Blog Archive

Friday, March 23, 2007

கவிதை(யா?) அன்புடன் குழுமத்திற்கு


எதிர்காலம்..

கண்ணளவே வானம் என்றெண்ணித்
தலை குனிந்து போனதால்
அழகு கொண்ட மரமும் செடியும்
நான் காணவில்லை


காதளவே சொற்கள் என்றே எண்ணிக்
கருத்தினிலே போடவில்லை.
அரியனவெல்லாம் தெரியவில்லை.
அறிந்து கொள்ளவும் வழியில்லை
நெடி அடிக்கும் என்று மூக்கை
மூடியதால்
பூக்கள் என்னை பார்த்து சிரிக்கவில்லை.
உணவு தன்னை மதிக்காததால்
மணக்கும் உணர்வும் மறந்து போனது.

இப்போதோ பேரன் எனக்குச் சொந்தம்
நான் பேசுகிறேன்
அவன் கேட்கிறான்
இரண்டு வருடம் போய்வந்தால்
இவனும் பதில் எனக்குச் சொல்வான்.

இனியே கண்கள் திறக்கும்
காதுகள் கேட்கும்
வாய் நிறையக் கொஞ்சும்
விடுதலை கொடுத்தது யார்?

16 comments:

வல்லிசிம்ஹன் said...

சேதுக்கரசி உங்க மெயில் சொன்னபடி ஒரு (உரைநடை)க் கவிதை பதிவிட்டு இருக்கிறேன்.
எனக்கும் கவிதைக்கும் பரிச்சயம் படித்த அளவில் மட்டுமே.

பதினறு வயதுக் கவிதைகளில் நிலம்,பூ,தென்றல் எல்லாம்
இருக்கும். இப்போது ரசிக்க முடியாது(என்னால்)
அதனால் இந்தப் பாடல் தோன்றியவுடன் எழுதினேன்.
பிடிக்கும் என்றும் நம்புகிறேன்.

Anonymous said...

வல்லி அம்மா, ரொம்ப அருமையா இருக்கு கவிதை. பேரனோட உலகம் காண கிளம்பியாச்சா? எனக்கும் என் (இன்னும் பிறக்காத!) பெண்ணோட உலகம் புரிந்து கொள்ளவேண்டும் என்று ஆழ்ந்த ஆசை உண்டு. அண்ணன் பிள்ளைங்க வழியா தெரிஞ்சிக்கிட்டேன், குழந்தை வழியா பார்க்கும் உலகம்!

ரொம்ப பிடிச்சது உங்கள் கவிதையின் கருத்து!

வல்லிசிம்ஹன் said...

மதுரா, பெண் வழியப் புரியப் போகும் உலகம் இன்னும் இனிமை.

அவள் மிரட்டும்போது 'மதுரா எஃபெக்ட்' நிச்சயம் இன்னும் அழகோடு மிளிரும்.
நன்றிப்பா.

அருமையா வந்து சொன்னதற்கு.

சேதுக்கரசி said...

வல்லிம்மா.. இது தேன்கூடு போட்டி மாதிரி பதிவிலேயே கவிதையை வெளியிடும் போட்டியல்ல! போட்டி விதிமுறைகளை நீங்க பார்த்திருக்கமாட்டீங்கன்னு நினைக்கிறேன் :-( இதோ சுட்டிகள் மீண்டும்:

அன்புடன் கவிதைப் போட்டி
ப்ரியன் வலைப்பதிவில் தகவல்கள்

சேதுக்கரசி said...

கவிதை நல்லாருக்கு... போட்டி விதிமுறைகளைத் தான் பார்க்காம விட்டுட்டீங்கன்னு நினைக்கிறேன்.

Geetha Sambasivam said...

mmmmபதிவிலேயே கவிதையைப் போட்டதாலே போட்டியிலே கலந்துக்க முடியாதே? ம்ம்ம், பரவாயில்லை, வேறே எழுதிக் கொடுங்க. கவிதை நல்லாத் தான் இருந்தது. தலைப்பு என்னவோ தெரியலை. போய்ப் பார்க்கிறேன். உங்க இ-மெயில் ஐ.டி. மாறிட்டதுன்னு புரிந்து கொண்டேன். நன்றி. தெரியாததால் பழைய ஐ.டிக்கு அனுப்பினேன். :)

வல்லிசிம்ஹன் said...

