About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Sunday, March 18, 2007

சித்திர ராமன்.....12...சுந்தரகாண்டம்...3 லங்காப் பிரவேசம்ஸ்ரீராம நாமம் சுவாசித்த வண்ணம், அனுமன் இலங்கையை லம்ப மலைச் சிகரத்திலிருந்து பார்க்கிறான்.
இரவு, முழுநிலா நிலா வெளிச்சத்தில்
அலங்காரம் நிறைந்த மணப் பெண் போல இருக்கிறதாம் இந்த நகர்.
இத்தனை அழகான நகரைக் கட்டி ஆளுபவன் பலசாலி.
ஆனால் புத்தி இல்லாதவன்.
இருந்தால் சீதை என்னும் கற்புக்கரசியை மனசாலே
துன்புறுத்தி இருப்பானா?
இவ்வாறு நினைத்து மதில் சூழ் இலங்கையின் வாயிலை
அடைகிறான்.
இலங்கையின் காவல் தெய்வம் லங்கிணி
வருகிறாள்.உருவத்தில் சிறியவனாக இருந்த அனுமனைக் கண்டு ஆத்திரம் அடைகிறாள்.
'ஏ,குரங்கே உனக்கு ராவணனின் பட்டணத்தில் என்ன வேலை.'
என்று துரத்துகிறாள்.
அனுமன் பவ்யமாகப் பதில் சொல்லியும் ஏற்காமல்
அவனைத் தாக்க வருகிறாள்.
எஜமான விஸ்வாசம்.
அனுமன் அவள் பெண்ணாயிற்றே என்று இரக்கப் பட்டுத்,தனது இடது முஷ்டியால் சற்றே இடிக்கிறான்.
அந்த வலி கூடத் தாங்கமுடியாத லங்கிணி வந்திருப்பது சாதாரணக் குரங்கு அல்ல ,
பிரம்மா இலங்கை நிர்மாணத்தின் போது சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வருகிறது.
''ஒருவானரம் உன் முன் தோன்றி உன்னனத் தாக்கும்போது இலங்கைக்கு அழிவு''என்று சொன்னதைப் புரிந்துகொண்டு
அவனுக்கு வழிவிட்டுச் செல்கிறாள்.
மறுபடியும் ராமநாமத்தைச் சொல்லிய வண்ணம்,
இலங்கைக்குள் புகுகிறான் அனுமன்.
எங்கும் ஆனந்தமும் அழகும் கூத்தாடுகிறது
இலங்கையில். ஆடவர் பெண்டிர் குழந்தைகள் அனைவரும் அவர் அவர்களுக்கு உண்டான கேளிக்கைகளில்
மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
நடனம்,இசை, நாடகம் என்று பல வேறு விதமான காட்சிகள்.வீரர்களும் மக்களும் கலந்து நடமாடிக் க்ஒண்டு இருக்கிறார்கள்.
மொத்தத்தில்
சுபிக்ஷத்திற்குக் குறைவே இல்லை.
எல்லாவற்றையும் ,தன் சின்ன வடிவில் இருந்துகொண்டே ப்ஆர்த்தவண்ணம் ராவணின் அரண்மனையை அடைகிறான்
