About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Tuesday, July 01, 2014

புயல் சூறாவளி,இடி,மின்னல் சைரன்கள்

Add caption
Add caption
நிலவறை.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
இந்த ஊரில் எல்லாம் மெகா சைஸ்  என்று எப்பவும் சொல்வார்கள்.  நேற்று இரவு வந்த சூறாவளி டொர்னாடோவாக மாறாமல் போனது இங்கிருப்பவர்கள் செய்த புண்ணியம்.  சாயந்திரம் வெய்யில். ஐந்த மணிக்குக் கருமேகம். ஆறுமணிக்கு தொலைக்காட்சியில்    வார்னிங்.   ஒரு பயங்கர சூழலுக்குத் தயாரக இருங்கள் என்று செய்தி மிரட்டல்கள். மாப்பிள்ளை  இன்னும் வந்து சேரவில்லை., தூறல் போட ஆரம்பித்தது. சற்றே கண்ணாடி வழியாகப் பார்த்த என்னை மிரட்டியது கறுப்பு மேகம். எங்கிருந்து வந்தது. அடுத்த நிமிடல் பளீர் என்று மின்னால். இடிக்குக் காத்திருக்கவில்லை நான். ஓடியே விட்டேன்   குளியறைக்குள். வெளியில் இருந்து பெண் 20 மைல் தள்ளிப் புயல் ம. இங்கு ஏழரைக்குத் தான் வரும் என்றாள்.
I  refused to believe . நம்   உள்ளம் தான்  சொல்லுமே.  தி.ஜானகிராமனும் நானும்  அறையில் கதவைச் சாத்திக் கொண்ட அடுத்த நிமிடம் சரைன்கள் ஊளையிட ஆரம்பித்தன. நிற்காமல் இடைவிடாமல் சத்தம். குழந்தைகள் கலங்க,நல்ல வேளை மாப்பிள்ளை வந்து  கராஜுக்குள் வண்டியையும் நிறுத்திவிட்டார். .  வந்தவர் கைகால் கழுவிக் கடவுளைக் கும்பிட்டுவிட்டு மாடியேறி, அங்கிருக்கும் முக்கிய பொருட்களை எடுத்துக் கொண்டு ,பையனிடம்   தலையணை, போர்வை, ஸ்லீப்பிங் பாக்ஸ், பாட்டிக்கு  கம்ஃபர்ட்டர் என்று ஆணையிட  எல்லாம் பத்து நொடிக்குள் கீழே வந்தன. பெண் முகம் இறுகி  இருந்தது.ஆறுதல் சொல்லிவிட்டு  என்னைப் பார்த்தாள். அதற்குள் நான் என் இரவு உடைகள் மருந்து,புஸ்தகம் என்று எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளஅவசரமாகப் படியிறங்கி. பேஸ்மெண்டின்   சின்ன அறையில் புகுந்து  கொண்டோம்.  அடுத்த  நொடி, வீடே குலுங்குவது போல ஒரு சத்தம்.சிலீரென்று.எங்கோ மின்னல் தாக்கி இருக்கிறது. நாளை தெரியும் என்றார் மாப்பிள்ளை.w  நான் அந்த அறைக்குள் இன்னும் உள்ளே  போய்விட்டேன்.அமைதியாக இருந்த சில நொடிகளில்  மின்சாரம் உயிர் கொண்டது.   நிலவறை சில்லென்று இருந்தது.  எப்போ புயல் நிற்கும் என்று  கணினியை வைத்து ஆராய்ந்து கொண்டிருந்தார் மருமகன். இன்னுமிருபது நிமிடங்கள் .நாம் மேலே போய் சாப்பிட்டு வந்துவிடலாம் என்றார். ஏன் என்றால் அடுத்து இன்னோரு  புயல் 9 மணிக்கு வரப் போகிறது என்று ரேடாரைக் காண்பித்தார்.. நான் பேரனையும் மடியில் வைத்துக் கொண்டு ராமஜபம் சொல்லிக் கொண்டிருந்தேன்.  பாட்டி  நதிங் வில் ஹாப்பன். பயப்படாதே என்கிறான் சின்னவன். எனக்குச் சத்தம் பிடிக்காதுடா. பயமில்லை என்றேன்.

