About Me

My photo

Just one more correspondent.  9/4/1948   பிறந்தநாள்

Saturday, March 23, 2013

Meet the Parents... படத்தின் அலசல்

பாமீலா  க்ரெக்  பாவப்பட்ட ஜோடி:)
நீயா   நானா!1
மாமானாரும் அவரது     செல்லமும்:)
கடவுளே   காப்பாத்து


 பெற்றோரைச் சந்திக்கலாமா!  (Meet  the parents... a  comedy)
**********************************************************************************
Meet the Parents இந்த படம்  தொலைக்காட்சியில் பார்த்தது.

சிகாகோ  சென்ற போது திரை அரங்கிலும் பார்த்தேன்.
2001   என்று நினைக்கிறேன்.

ஒரு நல்ல  காமெடி பார்த்த நிறைவு.

நடிகர்களைப் பொறுத்த வரையில்  ராபர்ட் டி நிரோ,பென் ஸ்டில்லர்
இருவரின்
நகைச்சுவை  படத்தைப் பிடிக்க வைக்கிறது.
ஹீரோ  பென்ஸ்டில்லர்(க்ரெக்) ஒரு  ஆஸ்பத்திரியில் நர்ஸாக வேலை பார்ப்பவர். வெகுளி.
எப்பொழுதும் நல்லதையே நினைத்து அதனாலேயே வம்பில் மாட்டிக் கொள்கிறவர் . அவர் காதலிக்கும் பெண்
பாமீலா  என்னும் பாம் ஒரு   மாந்தசோரி ஆசிரியை.

அவள் அப்பா ஒரு மிலிட்டரியிலிருந்து (ஓய்வுபெற்ற) அதிகாரி/
வீட்டிலும்  இரணுவ முறைப்படி எல்லாம் நடக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்.

முதல் பெண்ணுக்குத் திருமணம் செய்ய ஒத்துக் கொள்ளும் முன் மாப்பிள்ளையின் பெற்றோரை
பரிபூரணமாக   விசாரித்துத் திருமணத்துக்கு ஒத்துக் கொள்கிறார்.

இப்போது இரண்டாவது பெண் ஒரு Jewமாப்பிள்ளையை,
அதாவது பாய்ஃப்ரண்டைப் பற்றிப் பேசும்போது அவருக்கு ரத்த அழுத்தம் ஏறிவிடுகிறது.
என்னவெல்லாமோ செய்து  திருமணத்தை நிறுத்த  ஏற்பாடுகள் செய்கிறார்.
க்ரெக்கின்' பெற்றோர் பெயர் ஃபாக்கர் என்பதில் ஆரம்பித்து அவனுடைய
ஒவ்வொரு நடவடிக்கையையும் கேலிக்குள்ளாக்குகிறார்.
இந்த நிலையில் தான்  காதலர் இருவரும் பமீலாவின்
 பெற்றோரைச் சந்திப்பது என்ற முடிவுக்கு வருகிறார்கள்.

பமீலா,காதலனின் அன்புக்கும், தந்தையின் வெறுப்புக்கும் இடையில் திண்டாடுகிறாள்.

மத வேறுபாட்டினால் சாப்பிட உட்காருகிற முறையிலிருந்து பமீலாவின் அப்பா தப்பு கண்டுபிடிக்கிறார்.
எல்லாவற்றையும்  தன் இயல்பான புத்திசாலித்தனத்தினால்
சமாளிக்கிறான் க்ரெக்.
இதற்கிடையில்  வரப்போகும் மாமனாரின் செல்ல நாய்க்குட்டியின் தொல்லை

 தாளாமல் அதை எப்படி  ஒழித்துக் கட்டுவது என்று க்ரெக் யோசித்து விரட்டியும் விடுகிறான்:)
அவனுக்குத் தெரியாதது மாமனார் எல்லா இடங்களிலும் கண்காணிப்புக் காமிரா பொருத்தி இருப்பது!!

இதை வைத்தே அவனைத் தன் பெண் வாழ்க்கையிலிருந்து
தள்ளிவிடலாம் என்று திட்டமிடுகிறார்.
இந்த நிலையில்தான்,
மாமனாரப் பற்றிய பெரிய ரகசியம் க்ரெக்கிற்குத் தெரிய வருகிறது.
அவர் இன்னும் சிஐஏ  வின்  ஆளாக உலவி வருகிறார் என்று.

விக்கிரமாதித்யனைப் போலத் தளராமல் முயற்சி செய்தும்
காதலியின் கோபத்துக்கும் ஆளாகிறான் க்ரெக்.
அவன் ஒரு மாரியுவான அடிக்ட் என்று நிருபித்து(பொய்யாக)க்
காண்பிக்கிறார்.

கடைசியில் எல்லாம் தெரிய வர  மாமனாரே ஏஏர்ப்போர்ட்டுக்கு வந்து மருமகனாகப் \
போகிறவனைப் போலீசின் பிடியிலிருந்து விடுவித்து அழைத்துச் செல்கிறார்.


இதுதான் கதை.
நடுவில் வரும் சம்பவங்கள் வாய்விட்டுச் சிரிக்கவைக்கும்.
ராபர்ட் டி னீரோ போன்ற பெரிய நடிகரிடம்,அசராமல் தன் பன்முகத்திறமையக்
காட்டி நடித்திருக்கும் பென் ஸ்டில்லர் ஒரு  திறமைசாலி.
நீங்கள் ஏற்கனவே பார்க்கவில்லை என்றால்
கணினியிலியே பார்க்கலாம்.:)
கூகிளார் துணை செய்வார்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்