About Me

My photo

Just one more correspondent.  9/4/1948   பிறந்தநாள்

Thursday, April 12, 2012

நம்ம ஊரு பூமியாட்டம்.!!

வ்
சுனாமி வருமோ.....
வீடு நோக்கி விரையும்  நம்மையே.....
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

நேற்று மதியம் உண்ட மயக்கத்தில் உறக்கம்.

அந்த உறக்கத்திலும் ஏதோ நகருவது போலவும்  அலார்ம் அடிக்கிற மாதிரியும் தோன்றுகிறது. கஷ்டப்பட்டுக் கண்ணை விழித்தால்
உறவினர் ஒருவர் தொலைபேசுகிறார்.
அக்கா  இங்க எல்லாம் நாங்க ஆஃபீசுக்கு வெளியே நிற்கிறொம்.

நீங்க என்ன பண்றீங்க.  எர்த் க்வேக்!!!! ட்ரெயினெல்லாம் ஓடலை.
ஒரே பயம்.'
சாதாரண நாளிலியே நமக்கு மத்தவங்க பேசுவது புரிய  சிறிதே
நேரம் பிடிக்கும்.
 இரவுத் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு நேற்று பகலில் தூங்கிச் சமன் செய்யலாம் என்றால் இதென்னடா பூகம்ப பூதம் வந்ததே.
உடனே   சமாளித்துக் கொண்டு  தட்டிக் கொண்டிருந்த தச்சர் சிங்கத்திடம்
விரைந்தேன். விசாலி போன். ஏர்த்க்வேக் சுனாமி . பையன் எங்க. என்று மூச்சு வாங்கினேன்.
என்ன உளருகிறாய்.
கொஞ்சம் நிதானப் படுத்திக்கோ.
கையில என்ன.
மருந்துப்பொட்டியும், கைப்பை,கைபேசி

எங்க கிளம்பறே.
வீட்டுக்குள்ள இருக்கக் கூடாதே வெளில வாங்க. பையன் எங்க.??????

அவன் இப்பதான் ஏதோ வேலையா ராதாகிருஷ்ணன் சாலைக்குப் போனான்.
அடடா உடனே கூப்பிடணுமே.

டயல் டயல் டயல்.
இல்ல ஒரு நம்பரும் கிடைக்கலை. பக்கத்துவீட்டு நம்பர் கூடக் கிடைக்கலை.

சரி நான் போய்ப் பார்த்து அழைத்துவரேன். நீ டிவி பார்த்து என்னன்னு கேளு.
இவளுக்குன்னு ஏதாவது பயம்.
எனக்குத் தெரியாம  என்ன நில நடுக்கம்  என்று முணுமுணுத்தபடி நகர்ந்தவரை
வேகமாகச் சென்று பிடித்தேன்.
அப்புறம் உங்களைத் தேட முடியாது என்னால்.

ஏம்மா  நார்மலாகவே இருக்க மாட்டியா ரோட்ல பாரு அவரவர்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு என்றபடி திரும்பிப் பார்த்தார். சாலையில் வாகனங்கள் விரைந்து ஓடிக்கொண்டிருந்தன.
எதிர்த்த வீட்டு வாட்ச்மேன். இன்னா சார் பூமி நடுங்கித்தே. அல்லாம் வீட்டுக்குப் போறாங்க  சார்.
ஓ. நீ சொல்றது நிஜம்தானா.
சரி வா. அதற்காகச் சொத்து பூராக் கொண்டுவரவேண்டாம். ரேடியோல  நியூஸ் கேட்கலாம் என்றபடி  எங்க வாக்னாரைக் கிளப்பினார்.

நாங்கள் போகும் நேரம்   வழியெங்கும் நெரிசல் .பீதி. பாதி சிரிப்பு பாதி.
மகன் சென்ற அலுவலகத்துக்குப் பக்கம் அனைவரும் வெளியே நிற்கிறார்கள்..

எங்களைப் பார்த்துவிட்ட மகன்.
அம்மா உன்னைக் கூப்பிட்டேன் . ரிங் போகலை..
சரி இங்க வேலையை முடித்து வரலாம்னு நினைத்தேன் என்கிறான். நாங்களும் இங்கயே நிக்கறோம்பா. நீ பேசிட்டு வா  என்றேன்..

அவன் கிளம்பி வண்டியில் ஏறிக் கொண்டதும் காய்கறி இதர பொரொட்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வரவும் மின்சாரம் நிற்கவும் சரியாக இருந்தது.

 நல்லவேளை சிலநிமிடங்களில் வந்துவிட்டது. எப்பவும் இருக்கும் மின்வெட்டு நேற்று இல்லை.
வீட்டுக் கூடத்தில் எண்டிடிவி அலற,
என் அறையில் சன் டிவி கதற பூகம்ப மஹாத்மியம் 6 மணி அள்வில் ஓய்ந்தது.

சுனாமிவந்தால் எப்படி இருக்கும் என்று   பார்க்கப் போகிறோம் என்ற கும்பலை நினைத்துதான்  மனதுக்கு உறுத்தலாக இருந்தது.
உண்மையில் வந்திருந்தால்????.

புதுவருடம்  நாளை நல்லபடியாகப் பிறக்கட்டும். நந்தன வருடம் நம் ஊரை அமைதியான  நந்தனமாக   இந்த வருடம் ஒளிரட்டும்.


அனைவருக்கும் இனிய  புத்தாண்டு நல்வாழ்த்துகள்.