About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Friday, May 18, 2007

பதிவு,பின்னூட்டங்கள்,லேபல்ஸ்,குறியீடுகள்திரு திருனு முழிக்கிறது சகஜமான ஒண்ணுதான்.
இருந்தாலும்
எப்பப் பார்த்தாலும் தானே தனக்கு அறிவாளினு பட்டம் சூட்டிப்பாங்க.பக்கைத்தில வர அப்பாவிகளை
மட்டம் தட்டித் தட்டி, அவங்களுக்கு
ஏதோ துளி, புத்தி இருந்தாலும் மழுங்க வச்சுடுவாங்க.
நான் ஒண்ணும் பெரிய மேதாவியோ,மேல்தாவியோ இல்லை.
அதுக்காக இடத்,வலது தெரியலைன்னு சொன்ன்னா எப்படி.
இதோ நேத்திக்கு வண்டியில் வந்துகொண்டு இருக்கோம்.
இங்கேயோ எல்லாத்துக்கும் டான்க்கே சொல்ல வேண்டிவரது.
பஸ்ஸை ஓட்டி வந்தவர், பின்னால் பார்த்து
நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது
என்கிறார்.
இவர் ரைட் சொல்ல
நான் டான்க்கே சொல்ல
அவர் வண்டியை ஸ்டார்ட் செய்வதற்கு பதிலா நிறுத்த
வண்டி குலுங்க
மீண்டும் டான்க்கெ,பைபை,ஆவ் விடர்சன்,மெர்சி
எல்லாம் சொல்லி ஒரு வழியா இறங்கினோம்.
போச்சு. ,வெளில வந்தா ரைட்ல இறங்கணும்னு தெரியாதா_
நான்...நான் ரைட்லதான் இறங்கினேன், மறந்துபோய்
இறங்கிற பட்டனை மறுபடி அழுத்திட்டென்..என்று நான்
சொல்ல,
வீட்டுக்கு வந்ததும் மகனிடம்
>>பையா,அம்மாவை வெளில கூப்பிட்டுக் கொண்டு போக வேண்டியது நீயே
பார்த்துக்கோ.>>
மனுஷனுக்கு நிம்மதி இல்லாமல் போச்சு.
ஏறனும்னா இறங்கறா.
இறங்கணும்னால் நிக்கிறாள்
ரொம்ப டூ மச்///
என்று பொரிய
எனக்கு சிரிப்புதான் வந்தது.
மனுஷனுக்கு நான் மறுபடி எங்கேயாவது விழுந்து வைக்கப் போறேனோ என்ற கவலை.
இப்ப எனக்கென்ன கவலை தெரியுமா.
இந்த மடிக்கணினியில்
கமா,செமிகோலன்,கேள்விக்குறி ஒண்ணும் போட முடிய வில்லை.
எல்லாம் சிரிப்பாச் சிரிக்கபோகிறதே என்றுதான்.
இதோ பின்னூட்டம் போடமுடியலை.
பின்ன நானே கமெண்ட் போடலைன்னால்
யார் போடுவாங்க.
ஸ்விஸ் மலையப்பா நீயே காப்பாத்து.

19 comments:

வல்லிசிம்ஹன் said...

பரிசோதனைப் பின்னூட்டம்)(((///)))
முதல்ல ஸ்மைலி போடுப்பா.

இலவசக்கொத்தனார் said...

horse test comment 2 :))

வல்லிசிம்ஹன் said...

பரியைச் சோதனை செய்த பாரிவள்ளலுக்கு நன்றி.

இலவசம் பின்னூட்டம் கூடவா..கேள்விக் குறிபோட்டுக் கொள்ளவும்.
பிறகு எனக்கு ரொம்ப சந்தோஷம்னு சொல்றதுக்கு ஒரு ஸ்மைலியும் போட்டுக் கொள்ளவும்..

பாலராஜன்கீதா said...

//கமா,செமிகோலன்,கேள்விக்குறி ஒண்ணும் போட முடிய வில்லை//

,

;

?

தேவை எனில் copy paste செய்துகொள்வதற்காக :-)

வல்லிசிம்ஹன் said...

