
ஸ்ரி காமாட்சி அம்மாவை சொல்ல நினைக்கும் போதே மகிழ்ச்சி வருகிறது. தன் மக்களை கருணைக்கண்ணால் பார்த்து அவர்களுடைய குறைகளை நீக்கி நல் வாழ்வைத் தரும் தாய்.
எம்.எஸ் அம்மா பாட்டைக்
கேட்டுதான் காஞ்சி அம்பாள் மேல் அதிகமாக பற்று வந்தது. ஸ்ரி காஞ்சி நடமாடும் தெய்வமாக அப்போது இருந்த ஸ்வாமிகளைப் பார்க்கப் போகும்போது இன்னும் அதிகமாகியது.
நமது நம்பிக்கை வளரும் விதமாக சில சமயங்களில் நடக்கும் மஹிமைகள் நம்மை மேலும் அவளுடைய ஆட்சியில் இழுத்துக்கொள்ளும்.
இதுவரை நாங்கள் காஞ்சிக்கு 4 அல்லது 5 தடவை தான் போய் இருப்போம்.
ஸ்ரி வரதராஜனும், காமாட்சியும் எங்களைப் பார்வை இடாமல் அனுப்ப மாட்டார்கள். எப்போதும் வேண்டும் இந்தக் கருணை.
2 comments:
நல்ல பதிவு
துளசி ரொம்ப ரொம்ப நன்றிகள்.
காலை வணக்கம். தமிழ் கைப்பழக்கம் அதிகரிக்க உங்கள் வரவு தான் டானிக்.
Post a Comment