அனுமம்.
பிரமிக்க வைக்கும் ம்அதில் சுவர்கள்.
ஒளி பொழியும் சாரளங்கள். மனததக் கவரும் உணவு மனம். மது,மாது என்று ஆரவாரமாக இருக்கிறது.
அங்கே யாருமெ மன விருப்பம் இல்லாமல் தனித்திருப்பதாகத் தெரியவில்லை.
எல்லாருமே ராவணனிடத்தில் பரிவு,விச்வாசம் உள்ளவர்களாக
செல்வச் செழிப்புடன் அதீத சந்தோஷத்தோடு காணப் படுகிறார்கள்.
மெல்ல ராவணின் அந்தப் புரம் நுழையும் அனுமனின் கண்களில் படுவது,
அங்கு துயிலிம் பெண்டிர் கூட்டம்தான்.
அவனோ நைஷ்டிகப் பிரம்மச்சாரி.
இப்படிப் பெண்களைப் பார்ப்பது அவனது
விரதத்துக்குப் பங்கமோ எண்று ஒரு கணம் வருந்துகிறான்.
பிறகு தன்னைத் தானே சமாதானப் படுத்திக்கொண்டு ராமனை நினைத்த ஓரோரு இடமாகக் கடந்தவன் கண்களில் மிக அற்புத அழகோடு தூங்கும் ஒரு சௌந்தர்யம் மிகுந்த பெண்மணி
உறக்கத்தில் ஆழ்ந்து இருப்பதைப் பார்த்து ,
அவள்தான் சீதை என்று உற்சாகக் களிப்பில் ஆடுகிறான்.
சீதையின் சோகமும், பதிவிரத மேன்மையும் அவனைச் சட்டென்று நிலைக்குக் கொண்டு வருகின்றன.
''என்ன தவறு செய்ய இருந்தேன்.!!
என் அன்னை ஜானகி மாதா,அண்ணலை விட்டுப் பிரிந்திருக்கையில் இப்படி ஒரு சுகமான
படுக்கையில் அமைதியாகத் தூங்குவாளா?''
தவறிழைக்க இருந்தேனே' என்று பக்கத்தில் தென்படுகிறான் ராவணேஸ்வரன்.!
பத்துத்தலைகள்.
கம்பீரமான பெரிய உருவம். விசாலமான கட்டிலில் நித்திரை கொள்கிறான்.ஏவல் பெண்களும்,
விரும்பி ம்அணந்த உயர் லட்சணப் பத்மினி வகைப் பெண்கலும் அவனருகில் நித்திரை செய்கிறார்கள். அவர்கள் யாரும் கட்டயப் படுத்தி அங்கே கொண்டுவரப்பட்ட மாதிரி தெரியவில்லை.
இத்தனை பெயர்கள் இருக்க சீதையை
விரும்பினது இவனது அழிவுகாலம் ட்ஹான் எண்று முடிவுக் கட்டி,
வெளியே வருகிறான் மாருதி.
சோகம் அவனைச் சூழ்கிறது.
வீராப்புப் பேசி வந்தோமே. வந்து வெகுநேரமாகியும்
ஜானகியைக் காணக் கொடுத்து வைக்கவில்லையேஎ.
ஒருவேளை என் பயணம் வீணா.'
என்று கொஞ்ச நேரம் மனம் வருந்திச் சிந்திக்கிறான்.


