About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Saturday, March 08, 2008

குழந்தைகள் பள்ளியில் சந்திக்கும் சில தொந்திரவுகள்
பள்ளி செல்லும் காலம்தான் மிகவும் இனிமையான காலம் என்று இது நாள் வரை நினைத்திருந்தேன்.
எங்கள் நாட்கள் அப்படித்தான்.
இப்போது பாடங்கள் வேற, கட்டாயங்கள் வேறு.
போட்டிகள்.
பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும்.
வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.
படிப்பு, பாட்டு, விளையாட்டு எல்லாவற்றிலும் கடுமையான போட்டிகளுக்கு நடுவில்
ஜெயிக்க வேண்டிய நிலைமை.
நம் ஊரில் தான் இந்தப் போட்டிகளும் தவிப்புகளும் என்று நினைத்தேன்.
குழந்தைகள் அவர்களுக்கு உண்டான சூழ்னிலையில் பிழைத்து முன்னுக்கு வருவதோடு,
பள்ளியில் தங்களைவிடப் பலசாலிகளிடம்
அடியோ உதையோ பரிகாச வார்த்தைகளோ வாங்க,கேட்க நேர்ந்தால்
வீட்டுக்கு வருகையில் தெரிந்துவிடும்.
அம்மா அப்பாவிடம் சொல்லி அழும்.
மீண்டும் சமாதானப் படுத்தி சமாளித்து அனுப்புவதும் தெரியும்.
கொஞ்சம் மீறினால் நாமே பள்ளிக்கூடத்திற்குச் சென்று
சம்பந்தப் பட்டவர்களிடம் பேசிக் குழந்தைகளுக்கு
இவர்கள் தொந்தரவிலிருந்து விடுதலை கிடைக்க வழி செய்வோம்.

இப்போது புதிதாகத் தெரிய வந்த செய்தி யுஎஸ் ஏ இருப்பவர்களுக்குப் பழைய
செய்தியாகக் கூட இருக்கலாம்,
பள்ளிக்குச் செல்லும் எலிமெண்டரி க்ரேட் பையன்களும் பெண்குழந்தைகளும் இந்த மாதிரி புல்லி(bullies)களிடம்
மாட்டிக் கொண்டு அவஸ்தைப்படும் செய்திகள் நிறைய காதில் விழுகிறது.
சிகாகோ பள்ளியில் இந்தியப் பெண்குழந்தைகளை விட அங்ஏ வரும் மற்ற குழந்தைகள்
இன்னும் அதிக முதிர்ச்சி அடைந்தவர்களாக இருக்கவே,
இவர்கள் நிறமும் நடையுடை பாவனைகளும் இவர்களை அவர்கள் பார்க்கும் பார்வையில்
வேற்றுமை தெரிகிறது
வேற்றுக் கிரகத்து மனிதர்களைப் போல நடத்தும் செயல் அதிகமாகி வருவதாக
அங்கிருந்து வந்தவர் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்.
""
நீ ஏன் தலைக்கு எண்ணை வைத்து வருகிறாய்.
நீ போடும் உடைகள் ட்ரெண்டியாக இல்லை.
நீ ஒரு பாட்(bad) பர்சன்"
இதெல்லாம் அவர்கள் இந்தக் குழந்தைகளைப் பார்த்து பிரயோகிக்கும் அஸ்திரங்கள்.


இத்தனைக்கும் அவர்கள் வகுப்பில் நன்றாகப் படிக்கும் மாணவிகள்.
இதே போல பையன்களும் அவர்கள் வகுப்பில்
வேறு விதமாக மிரட்டப் படுகிறார்கள். பேசிக் பள்ளியிலோ ,நர்சரி வகுப்புகளிலோ
அனுபவிக்காத சிரமங்களையும் வருத்தங்களையும் இந்தக் குழந்தைகள் சந்திக்கும் போது அளவுக்கதிகமாக கோபம் கொள்ளுகிறார்கள் என்றும்,
அவர்களது மனதை ஒரு நிலைப் படுத்துவதற்காக தியான வகுப்புகளும் ஆரம்பிக்கப் பட்டு
இந்த்க் குழந்தைகள் தங்களுக்குத் தெரிந்த சமாதான முறையில் இந்தபிரச்சினையை சமாளிக்கக் கற்று வருவதாகவும் சொன்னார்.
இது சம்பந்தமாக் எங்கள் பேரனையும் விசாரித்துப் பார்த்தேன்.

