About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Monday, October 17, 2011

நட்சத்திரம் பதிவாகிறது

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
தமிழ்மணமும் நானும்
*****************************
பலவித சலுகைகளுடன்   ஆரம்பித்திருக்கிறது  என் நட்சத்திர வாரம்.

''உங்களால் முடிந்ததை எழுதுங்கள்.

பழைய பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த,
  முக்கியம் என்று நினைப்பதை
நீங்கள் பதிவிடலாம்.''
இது எனக்குச் சொல்லப்பட்ட  வரைகோடுகள்
நான் என்  தமிழ்மன்றத் தேர்வுக்குக் கூட இவ்வளவு பரபரப்பு அடைந்ததில்லை.

தொலைபேசியிலும் அழைத்து எனக்கு ஊக்கம் கொடுத்த
திரு சங்கர பாண்டிக்கு என் மனம் நிறைந்த நன்றி..
மிகவும் பெருமையாக  இருக்கிறது.

 இது முதல் பதிவாக இருப்பதால்
என் பட்டியலையும் உங்களிடம் சொல்லி விடுகிறேன்.
கொஞ்சம் சொந்தக் கதை, கொஞ்சம் கலகலா,
கொஞ்சம் சுற்றுலா,இரண்டு மீள் பதிவுகள்
ஆச்சரியப் பட வைக்காவிட்டாலும்,
அலுத்துக் கொள்ளாமல் எழுதப் பார்க்கிறேன்.

என்னை மகிழ்விக்கும் இந்ததருணங்களுக்கு  நன்றி.
அதை எனக்கு வாய்ப்பாகக் கொடுத்த தமிழ்மணத்திற்கும் நன்றி.

34 comments:

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகள் அம்மா!

கோமதி அரசு said...

கொஞ்சம் சொந்தக் கதை, கொஞ்சம் கலகலா,
கொஞ்சம் சுற்றுலா.//

அக்கா, ஆவலுடன் எதிப்பார்க்கிறேன்.

மதுரையம்பதி said...

வாழ்த்துக்கள் வல்லியம்மா!....

மதுரையம்பதி said...

வாழ்த்துக்கள் வல்லியம்மா!

அமைதிச்சாரல் said...

பிரபல நட்சத்திரத்திற்கு வாழ்த்துகள் வல்லிம்மா :-))

ஜீப்புல ஏறிட்டீங்க.. நகர்வலம் வெற்றிகரமா அமையட்டும் :-)

அமைதிச்சாரல் said...
This comment has been removed by a blog administrator.
amaithicchaaral said...
This comment has been removed by a blog administrator.
வல்லிசிம்ஹன் said...

நன்றி குமரன். அம்மாவை இவ்வளவு நாட்கள் கழித்தும்
நினைவில் வைத்திருப்பதற்கு மிகவும் நன்றி.
குழந்தைகளுக்கு என் வாழ்த்துகளுமாசிகளும்.

சார்வாகன் said...

வாழ்த்துகள்

கெக்கே பிக்குணி said...

கலக்குங்க! நான் வகை தொகையா ஆணி பொறுக்குவதால், அப்பப்போ வந்து பின்னூட்டம் போடுகிறேன்.

வாழ்த்துகள்!

புதுகைத் தென்றல் said...

congrats vallimma,, kalakunga, kathirukirom

தி. ரா. ச.(T.R.C.) said...

வாழ்த்துக்கள் வல்லியம்மா. ரொம்ப பெருமையா இருக்கு. மீனுக்கு நீச்சல் கற்றுத்தரவா வேண்டும்.ஜமாய்ங்க

வல்லிசிம்ஹன் said...
This comment has been removed by the author.
வல்லிசிம்ஹன் said...

