About Me

My photo

Just one more correspondent.  9/4/1948   பிறந்தநாள்

Thursday, March 22, 2007

சித்திர ராமன்...13.ராவணன் மிரட்டல், ராமநாம மகிமைஅனுமன் அன்னை ஜானகியைப் பார்த்த களிப்பிலிருந்து விடுபட்டு
சுற்றுப்புறத்தில் கவனம் செலுத்தினான்.
காணக்கிடைக்காத பல உயர்ந்த மரங்கள்,பழங்கள், பூக்களைச் சொரிந்த வண்ணம் கானப்பட்டன.
கிஷ்கிந்தையில் கூட இத்தனை செழிப்பை அவன் பர்த்திருக்கவில்லை.

வனங்களை நம்பி வாழும் வானரங்களுக்கு இந்த வனம் எத்தனை களிப்பு அளிக்கும்
என்றும் நினைத்துக் கொண்டான்.
சீதையைச் சுற்றிக் காவல் இருக்கும் அரக்கியரின் கோர ஸ்வரூபத்தை
விளக்கி முடியாது. அவளை அச்சுறுத்துவதற்காகவே
ராவணன் அவ்வாறு அமைத்து இருந்தானோ என்னவோ.
அவர்கள் ஒருவரை ஒருவர் ஏசிக் கொள்வதும், சீதையை மிரட்டுவதும்,
கள் முதலிய மதி மயக்கும் பானங்களை அருந்தி
உணவுப் பதார்த்தங்களைப் பறித்துக் கொட்டி ரணகளப் படுத்திக் கொண்டிருந்தனர்.
இவை எதுவுமே சீதையைப் பாதித்தாகத் தெரியவில்லை.

அந்தியில் தலையைக் குனிந்த தாமரை மொட்டு சூரியன் வரும் காலைக்காகக் காத்துத்
தவம் புரிவது போல ஏகாக்க்கிரகச் சிந்தனையில் ராமனைத் துதித்த வண்ணம் இருந்தாள்.
கண்ணீர் வழிந்து வழிந்து அவளது முகம் அந்தத் தடங்களோடு காய்ந்து போயிருந்தது.
வாரப்படாத அழகிய நீண்ட கூந்தல் சடை பிடித்துத்

திரிதிரியாக வழிந்து கொண்டிருந்தது.
என்ன செய்வது எது செய்வது என்று அறியாமல் கலங்கிய முகம்,
பிறர் யாரும் பார்க்கமுடியமல் ஒடுங்கிக் கொண்ட அங்கங்கள்
இவைகளோடு அவள் அந்தத்
மரத்தடியில் உட்கார்ந்து ஒரு தபசியாகக் காட்சி கொடுப்பது அனுமன் நெஞ்சையே சோகத்தில் மூழ்கடித்தது.
முதன்முதலில் ராமனின் சோகத்தைக் கண்ட அனுமன், எதற்காக ஒரு பெண்ணினிடம் இத்தனை பாசம்
வைத்து உருகுகிறாரெ. என்று ஏளனமாகத் தோன்றியது அவ்னுக்கு.
இப்போது சீதாதேவியைப் பார்த்ததும், இந்த உத்தமியைப் பிரிந்து
இன்னும் ராமன் எப்படி உயிரோடு இருக்கிறான்.
என்று அதிசயப் படுகிறான்.
ராமா நீயா ஒரு பிரபு?
இவளைப் பறிகொடுத்தாயே.
பெண்களுக்குள்ளே மக உத்தமமான ரத்தினம் அல்லவா இவள்.
இவளைப் பிரிந்தும் உன் உயிர் பிழைத்து இருப்பது என்றால் உனக்கு இதயமே இல்லை என்றுதான் நான் சொல்லுவேன் என்று மீண்டும் தன் சிந்தனையைத் தொடரும் முன்னர் உதய கால பறை,பேரி,இசைகளோடு ராவணன்
இருனூறு அந்தப் புரப் பெண்களோடு வருகிறான்.
தூக்கம் கலையவில்லை.
இரவு நித்திரையிலும் மைதிலியின் நினைவு.
கலங்கிச் சிவந்த கண்கள்.
நழுவும் உத்தரீயம், பசியில்
வெகுண்ட சிங்கம் இரையைத் தேடி விரைந்து வருவதுபோல் பூமி அதிர வருகிறான்.
அவன் வருகையை உணர்ந்த சீதை இன்னும் தனக்குள்ளேயே ஒடுங்குகிறாள்.
அனுமனும் தான் ஏறியுள்ள கிளையில் இன்னும் கெட்டியாக ஒட்டிக்
கொள்ளுகிறான்.
அதிர்ந்து வரும் ராவணன், ஓய்ந்த நிலையில் உள்ள சீதையிடம்
பேசத்தகாத வார்த்தைகளால் வருத்துகிறான்.
தன் அரண்மனைக்கு வந்து பட்டமகிஷியாக இருக்கும்படி
வற்புறுத்துகிறான்.
அவன் பேசும் வரை மௌனம் காத்த சீதை
குனிந்த தலை நிமிராமலே, ஒரு புல்லைப் பறித்துத் தன் முன்னே போடுகிறாள்.

