About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Friday, July 07, 2006

ஸ்ரீவில்லிபுத்தூர்வில்லிபுத்தூர் வேதக்கோனூர்.
சொல்மங்கை ஆண்ட வடபத்ரசாயீ,
அவனைக் கொண்டாடியே, வாழ்நாட்களைக் கழித்தவர்., அதன் பின் அவனையே
மருமகன் வடிவில் கண்டு, மாமனாரும்
ஆகிய (பட்டர்,விஷ்னுசித்தர்) பெரியாழ்வார்.
கோதையையும் ரங்கனையும் சேர்த்து வைத்த கருடாழ்வார்,
கோதையைத் தங்கள் வீட்டுப் பெண்ணாகக் கொண்டாடும் வில்லிபுத்தூர் மக்கள்.
எல்லாவற்றிர்க்கும் மேலாக உயர்ந்து நிற்கும் கண்நிறைக்கும் கோபுரம்.
ஆடிப்பூரம் கண்டாள்  ஆண்டாள்.

அவளைக் காண நாமும் போகலாமா?
எந்த அழகைப் பார்த்து விட்டு இமைப்பது கண்களை?

அவள் மாலை அழகு.
சின்னஞ்சிறு பெண்ணாக அவள் குளக்கரை போகும் அழகு.
அவள் திருமஞசன மஞ்சளுக்காகக் காத்திருக்கும் பெண்களின் அன்பு அழகு.
மஞ்சனமாடி விட்டு அலங்கார பவனி வந்து
அழகனை வந்தடையும் ஒய்யாரம்.
இவை எல்லாவற்ரையும் வருடங்கள் கணக்கில் பார்த்தாலும்
அதே உற்சாகத்தோடு அவள் ஊர்வலம் வரும் தெருக்கள் முழுவதும் போடப்படும் கோலங்கள், கட்டப்படும் தோரணங்கள்,
ஆண்டாளை நீராட்டத்துக்கு, ஏற்றீச் செல்ல பிளிரிய வண்ணம் மகிழ்ச்சியோடு காத்திருக்கும் கறுத்த யானைகள் அவள் கையில் தினம் புதிதாகப் பறந்து வந்து அமரும்
பச்சைக்கிளி,

(தினமும் கிளி செய்பவர்களுக்குத் தான் என்ன புண்ணியம்?)
அதைப் பாஙகுற அவள் இடது தோளைப் பார்ப்பது போல்,

அவள் காதில் ரகசியத்தூது சொல்வதுபோல்
அலங்காரம் செய்யும் பட்டாச்சாரியர்,
அந்தக் கிளியைப் பார்த்து பொறாமைப் பட்டு
நமக்கு கிடைக்காதா இந்த ஆனந்தம் என்று ஏங்கி ,,
ஆண்டாள் காதில் போய் ரங்க நாமம் விழட்டும் ,அப்போதாவது அவள் நம்மைப் பார்ப்பாளோ
என்று நினைத்து
ரங்க ரங்கா என்று மழலையில் இசைக்கும் உயிர்க்கிளிகள்,
தாழம்பூ தரித்த பின்னல்கள்
அசைய அசையக் கோலாட்டம் போடும் சிறுமியர்,
தலையில் கொண்டை தரித்து ஆண்டாளாகவேத் தங்களைப் பாவிக்கும் மங்கையர்,
இந்த வண்ணங்களை, வேத கோஷங்களை, ப்ரபந்தம்
சேவிக்கும் வேதியர்களைப் பார்க்க யாருக்குக் கொடுத்து வைத்து இருக்கிறதோ?
போய் வந்தவர்கள் சொல்லுங்கள்.

8 comments:

துளசி கோபால் said...

ஆண்டாள் ரொம்பவே அழகு.

கோயிலும் அருமையான கோயில்.

பதிவு அழகா வந்துருக்குங்க.

நானும் 7 வயசுலே 'பால ஆண்டாள் 'வேஷம் போட்டு நாடகத்தில் நடித்தது
ஞாபகம் வருதே!!!

திருப்பாவைப் போட்டியிலே ஜெயிச்சு ஒரு தங்கக்காசும் பரிசு வாங்கினேன்.

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி.

வல்லிசிம்ஹன் said...

டெச்ட்

வல்லிசிம்ஹன் said...

துளசி வாங்கப்பா.
இரண்டு பின்னூட்டம் போட்டு ஓடி விட்டது.
இதாவது வர்ணும்.
ஓஹோ அப்படிப்போகுதா கதை.
ஏழு வயசிலே ஆண்டாள் வேடம்.
பாவைப் பரிசு.
கோபாலனைத் தேடி
மாலையிட்டவர் !! இல்லையா?சரி சரி.பேரு வேறு என்ன இருக்க முடியும். துளசிதான் பொருத்தம்.
நன்றினு சொன்னா போதாது. வேற வார்த்தை குமரனைத்தான் கேக்கணும்.

தி. ரா. ச.(T.R.C.) said...

கோதை வாழுமூர் கோவிந்தன் பார்க்குமூர் நாம் சென்று வந்தால் நம் குலம் தழைக்குமூர்.அதுதான் ஸிரீ வில்லிபுத்தூர்.தி ரா ச

கீதா சாம்பசிவம் said...

வள்ளி,
ஆண்டாள் என் மனதை ஆண்டாள்.

வல்லிசிம்ஹன் said...

கீதா, வாங்கப்பா.உங்களை சொல்லி சொல்லி என்னுடைய சி பி யூவும் ஜகா வாங்கிடுத்து.
என்ன தப்பு தெரியுமா? ஒருனாள் போராடிப் பிறகு தெரிந்த விஷயம், கனெக்டிங் ப்லக் சரியாகப் பொருத்தப்படாததால் தான்.
என்னையே குட்டிக் கொண்டேன், சொல்லுவியா,அட்வைஸ் பண்ணுவியானு. நன்றிமா.

கீதா சாம்பசிவம் said...

அப்புறம் ஒண்ணும் புதிசா எழுதலியா? நான் தினமும் வந்து வந்து பார்க்கறேன். அதாவது கணினியில் இருக்கும்போது எல்லாம். நீங்கள் தான் வரதைக் குறைச்சுட்டீங்க.

வல்லிசிம்ஹன் said...

கீதா, வீட்டிலே விருந்தாளிங்கப்பா. அப்பப்ப தமிழ்மணம் பார்த்தூடடு போயிடரேன்.
பொருனையிலே ஒண்ணு போட்டேனே.
நீங்க தான் பாக்கலை.:-)))))