About Me

My photo

Just one more correspondent.  9/4/1948   பிறந்தநாள்

Sunday, October 30, 2011

க்ராண்ட் கான்யன் பார்த்த கதை 2007 ஆம் வருட மீள் பதிவு

Add caption
Add caption

Add caption


Add caption
மகளுக்கு இரண்டாவதாகப் பையன் பிறந்த போது பலவித சிரமங்களுக்கு இடையே என்னையும் சிங்கத்தையும்  க்ராண்ட் கான்யான் அழைத்துப்போன மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் நன்றி சொல்ல இந்தப் பதிவு. கடவுள் எவ்வளவோ நன்மைகள் எங்களுக்குக் கொடுத்திருக்கிறார். அந்த நினைவு மனதை விட்டு நீங்காமல் இருக்கவேண்டும்.


Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portalஉப்பு விக்கப் போனேன் ,மழை வந்ததுனு
பழைய பாட்டு ஒன்று வரும்.
இங்கேதான் வசந்தம் வந்ததச்சு.
நாமும் கிளம்ப வேண்டிய நேரம் வந்தாச்சு.
இனிமேற்கொண்டு அவங்க அவங்க பார்த்துக் கிடட்டும்னு
மனசார எல்லாம் சொல்லி,
மகளெ இனி உன் சமத்து என்று டிரமாடிக்கா ஒரு
ஃபினாலே
வைக்கணும்னு பார்த்தேன்.
வந்தது கிரிக்கெட்.
இதைப் பார்க்காமல்
(இந்தியா போனால் கண் முழிக்கணும்)
இன்னும் ஒரு மாசம்தானே
என்று இந்த வீட்டுக்குரியவர் வாய்மொழியவும்,
எங்க தங்க சிங்கமும் தலையை ஆட்டிவிட்டது.
பெண்ணுக்கு மகா நிம்மதி.
அப்பாடி அடூத்த ஷாட்(தடுப்புசி)க்கு நீ இருப்ப,
கவல இல்லை''
உடனே நான் கதைவிட முடிய்யுமா.
''எங்களுக்கு அப்போ யாரு வந்தா.
எல்லாத்தையும் நாங்களே தான் பார்த்துக் கொண்டோம்
ஹ்ம்ம்ம்!!''
இப்படி இன்னும் ஒரு தரம் சொன்னால்
இன்னோரு லெக்சர் கிடைக்கும்.
என்ன இருந்தாலும் தாய் எட்டடி, குட்டி பதனாறு
எல்லாம் இருக்கு இல்லையா.
நாம வளர்த்தது தானே.
எனக்கே மறந்த பழமொழி எல்லாம் அள்ளி விடுவாங்க அப்பப்போ:-)
எதுக்கு வம்புனுட்டு நானும் சரின்னு சொல்ல,
சரியா ஏப்ரில் 28க்கு
க்ராண்ட் கான்யான் போவதாக முடிவாச்சு.
வலைத்தமிழ்ப் பதிவாளர்கள் சந்திப்பு,
கிரி கெட்ட போட்டியின் இறுதி மேட்ச்.
இப்படிப் பலவித முகூர்த்தங்கள் பொருந்திய தினத்தில்
காலை வான ஊர்தியைப் பிடிக்க
முயற்சித்து , அதைத் தவற விட்டு, அடுத்த வண்டியைப் பிடித்து
10 1/2 மணி வண்டியில் ஏறி,
104 டிகிரி வெயிலில் பளபளக்கும்
ஃபினிக்சுக்கு வந்து சேர்ந்தோம்.
மஹா பெரிய மணற்புயல்
அடிக்க ஆரம்பித்தது.
கொடும கொடுமைனு போனா.........இப்படியா  மணலடிக்கும்!!!!
இப்படி நான் அந்த அல்ட்ரா விமான நிலையத்தில் சொல்லுவேன்னு நீங்க எதிர்பார்த்தா,
மன்னிக்கவும்
நான் அதெல்லாம் சொல்லலை.
நேரே ரெஸ்ட்ரூமுக்குப் போயிட்டேன்.
அங்கேதான் ஜன்னலும் இல்லை
கதவும் நல்லா தடிமனாக இருந்தது.
மகள் வந்து 'ஆல் கிளியர்'
சொன்னதும் தான் வந்தேன் வெளியே.;-)

அன்று இரவு  ஃபினிக்ஸ் நகர வீதிகளை வலம் வந்து
பீட்சா  சாப்பிட்டுவிட்டு,  வீடுதியில் வந்து  படுத்துவிட்டோம்.
******************************************

அரிசோனா மாநிலம் வரண்ட பாலைவனத்தின் எல்லையில் இருக்கிறது.