எதற்கககப் புல்லை அங்கே இடுகிறாள் என்பதற்கு நிறைய வியாக்கினங்கள் கொடுக்கப் படுகின்றன.

முதல் காரணம்

அந்தப்புரப் பெண்களுக்கும் அன்னியர்களுக்கும் இடையே ஒரு திரை வேண்டும் அதற்காக.

அடுத்தது அவள் ராவணனைப் புல்லாக மதித்தாள்.

மூன்றவது ராவணன் தன்னைக் கொண்டுபோய்

ராமரிடம் சேர்க்காவிடில் அவன் புல்லென இவனை அழித்துவிடுவான் என்று பகிரங்கமாக அறிவிக்கிறாள்.


சீதையின் உரையைக் கேட்ட ரவணன் ம்ஏலும் வெறிகொண்டு, அங்கிருக்கும் ராக்ஷசிகளுக்குச்

சீதையைத் தன் விருப்பத்துக்கு

இணங்க வைக்குமாறு ஆணையிட்டுச்

சென்றுவிடுகிறான்.


இன்னும் முப்பது நாள் தான் கெடு என்று அவன் சொன்ன சொல்லைக் கேட்டுச் சீதையின் உடல் நடுங்குகிறது.

துக்கம் அவளை வதைக்க மெல்ல அந்த இடத்தைவிட்டு எழுகிறாள்.


ராமனுக்குத் தான் இருக்கும் இடம் தெரியாது. அவன் எப்போது வருவான் என்றும் துளி அறிகுறி இல்லை. ஒன்பது மாதங்கள் ராமனைப் பிரிந்தது

மிகப் பெரிய தண்டனை.

அதற்கும் மேல் இந்தக் கொடியவனின் மிரட்டல்.

'ராமா, என்னை மறந்தாயோ. இவள் போனால் போகட்டும்,

நாம் அயொத்திக்குப் போகலாம் என்று திரும்பி விட்டாயொ.

''ராமா ,நான் உன் மனைவி என்று இல்லாவிட்டால் கூட பரவயில்லை. உன் ராஜ்ஜியத்தில் ஒரு பிரஜை நான் இல்லையா.இந்தத் தீனக்குரலைக் கேட்க மாட்டாயா.

ஐயோ இங்கே எனக்கு விஷம் கொடுக்கக் கூட ஆள் இல்லையே.


அயோத்தியில் உள்ளவர்கள் என் துன்பம் அறியமாட்டார்கள்.

தெரிந்தால் சும்மா இருப்பார்களா.


மாமியரே என்னைப் பற்றி நீங்கள் அறியவில்லையே.

உங்கள் செல்ல மருமகள் இங்கே தனித்து விடப்பட்டதை அறிவீர்களோ.

நான்கு பரக்கிரமசாலிகளைப் பெற்ற என் மாமனார் இப்போது இருந்தால் ஆயிரம் ஆயிரம் ப்ஓர்வீரர்காளோடு வந்து இந்த தைலங்கையைத் துவம்சம் செய்திருப்பாரே.