அன்புத் தங்கை கோமதி,

உங்கள் ஆவல் நிறைவேறும்படி நான் எழுத அந்தக் கணேசன் தான் அருளணும். நன்றியம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மௌலி, பழைய கதைகள்
வெளிவரும்.
அதில் மதுரையம்பதியும் வருவார். பாட்டும் வரும்.எல்லாவற்றுக்கும் மிகவும் நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி திரு சார்வாகன்.முதல் வருகைக்கும் நன்றி சொல்லிக் கொள்ளுகிறேன்.இந்த வாரம் சிறக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கெ.பி
நான் மூன்று வருடங்களுக்கு முன் போய்விட்ட நினைவு வருகிறது. எத்தனை அருமையான நட்புகள்.
அதிகம் பதிவுகளுக்குச் செல்வதில்லை.
அதனால் எல்லோருக்கும் என்னை நினைவு இருப்பதே அதிசயம்தான்.
மிக மிக நன்றிகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தென்றல் வரணும்ம்மா.
வலைப்பூக்களை வலம் வந்தே நாட்களாகி விட்டன. திடீரென்று தமிழ்மண நிர்வாகிகளிடமிருந்து
அழைப்பு. ஷாக் அடித்த மாதிரி இருந்தது:)
சினிமாவில் ரி எண்ட்ரி சொல்வார்களே அதுபோல:))))))மிகவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தி.ரா.ச, உங்களுக்குப் பெருமைன்னால் அது எனக்குப் பலமடங்கு சந்தோஷத்தைதருகிறது. ஒரு சாதாரண எழுத்துக்கு இவ்வளவு நட்புகள் அன்புகள். இது எப்பவும் நிலைத்திருக்கணும்.
ரொம்ப ரொம்ப நன்றி.

தருமி said...

நட்சத்திர வாழ்த்துகள்.

காவ்யா said...

Ur nick s beautiful.

The Karudaazhwaar s attractive. From which temple ?

Tamil manram exam ? What do u refer to ? Hav never heard abt such exam ?

Perhaps u r a Tamil pulavar ? Aren't u?

தி. ரா. ச.(T.R.C.) said...

நான் எழுத அந்தக் கணேசன் தான் அருளணும்
நம்ப தோஹகணேசன் தக்குடுவா:)?

பாச மலர் / Paasa Malar said...

மீள் பதிவுகள் என்றாலும் பரவாயில்லை என்ற சலுகைகள் எல்லோருக்கும் வாய்க்காது...உங்கள் பதிவின் தரம் அதற்கான வரவேற்பு அப்படி என்பதால்தான் தமிழ்மணத்தின் விசேட சலுகை என்று நினைக்கிறேன்...வாழ்த்துகள்..

பாச மலர் / Paasa Malar said...

வெளிப்படையான உங்கள் பேச்சுக்குப் பாராட்டுகள்....

ஷைலஜா said...

பதிவுலகின் பாசமலரே!
அதிமதுரசொல்லுக்குரியவரே!-முழு
மதியென முகத்தில் அருள்
நிதியென கருணைவிழிகள்!
வல்லி எனும் பெயரில் அன்பைக்
கொள்ளை அடிப்பவரே -நீவிர்
அள்ளித்தர இருப்பதை
கொள்ளவே நாம் வந்தோமே!
வருக வருக
தருக தருக!

மாதேவி said...

எழுதுங்கள் படிக்க ஆவலுடன் காத்திருக்கின்றோம்.

திகழ் said...

வாழ்த்துகள்

வல்லிசிம்ஹன் said...

வரணும் தருமி சார். இன்று காலைதான் ஐந்து வருடக் கதையை எழுதி முடித்தேன்.
இப்பொழுதும் வந்து வாழ்த்தியதற்கு மிகவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

hello Kavya,
no I am sorry am neither poet nor a writer.
Just a blogger.
And there was an examination for Tamil students long back abt 45 years back.
It may still be there too.
Students liked to take that test and pass with good marks. I have that Certificate with me too:)
like a language master!!
Thank you for dropping by.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பாசமலர்.

அதெல்லாம் ஒன்றும் இல்லைமா.
எனக்கு முந்திய நட்சத்திரமும் ஒன்றிரண்டு மீள்பதிவு எழுதி இருந்தார்.

முடிந்தவரை புதிய பதிவுகளைக் கொடுக்க முயலுகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

ஸ்ரீரங்கநாயகனின் இளைய துணைவியின்
கைக்கிளியே
உமது வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி.
பாசத்தோடு சுரமும் சேர்ந்து பா சுரமாக ஒலிக்கிறது உங்கள் வாழ்த்து மடல்.
நன்றி ஷைலஜா. மனம் நிறைந்தது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி,எப்பொழுதும் போல இப்பொழுதும் வந்து வாழ்த்தியதற்கு மிகவும் நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வரவேண்டும் திகழ்.வெகு நாட்கள் ஆகிவிட்டன உங்களைப் பார்த்து.

ஷைலஜா said...

//தி. ரா. ச.(T.R.C.) said...
நான் எழுத அந்தக் கணேசன் தான் அருளணும்
நம்ப தோஹகணேசன் தக்குடுவா:)?

12:02 PM

////// TRC சாருக்கு ரொம்பவே குறும்புதான்:) எல்லாம் தோஹாதோஷம்:):)