About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Friday, March 31, 2017

என்றும் துன்பமில்லை. இனி சோகமில்லை

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Saviour.

மன்னிச்சுடுடா. பெரிய தப்பு ஒண்ணும் இல்லை. க்ஷணப் பித்தத்துல
செய்துட்டேன் இனிமே இல்லை
இது சொல்லாத மனைவியோ கணவனோ இருக்க முடியாது.

 இன்று எங்கள் ஆன்மீகக் குழுவில் ஸ்ரீ காஞ்சிப் பெரியவா, மஹா பெரியபவா நிகழ்த்திய
ஒரு மகிமையைப் படிக்கும் புண்ணியம் கிடைத்தது.
 இனி சேர்ந்து வாழ முடியாது என்ற நிலைமைக்கு வந்துவிட்ட தம்பதிகளாய்க் காமாக்ஷி அம்மன்
சன்னிதியில் ஒன்று ஸேர வைக்கிறார்.
அந்தத் தம்பதிகளிடம் அவரது கருணைப் பிரவாகம் பெருக்கெடுத்து
விவாகரத்தை விரும்பிய

ஈருயிரை ஒன்று சேர்க்கிறது.

இது எத்தனை பேருக்குக் கிடைக்கும்.
சகித்துச் செல்வதே எங்களுக்கெல்லாம் சொல்லப்பட்ட அறிவுரை.
இரு பாலருக்கும் தான்.
பேதம் கிடையாது.
உன்னை நான் மன்னிக்கிறேன். என்னை நீ மன்னித்துவிடு.
ஆக,முதலில் எதனால் இருவரும் ஈர்க்கப் பட்டோமோ
அதைத் தக்க வைத்துக் கொள்வதுதான் எத்தனை  கடினம்.

தனக்கு அநீதி  இழைக்கப் பட்டது என்று குற்றம் சாட்டும் நாம்
நாம் அந்த அனியாயத்துக்கு விதை போட்டோமா 
என்று யோசிப்பதிலும்தப்பில்லை.
அவசர முடிவிலோ,நாள்பட்டு விளைந்த முடிவிலோ எங்கோ ஒரு
அபஸ்வரம் வந்திருக்கிறது.
அதைக் கருணையோடு அணுகிவிட்டால்  மாறுபவத்ற்குச் சந்தர்ப்பம் உண்டு.

அதற்காகக் கசப்பை மனதி தேக்கி, அனலை வாய்வார்த்தைகளாக உமிழ்ந்து
எதிரில் நிற்கும் மனத்தைக் காயப் படுத்துவதில்
ஒன்றும் நேரப் போவதில்லை.

உடைந்த கண்ணாடிக்கு ஏது மதிப்பு.
இன்று மனதில் ஓடிய எண்ணங்கள்.


8 comments:

Anuradha Premkumar said...

மிக மிக அருமையான.. அனுபவ எண்ணங்கள் அம்மா...

எதிரில் நிற்கும் மனத்தைக் காயப் படுத்துவதில்
ஒன்றும் நேரப் போவதில்லை...


உண்மை...வார்த்தைகளை எப்பொழுதும் கொட்டாமல் சில நிமிடங்கள் அமைதியாக இருந்தாலே..பல மன கசப்புகளை தவிர்க்கலாம்...

மோகன்ஜி said...

நல்ல பதிவு. விட்டுக் கொடுக்க கற்றால் எதுவும் சுகமே

'நெல்லைத் தமிழன் said...

ரொம்பத் தேவையான அறிவுரை எனக்கெல்லாம், வல்லி சிம்ஹன் அம்மா.. சமயத்தில் அறியாமல் காயப்படுத்திவிடுகிறோமே (ஹஸ்பெண்டையும், பெண்ணையும்தான்) என்று தோணும். "மன்னிச்சுடு" என்று சொல்வதும் புரிதலுக்கு அடையாளமே.

ஸ்ரீராம். said...

நல்ல சிந்தனை. புரிந்து கொண்டு அனுசரித்து, விட்டுக்கொடுத்து வாழ்வதில் இருக்கிறது நல்வாழ்க்கையின் அர்த்தம்.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி மோகன் ஜி.. கொஞ்சம் சிரமமான காரியம் தான்.
என் வயதில் நான் சொல்லலாம்.ஏதோ தோன்றியதை எழுதினேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெல்லைத்தமிழன்.
இப்பொழுதுதான் உங்கள் பின்னூட்டம் கண்டேன். இனி, இனிய உளவாக இன்னாமை கூறாமல்
இருக்கப் பழகலாம். என்னையும் சேர்த்தே சொல்கிறேன்.
அவசர உலகம். அவசரப் புரிதல்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அனுராதா ப்ரேம்குமார்,
இந்த வயதில் சொல்கிறேன்.
இளமையில் எங்கள் இருவருக்குமே
சட்டென்று கோபம். சட்டென்று தணியும்.
அதற்குள் வார்த்தைகள் கொட்டிவிடும்.
பிறகு அமைதி சமாதானம். ஏண்டா சண்டை போட்டோம்
என்ற வருத்தம் தான் மிஞ்சும்.
நன்றி கண்ணா,. ஜாக்கிரதையாக இருக்கலாம்.

Geetha Sambasivam said...

ஆனால் இதையும் ஏற்கும் மனப்பக்குவம் வேண்டும்! இப்போதைய இள வயது ஆண், பெண்களிடம் அரிதாகவே காண முடிகிறது! :(