத்துக்கு என்னை அழைத்துச் சென்றார்! என்னால் மறக்க முடியாத ஒரு இடம் இது!
வாங்க தைர்ய லட்சுமி...பண்ணுவதெல்லாம் பண்ணிட்டு அவங்களுக்கு 'டோஸ்' விட்டீங்களா?
'திரு திரு' னு முழிச்சாலும் சௌகார்ஜானகி முகம் கெம்பீரமாகவே [சாந்தமாகவும்]இருக்கும் உங்களைப் போல;)
கெட்டிங் ஓவர்ங்கிறதனால தான் இவ்வளவு பொறுமையா இருக்கேன் டாக்டர் சார்.:)
அது நல்ல கலைக் கண்காட்சிதான்.
காலை வேளைல பார்த்திருக்கணும்.
அப்போது இந்தப் பிரச்சினை வந்திருக்காது.
இருட்டில காணமப் போறதுதான் சிரமம்:)
சாப்பிடறேன்மா எல்லாம் அளவோட:)
இது என்னய்யா கண்மணி.
விட்டுட்டுப் போனவங்களைச் சொல்லாம என்னயே வாருரீங்களே. :) தைர்ய லட்சுமி அன்னிக்குக் கோப லட்சுமியா மாறினதிலிருந்து நமக்கு மதிப்பு கூடிப் போச்சுப்பா.
பைத்தியம் எப்ப சீறுமோனு ஜாக்கிரதையாவே இருக்காங்க:)
நன்றிம்மா.
//பசியினால் அம்மாவுக்குக் கோபம்னு நினைக்கும் மகனை என்ன செய்ய!!!.
//
ஹிஹி, இங்க அப்படியே நேர்மார். நானும் என் அம்மாவும் மீனாட்சி கோவிலுக்கு எங்க அப்பாவை கூட்டிட்டு போகனும்னா பயபடுவோம். புது மண்டபத்துல ஒரு கடைல நிக்க விட மாட்டார். இதுல அம்மாவும் பிள்ளையும் வேக வேகமா நடக்கிறோம்னு புகார் வேற. :p
பானி பூரி நல்லா இருந்ததா? அதை சொல்லவே இல்லையே? :p
ஹிஹி, இங்க பெங்க்ளூர் வாங்க, நானும் இதே மாதிரி ஊரை சுத்தி காட்டி பானிபூரி வாங்கி தறேன். :p
:) ... பவுர்ணமி, ஸ்வீட், கிராமியம், ... என்னைக்காவது போய் பாக்கணும் ... மேஸ் நிறைய பாத்ததுல்ல, ஆனா, ஒரு முறை எங்கையோ கண்ணாடி மேஸ் பாத்தேன் - எங்க திரும்பினாலும் நம்ம முகம் தான் தெரியும் - Bruce Lee படம் - Enter the dragon fight scene் மாதிரி - முதல்ல - சின்னப்புள்ளைங்க விளையாட்டுன்னு உள்ள நுழைஞ்சு, கொஞ்ச நேரத்தில கலங்கிட்டேன் .... :)
கல்யாணத்துக்கு அப்புறம், ரொம்பவே தொலைஞ்சு போயிருக்கேன். எல்லான் இந்த நெட்ட காலிகள் பண்ணும் சதி! :)
அம்மாவை அப்பாவை விட்டு ஃபாஸ்டா நடந்து, சோகம் உணர்ந்து, திருந்தி, திரும்பி மறந்து, அய்யோன்னு வருத்தப்பட்டு ... எல்லா கையா-மியாவும் பண்ணிருக்கேன். இப்பல்லாம் நின்னு கை கொடுத்து ஒவ்வொரு சின்ன மேடு, படியெல்லாம், தூக்கி விடறதுனால, மறக்கிறதில்ல.
துபாய் போய் பவுர்ணமி அன்னைக்கு பாக்குறேன். You have inspired me to go there! :) May be with a Nokia phone attached to a GPS! :) ...
அம்பி, புதுமண்டபத்தில நிக்க விடமாட்டாரா!!!!எப்படிப்பா இவர் உங்க கல்யாணத்தை நடத்தினார்?கடைக்குப் போகமலேயே:)
அதுக்கென்ன அம்பி அடுத்த பங்கலூரு டிரிப் ஸ்பெஷல்தான்.