ஓர்  அமானுஷ்யமான அமைதி. சரி நான் போய் சாப்பாடு சுடவைக்கிறேன். அம்மா சீக்கிரம் மேலவந்து சாப்பிடு என்றபடி பெண் மேலே செல்ல எனக்குத் தயக்கம். இடிக்கு என்னை மிகவும் பிடிக்கும் .என்னைக் கண்டால் ஒருதடவையாவது உறுமும். அதே போல தலிக்கு மேல் ஒரு கடகடா. நான் அவசரம்மாகமணத்தக்காளி தயிர் சாதத்தை முடித்துக் கொண்டு மீண்டும் கீழே அடைக்கலம். அதற்குள் பேரன் அருமையாக மெத்தைகளை விரித்து  தலையணையெல்லாம் போட்டு வைத்திருந்தான்.  பாட்டி நாங்கள் பன்னிரண்டு மணிக்குத் தான் மாடிக்குப் போவோம் . அதுவரை நீ இங்கயே தூங்கு என்றான்.   அதுவரை ஸ்டார்ம் வாட்ச்  என்று புரிந்து கொண்டேன்.
ஏன் பாட்டி  இவ்வளவு மின்னுகிறது. என்கிறது சின்னது. மேகமெல்லாம்   ஒண்ணுக்கொண்ணு பேசிக்கும்பா.  அப்போ இடியும் அங்கேயே இருக்க வேண்டியதுதானே ஏன் கீழ வருது.வெரி பேட்  என்றது பாவம்.   அவன் அம்மா.இதுக்கெல்லாம் பயப்படக்கூடாது ராஜா. வீ  ஹேவ்    டு பி ரெடி  அண்ட் அவேர்  வாட்ஸ் ஹேப்பனிங். பிறகு அவன் அண்ணாவோடு   விளையாட ஆரம்பித்துவிட்டான். நான் படுக்கையில் படுத்தவள் தான். தூங்கிவிட்டேன்.                                                12 மணி இரவு. பெண் மெல்ல எழுப்பினாள். மழைதாம்மா பெய்கிறது. நாம் மாடிக்குப் போய்த் தூங்கலாம்  என்றாள்.   திருப்பி வராதுன்னு என்ன நிச்சயம் என்றேன். அது கிழக்கே போய் விட்டதுமா. இனிவராது  என்று சமாதானம் சொல்ல என் போர்வை,மருந்துகள் சகிதம் மாடியேறினேன்.     உடம்பெங்கும் தாள முடியாத வலி.    எனக்கு மட்டும் இல்லை அனைவருக்கும் தான்.


19 comments:

ஸ்ரீராம். said...

பயங்கர அனுபவம்தான். இதுபோன்ற சமயங்களுக்கு அங்கெல்லாம் எல்லா வீட்டிலும் இது போன்ற நிலவறைகள் இருக்குமா?

Thenammai Lakshmanan said...

நல்லவேளை.. தப்பிச்சேளேம்மா..

கடவுள் கருணை.. ரொம்ப சமயோசிதமானவங்க உங்க மாப்பிள்ளை, மகள் , பேரக்குழந்தைகள் எல்லாருமே..

வல்லிசிம்ஹன் said...

மகள் வீடு மாதிரி தனி வீடுகளில் கட்டாயம் நிலவறை இருக்க வேண்டும். அது ஒரு கட்டாயம். மருமகனு மகளும் எட்டு வருடங்கள் முன்னால் இந்த ஏரியாவில் வீடுவாங்கி வந்தனர்.இந்த நிலவறை மேலே இருக்கும் வீடு இருக்கும் பரப்பளவு நிலவறையும் இருக்கும். தேகப் பயிற்சி, பசங்களோட பில்லியர்ட்ஸ் கேம், இன்னும் பல சேமிப்புகள், பெஸ்டிசைட்ஸ், டிஷ்யூ டப்பாக்கள்,டெலிவிஷன், பழைய புத்தகங்கள் லைப்ரரி,சிடிக்கள் என்று அழகாக வைத்திருக்கிறார்கள். அபார்ட்மெண்ட்களில் நிலவறை தனியாக கொஞ்சம் தள்ளிஇருக்கும். எச்சரிக்கை வந்ததும் அங்கே ஓடிவிடவேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் தேனம்மா. இத்தனை கறுப்பு மேகங்களைப் பார்த்ததே இல்லை. காலே மேகான்னு பாடி இருக்கலாம். நினைத்தாலே நடுக்கும் இது போல இரவுகளைத் தாங்க தனி தைரியம் வேணும்பா. நன்றி ராஜா.

