Blog Archive

Saturday, November 25, 2006

இன்னுமொரு தமிழ் உலகம்

Posted by Picasa இங்கே வந்த முதல் தடவை எல்லாமே
புதிதாய் அழகாய்,சுத்தமாய் தெரிந்தது.

பயணங்கள் இனிமை.
எங்கே பார்த்தாலும் செழிப்பு.

வேலை செய்வது எளிமை.
அலுப்புத் தட்டவில்லை.
போன் செய்து விட்டு வரும் விருந்தினர்கள்.
அவர்களின் இந்திய விசாரணை

அழகான அரோரா கோவில்.
பராமரிப்பும் நன்றாக இருக்கிறது.
அங்கே,

இட்டிலி,பொங்கல் வடை ஒயிட் சட்டினி!
மெயின் அட்ராக்ஷன் எது என்று தெரியவில்லை.!

அட !இங்கும் ப்ளாக்கர்ஸ் மீட்.
வாழ்த்துக்கள் அனுப்பத்தான் முடியும்.

நன்றி நவிலும் விழாவுக்கு அடுத்தநாள் "கதவு உடைக்கும் சேல்"
டி வி பேப்பர் எல்லாவற்றிலும் கண்ணைக்கட்டும் விளம்பரங்கள்.

எல்லாமெ குளிரை மறக்கத்தானோ?

இங்கே வீட்டைச் சுத்தி இருக்கும்
நெய்பர்ஹூட் மக்களும் போக வர இருந்தார்கள்.
கைகளில் வழியும் பைகள்.

இரண்டு கார்கள் நிறையும் வீட்டு உபயோக சாதனங்கள்.
துணிமணி. விளையாட்டுப் பொருட்கள்,....
நானும் மகளிடம் கேட்டேன். எல்லா வருடங்களும் இது உண்டு
தானே என்று.

'ஆமாம்மா. எப்பவும் வாங்குவோம்.


சேவிங்ஸ் தானே ' என்று பதில் வந்தது.

எப்பவோ விளையாடின 'மோனோபோலி'
ஞாபகம் எனக்கு.

எல்லாம் அசுர வேகம்.
நம்ம விவேக் கம்பனியின் புத்தாண்டு விற்பனையும்
முதன்முதலாக வாங்கின சாண்ட்விச் மேக்கரும்,

அதற்காக வரிசையில் நகர்ந்ததும்
வீட்டுக்கு வந்து அதைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்ததும்,..
அடுத்து அடுத்து வந்த வருடங்களில்
அந்தப் புதுமையும் பழகிவிட்டது.

மீண்டும் பார்க்கலாம் ,.

15 comments:

குமரன் (Kumaran) said...

சிகாகோ வந்தவுடன் பார்த்ததைச் சுருக்கமாக எழுதியிருக்கிறீர்கள். இந்த வருடம் காலையில் எழுந்து கடைகளுக்குச் செல்லவில்லை. மெதுவாக மாலை 4 மணிக்குச் சென்று 50 இன்ச் தொலைக்காட்சி ஒன்று வாங்கி வந்துள்ளோம். வெகு நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தது. நண்பர் ஒருவர் $700க்கு கிடைக்கிறது என்று சொன்னதால் போய் பார்த்தோம். பிடித்தது. வாங்கியிருக்கிறோம். தொலைக்காட்சிப் பெட்டி டிசம்பர் 10ம் தேதி தான் வீட்டிற்கு வரும்.

ramachandranusha(உஷா) said...

இப்பத்தான் பழசெல்லாம் படிச்சேன். அத்துழாய் (துளசி) பத்திரமாய் இருக்கும் பயப்படாதீங்க.
சரியா :-))))

அனுசுயா said...

நல்ல நடையில் இனிமையா எழிமையா எழுதியிருக்கீங்க. ஆனால்
குளிர் கொடுமையை மறக்கதானோ என்னவோ இத்தனை ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எல்லாம்.

வல்லிசிம்ஹன் said...

குமரன். ஆமாம்.

எங்க வீட்டுலேயும் மருமகனும்,மகனும் 3மணிக்குத் தான் போனார்கள். வரப்போற பாப்பாவுக்கு வெணும்கிறதை வாங்கி வந்தார்கள்.
நான் போகாததற்குக் காரணம் அடிப்படையில் பெண்ணுக்குத் துணை. போனால் செலவழிப்பேனோனு பயம்.
50" டிவியா. நல்ல பார்கெயிந்தான்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம், உஷா
அத்துழாய் மாறி வல்லி ஆனது உங்களுக்குத் தெரியும் என்று நினைத்தேன்.
இப்போ மழை நின்னிடுத்தாம்.
அஞ்ஞானம் தான்.என்ன செய்ய.

வல்லிசிம்ஹன் said...

வாங்க அனுசூயா.
எதனாலோ தெரியலை.

குளிர் நிறையத்தான். வங்களுக்கும் நம்ம ஊரு மாதிரி கச்சேரி, விருந்து எல்லாம் இருக்கு.
குமரன் சொல்வது போல் எனக்கு எல்லாம் புதுசா இருக்கு.
வேடிக்கையாகவும் இருக்கு.
நான் ஒரு பார்வையாளர்தானே.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வல்லியம்மா...
நம்ம விவேக் அன்டு கோவே தேவலாம்! குளிரில், காலையில் முட்டி மோதுதல் - நோ!