இந்த அரக்கன் ஒருவரும் இல்லாத சமயத்தில் புலியின் உணவைத் திருடின நரியைப் போல் அபஹரணம் செய்தானே''

எத்தனன நாள் இந்தத் துன்பத்தைப் பொறுப்பேன்//


என்று குரல் எழும்பாமல் அழுகிறாள்.

அழுவதற்குக் கூட தெம்பில்லை அவளின் இளைத்த

தேகத்தில்.

முடிவில் சோகம் மேலிட அவள் மேலும் புலம்புகையில் திரிஜடை

என்பாள், விபீஷணின் புதல்வி,

அரக்கிகளை அடக்குகிறாள்.

தான் கண்ட அதிசய சொப்பனத்தை எடுத்துச் சொல்லி, அதில் சீதா ராமனின் வெற்றி விளங்குவதையும், ராவணின் வீழ்ச்சி நிச்சயமே என்று சூளுரைக்கிறாள்.


அவள் சொப்பனத்திலாவது ராமனைப் பார்த்தாளே. எனக்குத் தூக்கம் வந்தால் அல்லவா கனவு காண்பதற்கு!!

என்று இன்னும் துக்கம் மேலிடுகிறது
திரீஜடையின் வார்த்தைகளைக்கேட்டு பயந்த அரக்கிகளும் தங்கள் கோரக் குரலை நிறுத்தி உறங்குகிறார்கள்.


தனிமையில் விடப் பட்ட சீதை உயிர் விடுவதே நலம் என்ற ம்உடிவுக்க்கு வந்து சடை பிடித்துப் போன தன் நீண்ட கூந்தலை மரக்கிளையில் போட்டுச் சுரருக்குப் போட முயலுகையில்

அவளுக்கு நற்சகுனங்கள் தென்படுகின்றன.

இடது கண் துடிக்கிறது. மனதில் ஏதோ ஒரு மெல்லிய பரவசம் ஏற்படுகிறது.


இதே போலச் சகுனங்கள் முன்பேயும் நல்ல வேளைக்கு அறிகுறி என்று அறிந்து இருக்கிறாள்.

எனவே கொஞ்சம் நிதானிக்கிறாள்.இத்தனை நேரம் கீழெ நடந்த அத்தனையையும்

கவனித்த அனுமனுக்குச் சொல்லொண்ணாத் துயரம்.

அன்னைக்கு இந்தத் துன்பம் அடுக்குமா.!!

லோக மாதாவுக்கா இந்த கஷ்டம்?

இப்படி அவன் வருந்துகையில், சீதை அவன் இருக்கும் மரத்தடியில் தன் உயிரைப் போக்கும் எண்ணத்துடன் வருகிறாள்.

பதை பதைத்த அனுமன் ,,மனதில் ஓடூம் ராமநாமத்தை ஜபிக்க ஆரம்பிக்கிறான்.

''அயோத்தியில் பூலோக, தேவலோகம் மெச்சும்

தசரத மகராஜா இருந்தார். புத்ரகாமேஷ்டியாகம் செய்து ராமன்,பரதன்,லக்ஷ்மண,சத்ருக்னர்கள் பிறந்தார்கள்.

அவர்கள் சர்வ வல்லமை உள்ள வாலிபர்கள்.

திருமண வயதில் ராமன், மிதிலை சென்று சிவதனுசை முறித்துத் ஜனக மன்னன் மகள் ஜானகியை மணந்தான்.

அவள் சகோதரிகள் மற்ற மூன்று சகோதரரும்

மணக்க இல்லறம் இனிதே பன்னிரண்டு ஆண்டு நடந்தது.

அப்போது தசரத ச்சக்கரவர்த்திக்கு தன் மூத்த புதல்வன் ரகுநந்தனனுக்கு மணிமுடி சூட்ட ஆவல் வரவே,

சபை கூட்டி ஆலோசனை செய்து முடிசூட்டு விழாவுக்கு நாளும் குறித்தான்.