''Yes Paatti, there are some boys who think differently.
and use very bad words and behave cruelly
and they make me angry.''
I just want to take up a wand and make them suffer''
இந்தப் பதில் எனக்கு முதலில் கொஞ்சம் சிரிப்பை வரவழைத்தாலும்,
அவனது உண்மையான வருத்தம் புரிந்தது.ஏனெனில் அவனும் அங்கே வளர்ந்தவன் தானே.
திடீரென முளைக்கும்
சவால்களை இரண்டு வருடமாக இந்தப் புதுப் பள்ளியில் தான் அவன் பார்க்கிறான்.
இத்தனைக்கும் இந்த குட்டி நெய்பர்ஹூடில் ஒரு ஆறு இந்தியர்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் பிள்ளைகளும் வேறு வேறு வகுப்புகளில் அதே பள்ளியில் படிக்கிறார்கள்.

''you are not cool''
இந்த வார்த்தைகள் அவனுடைய ஹாரி பாட்டர் புத்தியை வேறு விதமாக முடுக்கிவிட்டு விட்டு இருக்கிறது.
.
அதன் விளைவு தான் இந்தக் கோபமும், டார்த் வேடர் வேஷமும்,வீர வார்த்தைகளும்..
தினமும் அவனுடன் பேசிக் கொண்டு இருக்கிறேன்.
அடுத்த சாக்கர் சீசன் வந்தால் இந்தக் குளிர்கால blue moods குறையும் என்று நம்புகிறேன்.
அந்த ஊரில் உள்ள இந்தியப் பெற்றோர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எனக்குச் சொன்னால்
கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்.:)
வளர்சிதை மாற்றம்???21 comments:

வல்லிசிம்ஹன் said...

பின்னூட்டப் பரிசோதனை?


வீக் எண்ட்.என்ன வீஈஈஈஈக் எண்டா:)

துளசி கோபால் said...

எதுக்குப்பா இந்த அழுகாச்சி?

அப்புறமா வந்து சொல்றேன். இங்கே வரவிடாம ஒண்ணு என்னை புல்லி பண்ணிக்கிட்டு இருக்கு:-)

வல்லிசிம்ஹன் said...

அங்கயுமா.
சமாளிச்சிட்டே வாங்க.:)

புதுகைத் தென்றல் said...

அருமையா சொல்லியிருக்கீங்க.
இதனால் பிள்ளைகள் மனதிளவில்
பாதிக்கப்பட்டு, பள்ளி செல்வதையே
தவிர்க்கப் பார்க்கின்றனர்.

ஒரு தாயாக நான் இதை அனுபவித்து இருக்கிறேன்.

பிள்ளைகளிடமும், ஆசிரியர்களிடம்
பேசி (கம்ப்ளையிண்ட் செய்யக் கூடாது) தான் இதற்கு ஒரு முற்றுபுள்ளி வைக்க முடியும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் புதுகைத் தென்றல்.

ஆமாம் சந்தர்ப்பம் கிடைக்கும்போது அப்படித்தான் வகுப்பு டீச்சரைச் சந்தித்து வருகிறார்கள்.
ஆனால் விஷயம் லகுவில் பெரிதாகிவிடும் என்ற காரணத்தினாலேயே மிதமாகக் கண்டித்து விட்டு விடுகிறார்களாம்.

பிள்ளைகளுக்குப் பள்ளி மிகப் பிடித்திருக்கிறது. ஒன்றிரண்டு பசங்க இந்த மாதிரி செய்யும்போது

அவர்கள் மனத்தில் அந்த எண்ணம் ஒன்றுதான் வட்டமிட்டுக்கொண்டே இருக்கிறது என்று சம்பந்தப்பட்ட பெண்ணின் அம்மா சொன்னார்கள்
அழாத குறையாக..

