Blog Archive

Sunday, October 22, 2017

மீண்டும் பார்க்கலாம்

Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
பயணங்கள்..... இனித் தொடரும்
++++++++++++++++++++++++++++++++++++++++
 திருச்செந்தூரில்  ஒரு குன்றின் மேல் மண்டபம்
பார்க்கச் சென்ற நினைவு. அங்கு  கொண்டு போன உணவை
உண்டு இளைப்பாறி அலைகள் சீறும் கடற்கரைக்கு வந்தோம்.
 பாட்டியும் அம்மாவும்  சாப்பிட்ட பாத்திரங்களை தண்ணீரில் முக்கை அலம்ப முற்படுகையில் பாத்திரங்களை அலைகள் எடுத்துப் போயின. தாத்தாவுக்குப் படு கோபம்.
அதென்ன அவசரம்.
   ஊருக்குப் போய்ச் சுத்தம் செய்து கொள்ளக் கூடாதா என்று
சொல்லவும் அம்மா பாட்டி இருவரும் கரைக்கு வந்துவிட்டனர்.
 நம்ம ஊரு தாமிரபரணின்னு நினைச்சிட்டுயா, தேய்த்து எடுத்துண்டு வரத்துக்கு
என்று அப்புறம் ஒரே சிரிப்பு.
 குறுங்குடி,ஸ்ரீவைகுண்டம்,பின் திரு நெல்வேலியில் அவர்கள் இருந்த போதுதான், அப்பா, பெரிய சித்தப்பாவுக்குத் திருமணங்கள் நடந்திருக்கின்றன.

பெரிய சித்தப்பாவுக்கு திருநெல்வேலி டிவிஎஸ் சில் வேலை.
பிறகு கோவைக்கு மாற்றிச் சென்றார்.  திருச்செந்தூரிலிருந்து , குறுங்குடி வந்து
 பிரியா விடை பெற்றுக்கொண்டு மதுரை வந்து சேர்ந்தோம்.
அடுத்த பயணம்  சமயபுரம், திருச்சி,கோவை, குருவாயூர்
என்று தொடர்ந்தது. மீண்டும் பார்க்கலாம். நன்றி நண்பர்களே.

12 comments:

ஸ்ரீராம். said...

நினைவுகள் திடீர் வேகம் எடுத்து முடித்து விட்டீர்கள். தொடர்கிறேன் அம்மா.

நெல்லைத் தமிழன் said...

அப்போதெல்லாம் எங்கு பயணம் சென்றாலும் உணவுடன்தான் பயணம். எங்கள் பெரியப்பா சந்தி பண்ணும்போது கன்யாகுமரி அலைகள் களபாத்திரத்தை எடுத்துச் சென்றது ஞாபகம் வந்தது.

கோமதி அரசு said...

நினைவுகள் அருமை.

பூ விழி said...

நல்லகாலம் பாத்திரங்கள் போனால் போகட்டும் இந்த பெண்களுக்கு எங்கே போனாலும் இந்த விஷயமட்டும் ஆற போடவே மாட்டாங்க

Geetha Sambasivam said...

அலைகள் வேகம்! ஆனால் பார்த்தால் திருச்செந்தூரில் தெரியாது! 2,3 முறை போயும் மனதில் நிற்காத தலம் திருச்செந்தூர். உங்கள் நினைவுகள் அருமை. சிறு வயதில் போனதால் நினைவுகள் பசுமை!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம். என் ஐபாட் செயலிழந்துவிட்டது. மடிக்கணினி
யில் உட்கார்ந்தால் மீண்டும் கால்வீக்கம் வருகிறது. எதுக்குடா வம்பு என்று
பூர்த்தி செய்தேன். எத்தனையோ இருக்கிறது எழுத. எல்லாவற்றையும்
இங்கே பதிய ஆசைதான். பார்க்கலாம்.நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

கன்யாகுமரி அலைகளை நான் மறக்கவே மாட்டேன்.
கோவில் முன்னால் இருக்கும் பாறையில் ஓங்கி மோதும் காட்சி கண்முன்.
இப்போது மாறிவிட்டதோ தெரியவில்லை.
அன்பு நெல்லைத்தமிழன் ,நல்ல வேளை,அந்த அலை பெரியப்பாவைத் தள்ளாமல் இருந்ததே.
நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

இனிய காலைவணக்கம் கோமதி. நன்றி மா. வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் பூவிழி. பாத்திரங்களைக் கையோடு சுத்தம் செய்ய வேண்டும் என்கிற
எண்ணம் எப்பவும் இருக்கும். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஒருவேளை நாங்கள் பௌர்ணமி தினத்தில் போனோமோ என்னவோ
கீதா மா. ஒரு தடவை தான் போயிருக்கிறேன்.
தொலைக்காட்சியில் சூரசம்ஹாரம் காட்சியின் போது கடல் நிதானமாகவே காட்சி அளித்தது.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தொடர்ந்து பயணிக்கிறோம்.

Thulasidharan V Thillaiakathu said...

திருச்செந்தூரில் அலைகள் மென்மையாகவே இருக்குமே. என்றாலும் கரைக்கு வந்து பின்னே செல்லும் போது இழுத்துக் கொண்டுதான் போயிருக்குமாக இருக்கலாம்...

துளசிதரன், கீதா

துளசி: நாங்கள் எங்கு பயணித்தாலும் ஒரு நாள் இரு நாள் என்றால் வீட்டிலிருந்து சாப்பாடு செய்து எடுத்துக் கொண்டு சென்றுவிடுவதுண்டு இப்போதும். 4,5 நாட்கள், ஒரு வாரம் என்றால் ரைஸ் குக்கர், சம்மந்தி என்று எடுத்துச் சென்று சமைத்துச் சாப்பிடுவது வழக்கம். வெளியில் சாப்பிடுவது என்பது வெகு அபூர்வம். அதுவும் நல்ல உணவகம் என்று தெரிந்தால் மட்டுமே. அதுவும் கேரளத்தில் மட்டுமே. கேரளத்தைத் தாண்டும் போது உணவில் நாங்கள் கவனமாகவே இருகிறோம்.
கீதா: கன்னியாகுமரியில் இப்போதும் அப்படித்தான் வல்லிம்மா. பாறையில் வந்து அடிக்கிறது.

நாங்களும் அப்படித்தான் பெரும்பாலும் வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு போய் விடுவதுண்டு. ஆனால் சமைத்து சாப்பிடுவது என்பதி குறைவு. 3, 4 நாட்கள் பயணம் என்றால் பழங்கள், வெளியில் என்ன கிடைக்கிறதோ அதை வைச்சு சமாளித்தல் என்று. உங்களோடு நாங்களும் தொடர்கிரோம் வல்லிம்மாஅ