பாலராஜன் கீதா ,இப்படி ஒரு வழி
இருக்கா.

செய்துடலாம்.
நன்றி.
இதுக்கும் ஒரு ஸ்மைலி போட்டுக்கொள்ளவும்.

இலவசக்கொத்தனார் said...

வல்லியம்மா,

இதுவும் கட் பேஸ்டுக்கு.

:) :-) :)) :-))

:D :-D

:( :-( :-X

இப்போதைக்கு இது போதும். :)

வல்லிசிம்ஹன் said...

கொத்ஸ்,
ஏகத்துக்கு நன்றி.:) :-) :)) :-)

சிரி சிரி சிரி சிரி சிரிப்பான்
அதைச்..சிரிக்காமல்
கேட்டாக்கூட
சரி சரி சரி எனக் கொடுப்பார்
கொத்ஸு கொடுப்பார்,.

துளசி கோபால் said...

அமெரிக்காவை வென்றது போதாதுன்னு இப்ப சுவிஸ் வெல்ல வந்திருக்கும்
வல்லி வாழ்க!! வாழ்க!!!! வளர்க(???)

துளசி கோபால் said...

அமெரிக்காவை வென்றது போதாதுன்னு இப்ப சுவிஸ் வெல்ல வந்திருக்கும்
வல்லி வாழ்க!! வாழ்க!!!! வளர்க(???)

காட்டாறு said...

வல்லியம்மா.... உங்க கவலைய தீர்க்க இலவசமே இலவசமா அள்ளித் தெளிச்சவைகளை வைத்து, தெளிங்க பார்ப்போம்... பின்னூட்டங்களைத்தான்! :-)

வல்லிசிம்ஹன் said...

துளசி,
வாழ்க~~சரிதான்.......~
வளர்க__--___ஹாஹாஹா


எண்டர் ஒண்ணூதான்பா சரியா அடிக்க வருது.
இது ஏதோ வெளியிலிருந்து செய்யப்பட்ட .........என்று நினைக்கிறேன்.ஸ்மைலி.

வல்லிசிம்ஹன் said...

காட்டாறு,வரணும்.
உங்க ஊரு மழை நின்னுச்சா.:) :-) :)) :-))

நீங்க ஏதாவது எழுதி நான் பார்க்காவிட்டால் தயவு செய்து சொல்லவும். நடுக்காட்டில் ஒரு தனி லாப்டாப்புடன் அலையும்
பாட்டியானேன்.(((((...>>>
இது சோக ஸ்மைலி.

delphine said...

அமெரிக்காவை வென்றது போதாதுன்னு இப்ப சுவிஸ் வெல்ல வந்திருக்கும்
வல்லி வாழ்க!! வாழ்க!!!!
rEPEATED...(THANK YOU THULASI.. I AM ABLE TO COPY, PASTE)

ENJOY YOUR STAY! vALLI

வல்லிசிம்ஹன் said...

வாங்க டெல்ஃபின்,

இங்கே இருக்கிற சர்ச் எல்லாம் அவ்வளவு எளிமையா நல்லா இருக்கு.
எப்போ பார்த்தாலும் பெல்ஸ் ரிங்கிங்.

பொன்ஸ்~~Poorna said...

//அமெரிக்காவை வென்றது போதாதுன்னு இப்ப சுவிஸ் வெல்ல வந்திருக்கும்
வல்லி வாழ்க!! வாழ்க!!!!//
ரிப்பீட்டே :))))

செல்வநாயகி said...

எங்கு சென்றாலும் நில்லாது தொடரும் உங்கள் தமிழார்வம் வாழ்க:))

செல்வநாயகி said...

எங்கு சென்றாலும் நில்லாது தொடரும் உங்கள் தமிழார்வம் வாழ்க:))

வல்லிசிம்ஹன் said...

பொன்ஸ் வாங்கப்பா.

வெல்லலாம் வெல்லலாம்.
கீபோர்ட் ஆண்டவர் துணை.

வல்லிசிம்ஹன் said...

செல்வநாயகி நன்றிப்பா.
அப்ப நான் சேவை செய்யறேன்னே சொல்லிட்டீங்களா.
:) :-) :)) :-))