About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Thursday, October 18, 2007

கொலு இந்த வருடம் , போட்டோக்கள்

கொலுன்னு சொல்லியாச்சு.
வந்தவங்க யாருன்னு சொல்லணும்.
மேலே படத்தில இருப்பவங்க எல்லாம் வந்து கௌரவிச்சாங்க.
நம்ம வீட்டுக்கு இல்லை, இன்னொருத்தர் வீட்டுல.
அப்புறம் சுண்டல் இல்லாத கொலுவானு சில பேரு மூக்கு மேல கையை வச்சதால, அதையும் சுட்டுப் போட்டுட்டோங்க.
ரொம்ப நன்றிங்க.Posted by Picasa

0

20 comments:

குமரன் (Kumaran) said...

உங்க வீட்டுக் கொலுவை இப்ப பாத்தாச்சு. ரொம்ப நன்றி அம்மா.

நாகை சிவா said...

முதல் படம் அருமையா இருக்கு... இன்னும் கொஞ்சம் க்ளோசப் ல எடுத்து இருக்கலாம் :)

துளசி கோபால் said...

பாற்கலலில் பரந்தாமனைக் கண்டேன் கண் குளிர.

சூப்பர் கொலு.

அந்தப் பச்சைப்புடவை யார்?:-))))

பூமாலைகள் நல்லா இருக்காம். கோபாலின் கமெண்ட்:-)

துளசி கோபால் said...

கடலில் என்று திருத்தி வாசிக்கணும்.

மெய்மறந்து போனதில் கை மரத்துபோச்சு(-:

கோபிநாத் said...

வல்லிம்மா...
படங்கள் நல்லாயிருக்கு ;)ஆனா பெருசு பண்ணி பார்க்க முடியல..:(

cheena (சீனா) said...

உங்கள் வீட்டுக் கொலு நன்கு அமைக்கப் பட்டிருக்கிறது. சுண்டல் படம் எடுக்க வில்லையா ??

வல்லிசிம்ஹன் said...

அன்பு குமரன், நன்றி.

இன்னும் நேர்த்தியாக வைத்து இருக்கலாம்.:)))

ambi said...

பாற்கடல் செட் அருமையோ அருமை.

நாச்சியார் படமும் நல்லா இருக்கு. :p

கோவி.கண்ணன் said...

வல்லியம்மா,

கொலு அழகாக இருக்கிறது !

சுண்டல் படையலை காணுமே.

இலவசக்கொத்தனார் said...

வந்து பாத்தவங்கள்ள நல்லதா நாலு பேர் படம் போட்டு இருக்கக்கூடாதோ.... ஹிஹி

(சுண்டல் படம்தான் கேட்க வந்தேன். அதை பல பேர் கேட்டுட்டதுனால...)

வல்லிசிம்ஹன் said...

துளசி,
பாற்கடலில் இருப்பவரைப் பாராட்டிட்டீங்க.
எல்லாம்தேஜஸ் கடையின் கைவண்ணம்.
நம்ம வீட்டு சாமிகள் எல்லாம் அங்கே போயி,
ஒரு முலாம் பூசிகிட்டு வந்தாங்க.
அதான் ஒரே பளாபளா.
நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

சிவா நல்லா இருக்கீங்களா.

காமிரா நல்லததுதான். ஃபோகஸ் செய்யும் போது தனித் தனியா எடுக்க முடியலை.
இன்னும் கண்ணன் பொம்மை படம் ஒண்ணு இருக்கு அதையும் சேர்த்துடறேன்:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் கோபினாத்.
பெரிசு செய்து போட முடியுமா பார்க்கிறேன்.
நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

சீனா,
ஆஹா இந்த வார்த்தைக்கு இல்லையோ காத்திருந்தேன்.
//அமைக்கப் பட்டு இருப்பது நன்றாக இருக்கிறது.//


அமைத்தவர் என்ற முறையில் உங்கள் புகழ்பாராட்டுகளை ஏற்றுக் கொள்ளுகிறேன்.
பக்கத்து வீட்டில ஒன்பது படிகள் கொலு வச்சு இருக்காங்க. பிரமாதம்:)))

சுண்டல் ஆகிக் கொண்டு இருக்கிறது. போட்டொ போட்டு விடுகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

துளசி, கோபாலுக்கு நன்றி சொல்லுங்கொ.

பச்சைப் புடவை புதுசா வந்தவங்க.
கோதை நாச்சியார். அதுவும் ஸ்ரிவில்லிபுத்தூர் ஸ்டைலில் வலது பக்கம் தலைப்பு போட்ட விதம் அழகா இருக்கு.
பொம்மையும், மாலைகளும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் வாசலில் வாங்கியது.:))

வல்லிசிம்ஹன் said...

அம்பி, வாங்கோ.
உங்க கொலு என்ன ஆச்சு.
நாச்சியார் அழகுக்கு என்ன. கையும், கிளியும்,மாலையுமாகப், பக்கத்தில் கண்ணன் வேறு நிற்கிறான்.
கேட்பானேன்.

வல்லிசிம்ஹன் said...

கண்ணன் வரணும்.

இடம் போதவில்லை. சின்ன வரவேற்பறை. அதில மூன்று படிகளில் வைக்க முடிந்தது பாதி பொம்மைகள் தான்.
நன்றிம்மா.
சுண்டல் இன்று இன்னும் படைக்கவில்லை.
படம் சேர்த்து விடுகிறேன்.:))

வல்லிசிம்ஹன் said...

ஓஹோ, அந்த நாலு பேரு வந்தது
தெரிந்து போச்சா:))
கொத்ஸ் ,

இதோ அதையும் சேர்த்துப் போட்டு விடுகிறேன்.
சுண்டல் கூகிள்ள சுடணும்.

கீதா சாம்பசிவம் said...

ஆஹா, இத்தனை பேர் கொலுவுக்கு வந்து பாராட்டு "ஜொள்ளி"ட்டுப் போயிருக்காங்க, எனக்கு இன்னிக்குத் தான் தெரியும், சுண்டல் சூடா இருக்கா? ஆறிப் போச்சு போலிருக்கே! நாளைக்கும் உண்டா? இத்தனை கூட்டத்தையும் எப்படிச் சமாளிச்சீங்க? :P

வல்லிசிம்ஹன் said...

வரணும் வரணும் கீதா.
புது சுண்டல் போட்டாப் போச்சு:))0
படம்தானே!!
உங்கள் கொலுவும் நல்லா நடந்ததாகக் கேள்விப்பட்டேன்:)))