ராம நாமாவே சமுத்திரத்தைத் தாண்டவைத்தது.சீதையிம் மகிமையே
நமக்குத் துணைவரும் என்ற அபரிமிதமான நம்பிக்கை மீண்டும் மனதில் உறுதி அளிக்க
எழுந்தான் அனுமன்.
முதலில் பார்வையிட்ட புஷ்பக விமானம் அருகே மீண்டும் சென்று தேடி,
தான் தேடாமல் விட்ட இடங்கள் ஏதாவது இருக்கிறதா
என்று பார்வையிட ஒரு உயர்ந்த மரத்தின் உச்சிக் கிளைக்குச் சென்று
பார்த்தான்.
அதோ தெரிகிறதே இன்னுமொரு வனம். என்ன வாசம்.என்ன அழகு. உயரம் கூடிய மலர்கள் நிறைந்த
மரங்கள். கொடிகள் ,நதிகள்.
பளிங்கு மண்டபங்கள். அரசர்கள் உலவுவதற்காகக்
கட்டப்பட்ட நந்தவனமோ.
அது ஏன் அரண்மனையை விட்டுத் தள்ளி இருக்கிறது.
ஒரு வேளை அன்னைஜானகி அங்கே இருப்பாளொ.?
இந்த எண்ணம் மனதில் தோன்றிய வேகத்தில் அனுமன்
னிடம் புது உற்சாகம்
பிறந்தது.
எப்போதுமே ஒரு நல்ல காரியத்தை எடுக்கும்போது தடைகள் வருவது சகஜமே.
அப்போதும் நம்பிக்கையைக் கைவிடாமல் மீண்டும் தொடர்ந்து முயற்சித்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு
எடுத்துக்காட்டு அனுமனின் உயரிய பயணம்.
மீண்டும் மீண்டும் அவனுக்குத் தடைகள்.
மன உறுதி படைத்தவன் அனுமன். இல்லாவிட்டால் சூரியனுக்கு முன்பு
பின்னோக்கி நகர்ந்தவாறே
பறந்துகொண்டு,அவன் சொல்லச்சொல்ல
ஒன்பது வகை இலக்கணங்கள்,வேதங்கள்
எல்லாவற்றையும் கற்றிருக்க முடியுமா.
அஞ்சாநெஞ்சன் அஞ்சனை மைந்தன்.
வாழ்வின் இலக்கு எது என்று தேடியவனின் கைகளில் கிடைத்தது ஸ்ரீராமபதம்.
அதைத் திண்ணமாகப் பிடித்தவன் விடாமல் முன்னேறுகிறான்.
மனம்,வாக்கு,கார்யம் அனைத்திலும் நேர்மை.
இயற்கையாகவே சொல்லின் செல்வன்.
நுணுக்க புத்திக் கூர்மை,
செயல் திறமை,
அவ்வளவு திறனையும் ராமனுக்கு அர்ப்பணித்ததால்
சகல வித மகிமையோடு மிளிர்கிறான்.
தேகம் முழுவதும் ராமநாம மகிமை பரவ
அசோகவனத்தை நோக்கிப் பாய்கிறான்.
தேடி வந்தத் தாயைக் காணப் போகிறோம் என்கிற ஆனந்தத்தில்
அவன் தாவும்
வழியில் உள்ள பெரிய பெரிய கிளகள் எல்லாம் புயல் காற்றில் அகப்பட்ட
சிறுகொடிகள் போல ஆடுகின்றன.
மலர்கள் உதிர்ந்து அனுமன் வருகிறான். சீதைக்கு நல்ல காலம் பிறந்து விட்டது
நாமெல்லாம் புண்ணியம் செய்தவர்கள் என்ற சேதியைச் சொல்லியபடி மரத்தின்
அடியை நோக்கி மிதக்கின்றன.
முழுநிலா கூட இனிமேல் என்ன நடக்கும் என்று ஆவலுடன்
மேகத்துக்குள் போகாமல் பார்க்கிறதாம்!!
சிம்சுபா மரங்கள் நிறைந்த அசோகவனத்தை அடைகிறான் அனுமன்.
அங்கு ஒரு பளிங்கினால் ஆன மணி மண்டபம்.
அருகே ஒடும் சிறிய ஆறு ஒன்று.
அதை ஒட்டியபடி இன்னுமொரு சிம்சுபா மரம்.
அதன் கிளைகளில் தாவிய அனுமன் கீழே நோக்குகிறன்.
ஒரு உயரமான திண்ணை.
அதைச் சுற்றி அரக்கியர் கூட்டம்.
கொடூரமான தோற்றம்.
அவர்களுக்கு நடுவில் புலிகளுக்கு இடையில் அகப்பட்ட மானைப் போல தாயார் சீதா தேவி.
அவள் சீதையாகத்தான் இருக்க வேண்டும்.
ராமனிடம் கண்ட அதே சோகம், பொலிவில்லாத ஆனால்
மிக சாத்வீகப் பெருமை ஒளிரும் தேஜஸ் பொருந்திய முகம்.
சோர்வுற்று இருந்தாலும் வீரவிலாசம்,திண்மை தெரிகிறது.
சௌந்தரியமோ அளவிடமுடியாமல் அடக்கமாகத் தோன்றுகிறது.
அன்னையே,சீதா உன்னைக் கண்டேனா.
இது நீயாகத்தான் இருக்க வேண்டும்.
அனுமன் கூத்தாடுகிறான்.

