Blog Archive

Thursday, November 09, 2017

நிலையில்லாத நிலை.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
  மாலை 4.30க்கு இருட்டி விடுகிறது. காலை 7 மணிக்கு சிறிது வெளிச்சம் பரவுகிறது.
 காலையில் கணினி முகத்தில் விழித்து என்ன சுரங்கத்தைக் காணப் போகிறாய் என்று மகள் கேட்கிறார்.
 இது என் நண்பர்களுடனான உரையாடல்.
ஒரே விதமான எண்ண அலைகளின்  பரிமாற்றம். பலப்பல விவாதங்கள் , தோழமைப்
புரிதல்கள்.
 பிடித்த இசை கேட்பது.
 பல தோழிகளின் தோழர்களின் பதிவுகளுக்குப் போய்ப் படிப்பதை
 மெதுவாகவே செய்கிறேன்.
      நம் மனஓட்டம் அனைவருக்கும் எளிதில் புரியாது.
என்னுடன் இருக்கும்  என் குடும்ப உறுப்பினர்களின் நினைவுகள்
என்னை இழுத்துக் கொண்டு போகும் நிலையில்
கணினியை மூடிவிடுகிறேன்.
   இருக்கவே இருக்கிறது CNN, TCM, HGTV.
   நூலகப் புத்தகங்கள்.  அவ்வப் போது சமையல்.
   இப்போதைக்கு என் நிலை இதுதான்.

12 comments:

ஸ்ரீராம். said...

நேரத்தை பல்வேறு வேலைகளுக்குப் பிரித்துக் கொடுத்து விடுங்கள். அப்படியே ஓய்வுக்கும் நேரம் ஒதுக்குங்கள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸ்ரீராம். இந்தப் புரிதல் எனக்குப் போதும். வாழ்க வளமுடன்.
குடும்பத்துக்கும் வாழ்த்துகள்.

Angel said...

ஆமாம் வல்லிம்மா இங்கே காலை 8 மணிக்குத்தான் வெளிச்சம் வரத்து மாலை பெரும்பாலும் 3:30 க்கு இருட்டிடுது ,அங்கே வின்டர் daylight saving time மாத்தியாச்சா ? .. ..நியூஸ் சானல் ஏதாவது விரும்பாத செய்தி வந்தா ரிமோட்டை வச்சி மாற்றிடுங்க .நான் டிவி பக்கம் பெரிசா போறதில்லை :) ஆன்லைன் நிய்யூசும் விகடன் ஹிண்டு மட்டுமே .டேக் கேர் வல்லிம்மா .

வல்லிசிம்ஹன் said...

உண்மையே ஏஞ்சல்,
டே லைட் சேவிங்க் ஆரம்பித்தாச்சு.
லண்டன் ரொம்பவே குளிருமே. நேற்றுக் கூட பெண்ணிடம்
சொல்லிக் கொண்டிருந்தேன். ஈரமான குளிர்.
நான் அப்படித்தான் செய்து கொண்டிருக்கிறேன்.
என்னால் வலைப்பதிவுகளுக்குப் போகும் நேரமே
குறைந்து விட்டது. நான் நன்றாகவே இருக்கேன்மா. நன்றி. மகளுக்கு என் அன்பும் வாழ்த்துகளூம்.

நெல்லைத் தமிழன் said...

ஒருவகையில் இன்டர்நெட்டும், தொலைக்காட்சியும் வாட்சப்பும் புத்தகங்களும் வரம்தான். அம்மா சொல்லுவார்கள், தூங்கும் நேரம் மிகவும் குறைந்நுவிடுமென்று. அவ்வப்போது தொடர்ந்து எழுதுங்கள்.

பூ விழி said...

நிறையை நேரம் ஒய்வு கிடைக்கும் போது பாருங்கள் சிரமப்படுத்திக்காதிங்க

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா ரொம்ப நாளாச்சு. இடையில் கொஞ்சம் கணினி படுத்தியதால் விட்டுவிட்டோம் உக்னள் பதிவுகளை...

வல்லிமா உங்களால் முடிந்ததை பிடித்தவற்றிற்கு ஒவ்வொன்றிற்கும் நேரம் ஒதுக்கி இடையில் சற்று ஓய்வெடுத்து... மெதுவாகச் செய்யுங்கள். உங்களின் எண்ணங்களே அழகாக பாசிட்டிவாக இருக்கும் போது அந்த பாசிட்டிவ் எண்ணங்களே உங்களுக்குக் கைகொடுக்குமே வல்லிமம!! பழைய பதிவுகளையும் வாசிக்கிறோம்..

கீதா

Geetha Sambasivam said...

குளிர் அதிகமா இருக்கா? கவனமாய் இருங்கள். நேரம் கிடைக்கும்போது இணையம் வாருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெல்லைத்தமிழன், குளிர்காலத்து hibernation ஆரம்பமாகிறது. சென்ற பயணங்களில் நான் இவ்வளவு முடங்க வில்லை. shall become more produtive when November ends.Thank you ma.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பூவிழி. நேரம் இருக்கிறது. உடல் ஒத்துழைப்பு குறைந்து விட்டது.
குளிர் இப்பொழுதுதானே ஆரம்பம். இன்னும் நடுக்கப் போகிறது.
வெளி உலகைப் பார்க்க முடியவில்லை என்றால் இன்னும் அலுப்பு.
மாறும் ......
அன்புக்கு நன்றி கண்ணா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் , துளசிதரன், கீதா.
அன்பு வார்த்தைகளுக்கு மிக நன்றி.
அதே போல செய்கிறேன் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா. வீட்டில் ஹீட்டர் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. இருந்தும் ஒடுக்குகிறது கைகால் வலி.
எல்லாருக்கும் உண்டானதுதான். இதுவும் கடக்கும்.