About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Thursday, September 09, 2010

கவனமாகப் பதிவு எழுதப் பயிற்சி

ஆயிரங்களுக்கு மேல் பதிவர்கள் தமிழில் இருக்கிறார்கள்.
அனுபவங்களை எழுதுபவர்கள்.

சமூக சிந்தனையோடு எழுதுபவர்கள்.

கணினி தொடர்பாக உதவி செய்கிறவர்கள்,

புதிர் போட்டு ,பாட்டுகள் அளித்து மகிழ்விக்கிறவர்கள்,

ஆன்மீகம் தொட்டு இறைவனை அருகில் கொண்டு வருபவர்கள்,

கவிதை எழுதுபவர்கள்,

சமையல் குறிப்புகள் கொடுத்து நம் வாழ்க்கையை

வளப்படுத்துபவர்கள்.

மருத்துவக் குறிப்பு எழுதி நம் விழிப்புணர்வைத் தட்டி எழுப்புபவர்கள்...நகைச்சுவையை மைய்யமாக வைத்துத் தொடர்ந்து

சிரிக்க வைப்பவர்கள். இவர்கள் எல்லோரையும் தாண்டி என்னைப் போல்

அவ்வப் பொழுது மொக்கையாகவும்,

கதைகளாகவும்,கொஞ்சம் கோர்வையில்லாத சம்பவங்களையும், கலந்து கட்டி எழுதும்அதிர்ஷ்டம் வாய்த்தவர்களும் இருக்கிறார்கள். விரல் விட்டு எண்ணிவிடலாம் என்வகையைச் சேர்ந்தவர்களை.

நல்ல வேளை தமிழ்ப் பதிவுலகம் பிழைத்தது:)

அதனால் இப்பச் சொல்ல வந்த செய்தி

புகைப்படப் பயணங்கள்''னு ஒரு பதிவு ஆரம்பித்திருக்கிறேன்.

அதில் கொஞ்சம் எழுத்தும் நிறைய படங்களும் இருக்கலாம்.

இந்தப் பதிவை ஆரம்பிக்க உதவியாக இருந்தவர்களுக்கு என் மனமார்ந்த

நன்றி.
இந்த என்ணத்தை   என்னுள் விதைத்த  என் தோழிகளுக்கும் நன்றி.
http://pukaippadapayanangal.blogspot.com/

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

24 comments:

ராமலக்ஷ்மி said...

ஆகா. புகைப்படப் பயண அனுபவங்களைப் ‘பார்க்க’க் காத்திருக்கிறோம். வாழ்த்துக்கள் வல்லிம்மா.

சுட்டி எங்கே?

சந்தனமுல்லை said...

வல்லியம்மா, உங்கள் படங்களின் முதல் ரசிகை நான். :‍-) சீக்கிரம் சுட்டியை பகிரவும். கலக்குங்க!

வல்லிசிம்ஹன் said...

இதல்லவோ நெல்லையின் அன்பு!! நன்றிப்பா.
பழைய வில்லிபுத்தூர் பதிவு இப்போது
http://pukaippadapayananggal.blogspot.com
ஆகியிருக்கிறது:0)
அதில் இந்த மாத வளர்ப்புச் செல்லங்களுக்கான படங்களையும் போட்டு இருக்கிறேன்.
பூக்கடைக்கே விளம்பரம் வேணும்னு தெரிஞ்சவங்க சொன்னாங்கப்பா:) நன்றிம்மா.

திவா said...

:-))
நல்லது.

திவா said...

லிங்க் சரியில்லை. அதை வேணும்ன்னா பதிவு செய்துகொள்ள சொல்லுது!

துளசி கோபால் said...

முதலில் என் வாழ்த்து(க்)களைப் பிடியுங்க.

இன்றையக் கணக்கில் 8017 பதிவுகள் இருக்கு.ரெண்டு மூணு நாலுன்னு வீடுகளைக் கட்டி வச்சுருக்காங்க பலர். எப்படிப் பார்த்தாலும் அஞ்சாயிரம் பதிவர் கேரண்ட்டி:-)

எனக்கு ஒரே ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.

புகைப்படங்கள் சொ.ச.தானே?
:-)))))

கெக்கே பிக்குணி said...

வல்லியம்மா, அந்த உரல் இடிக்க மாட்டேங்குதே? சுட்டி கொடுங்களேன்!

வடுவூர் குமார் said...

போடுங்க...பார்க்க காத்திருக்கோம்.

Sumathi said...

படங்கள் நன்றாக உள்ளன வல்லிம்மா பார்த்தாச்சு:)))))

Sumathi said...

படங்கள் பார்த்தாச்சு வல்லிம்மா நன்றாக உள்ளன வல்லிம்மா:))))

வல்லிசிம்ஹன் said...

வரணும் தம்பி வாசுதேவன். ரொம்பப் பழைய பதிவர்களுக்கே அப்படித்தான் பதில் வரது. பிறகு அந்த லின்க் டபிள் க்ளிக் கொடுத்தால் போகிறது:)

திவா said...

mhum! varalai~

அன்புடன் அருணா said...

வாங்க!வாங்க!

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா கெ.பி. நான் மெயிலில் அனுப்பறேன்பா. அது வேலை செய்யும். ஊருக்கு வந்துட்டுப் போனீங்களாம் :)

வல்லிசிம்ஹன் said...

தம்பி வாசுதேவனுக்கு இப்ப லின்க் வேலை செய்கிறதுன்னு நினைக்கிறேன்.
விநாயக சதுர்த்தி (11 ஆம் தேதி)வாழ்த்துகள். யானை இருக்கே உங்க கிட்ட. அதனால சொல்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

மரப் புகைப்படங்கள் சுட்டவை. மத்ததெல்லாம் நம்ம காமிரால பிடிச்சதுதான் துளசி. தலைப்புல என்ன போட்டு
இருக்கிறேன்:) ?
புகைப் படங்கள் பயணம்..அதாவது ஓரிடத்திலிருந்து வந்து இங்க இருக்கு:) ''என்'' என்கிற வார்த்தையே இல்லை:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் குமார்.
கலந்து கட்டி வண்டிக்காரன் சாப்பாடு மாதிரி தான் பதிவுகள் இருக்கும். அந்தச் சாப்பாட்டின் மகிமையை அறிந்தவள் நான். வருகைக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

ம்ம். இன்னும் எத்தனை நாட்கள் எழுதாமக் கடத்தறீங்கன்னு பார்க்கிறேன் சுமதி:)
உங்க ஆர்வம் எழுத்தில வந்தால் நல்லா இருக்கும்பா.
நன்றிம்மா .

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா அருணா. பதிவை வரவேற்றதற்கு மிகவும் நன்றி. உங்க வார்த்தைக்கு ஏற்ற மாதிரி நல்ல பதிவா இருக்கட்டும்.

கோமதி அரசு said...

புகைப்படப் பயண அனுபவங்களுக்கு ஒரு வலைப் பூ.அருமை.

வாழ்த்துக்கள் அக்கா.

பகிர்ந்து கொண்ட படங்களைப் பார்த்தேன்.

எல்லாம் அழகு.

புதுகைத் தென்றல் said...

me the welcoming and eagerly waiting

வல்லிசிம்ஹன் said...

நன்றிம்மா கோமதி. பழைய படங்களைத் தூசி தட்டிப் போட வேண்டியதுதான்.:)
இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

Ok. thanks pa.
me the posting and you the enjoying, Thenral:)

நானானி said...

சர்தானா கயசு..சர்தானா?

சும்மா வெளாசு!!!