//அட!இங்கும் ப்ளாக்கர்ஸ் மீட்.
வாழ்த்துக்கள் அனுப்பத்தான் முடியும்//

ஏன்? நேரில் செல்லலாமே; கார் ஓட்டினால் கார் கோபித்துக் கொள்ளும் என்றால், :-) தொலைபேசியில் கான்பரன்ஸ் கூடச் செய்யலாமே!

அமெரிக்கத் தமிழில், இனி கலக்குங்க!
அடுத்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்! பாருங்க நீங்க வந்தாலும் வந்தீங்க; ஊரே திருவிழாக் களை கட்டுது! :-))

துளசி கோபால் said...

//இட்டிலி,பொங்கல் வடை ஒயிட் சட்டினி!
மெயின் அட்ராக்ஷன் எது என்று தெரியவில்லை.!//

சரியாப்போச்சு. இன்னுமா தெரியலை?
'வடை'தான் விடை:-))))

வல்லி,
உங்க பதிவுலே எல்லாருக்கும் பதில் கேள்வி
கேக்கவேண்டியதாப் போச்சு:-)

உஷா,

துளசி நல்லாவே இருக்(கேன்)கு:-)))

குமரன்,

என்ன 50 இஞ்சு $ 700தானா? என்னப்பா இவ்வளோ சல்லீசு!

நாங்க 42 இஞ்சு (ப்ளாஸ்மா) நியூஸி $5000க்கு
வாங்குனோம் (ரெண்டு வருசம் முந்தி) (-:

வல்லி,
அதென்ன அரோரா கோவில்? விளக்கம் ப்ளீஸ்

பத்மா அர்விந்த் said...

ஷிகாகோ வந்திருப்பது பற்றி மகிழ்ச்சி. நலமுடன் பொழுதும் இனிமையாய் கழிய வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

ஏன்? நேரில் செல்லலாமே; கார் ஓட்டினால் கார் கோபித்துக் கொள்ளும் என்றால், :-) தொலைபேசியில் கான்பரன்ஸ் கூடச் செய்யலாமே!

காருக்கும் காரருக்கும் வேலைகள் நிறைய சங்கர்.
என் ஒருத்திக்காக அலைச்சல் வேண்டாம் என்றுதான்.:-)

தொலைபேசி எண் தெரியாது. தனிமெயில் பழக்கமும் இல்லை.
ஆமாம் ஆமாம் களை கட்டிவிட்டது.
பக்கத்து வீட்டு நாய்க்குட்டி கூட கலர்ஃபுலா இருக்கு.
வெளுத்து வாங்கிடலாம் எழுத்தில்,
கவலையே இல்லை. நீங்கள்ளாம் இருக்க எனக்கு என்ன குறை?

வல்லிசிம்ஹன் said...

வாங்க துளசி.மெயின் அட்ட்ராக்ஷன்னு சொன்னது நம்ம ஸ்ரீனிவாசரை.
அவரையும் பாத்துட்டு வடையயும் சாப்பிட வருவதில் எங்க பேரனும் அடக்கம்.
அதான் அவனிடம் கேட்டேன்.உனக்கு எது ரொம்பப் பிடிக்கும் பையானு கேட்டேன்.'ஓ,இந்தப் பெரிசு வடை
அம்மா செய்யரதே இல்லை பாட்டி.அதனாலே இங்கே வர ரொம்பப் பிடிக்கும்னான்.
குழந்தை பேச்சில் நிறைய உண்மை.
அங்கே கியூ நிஜமாவே நீளம்.;-)

வல்லிசிம்ஹன் said...

பத்மா,
வாங்க...நீங்களும் இங்கே இருக்கீங்களா.

நன்றிப்பா வானு'' சொன்னதக்கு.:-))

ramachandranusha(உஷா) said...

துளசி,
அது வேறு கதை. வல்லியம்மா, பிளாக் ஆரம்பிப்பதற்க்கு முன்பு எனக்கு மட்டும் என்று நினைக்கிறேன், அத்துழாய் என்ற பெயரில் பின்னுட்டம் போடுவார். போன மார்ச்சில் சென்னைப் போகிறேன் என்ற அறிவிப்பு நுனிப்புலில் போட, இவங்க
போன் நம்பர் கொடுத்து நேரமிருந்தால் பேசுங்கன்னு மெயில் போட்டாங்க.
பொதுவாய் ஆணாக இருப்பார் என்று நினைத்து போன் செய்ய இந்தம்மா:-) கொஞ்ச நேரம் தடுமாறிப் போய்விட்டேன்.
அத்துழாய் என்றால் துளசி :-)

துளசி கோபால் said...

உஷா,

//அத்துழாய் என்றால் துளசி :-) //

திருநெல்வேலிக்கே அல்வா?

வல்லிசிம்ஹன் said...

அதானே:-)
சப்பளாக்கட்டை, ஜால்ரா கொடுங்கப்பா வல்லி அம்மாவுக்கு.