வை.கோபாலகிருஷ்ணன் said...

படுபயங்கரமான அனுபவங்கள் தான். படிக்கும்போதே பயமாக உள்ளது.

காட்டியுள்ள படங்களும், எழுதியுள்ளவிதமும் அங்கு நடந்தவற்றை உணர வைப்பதாக உள்ளது.

நல்லவேளையாக இத்தோடு போச்சே, சந்தோஷம்.

Geetha Sambasivam said...

20011 ஆம் வருஷம் மெம்பிஸில் நாங்க இருந்தப்போ வந்த டொர்னாடோ நினைவுக்கு வருது. சரியா எங்க பொண்ணு வீடு இருக்கும் பகுதியைத் தாக்கி இருக்க வேண்டியது கடைசி நிமிஷத்தில் வழியை மாற்றிக் கொண்டது. அப்போவும் இதே போல் சைரன்கள், எச்சரிக்கைகள், அறிவிப்புகள். போதாதுக்கு நகராட்சியிலிருந்தும் தொலைபேசியில் எச்சரிக்கைச் செய்திகள், என்ன செய்யணும், என்ன செய்யக் கூடாதுனு ஆலோசனைகள். :))))

துளசி கோபால் said...

அடடா.... பத்திரமா இருங்கப்பா.

கேம்ஸ் ரூம் சூப்பர்! மகளிடம் சொல்லுங்க.

நான் விளையாட வரப்போறேன்!!!

கரந்தை ஜெயக்குமார் said...

பயங்கர அனுபவம்

வெங்கட் நாகராஜ் said...

பயங்கரமான அனுபவம் தான். ஆனாலும் அங்கே இருக்கும் முன்னேற்பாடுகள், அரசின் உதவிகள் ஆகியவற்றைப் பாராட்டத் தான் வேண்டும்.....

திண்டுக்கல் தனபாலன் said...

அனுபவம் பயப்பட வைக்கிறது அம்மா...

இராஜராஜேஸ்வரி said...


"புயல் சூறாவளி,இடி,மின்னல் சைரன்கள் என நடுங்கவைக்கும் பகிர்வுகள்..!

வல்லிசிம்ஹன் said...

நன்றி வை.கோ ஜி. இங்கே இருப்பவர்களே பயப்பட்டு இப்போதுதான் பார்க்கிறேன். தெருமுனையில் இருமரங்கள் சாய்ந்துவிட்டன. இடியினால் என்று சொன்னார்கள். தலை தப்பியது தம்புரான் ஒஉண்ணியம் தான் .நன்றி ஜி,

வல்லிசிம்ஹன் said...

உண்மையே கீதா. இவர்கள் செய்யும் முன்னேற்பாடுகள் பிரமிக்க வைக்கின்றன. அடுத்த மாநிலத்தில் நடந்த சேதங்கள் எங்களை எச்சரிக்கையோடு இருக்க வைத்தன. இந்தக் கோடை இப்படித்தான் இருக்கப் போகிறது. சேதம் இல்லாத வரை கடவுளுக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வாங்க வாங்க துளசி. சுமி சொல்லிக் கொண்டே இருக்கிறாள். நீங்கள் இருவரும் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று. கீழே நம்ம மகளிர் கூட்டமே போட்டுவிடலாம்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஜெயக்குமார் .மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் வெங்கட். டிஸாச்டர் மேனேஜ்மெண்ட் எப்பவும் முதலிடம்.இவ்வளவையும் தாங்கிக் கொள்ள மன தைரியம் ,இன்ஷுரன்ஸ் கவரேஜ், முன்னேற்பாடுகள் எல்லாம் காரணம். பயப்படக் கூடாது.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் தனபாலன். இவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கப் பல்வேறு பயிற்சிகள் உண்டு. குழந்தைகள் தான் பயந்து போகும். வீட்டைக் காப்பாற்றிக் கொடுத்த கடவுளுக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராஜ ராஜேஸ்வரி. பயத்தைக் கொடுத்துப் பயத்தைப் போக்குபவன் தான் துணை.

rajalakshmi paramasivam said...

இந்த மாதிரி அனுபவங்கள் கொஞ்சம் த்ரில் தான் . அப்படியே கட்டுரையாக்கி எங்களையும் டொர்னாடோ பார்க்க வைத்து வைட்டீர்கள்.