சப்பன் போக்,ஸ்வீட் சாரியட்,
ப்ளூபெல்ஸ், இதெல்லாம் ஒரு ரவுண்ட் அடிச்சுட்டு,எம்டிஆர்ல வந்து டின்னரை முடிச்சுக்கலாம்.ஓகேயா:))))
அம்மாவை அப்பாவை விட்டு ஃபாஸ்டா நடந்து, சோகம் உணர்ந்து, திருந்தி, திரும்பி மறந்து, அய்யோன்னு வருத்தப்பட்டு ... எல்லா கையா-மியாவும் பண்ணிருக்கேன். இப்பல்லாம் நின்னு கை கொடுத்து ஒவ்வொரு சின்ன மேடு, படியெல்லாம், தூக்கி விடறதுனால, மறக்கிறதில்ல.//
மதுரா. உண்மைதான். மலையேறி வரேனு அம்மா எனக்காக வேண்டிக்கிட்டாங்க. சின்ன மலையானாலும் அம்மா பட்ட சிரமம் சொல்லிமுடியாது.
எல்லோரும் ரெண்டு மணி நேரத்தில ஏற, நானும் அம்மா அப்பாவும் நாலு மணி நேரம் எடுத்தோம்.
நல்ல நினைவை எனக்குக் கொடுத்ததற்கு நன்றி.
துபாய் வில்லெஜ் நல்லா செய்திருக்காங்க.அந்தக் கோட்டை சுவர்,பாதி இருட்டு பாதி வெளிச்சம் எல்லாம் பார்க்க வேண்டிய விஷயம்தான்.
அந்தக் காலத்தில இந்த ஊரில அப்படி அறைகள் கட்டி இருக்காங்க,,என்ன சௌகரியத்துக்காக அப்படிக் கட்டினாங்களோ!!
I am.....scared of mazes. botanicaL garden plant mazes are even more scarier:)
மதுரா, //இந்த நெட்ட காலிகள் பண்ணும் சதி!// ந்னு படித்து விட்டு, சரி, "யாரையோ" காலி என்று அன்பாய் அழைக்கிறீர்கள் என்று புரிந்தது.
இல்லை, காலை வேறு இடத்தில் வாங்க/வார வேண்டுமா;-)
கெ.பி பொண்ணே,
அதோட (மதுரா) ரங்கமணியும் நெட்ட கால் வம்சமோ என்னமோ.
இல்லை நீங்க சொல்ற மாதிரி வாங்க/வார வேணும்னா இடம் சொல்லுங்க கூட்டணி போட்டு வாரலாம்:))
மதுரா வாங்கப்பா.
கெ.பி, வல்லிம்மா,
ஆமா ரங்க மணி தான் அந்த நெட்டை காலி ... :)
வரேன், வரேன் ... வந்திட்டேன் :)
மதுரா, சீக்கிரமா வாங்க.:)
ஆனால் தடுக்காம நடக்கணும்.
பீச்சில நடக்கும் போது எங்க சிங்கம் என்னை விட்டு ரொம்பத் தள்ளிப்போச்சு. நானும் புல் தடுக்கி விழுந்துட்டேன்.
பின்னாலேயே வந்துக்கிட்டு இருந்த நரைத்த வாலிபர்கள் (!!!)கும்பல் ஒண்ணும் என்னைக் கைதூக்கி விட்டது.!!!!
இந்த அழகில நெத்தியில் இடிச்சு ரத்தம் வேற.
ஆஹா !!காணக் கண் கோடி வேண்டும்!!!
த்ரில்லிங்கான அனுபவத்தை விறுவிறுப்பாக விவரித்திருக்கிறீர்கள்!
ஆமாம்பா ராமலக்ஷ்மி. த்ரில்லர்னு சொல்றதா. ஹாரர்னு சொல்றதா:)))))
//லம்பா டால் பாபா,சோடா புத்தர் //
:-))))))))))))))))))
அன்பு துளசி, என்னப்பா திடீர்னு இந்தப் பதிவுக்குக் காமெண்ட் வரதேன்னு பார்த்தேன். சாதிகா பின்னூட்டத்தைப் பார்த்து வந்தீங்களா:)
ஜாலியா இருக்கில்லா. அப்ப இருந்தவங்க ரொம்பப் பேரை இப்பக் காணோமேப்பா.
Post a Comment