Blog Archive

Monday, May 30, 2016

#அமெரிக்க அனுபவம் 6

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்



#அமெரிக்க அனுபவம் 6
++++++++++++++++++++++++++++
 கோடை வந்துவிட்டது .மகள் வீட்டுத்தோட்டம் மெல்ல மெல்ல விழிக்கிறது.
அவளும் நானுமாகப் புதிய செடிகளைப் பதியன்  செய்து கொண்டிருந்த போது, அடுத்த தெரு ஆண்ட் ரூ தன் குட்டி செல்லத்துடன்   வாக்கிங்க் வந்து கொண்டிருந்தார்.
 பெண் அவரிடம் அவர் மனைவியின் உடல் நலம் விசாரித்தாள்.
 இப்போது கொஞ்சம் நினைவுக்கு வருகிறது.
ஹர் மெமரி இஸ் கெட்டிங்க் பெட்டர்  என்று சொல்லி சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து
விட்டுச் சென்றார்.
என்ன விஷயம். மெலனி நன்றாகத்தானே இருந்தாள் என்று விசாரித்தேன்.
50 வயது மெலனிக்கு  இருமல் ,காய்ச்சல் என்று ஒருவாரம் அவதிப்பட்டுப் பக்கத்து ஹாஸ்பிடலுக்குப் போய் எல்லா சோதனைகளையும் செய்து ஒன்றும் பயனில்லையாம்.
அவள் கூட நீச்சல் பயிற்சி செய்யும் இன்னோரு வைத்தியர்
அவளைத் தன் க்ளினிக்கிற்கு   அழைத்துச் சென்று
சோதனைகள் செய்திருக்கிறார்.
உடனே முடிவுக்கு வந்தவராய்  எட்வார்ட் ஹாஸ்பிடலில்   சேர்த்து சிகித்சை மேற்கொண்டதில் உயிர் பிழத்தாளாம். இருதயத்திலிருந்து மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்
 சேதமடைதிருக்கிறது. அதனால் காப்பாற்றப் பட்டாலும் ஞாபக மறதி வந்துவிட்டது.
மூன்று குழந்தைகளின் பெயரெல்லாம் மறந்துவிட்டுக் கணவனையும் ஜோ என்று அழைத்து வந்திருக்கிறாள்.
இந்த ஆறு மாதத்தில் எத்தனையோ முன்னேறி இருக்கிறாள்.
 மகள் கேட்டதும் அவர் முகம் மலர்ந்து தன் பெயர் அவளுக்கு நினைவுக்கு வந்துவிட்டது.
இனி கார் ஓட்டப் பழகப் போகிறாள்.
ஷி வில் பி ஃபைன் யூ ஸீ என்று நடையைத் தொடர்ந்தார்.

எல்லா ஊரிலும் எல்லா மருத்துவமனைகளும் சிறப்பு என்று சொல்ல முடியாது.
அதே போல் சிறப்பில்லை என்றும் முடிவு கட்ட முடியாது.
அந்த  சினேகிதர் கவனித்திராவிடில் அவள் இரத்தக் குழாய்   உடைபட்டு இறந்திருப்பாள்.கடவுள் கருணை மிக்கவர்.
வாழ்க வளமுடன்.

13 comments:

ஸ்ரீராம். said...

இருமல் காய்ச்சல் என்றதும் அந்த நண்பர் எதைவைத்து இந்நோயைக் கண்டுபிடித்தாராம்? எப்படியோ, சீக்கிரம் குணமாகட்டும். மெலனி 'நலனி' ஆகட்டும்!! :)))

வெங்கட் நாகராஜ் said...

விரைவில் அவர் குணமாகட்டும்.....