பாச மலர் said...

பிள்ளைகளுக்குப் பள்ளி பிடித்திருக்கும் பட்சத்தில்..இந்தச் சூழல் பழகித் தாமாகவே சமாளிக்கும் ஆற்றல் பெற்று விடுவார்கள் என்றே தோன்றுகிறது..

காட்டாறு said...

:( கஷ்டமா தான் இருக்குது கேட்க. பள்ளி நிர்வாகமும் பெற்றோரும் இதற்கு முற்றுப் புள்ளி வைக்க திட்டம் கொண்டுவர வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் பாச மலர்.
இவங்க இதுக்கு சீரியஸா ஸ்டெப் எடுக்கணும்.

சந்தோஷமாப் படிக்கத் தானே போறாங்க.
வார்த்தைகள் கேட்கவா.!!நீங்க சொல்கிற மாதிரிப் பழகிடும்னு நினைக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

நம்ம ஊரில இப்படி கேள்விப்படறது இல்லையே.
இல்லாட்டிப் பிள்ளைகள் சொல்லாம இருக்காங்களா.

சண்டை நடக்கும் பார்த்து இருக்கேன்.
இந்த க்ரூப் அந்த க்ரூப்னு பேரு வேற வச்சிப்பாங்க.:)

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

இதுல பல கோணங்கள் இருக்கு.
//நீ ஏன் தலைக்கு எண்ணை வைத்து வருகிறாய்.
நீ போடும் உடைகள் ட்ரெண்டியாக இல்லை.//

நம்ம பசங்களை (பெண்/பையன்) தைரியமாக, எல்லார் போல (சமுதாயத்தோடு ஒத்து) வாழ சொல்லிக் கொடுக்க வேண்டியது பெற்றோர் கடமைன்னு நினைக்கிறேன். இந்த ஊர்ல வந்து ப்ரவுனாகப் பிறக்கணும்னு அவங்களுக்கு என்ன? இங்க வந்து பெத்தது நாம.

குறிப்பா, என் பசங்க மான்டிசோரி ப்ரைமரி போனாங்க. அங்க 3‍-6 வயசுள்ள மத்த பசங்களோட (75% ஆசியர்கள்) ஆட்டம். பல குழந்தைகள் ப்ரைமரி டேகேர்னு போகும். இதத் தவிர‌, நம்மூர் பெற்றோர் குழந்தைகளை அமெரிக்கக் குழந்தைகளோட விளையாட விடறதில்லை (They & Us). இத விட்டா, கணக்கு ட்யூஷன், படிப்பு (என் பொண்ணு பரதநாட்டியம் கத்துக்கறா, என் பிள்ளை பாட்டு .. என்று இன்னும் நம் பாரம்பரியத்தை விடாமல்) நம்மூர்க் கலைகள்.... எப்பா, ரொம்ப பாவம் நம்ம பசங்க. முடிந்த வரை அமெரிக்க சினேகம் வைத்துக் கொள்ளவும். அவர்கள் குழந்தைகளோடு ப்ளே டேட் வச்சுக்கணும்... பாரம்பரியத்தை விடத் தேவையில்லை. நான் இதை வெகு தெளிவாகச் சொல்லிட்டேன் என் பசங்ககிட்ட. நம்ம பெற்றோர் முக்கால்வாசி, 'அடுத்தாத்து அம்புஜம்' கதை தான்.

அப்புறம், எங்க வீட்டுப் பக்கம் வாங்க, ஒரு கதைத் தொடர் எழுதிட்டிருக்கேன். ஆசிகள் தேவை;-)

துளசி கோபால் said...

இங்கேயும் இதுக்கெல்லாம் குறைவொன்றுமில்லை(-:

இதைப்பற்றியெல்லாம் ரெடிமேட் தொடரில் எழுதணுமுன்னு இருக்கு.
ஆனா பாருங்க்.... அந்தத் தொடர் ஆரம்பிச்ச நேரம் சரியில்லை போல. இதுவரை எழுதி முடிக்க வேளை வரலை.