அம்மா,உன் மேனியில் நாங்கள் (அன்று)கண்ட
ஆபரணங்கள் இல்லை. ராமன் இருக்கும் என்று சொன்ன
வளைகளும் இதோ இருந்த மரத்தின் கிளையில் தொங்குகிறது.
கணவனைப் பிரிந்த சோகமே
அவளைச் சேற்றில் மறைந்தும்
மறையாமலும் இருக்கும் தாமரை மலரின்மேல்
சேறு போல
போர்த்தி உள்ளது.
இவளெதான் சீதை!
என் தலைவனின் தலைவி என்று தெளிந்து, யாருக்கும் எளிதில் கிடைத்துவிடாத தேவியின் தரிசனம்,
ராமனின் உயிரைத் தன்னில் வைத்திருப்பவளின்
தோற்றம் தன்முன் தெரிய ,கூப்பிய கைகளுடன் அனுமன் அமர்ந்தான்.


17 comments:

வல்லிசிம்ஹன் said...

இந்தப் பதிவில் எழுத்துப் பிழைகள் நிறைய வந்துவிட்டன. படிக்கும் அனைவரும் மன்னிக்க வேண்டும்.
இராமனும் ஜானகியும் அனுமன் என்னும் குருவின் மூலம் மானசீகமாக இணையும் கட்டம் எந்தப் பிழையையும்
இல்லாமல் செய்துவிடும் என்ற நம்பிக்கையில் இணைய இணைப்பு இருக்கும்போதெ பிரசுரித்துவிடுகிறேன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

அசோக வனத்தில் ஆஞ்சநேயரின் வர்ணனை அற்புதம் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது.நாளை காலை கொச்சி சென்று குருவாயூர் கிருஷ்ண தரிசனம்.வல்லியம்மாவுக்கும் பேரனுக்கும் சேர்த்து வேண்டிக் கொள்கிறேன்.
நாளைக்கு "கிருஹித்வா ப்ரேக்ஷ்மாணாய்" எழுதுவீர்கள் நாளை இரவு வந்து படிக்க அனுமான் துனை புரியட்டும்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தி.ரா.ச.
வாழ்வின் மிக முக்கிய கட்டங்களில் நம் சுந்தரகாண்டப் பாராயணம் எத்தனையோ நிம்மதி கொடுத்து இருக்கிறது.அப்போது இருந்த 'பசி நோக்கார்' குணம் இப்போது இல்லை. இருந்தாலும் இப்போதாவது ராமனைத் துதிக்க வேண்டும் என்று புத்தி வந்தது அல்லவா.
நீங்கள் பத்திரமாகப் போய் அப்பனைத் தரிசித்துவிட்டு வாருங்கள். யுகாதி நாள் நல் வாழ்த்துகள்.எங்களுக்கு இரண்டு பேரன்கள் ஒரு பேத்தி.எல்லோருக்கும் சேர்ந்து நல்வரம் வேண்டிக்கொள்ளுங்கள்.

துளசி கோபால் said...

எழுத்துப்பிழை பற்றிக் கவலை வெணாம் வல்லி. அப்புறம் திருத்திக்கலாம்.( ஊர் போய்ச் சேர்ந்தபின்பு)

பாவம் சீதா.

நல்லவேளை நேயடு அவளைக் கண்டு பிடித்துவிட்டார்னு மனசு சந்தோஷிக்குது.

ஆமாம், நினைத்த ரூபம் எடுக்கும் ராவணன், தூங்கும்போதாவது ஒரு தலையா இருக்கக்கூடாதா? 10 தலை.
மஹா இம்சைதான்:-)

எப்படித் தலையணையிலே வச்சுக்கறதுன்னு நினைச்சேன்ப்பா:-)

வல்லிசிம்ஹன் said...

நான் நினைச்சேன் நீங்க சொல்லிட்டீங்க.:-0

நான் பார்த்த சினிமாவில் பத்துத் தலைகளும் தெரியும்.
இவர் எப்படித் திரும்பிப் படுப்பார் என்று யோசிப்பேன்:-)
ஒரு தலை மாட்டினாக் கூடப் போச்சே.!!
ராவணன்னு எழுதினா ரவணன்னு வருது.
சோகமாப் போயிடுதுப்பா.

ambi said...

//படிக்கும் அனைவரும் மன்னிக்க வேண்டும்.//

நான் சொல்ல வந்தேன். சரி விடுங்க. பொருளில் குற்றம் இல்லயே, சொலில் தானே!
ஆயிரம் பொற்காசுகளும் உங்களுக்கு தான்! :p

அனுமனே சிறிது தடுமாறி விட்டார் இல்லையா? அது போல தான் இதுவும். :)

அனுமனின் குணவிலாசங்கள் எத்தனை தடவை வேணுமானலும் படிக்கலாம்.

//முழுநிலா கூட இனிமேல் என்ன நடக்கும் என்று ஆவலுடன்
மேகத்துக்குள் போகாமல் பார்க்கிறதாம்!!
//
உவமையணியா? அற்புதம்.

மதுரையம்பதி said...

அருமையாக வந்திருக்கு இந்த பதிவும். நன்றி வல்லியம்மா...நானும் "கிருஹித்வா ப்ரேக்ஷ்மாணாய்"க்கு காத்திருக்கிறேன்.
வசந்த நவராத்ரி பூஜையுடன் ராமாயணம் நவாஹ பாராயணமும் நடக்கிறது இல்லத்தில்.