இது நான் முன்னால் படித்தது.

இப்போது பீனிக்ஸ் அப்படித் தெரியவில்லை.புதிய வெகு நாகரீகமான நகரமாக மினுமினுப்புடன் இருக்கிறது.

ஒரு நாள் அங்குத் தங்கிவிட்டு வாடகைக்கு

எடுத்த காரில் செடோனா நோக்கிப் புறப்பட்டோம்.

வழிநெடுக இந்த நாட்டின் பிரம்மாண்டத்தை

அதிசயத்தபடி பயணம்.

உலகத்தின் அத்தனை மூலை முடுக்கிலிருந்து வந்தவர்கள் இந்த நாட்டை மேம்படுத்தி

இருக்கிறார்கள். இன்னும் செய்து கொண்டு

இருக்கிறார்கள்.

அதில் விளைவது சப்பாத்திக் கள்ளீகள்தான்.

ஆனால் அவைகளின் வகைகளும், பூக்களும் ஆயிரக் கணக்கில்.

எனக்கு கத்தாழை,கள்ளிச் செடிகள் வீட்டுக்கு

ஆகிவராதவை என்ற நினைப்பு.

சென்னை வீட்டில்(சிங்கம்) நிறைய வளர்த்தாலும்

பக்கம் போயிப் பேசி எல்லாம் செய்ய மாட்டேன்.இங்கே அரிசோனா , ப்ஃஈனிக்ஸில் ,ஆராய்ச்சிப் பண்ணை ஒன்றில் 300 வருடங்கள் வயதான காக்டஸ் வகைகளைப் பிரமாண்டமான அளவில் பார்க்கும்போது,

அதிசயத்திலும் அதிசயமாக இருந்தது.

ஒரு கள்ளிப் பூவில் குளிர்ப்பானம் கூட செய்து சாப்பிடுவார்களாம்.
எல்லாவிஷயத்தையும்

ஏர்போர்ட்டில் பார்த்த ஒரு பெண் (நியூயார்க்)

சொன்னாங்க,.

அவங்க ஹண்ட்க்ளைடரில்

போவதற்காக அங்கே இருந்து வந்து இருக்காங்களாம்.

யூ ஷுட் ட்ரை தட்

என்று புன்னகைத்துவிட்டுப் போச்சு அந்தப் பொண்ணு,.

ஒரு பக்கம் சிரிப்பு.

ஒரு பக்கம் ஆசை.

அப்படியே மனசார பறந்துவிட்டு மறுபடி பயணத்துக்கு

வண்டிக்குள் வந்துவிட்டேன்.

'எர்த் கால்லிங் அம்மா.

எர்த் கால்லிங் அம்மா''

இது என் பெண்.ஏம்மா அப்பாப்போ எங்கெயோ போயிடரியே.

இதோ செடோனா வந்தாச்சு.

உன்னுடைய மிஸ்டீக் பவர்ஸ் எல்லாம் வொர்க் ஆவரதா பாரு''

என்று சிரித்த வண்ணம் இறங்கினார்கள்.

பவர்ஸ் இருக்கட்டும். முதல்ல ஒரு பில்டர் காப்பி கிடைக்குமா கேளுனு சொன்னபடி

காணாமப் போன கைகால்களைக் காண்டுபிடிச்சு இறங்கினேன்.

மரத்துப் போச்சு எல்லாம். தப்பா நினைக்காதீங்க.

கண்ணைப் பறிக்கும் அழகு.

சிவப்ப்பில் தோய்ந்த மண் குன்றுகள்.

அருமையான மணம் சூழ்ந்த வீதிகள்.

கலப்படமான மனிதர்களின் கூட்டம்.

