Wednesday, June 27, 2018

1395, வாராணசி பயணம் துவங்கியது.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

 பங்களூர் ரயில் நிலையத்தை விட்டு நகர்ந்தது,வேகம் பிடித்தது
வாரணசி  எக்ஸ்ப்ரஸ். கண்கலங்கின தங்கையை அணைத்துக் கொண்டான் அண்ணா.
இரண்டு வாரம் தானே போகிறார்கள்.

அப்பா நன்றாகப் பார்த்துக் கொள்வார். பயப்படாதே இந்த 63 வயசிலயாவது கிளம்பணும்னு தோணித்தே அப்பாவுக்கு.

அம்பாசமுத்திரம், சென்னை,விராலி மலைன்னு எத்தனை ட்ரிப்
போவார்.
இதைத்தவிர, ஸ்பெயின், ஜெர்மனி, சின்சினாட்டி,ஹ்யூஸ்டன்னு சுத்தல்

அப்பா ஆல்சோ நீட் அ ப்ரேக்.
21 வயசிலிருந்து எத்தனை பாடு பட்டிருக்கார்.
ஏன் அம்மாவும் தான் அலுக்காம எவ்வளவு வேலை செய்வார்.
தாத்தா பாட்டி இருக்கிறவரை எல்லோருக்கும் சலிக்காமல்
செய்வாள் என்றாள் ஸ்ருதி.
ஆமாம் ஸ்கூலில் இருந்து வரும்போது கூட சமையலறையில்
 ஏதாவது செய்து கொண்டிருப்பார்.
வருபவர்கள் போகிறவர்கள்னு நிறைய விருந்தாளிகள்.
என்றான் வேணு.
என்ன கலகலப்பா இருக்கும்.
யேன் சமையலுக்கு அப்போ ஆள் வச்சுக்கலை அம்மா.
அப்பாவுக்குத் தன் கையால செய்யணும்னு ஆசை.
என்னவோ அண்ணா, வந்தவா எல்லாம் அதை செய் ,இதை செய்யுனு சொல்லும்போது எனக்குக் கோவமா வரும் என்றாள்
ஸ்ருதி.
போனாப் போறது. அம்மாவுக்குப் பிடித்ததை அவள் செய்தாள்.
இப்பதான் எல்லா உதவியும் வந்துட்டதே என்றான் சமாதானமாக
வேணு.
சரி வா போலாம்,நம் சம்சாரம் நமக்குக் காத்திண்டு இருக்கும்.
அம்மா வந்த விட்டுச் சொல்ல எனக்கு ஒரு விஷயம் இருக்கு.
 அட. நவீனுக்குத் தங்கையா என்று பூரித்தான் வேணு.
எப்படி அண்ணா புரிஞ்சுக்கற,
கில்லாடிண்ணா நீ என்று அண்ணனை அணைத்துக் கொண்டாள்.
எங்க ப்ராஜெக்ட் அடுத்த வருடம் என்று சிரித்தான்.
ஓஹோ  என்று சிரித்தாள் ஸ்ருதி.
ஆனால் இந்தத் தடவை அம்மா வீட்டில் பிரசவம் இல்லை.
மாமியாரே பார்த்துக் கொள்கிறேன் என்று விட்டார்.
ஸ்ரீதரும் நான் இல்லாட்டக் கஷ்டப் படுவார் என்ற தங்கையை வாத்சல்யத்தோடு
பார்த்தான் வேணு.
எங்க வீட்டுக்கு வரலாமே ,வசுதா ரொம்ப நன்றாகப் பார்த்துக் கொள்வாள்
என்றான்.
 ம்ம் இன்னும் ஏழு மாசம் இருக்கு. அம்மாக்கு என்னைப் பார்த்ததிலிருந்து சந்தேகம் தான்.
வாய்விட்டுக்கேட்கவில்லை.
இந்தா இன் பெண்ணுக்கு இதை எடுத்து வந்தேன் என்று
பெரிய ஸாலி American Doll பொம்மையைக் கொடுத்தாள்.
அத்தைன்னால் நீதான். மது குட்டி
Add caption
தலைகீழாக்  குதிக்கப் போறது என்ற வண்ணம் வண்டியில் வைத்தான்.
நீ நம் வீட்டுக்கு வந்துவிட்டு அப்புறம் போ. சேதி சொன்ன வாய்க்கு,
திருனெல்வேலி அல்வா வந்திருக்கு என்றபடி அவளையும் உள்ளெ
ஏற்றிக் கொண்டு ஜய நகர் பக்கம் வண்டியைத் திருப்பினான்.

காசித்தம்பதியை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.