ராமாய ராமபத்ராய
ராம சந்திராய வேதஸே
ரகு நாதாய நாதாய
ஸீதயா: பதயே நம:

துளசியக்கா கேட்டுக்கொண்டதன்படி கீழே ராமசந்திராஷ்டகம் தருகிறேன். கொஞ்சம் பெரிய பின்னூட்டம் தான் ஆனால் நான் பதிவிடுவதில்லை என்று இருப்பதால் இதில் பின்னூட்டமாக தருகிறேன். வல்லியம்மா கோபிக்காது இந்த பின்னூட்டத்தை
பதிவிட வேண்டுகிறேன்.

இந்த அஷ்டகமானது கைலாசபதி பரமேஸ்வரன் பார்வதிக்கு உபதேசித்ததாக சொல்லப்படுகிறது. கடைசியில் உள்ள 9ஆவது
ஸ்லோகம் பலஸ்ருதி.

1. ஸீக்(3)ரீவ மித்ரம் பரமம் பவித்ரம் ஸீதா களத்ரம் நவமேக(4) கா(3)த்ரம்
காருண்ய பாத்ரம் ஸதபத்ர நேத்ரம் ஸ்ரீராமசந்த்ரம் ஸததம் நமாமி.

2. ஸம்ஸார ஸாரம் நிக(3)ம ப்ரசாரம் த(4)ர்மாவதாரம் ஹ்ருதபூ(4)மிபா(4)ரம்
ஸதா நிர்விகாரம் ஸீக(2)ஸிந்து ஸாரம் ஸ்ரீராமசந்த்ரம் ஸததம் நமாமி.

3. லக்ஷ்மி விலாஸம் ஜக(3)தாம் நிவாஸம் லங்கா விநாசம் பு(4)வநப்ரகாஸம்
பூ(4)தே(3)வ வாஸம் ஸரதி(3)ந்து(3) ஹாஸம் ஸ்ரீராமசந்த்ரம் ஸததம் நமாமி.

4. மந்தா(3)ர மாலம் வசநே ரஸாலம் குணைர் விஸாலம் ஹத ஸப்த தாலம்
க்ரவ்யாத(3) காலம் ஸீரலோக பாலம் ஸ்ரீராமசந்த்ரம் ஸததம் நமாமி.

5. வேதா(3)ந்த கா(3)நம் ஸகலை: ஸமாநம் ஹதாரிமாநம் த்ரித(3)சப்ரதா(4)நம்
கஜேந்த்ர பாலம் விக(3)தா(அ)வஸாநம் ஸ்ரீராமசந்த்ரம் ஸததம் நமாமி.

6. ஸ்யாமாபி(4)ராமம் நயநாபிராமம் கு(3)ணாபி(4)ராமம் வசநாபிராமம்
விஸ்வ ப்ரணாமம் க்ருத ப(4)க்திகாமம் ஸ்ரீராமசந்த்ரம் ஸததம் நமாமி.

7. லீலா ஸரீரம் ரணரங்க(3) தீ(4)ரம் விஸ்வைக ஸாரம் ரகு(4)வம்ச ஹாரம்
கம்பீ94)நாதம் ஜிதஸர்வ வாத(4)ம் ஸ்ரீராமசந்த்ரம் ஸததம் நமாமி.

8. க(2)லே க்ருதாந்தம் ஸ்வஜநே விநீதம் ஸாமோப கீதம் மநஸா(அ)ப்ரதீதம்
ராகே(3)ணகீதம் வசநாத(3)தீதம் ஸ்ரீராமசந்த்ரம் ஸததம் நமாமி.

ஸ்ரீராம சந்த்ரஸ்ய வராஷ்டகம் த்வாம் மயேரிதம் தே(3)வி மநோஹரம் யே
பட(2)ந்தி ஸ்ருண்வந்தி சயேது ப(4)க்த்யாதே ஸ்வீயகாமாந் ப்ரலப(4)ந்தி நித்யம்.

கீதா சாம்பசிவம் said...