அத்தியாயம் 16 க்குபிறகு அப்படியே நிக்குது.சீக்கிரம் அதை முடிக்கணும் வல்லி. அடுத்த வாரம் தொடரலாமான்னு இருக்கு.

கிருத்திகா said...

ரொம்ப வருத்தமா அடுத்த பதிவு போட்டிருக்கீங்களே சரி ஒரு பின்னூட்டம் போடலாம்னு வாந்த ஏற்கனவே நிறைய பேர் அட்டெண்டென்ஸ் போட்டிருக்காங்க சரி.. விஷயத்துக்கு வரலாம்... நல்ல பதிவு, இது போன்ற நிகழ்ச்சிகள் எல்லா இடத்துலயும் நடக்கிறது தான் என்பது என் எண்ணம்.இப்போ நம்மூரில கூட பசங்க உடையை வைத்து எடை போடுவதும் அவர்கள் கொண்டு வரும் லஞ்சை வைத்து வகை பிரிப்பதும் இருக்கத்தான் செய்கிறது. என்ன செய்ய பிள்ளைகள் வெகு சீக்கிரம் அத்தனையும் பழக வேண்டியுள்ளது.

கயல்விழி முத்துலெட்சுமி said...

எங்க வீட்டுவேலைக்காரம்மா அன்னைக்கு சொன்னது தான் நினைவுக்குவருது .. அவங்க பொண்ணு கருப்பு .. இந்திக்காரங்கபிள்ளைங்க சொன்னாங்களாம் நீ கருப்பு உனக்கு கல்யாணமே ஆகாதுன்னு .. அது வீட்டுக்குவந்து ஓன்னு அழுகையாம்.. அப்பறம் அவங்கப்பா மாட்டேன்னா அவன் கையை வெட்டறேன் நீ அழாதேன்னு சமாதானம் செய்தாராம்..

வல்லிசிம்ஹன் said...

கெக்கே பிக்குணி,
இதுகளும் எல்லாக் க்ளாஸுக்கும் போறாங்க,.
பாட்டு, நீச்சல், கீபோர்ட்,
சாக்கர்னு.

அவன் சினேகிதர்களும் ப்லேடேட் வச்சீட்டு இங்க வராங்க. இதுவும் அங்க் போகிறது(குறைச்சலா)
ஏனெனில் அங்க விளையாடப் போனா கவனிக்க ஆளு கிடையாது.

இப்பத்தான் புதிசா இந்தப் பிரச்சினை வந்திருக்கு. சமாளிப்பாங்கனு நினைக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

துளசி, கண்டிப்பா ஆரம்பிச்சுடுங்க.


நம்ம பதிவு அம்மாக்களுக்குப் பிரயோஜனமா இருக்கும்.
யுனிவர்சல் ப்ராப்ளம் இல்லையா.
நீங்க தெளிவா எழுதுவீங்க.
பலனும் இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

பிள்ளைகள் பழகிக்கறது இருக்கவே இருக்கு க்ருத்திகா.


எங்க காலத்திலேயே க்ரூப்பிசம் இருக்கும். ஆனா அவ்வ்வளவு பிரச்சினையா நாங்க அதை எடுத்துக்கவில்லை.

இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்குச் சமாளிக்கும் திறமை கத்துக் கொடுக்கணும்னு தான் நினைக்கிறேன்.
நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

முத்துலட்சுமி, ந்ஆமே இவ்வளவு சிரமப் படும்போது,
அவங்க எல்லாம் ரொம்பத்தான் கஷ்டப்படுவவங்க.
இந்தப் பிள்ளைங்களோட புத்தி உடனே க்ல்யாணத்துக்கா போகும்!!
வேதனையா இருக்குப்பா. பாவம் அந்தப் பொண்ணு.

குமரன் (Kumaran) said...