சேதுக்கரசி,
பிரியனின் பக்கங்கள் போய் சரியாகப் படித்தேன்.
பரிசெல்லாம் போட்டு இருக்கே.
அந்த அளவுக்கு எனக்கும் கவிதைக்கும் பழக்கம் இல்லை:-)

ரொம்ப நன்றிப்பா சரியான நேரத்தில சொன்னீங்க.

வல்லிசிம்ஹன் said...

கீதா, சும்மா கவிதை மாதிரி இருக்கும். அவ்வளவுதான்.:-0)

யாமறிந்த......
இப்படி ஒரு ஆயிரம் வருஷத்துக்கு அப்புறம் யாராவது கண்டுபிடிச்சாங்கனு வச்சுக் கோங்களேன்.
ஆஹா இந்த வல்லி சும்மா இல்லியேனு சொல்வாங்க. அதுக்குத்தான் பாட்டெல்லாம்.

ambi said...

//கண்ணளவே வானம் என்றெண்ணித்
தலை குனிந்து போனதால்
//
அருமையான ஆரம்பம். ஆல்ரவுண்டர் வல்லி மேடம் வாழ்க. :)

//உங்க இ-மெயில் ஐ.டி. மாறிட்டதுன்னு புரிந்து கொண்டேன். நன்றி. தெரியாததால் பழைய ஐ.டிக்கு அனுப்பினேன்//

@geetha madam, உங்க தொல்லை பொறுக்க முடியாம தான் ஐடி மாத்திடாங்களாம். :p

மெளலி (மதுரையம்பதி) said...

நல்லா இருக்கு ஆமாம், போட்டிக்கு இன்னும் ஒண்ணு எழுதுங்க....

Geetha Sambasivam said...

ஆப்பு அம்பி, நான் அப்படி எல்லாம் தொந்திரவு கொடுக்க மாட்டேன்னு வல்லிக்கு நல்லாத் தெரியும், உங்களை விட! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!!!!!!!!!

வல்லிசிம்ஹன் said...

அம்பி, தங்கமணி கண்ணுக்கு நீங்கதான் வானம்:-0)

நமக்கு இவ்வளவுதான் என்று நினைக்கிறதனாலே எத்தனையொ
விட்டு விடுகிறோம் இல்லையா. அதை எழுதணும்னு தோன்றியது.தான்க்ஸ்பா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் மௌலி'
''இதுவரை கலந்துக்கலை.
இனிமேயும் கலந்துக்கறதில ஆக்ஷேபணை இல்லை.
நாம கலந்துகிட்டா ஏகப்பட்ட எழுத்தாளர்கள் ஏமாந்துருவாங்களேனு யோசனையா இருக்கு'':-)
இது தங்கவேலு வசனம். கல்யாணப் பரிசு படத்தில. அவர் ஒரு எழுத்தாளராக வேடம் இடும்போது பேசும் வர்த்தைகள்.

வல்லிசிம்ஹன் said...

கீதா, எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்.
அம்பி கல்யாணத்துக்கு அப்புறம் எப்படி இருப்பார்னு 'சுகமா' ஒரு கற்பனை எழுதுங்கொ.
படிக்க நான் இருக்கேன்.:-)

VSK said...

அருமையான கருத்தை அழகான சொற்களால் பிடித்து அளவோடு இட்டிருக்கிறீர்கள் வல்லியம்மா!

அவசரப்பட்டு பதிவிலும் இட்டு, போட்டியில் இக்கவிதை கலந்துகொள்ளும் வாய்ப்பினை இழந்தாலும்,

எங்களுக்கெல்லாம் ஒரு நல்ல கவிதை படிக்க வாய்ப்பு கிடைத்தமைக்கு நன்றி!

அதனாலென்ன? ஆயிரம் வருஷம் கழிச்சு வர்றவங்க ரெண்டாப் பார்த்திட்டு போகட்டுமே!
:)0

வல்லிசிம்ஹன் said...

வரணும் எஸ்.கே.

தண்டனை கொடுத்துவிட்டு
விசாரிப்பார்களாம்.
அதே போல கவிதையை (?)எழுதிவிட்டு
அறிவிப்பைப் படித்தால்!
எல்லாவற்றிற்கும் ஒரு வார்த்தை வலிமை வேண்டுமே.