இலங்கைக்கு வந்தாச்சா? ம்ம்ம்ம், டைப் அடிக்கும்போது பிழை வரத் தான் செய்யும். அதனால் என்ன? நானும் இணைப்பு ஒழுங்கா இருக்கும்போதே பின்னூட்டம் கொடுக்கறேன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

வல்லியம்மா வணக்கம். குருவாயூர் சென்று நல்ல தரிசனம் முடிந்து இன்றே சென்னை வந்துவிட்டேன்.உங்களுக்கும் உங்கள் பேரன்களுக்கும் பேத்திக்கும் சேர்த்து வேண்டிக்கொந்தேன்.விமானம் கிளம்புவதற்கு 10 நிமிடங்கள் முன்பு தான் ஏர்போர்ட்டுக்கு வந்து சேர்ந்தேன்
கிருஷ்ணன் அருளால் விமனாம் 15 நிமிடம் லேட்.பிடித்து வந்துவிட்டேன்

வல்லிசிம்ஹன் said...

அம்பி, உவமை அணியெல்லாம் கண்டுபிடிக்கிறீங்க;-)
நிலா உவமை சொல்லிக் கொடுக்கத்தான் எப்பவோ கத்துக்கிறோமே.அடுத்த பதிவிலாவது பிழையில்லாமல் எழுதப் பார்க்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

கீதா வரணும். உங்களுக்கு அனுப்பின மெயில் வந்ததா.
எ.பி
படிக்கும்போது வந்ததே கிடையாது. டைபோ எர்ரர் இதுதானோ:-)

வல்லிசிம்ஹன் said...

அன்பு மௌலி, ராம ஸ்லோகம் அருமையாக எளிமையாக இருக்கிறது.
மனப்பாடம் செய்வது சுலபம்.
இந்த உதவியை மறக்க முடியாது.
தினமும் பாரணை செய்யலாம். ராம நாமம் நல்லவரைக் கூட்டும் என்பது எவ்வளவு உண்மை.நன்றி. எல்லோரும் பயன் பெறுவார்கள்.

துளசி கோபால் said...

மதுரையம்பதிக்கு மனசார ஒரு நன்றி.

அஷ்டகத்தைப் பிரிண்ட் பண்ணி வச்சுருக்கேன். நம்ம சத் சங்கத்து
மக்கள்ஸ்க்குக் கொடுக்கணும். வெள்ளிகளில் சுந்தரகாண்டம்
படிச்சாறது இப்போ.

கீதா சாம்பசிவம் said...

உங்க மெயிலே வரலையே? எதிலே அனுப்பினீங்கன்னு தெரியலை. ம்ம்ம்ம்ம்ம்., யாஹூவிலே பார்த்தேன். ஜி-மெயிலிலும் இல்லையே?

மதுரையம்பதி said...

வல்லியம்மா,

எனக்கு தெரிந்த வரையில் "பாரணை" என்பது விரதம் முடித்து உணவு உட்கொள்வது தான், அதாவது ஏகாதசி விரதம் இருந்து, த்வாதசியன்று காலை பூஜை முடித்து பின் செய்வது "பாரணை", நீங்கள் சொல்ல வந்தது "பாராயணம்" என நினைக்கிறேன். சரியா?, இல்லை பாரணை-பாராயணம் இரண்டும் ஒன்றுதானா?....

துளசியக்கா,

மிக்க மகிழ்ச்சி. சனிக்கிழமைகளில் முடிந்தால் ராமாஷ்டகம் சொல்லுங்கள்.

வல்லியம்மா சொன்னதுபோல இது சுலபமாக பாடமாகும்படி உள்ளது...
எனவே, சில நாட்கள் ரெகுலராக சொன்னால் பாடம் பண்ணிவிடலாம்.

வல்லிசிம்ஹன் said...

மௌலி,
பாரணை எல்லோருக்கும் துவாதசி ஒன்றுதான்.

எங்க வீட்டிலே 15 வருடங்கள் முன்பு வரை பெரியவர்கள் நிறைய.
அதனால் எங்களை(என்னை) சூபர்வைஸ் செய்ய அவர்கள் உபயோகிக்கும் வார்த்தை 'பாரணை'
அதாவது சாப்பாட்டுக்கு முன்னால் சாமி கும்பிட்டச்சா என்ற கேள்வி. அது முடிந்தால் இதைச் செய்யலாம் என்கிற உத்தரவு.
இங்கே பாராயணம் தான் சொல்லி இருக்க வேண்டும்:-0)
இன்னோரு வியர்ட் குணம். நினைச்சதை எழுதாமல் கைக்கு வந்ததை எழுதுவது.

வல்லிசிம்ஹன் said...

கீதா மெயில் திரும்பி விட்டது. உங்க மெயிலையும் இப்போதான் பார்த்தேன்.