இனிமே தான் எங்க பொண்ணு பள்ளிக்கூடத்துக்குப் போகணும். இந்த செப்டம்பர்ல கின்டர்கார்டன் போகிறாள். அப்புறம் தான் இதைப் பற்றி தெரியும். எங்கள் பகுதியில் நிறைய இந்தியர்கள் இருப்பதால் இந்தப் பிரச்சனை இல்லையோ என்று தோன்றுகிறது. சில நண்பர்களிடம் கேட்டிருக்கிறேன். யாருமே அவர்கள் குழந்தைகள் வந்து புல்லிகளைப் பற்றி சொன்னதாகச் சொல்லவில்லை.

இலவசக்கொத்தனார் said...

முதலில் இது இந்தியர் இந்தியர் அல்லாதோர் அப்படின்னு இருக்கும் பிரச்சனையே இல்லை. அது பல காரணிகளில் ஒன்று அவ்வளவுதான். இந்தியர்கள் இல்லாத இடங்களிலும் கூட இப்படிப்பட்ட புல்லியிங் உண்டு. நம்ம ஊரிலும் உண்டு. ஆனா நாம அதுக்கு அவ்வளவு தூரம் மதிப்பு குடுக்கறது இல்லை.

என் பையன் படிக்கும் பள்ளியில் இது மாதிரி நடக்கக்கூடாதுன்னு என்பதற்காக பல நிகழ்ச்சிகள் செய்வாங்க. அது மூலம் மற்ற கலாச்சாரங்களைப் புரிந்து கொள்ள வழி செய்வாங்க. உதாரணமாக பல நாட்டு உணவுப் பொருட்களின் கண்காட்சி. அதில் சுவைத்தும் பார்ப்பதால் மற்ற உணவுகள் பற்றிய விழிப்புணர்வு வருகிறது.

அது மட்டுமில்லாம ஒருவர் Bully செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று அழகான வழிமுறை எல்லாம் சொல்லித் தராங்க. STOP, அதாவது S = Stay Away from Bullies, T = Talk to Elders என்பது போன்ற ஒரு வழிமுறை. இதற்கு மிகுந்த முக்கியத்துவம் தருகிறார்கள்.

இந்த bullying உடற்ரீதியாக மட்டும் இல்லாமல் மனரீதியாகவும் இருக்கலாம். சமீபத்தில் 5-6 பேர் சேர்ந்து ஒரு பெண்ணை அடித்த நகர்படம் யூட்யூபில் வந்தது பற்றி படித்திருக்கலாம். இதற்காக பள்ளிகளில் கவுன்சிலர் எனச் சொல்லப்படும் ஆலோசகர்கள் உண்டு. பாதிக்கப்பட்டவர், பாதிப்பு செய்தவர் இருவருக்கும் தேவைப்பட்டால் அவரது குடும்பத்தினருக்கும் கூட ஆலோசனை தருவார்கள்.

இப்படி விலாவாரியாகச் சொல்ல எனக்கு என்ன தகுதி இருக்குன்னு கேட்டீங்கன்னா, நம்மளை இந்த வலையுலகில் ஒரு Bully என அறியத் தந்தவர்கள் உண்டு!! :))

வல்லிசிம்ஹன் said...

ANBU KUMARAN,
THANK YOU. NEW SYSTEM.
INNUM SARIYAAKA INSIALL SEYYAVILLAI. UNGAL PENNIRKKU
ORU KURAIYUM ILLAAMAL PALLI SENRU VARATTUM.
THANK YOU MA.
THIS IS ALSO LOCALISED IN THAT SCHOOL. NOW THEY ARE NOT COMPLAINING. AS SOMEONE ELSE REMARKED CHILDREN GET OVER THIS FAST. VERY RESILLIENT IN THESE WAYS.:)

வல்லிசிம்ஹன் said...

KothS thank you. who said you are a bully.
sorry to reply in english. new system, so I am taking a little more time to get used to this very new computer.

children (schools) differ from state to state maybe.
as far as they can cope with this pressure and get over to more constructive works the better for them I guess.
Anshuman shd have a wonderful fun filled school days.
wishing you all the Best and love to the new addition in the family.