அவனது இரண்டாவது மனைவியின் நிர்பந்தத்தின்

பேரில் ராமனுக்கு வனவாசம் வாய்த்தது.

தம்பியும் மனைவியும் நிழல் ப்ஒல் தொடர ராமனும் இனிய முகத்துடான் வனம் வந்தன்.

அங்கும் துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனம்

செய்யும் வேளையில் இந்த இலங்கை மன்னன் தன் தங்கை சூர்ப்பனகையின் பேச்சால் மதிகெட்ட்டு என் தலைவன் ஜானகிராமனின் துணையான தேவியை அபகரணம் செய்தான்.


சோகத்திலிருந்த ராமனைத் தேற்றி இலக்குவன் காட்டு வழியில் தடயமறிந்து ந்அடக்கும் போது எங்கல் அரசர் சுக்ரீவனின் நட்பு கிடைத்தது.

சுக்ரீவனுக்காக அவன் அண்ணன் வாலியை

நற்கதி பெறச்செய்வதாக அவனிடம் அக்னிசக்கியம் செய்து கொண்ட ராகவன்,தன் வாக்கையும் நிறைவேற்றிச்
சுக்ரீவ பட்டாபிஷேகம் நடந்தது.
தான் செய்த சத்தியத்தின் படி சுக்ரீவனும் தன்
வனர சைன்யத்தை எல்லாத் திக்குகளிலும்
அனுப்பி இருக்கிறார்.
அவனது அரசவையில் நானும் ஒரு சேவகன்.
எங்கள் படை தெற்கு நோக்கி வந்தது.
மகேந்திர மலைஅடிவாரத்திலிருந்து புறப்பட்ட அடியேன்
இப்போது தேவி தரிசனம் கிடைக்கப்பெற்றேன்.
கீழே நின்றிருக்கும் பெண்மணிதான் சீதாதேவி, என் தலைவன் நாயகன் ஸ்ரீராமனின் பத்தினி என்று யூகிக்கிறேன்.
அடியேனை அங்கீகரித்து அனுக்கிரகம் செய்ய வேண்டும்.'
'' உயிரை மாய்த்துக் கொள்ள முனையும் நேரம் என் நாதன் நாமம் சொல்லி மீட்டது யாரோ?
நீ யாராயிருந்தாலும் சரி.
ஸ்ரீராம நாமம் சொல்பவன் வேறாக இருக்க முடியாது''
என்றவாறு மரத்தைப் பார்த்துத் தன் பார்வையை மேலே திருப்பினாள்.
அங்கே அவள் கண்டது நிலவொளியில் மின்னும்
செம்பொன் நிறம் கொண்ட ஒரு சிறிய வானரத்தை.
உடனே கண்களைத்தாழ்த்தினாளாம் சீதை.
'
இப்போது நேரிலேயே பார்க்கிறேனே.
குரங்கு கனவில் வந்தால் கூடத் தவறு என்பார்களெ''
என்று அஞ்சுகிறாள்.
மீண்டும் மனதை உறுதிப் படுத்திக் கொண்டு
அனுமனை நோக்கிக் கீழே வருமாறு சொல்கிறாள்.
அனுமனும் மெல்லக் கீழே இறங்கித்
தாயை நோக்கும் சேய் போல அன்னையை வணங்கிக் குவிந்த கரங்களோடு,
நிலம் பார்த்து நிற்கிறான்.
தாயாரின் ம்அனத்தில் கருணை பொங்குகிறது.
வாழி நீ. உன் பெயர் என்ன என்று கேட்கிறாள்.
அனுமனும் சற்று முன் வரும்போது அவள்
பயப்படுவதைப் பார்த்து மீண்டும்
வணக்கத்துடன் நிற்கிறான்.
'அம்மா, என் பெயர் அனுமன் வாயு குமாரன்.
உங்கள் நலம் நாடியே வந்திருக்கும்,
ஸ்ரீராம தூதன்''
என்கிறான்.
ராம லக்ஷ்மண ஜானகி// ஜய் போலோ ஹனுமானுகி//