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம். இருமல் என்பது நிறைய நாட்கள் இருந்துவந்தால்
அது இருதய சம்பந்தமான எதற்கும் அறிகுறி..
என் அம்மா அப்படி இருமினதால் தான் மைல்ட் ஹார்ட் அட்டாக் என்று கண்டுபிடித்தார்
வைத்தியர்.
என் இன்னோரு தோழி இப்போது இந்தியா வந்திருக்கிறார். அவருக்குத் தும்மல் நிற்கவே இல்லை. மூக்கிலிருந்து நீர் வடிந்த வண்ணம் இருக்கவும். அதை ஆராய்ந்து அந்த நீரின் மூலம் நெற்றியில் இருக்கும் ஒரு வெடிப்பு என்று கண்டுபிடித்துஇரண்டு வார எமெர்ஜன்சி நடவடிக்கை எடுத்தனர்.

மூளைக்கு இன்ஃபெக்ஷன் பரவி இருந்தால் ,யோசிக்கவே முடியாத விளைவுகள் ஆகி இருக்கும்.
மெலனிக்கு அயோர்ட்டாவில் ரத்தக் கசிவு ஏற்பட்டதை இந்தத் தோழர்தான் கண்டுபிடித்தார்.

எல்லாவற்றையும் விட மெலனியின் கணவர் காட்டிய மனத்திண்மைதான் மிகப் பிடித்தது.
நலமாக இருப்பார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் நலமா மா. இனி எல்லாம் சுகமாக இருக்கட்டும்.

கோமதி அரசு said...

கருணை மிக்க கடவுள் நீங்கள் சொல்வது போல் மெலனியை விரைவில் குணபடுத்தட்டும்.
வாழ்க வளமுடன் மெலனி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா.,மெலனியின் கணவர் போல
ஒரு பாசிடிவ் மனிதரையும்,அந்தக் குழந்தைகள் போல நல்ல
குழந்தைகள் இப்போதுதான் பார்க்கிறேன். தெய்வம் நின்று அவர்களைக் காக்கட்டும்.
நன்றி மா.

Thenammai Lakshmanan said...

அருமைமா. தன்னம்பிக்கை & பாசப் பதிவு :)

நெல்லைத் தமிழன் said...

நல்ல நேரமோ அல்லது கணவரின்/குழந்தைகளின் நற்செயலோ.. சரியான நேரத்தில் குறையைக் கண்டுபிடித்துச் சரி செய்ய முடிந்தது. விரைவில் பூரண நலம் பெறட்டும். சிறிய பதிவாக இருந்தாலும் அது வாழ்க்கையின் ஒரு அனுபவத்தையோ உண்மையையோ சொல்கிறது.

வல்லிசிம்ஹன் said...

வாழ்க வளமுடன் கோமதி.
யார் நோய் என்று சொன்னாலும் நமக்குப் பதறுகிறது. அங்குள்ளவர்கள் எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளும் பக்குவம் சீக்கிரமே அடைந்துவிடுகிறார்கள்.மெலனியின் கணவர் காட்டின அமைதியே என்னைக் கவர்ந்தது.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் தேனம்மா. அவர்கள் நல்வளம் பெற வேண்டும். நன்றி கண்ணா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் நெல்லைத்தமிழன். நேரம் செய்யும் நலம் தான் நல்வழிப் படுத்தியது.
கண்டுபிடிக்க முடியாத நோயின் தீர்வுகள் எத்தனையோ இருக்கின்றனவே. மிக நன்றி மா.

Thulasidharan V Thillaiakathu said...

ஒவ்வொருவருக்கும் எப்படி எல்லாம் பிரச்சனைகள் வருகின்றன?!! அவர்கள் நலம் பெற எங்களது பிரார்த்தனைகளும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசிதரன்.
மேல் நாடு என்றாலே ,விவாகரத்து சீக்கிரம் செய்து கொள்பவர்கள் என்கிற நினைப்பு முன்னால் இருந்தது. மகள் வீட்டைச் சுற்றி இருக்கும் அத்தனை தம்பதிகளும் எத்தனையோ சோதனைகளைக் கடந்து ,சேர்ந்தே இருக்கிறார்கள்.
இன்னும் பொறுமையாகக் குடும்பம் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். சகிப்பு,தைரியம் எல்லாம் பார்த்து மகிழ்ச்சியாக இருந்தது.
வாழ்க வளமுடன் மா.