பழைய கால வெஸ்டர்ன் படங்களின் போஸ்டர்கள்.நேடிவ் அமெரிகன்ஸ் நிறையப் புழங்கும் இடம் என்பது கச்சிதமாகத் தெரிந்தது.

அங்கங்கே மயங்கிய நிலையில் சில

நபர்கள் சிரித்துக் களித்துக் கொண்டிருந்தார்கள்.

யாருக்கும் அவர்களால் தொந்தரவு இல்லை.

கடைகள்.

முத்து,மாணிக்கம்,பச்சை,அமேதிஸ்ட்,ஓபல்

இன்னும் விதம் விதமான ரத்தின வகைகள்.

சிலது போலி.

சிலது நிஜம்.

நம்ம ஊரிலேயெ பாண்டி பசாரில் பார்க்காததா:-)

இந்த ஊருக்குச் சொந்தக்காரங்க அதான் நேடிவ் இந்தியர்கள்

அன்போடு கலகலப்பாக இருக்கிறார்கள்.

என்னுடைய புத்தக அறிவை வைத்துக்கொண்டு

நீ செயினீ க்ருப்பா

நீ அபாச்சியா

நீங்க peacepipe பிடிக்கிற வழக்கமெல்லாம் விட்டாச்சா/

என்றேல்லாம் கேட்க ஆசை.

நல்லா இருக்காதேனு விட்டு விட்டேன்.

சிங்கம் எப்பவுமே ஆன் கார்ட்:-)

எதையாவது செய்து பேசி விடுவேனோ என்று.

அப்படியும் ஒரு சூவினீயர் கடையில் ஒரு நேடிவ்

இந்தியப் பெண்மணி என்னிடம் அவளுடைய வாழ்க்கை கதையயே சொல்லி விட்டாள்.அவளுக்கும் என்னை மாதிரி பேரன் பேத்தி வேணுமாம்.

ஆனால் பெண்ணை வற்புறுத்த மாட்டாளாம்.

நாந்தான் படிக்கலை.

அவளாவது படிக்கட்டும் என்று விச்தாரமாக்ப் பேசிக் கொண்டிருந்தாள்.

உலகம் முச்சூடும் இதுதான்

பெண்கள் நிலை!!அங்கிருக்கும் சிவப்பு மண்ணுக்கு பெண்சக்தி என்று பெயராம்.

இங்கு கொஞ்ச நாட்கள் இருந்தால் இழந்த

உடல் நலத்தைத் திருப்பி பெறலாம்

என்று நம்புகிறார்கள்.மாற்று நலச் சிகித்சை இங்கே வெகுவாகப்

பயன்படுத்தப் படுகிறது.

மிக அமைதியான இடம்.

எனக்கென்னவோ திருப்பதிக்க்குப் போகும்போது அந்த மலைச் சிகரங்கள் காவல் தெய்வம் போலவும்,

அங்கே இருப்பவர்களுக்கு நிம்மதி கூடுவது போலவும் தோன்றும்.அதே மாதிரி ஒரு நல்ல வைப்ரேஷன் இந்த இடத்திலும் இருக்கிறது.

அங்கே தங்க இடம் கிடைக்காத்தால் மீண்டும் மலைப் பாதையில் பயணித்து

   ஃப்ளாக்ஸ்டாஃப்    என்ற ஊருக்கு வந்தோம்.

அங்கிருந்து க்ராண்ட் கான்யான் 2 மணி நேர

பயணம்.

போகும் வழி எல்லாம் ஆத்தங்கரையும்,

பள்ளத்தாக்கும்,

மலைக்காடுகளும் தான் துணை.

நடுவில் '''குவிஸ்னோசி'''ல்

ஒரு மண்டகப்படி.

சூடான சாண்ட்விச்சை ரசித்தபடி மேலே பயணித்து வந்து சேர்ந்தோம்.

மணி இரவு எட்டு.

இயற்கை அதிசயத்தைப் பார்க்க.நேரம் சரியில்லை

இருட்டில் என்ன செய்ய/

இருக்கவே இருக்கு ஐமாக்ஸ்.

நாளைக்குப் பார்க்கலாமா?