About Me

My photo

Just one more correspondent.  9/4/1948   பிறந்தநாள்

Saturday, June 28, 2014

Feng shui part 2 புதுப்பிக்கப் பட்ட பதிவு.

vவெங்கட் கேட்ட மாதாசீன வாஸ்து முறைப்படி கற்றவர்களிடம் அறிவுரை பெற்றுக்கொள்ளுவதில் தப்பில்லை. அவசரநிவாரணம் எந்தப் பிரச்சினைக்குமே கிடைக்காது என்று தெரியவே எனக்கு அவ்வளவு நாளாகியது. அதற்குள் வீடு மாறிவிட்டது. பார்க்கும் இடமெல்லாம் சிகப்பு,மஞ்சள்.போதாக்குறைக்கு எங்க மீன் செல்லம் அரோவானா மீனாக்ஷியும் சேர்ந்தது.

தஞ்சாவூர் ஓவியங்கள் சில,கடவுளர் படங்கள் என்று சுவர்கள் நிரம்பிவிட்டன.
ஆடிக்கும்,தைமாதத்துக்கும் வெள்ளி செவ்வாய் மட்டும் கொடை கேட்டு வருபவர்கள் எப்போதும் வரத்தொடங்கினார்கள். எங்க வீடும் இன்னோரு கோவில் போலத் தெரிந்திருக்கும்.:)))))

எங்க பையன் இப்பவும் சொல்லிக் காண்பிப்பான்.
அது எப்படிம்மா நீ இப்படியானே... அசப்புல ஒரு இரண்டு மாத இடைவெளியில் உன்னைப் பார்த்துப் பயந்தே போயிட்டேன்.
கண்ணில எக்ஸ்ட்ரா கருணை, சாந்தம் ,பவ்யம் நம்ம அம்மாவக் காணோமேனு வருத்தமாயிடுத்தும்மா.

அது ஒன்றுமில்லை,அந்தக் கடைக்காரம்மா கருணையாலே ஒரு பூஜை செய்முறையும் கற்றுக்கொண்டேன்.
சாததரண அனுமார் வால் பூஜையெல்லாம் இல்லை. இது அதிகாலை எழுந்து, குறிப்பிட்ட குங்குமம் இட்டு, அதை நம் நெற்றியிலும் வைத்துக் கொள்ளவேண்டும்.

ஒரு சின்ன நெத்தியில் புருவ மத்தியில் பொட்டு,அதன்மேல்(அனுமார்) சிந்தூரம், அதன் மேல் விபூதி,அதற்கும்மேல் இந்தப் பளிச் குங்குமம்.
திடீர்னு பாக்கிறவங்களுக்கு ,இந்த அம்மன் படத்தில வர ரம்யாகிருஷ்ணனைப் பார்த்த ஷாக் ... காரண்டி.....யாக்கிடைக்கும்.
பத்துமாதம் கழித்துப் பார்க்கவந்த பெரிய பையன், கதவைத் திறந்ததும் என்னைப் பார்த்த அதிர்ச்சியில் அரண்டு போய்,ரெண்டு ஸ்டெப் பின்னாடி போயிட்டான்.:))

மாயா பஜார் படத்தில கடோத்கஜன் சொல்றது போல நமோ மாதா என்று சிரிக்கிறான்.
சின்னவனோ இனிமே கோவில் யானைக்கே நீ ஆசீர்வாதம் செய்யலாம்மா.அத்தன தெய்வீகமா இருக்கே என்கிறான்.!!!!!

இந்தக் கோலம் பார்த்து ரெண்டு,மூணு சம்பந்தங்கள் கை விட்டுப் போயின.


பின்ன ஜோசியம் சொல்கிற மாதிரி வேஷம் போட்ட மாமியாரை எந்தப் பெண்ணோட அப்பா கல்யயணம் கட்டிகொடுப்பார்.?
எல்லாம் கொஞ்ச நாளைக்குத் தான். பிறகு சாமியே மனசு வைத்துத் திருமணங்கள் நடந்தன.

பித்தமும் தெளிந்தது.
ஆனால் படங்கள், விசிறிகள் ,யோகம்தரும் கழுதைப்படம்எல்லாம் அப்படியெதான் இருக்கின்றன.நீளம் கருதி மிச்சக் கதையைக் குறைத்து விட்டேன்...:)))

Add captionFENGSHUI BEDROOMAdd caption

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
யின் யாங்  சுழற்சி                                              இரவும் வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான். உறவும் வரும் பிரிவும் வரும் வாழ்க்கை ஒன்றுதான். வாழ்க்கை ஒன்றுதான்.இளமை வரும்   முதுமை வரும்    பயணம் ஒன்றுதான்.                                     தனிமை வரும் துணையும் வரும்    இதயம்  ஒன்றுதான். இப்படிப்போகும் பாடல்தான் நினைவுக்கு வருகிறது...