''தண்ணீர் எடுத்துவைத்தாச்சா??
நொறுக்குத் தீனி?
இட்லி பார்சல் இதோ.
தோசை, மிளகாய்ப்பொடி தடவியாச்சா?
கை துடைக்கக் குற்றால நேரிழைத்துண்டு.
சாப்பிட்டபிறகு போட்டுக் கொள்ள
ரசிக்லால்.
குழந்தைகளுக்கு வழியில் சாப்பிட முறுக்கு, தட்டை.
கொஞ்சம் அந்த ப்ரிட்டானியா பொட்டியையும் வைங்கோ.
சின்னவனுக்கு வேணும்.
பெரியகுடம் ரெடி. சின்ன மணிவச்ச குடம் குழந்தைகளுக்கு.
மகராஜி! நன்னா இருக்கணும். இத்தனை பெரிய வண்டியையும் கொடுத்து, பெட்ரோலும் போட்டு,
ஓட்டறவரையும் அனுப்பி இருக்காளே.
எத்தனை பாசம் பெரியப்பா மேலே!
மதுரையிலிருந்து கன்யாகுமரி.
எத்தனை தூரம் இருக்கு!
அப்பா திருமங்கலம் வழியாப் போவோமா?
பஸ்ஸ்டாண்ட் வழியாகப் போவோம். ஊருக்குள்ள போக மாட்டொம்.
திரும்பி
வரும்போது ஸ்ரிவில்லிபுத்தூர் போகணும்.
சரி.
எல்லொரும் தயாரா.
இப்பவே மணி நாலேகால்.
கிளம்பினால் கோவில் திறக்கும்போது ஸ்ரீ வைகுண்டம் போய்விடலாம்
தாத்தா,பாட்டி,பெரியப்பா,பெரியம்மா
ஆண்டாள்(அடியேன்) முரளி,ரங்கன்
சுப்பி,ஜெய்யி,முகுந்து
சம்பந்தி,சித்தப்பா,சித்தி
இத்தனை பேரும் அந்தக் காலத்து சந்தனக் கலர்
ப்ளிமத் படகுக் காரில் ஏறிப் பயணமானோம்.
இது நடந்தது 1957இல் .
அதுதான் நினைவு வந்தது இப்போது
ஸ்ப்ரிங் பிரேக் எனப்படும் விடுமுறை நாட்களில்
கார்சீட்,ஸ்ட்ரோலர் சகிதம் மேடிசன்,
ஸ்ப்ரிங் க்ரீன் என்னும் இடத்துக்கு இரண்டு நாட்கள்
போய்த் திரும்பி வந்தது.
வசந்தம் வந்துவிட்டது.
12 comments:
இப்போ பெரியவங்க (தாத்தா, பாட்டி, பெரியப்பா, பெரியம்மா) மிஸ்ஸிங். அம்மா, அப்பா, குழந்தைகள். சில சமயம் நண்பர்கள், அவர்கள் குடும்பமும்... இல்லையா?
ஆமாம்,வாங்க.
காட்டறு, இப்போதும் எனக்கு
எல்லொருடனும் பயணம் செல்ல ஆசைதான்.
முடிந்தவரை திருப்பதிக்காவது குடும்பம், சுற்றம் என்று போவோம்.
நீங்க சொல்வதுபோல இப்போ குறைந்துவிட்டது. நியூக்ளியஸ் ஃபாமிலிக்கு, அவங்களே போதும்னு தோணிடுச்சு.
மேலும் எல்லோருடைய நேரமும் ஒத்து வருவதில்லை.:-(
நன்றி, முதல் வருகைக்கு.
கிளம்பியாச்சுன்னா, அந்த 'நொறுக்ஸ்' இருக்கற பையை என்கிட்டேத்
தந்துரணும்.. இல்லேன்னா.............' நான் வரமாட்டேன்போ'
மறந்துட்டேனே........ அந்த ரயில் கூஜா?
அட. கூஜா வைக்காம பயணம் ஏது.
அது ரயிலுக்கு துளசி.
இந்த டிரிப்ல குடம் தான் வேணும்.:-0
அடுத்த தடவை உங்களுக்குத் தனியா ஒரு பெர்ர்ர்ர்ர்ர்ர்ரிய பை வைத்துவிடுகிறேன்.:-00)
நல்ல அழகான நினைவுதான். எங்களுக்கு இந்த வாரம்தான் இளவேனிற் இடைவேளை!!
அம்மா, அழகுகள் ஆறு என்ற ஒரு விளையாட்டைத் தொடங்கி உங்களை அழைத்திருக்கிறேன். தயவு செய்து வாருங்களேன்.
எனக்கு ஒரு சீட் கொடுங்க ...
அந்த நொறுக்கு தீனியைக் கொஞ்சம் அப்படியே நம்ம சீட்பக்கம் அனுப்புங்க.
கொஞ்ச நேரம் அப்பறமா அந்த மிளகாய்ப் பொடி இட்லி ரெண்டுமட்டும் போதும். :-)
//அந்தக் காலத்து சந்தனக் கலர்
ப்ளிமத் படகுக் காரில் ஏறிப் பயணமானோம்.//
எனக்கு ரொம்ப பிடிக்கும் அந்த கார்! :)
Enjoy the spring.
//கல்யாணம் சென்னையிலா? //
Yes, at ashok nagar.
//அட. கூஜா வைக்காம பயணம் ஏது.
//
அதானே! உங்க சிங்கத்தின் கையில கூஜா குடுக்கலைனா தூக்கம் வராதே உங்களுக்கு! :)
ஆமாம், என்ன படங்களெல்லாம் காணோம்?. அடுத்த பதிவில் படங்கள் எதிர்பார்க்கிறேன் வல்லியம்மா.
முத்துலட்சுமி,
சென்னைக்கு வரும்போது சொல்லுங்க.
அதிரசம்,தட்டை எல்லாம் எடுத்துவைக்கிறேன்.:-0)
1957ல காதல் கூட வல்லியே.
எப்படி கூஜா தூக்கச் சொல்லறது?
படங்கள் சேர்த்து வச்சு இருக்கேன்.
மௌலி. அடுத்த பதிவில போடறேன்.
ரொம்ப அபூர்வமான இடத்துக்குப் போனோம்.
Post a Comment