About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Saturday, February 28, 2015

.வாழும் எழுத்துகள்....இன்று பிபரவரி   27. எதையோ மறந்துவிட்டோமே என்று யோசித்தேன்.
அநேகமாகக் கலயாண நாட்கள்,ஆண்டுநிறைவுகள் வரும்மாதம்.
 
சட்டென்று சுஜாதா சார் ஞாபகம் வந்தது.

தன்னுடைய 70ஆவது வயதுக்கு வந்த வாழ்த்துக்களை விட, பூங்கொத்துகளை விட,
திடீரென்று மூப்பு தனக்கு வந்துவிட்டதை நினைத்ததாகச் சொன்னதும் நினைவு வந்தது.
வாரவாரம் சனிக்கிழமை காலை பதினோறு மணிக்குக் காத்திருந்து ,எந்த ஊரிலிருந்தாலும் இந்திய நேரத்துக்கு ,
கணினி முன் உட்கார்ந்த ,
அம்பலம் அரட்டைக்கு வந்த நாட்கள்.
முகம் தெரியாத பல நபர்களின் அறிமுகம்.
எல்லோருடைய கேள்விகளுக்கும் அவர் பதில் சொல்லும் லாகவம்.
அவர் வருமுன்னே களைகட்டி விடும்.
கணேஷ் என்று ஒருவர், மதுரை சுரேஷ் என்று ஒருவர்,அதியமான், நம் தேசிகன்,உஷா,
டார்-எஸ்-சலாமிலிருந்து ஒரு பெண்.
இப்படி எத்தனையோ .
ஒவ்வொரு தடவையும் ஸ்விஸ் ஆக இருந்தால் ஊரைப் பற்றி, மக்களைப் பற்றி விசாரிப்பார்.
கூடவே தான் டாவோஸ் ஏரிக்கரையில் ஒரு மாநாட்டில் கலந்து கொண்டதையும் சொல்லுவார்.
''ஒரு சர்ச், ரெண்டு மரம்,ஒரு பார்க்,நாலு மனிதர்கள் இவர்களை வரைந்தால் ஒரு ஸ்விஸ் ஊர்த்தெரு வந்துவிடும் என்பார்.
}பிறந்த நாளைக்கு ஒன்றும் ஸ்பெஷல் கிடையாதா சார் என்றால் நான் பாயாசம் சாப்பிடுவது கிடையாது. மற்ற ஸ்வீட் ,கேக் உடலுக்கு ஆகாது.
இதுதான் பிறந்தநாள் என்று ''' matter of fact'' நினைவுக்கு வருகிறது.}
அம்பலமும் இல்லை, அரட்டையும் இல்லை,அவரும் இல்லை.
அவர் எழுத்துகள் இருக்கின்றன.


யாருக்காவது இந்த அரட்டை நினைவிருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இனிய நினைவுகளுக்கு நன்றி  சார்.

எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

6 comments:

ராமலக்ஷ்மி said...

//வாழும் எழுத்துக்கள//

அந்த எழுத்துக்களோடு வாழ்ந்தபடி அவரை நினைவு கூர்ந்து வாழ்த்துவோம்.

//யாருக்காவது இந்த அரட்டை நினைவிருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.//

ஆவலுடன் எதிர்பார்த்து.. காத்திருக்கிறோம்.

துளசி கோபால் said...

அம்பலம் அரட்டைகளை அம்பலத்துக்குக் கொண்டுவந்துட்டீங்க வல்லி.

எனக்கெல்லாம் இப்படி ஒரு ச்சான்ஸே கிடைக்கலைப்பா.

சுஜாதாவை மறந்தாலும் அவர் எழுத்துக்களை மறக்கமுடியாதுப்பா.

நம்ம வீட்டுலேயே 'நடமாட்டம்' இருக்கு!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி,

சரியாகப் 11அடித்து 30 நிமிடங்களில் மானிட்டர் முன் வந்துவிடுவார் என்று அம்பலம் அலுவலகத்தில் சொல்வார்கள்.
ஒரு நல்ல மனிதர்.
சற்றே கூச்ச சுபாவம்(என் பார்வையில்)

நகைச்சுவை,நேர்மை,தமிழின் மேல் நம்பிக்கை.

எதையும் வெற்றி கொள்ளக் கூடிய தைரியமான மனப்பான்மை, நோயிடம் தோற்றதுதான் நம் இழப்பு.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம்பா துளசி. ஒரு வேளை உங்களுக்குத் தெரிந்திருந்தால் நீங்களும் பங்கு பெற்றிருக்கலாம்.
ஒரு சின்னப் பையனிலிருந்து 70 வயதுப் பெரியவர் வரை பங்கு கொள்வதும் ,எண்ணங்களைச் சொல்வதும், அவர் அதைப் பொறுமையாகக் கேட்பதும்,
சிலசமயம் அம்பலம் உதவியாளர்கள் அந்த வேலையைப் பகிர்ந்து கொள்வதும்

சார் வராத நாட்களில் காலியாக இருக்கும் அரட்டை அறையும்

பிஸியான சனிக்கிழமைகள்னு சொல்லலாமா:)
உங்க வீட்ல இருக்கும் நடமாட்டம் தெரியுமே:)

திண்டுக்கல் தனபாலன் said...

காத்திருக்கிறேன்...

கரந்தை ஜெயக்குமார் said...

சுஜாதாவின் எழுத்துக்கள் என்றென்றும் வாழும் வல்லமை படைத்தவை