About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Monday, August 27, 2007

DOR, THE MOVIE

இந்த துபாய்க்கு வந்ததில் மிக அருமையான படங்கள் பார்க்க முடிகிறது.
கீழே உள்ள வீடியோ கடையில் உள்ள நல்ல படங்கள் மருமகளுக்கு
அத்துப்படி.
அவங்க டெல்லிப் பொண்ணு ஆகையினால, இந்தி ரொம்ப நல்லாப் பேசுவாங்க.
அவங்க சிபாரிசு செய்து நிறைய சினிமாக்கள் பார்க்க முடிகிறது.
அதில் ஒன்று தான் இந்த 'டோர்' படம்.

வெகு எளிமையாக அதே சமயம் அற்புதக் கவிதை போல எடுத்திருக்கிறார்கள்.

ஒரே சமயத்தில் இரு இளைஞர்கள் தங்கள் மனைவிகளைப் பிரிந்து சவுதி அரேபியாவுக்குப் பிழைக்க வருகிறார்கள்

பணம் சம்பாதித்து கொஞ்ச மாதங்கள் கழிந்த நிலையில்
ராஜஸ்தான் பெண்ணின் கணவன் மாடியிலிருந்து விழுந்து இறந்து விடுகிறான்.

அதற்குக் காரணம் என்று, அவனுடைய அறையில் தங்கியிருந்த காஷ்மீரி
இளைஞன் கைது செய்யப் படுகிறான்.
மரண தண்டனை விதிக்கப் பட்ட நிலையில்,
அவன் மனைவிக்கு, அவனைக் காப்பாற்ற ஒரு வழி கிடைக்கிறது.
இறந்தவனின் மனைவி மனிப்புக் கடிதம் கொடுத்தால் அவன்
மன்னிக்கப் பட்டு வீடு திரும்புவான் என்று இந்தியத் தூதரக அதிகாரி, கஷ்மீரிப் பெண்ணிடம் சொல்கிறார்.

அவளும் ஆள், அடையாளம் தெரியாமல் அங்கிருந்து புறப்பட்டு,
ராஜஸ்தான் வந்து சேருகிறாள்.

என்னவொரு வித்தியசம். ஹிமாசல் பிரதேஷுக்கும், ராஜஸ்தான் மானிலத்துக்கும்!!
இந்தப் பெண்ணின் உறுதியைப் பார்ப்பதா, இல்லை ராஜஸ்தான் பெண்ணின் பரிதாபத்தைப் பார்ப்பதா.
கதையை ஆச்சரியப் படும் விதத்தில் இயக்குனர் எடுத்துச் செல்லுகிறார்.
இறந்த இளைஞனின் மனைவியாக வரும் ஆயேஷாவும், குற்றம் சாட்டப்பட்டவனின் மனைவியாக வரும் குல் என்னும் நடிகையும்
பாத்திரங்களாகவே வாழ்கிறார்கள்.

பாலையின் கடுமையான அழகும், இமாசலப் பிரதேச்சத்தின் செழுமையும்,
கௌரி என்ற இந்தப் பெண்ணின் நடிப்பும், பொதுவாக ராஜஸ்தான்பிரதேசத்தின் மணவினைக் கோட்பாடுகளும்

பெண்களின் அவல நிலையும் என்னை மிக்கவும் பாதித்தன.
நம்ம ஊரில் இல்லையா என்று கேட்கலாம்.

உண்டு.
ஆனால் இந்த இயக்குனர் சொல்லிய்யீருக்கும் விதம் அருமை
முடிந்தால் பாருங்கள்.
Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

15 comments:

துளசி கோபால் said...

ரொம்ப நாளா இந்திப் படம் பார்க்கலை.

நீங்க சொன்னதுக்காகப் பார்க்கறேன் இந்த வாரம்.

வல்லிசிம்ஹன் said...

Please paarungappa.
nallaa irukku. adhe maathri Kabul Express padamum nallaa irukku.
thank you Thulasi.

வடுவூர் குமார் said...

கவித்துவமான படம் என்று சொல்லியிருக்கீர்களே!!
அதான் யோசிக்கவேண்டியிருக்கிறது... எனக்கு.

அபி அப்பா said...

இது ஒரு அருமையான படம். வல்லிம்மா எனக்கு தெரிஞ்சு இது போல ஒரு உண்மை கதை இருக்கு நேரம் கிடைத்தால் எழுதுகிறேன்!

வல்லிசிம்ஹன் said...

Kumaar,
kaviththuvamana padamnu sonnen. because both the girls are so beautiful and the story line is something extra ordinary.
adhuvum antha Ayisha enkiRa actress avalavu arumaiyaa nadicchirukku.
thank you Kumar/.

வல்லிசிம்ஹன் said...

varaNum Abi Appa.

Neram varum illai. appa ezhuthidunga:))))
ethirpaarkkiREn.

Prakash said...

Nice info!

In malayalam also one movie is there with the same story.. i think that movie name is "Perumazhakaalam"

சுல்தான் said...

வல்லிம்மா,
மலையாளத்தில் சமீபத்தில் ஒரு படம் வந்து சக்கை போடு போட்டது. பெயர்:பெருமழக்காலம்
நடிகர்கள்: திலீப், காவ்யா மாதவன் மற்றும் மீரா ஜாஸ்மின்
இதே கதைதான்.
காவ்யா மாதவன் மலையாள அய்யர் வீட்டுப் பெண், தன் துணையை அரபு நாடுகளில் கொல்லக் கொடுத்தவராகவும், மீரா ஜாஸ்மின் முஸ்லீம் பெண், தனது கணவன் திலீபால் கொல்லப்பட்டது அவருடைய நெருங்கிய நண்பர் அது தவறுதலாய் ஏற்பட்டது என்பதையும் தங்களது சிறப்பாக நடிப்பால் வெளிப்படுத்தியிருப்பர். தேர்நத இசையும் படத்துக்கு வலிமை சேர்க்கும்.
படம் பார்த்த பின் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி இருக்கும்.

கோபிநாத் said...

வல்லிம்மா நான் சொல்ல வந்ததை சுல்தான் சொல்லிட்டாரு. அந்த படம் முழுக்க மழையிலேயே எடுத்திருப்பாங்க.அதான் அந்த படத்தின் பெயர் கூட பெருமழைக்காலம்னு இருக்கும்.

அதான் அந்த படத்தின் சிறப்பும் கூட :)

சுல்தான் said...

கோபி ஒரு பாட்டு மட்டும்தான் மழையில் எடுத்திருப்பாங்க. ஆனால் அது படத்தினுடைய முக்கிய கட்டம். அந்தப் படத்தின் இசையமைப்பாளரே அந்த காட்சிக்காக ஒரு அருமையான பாட்டு பாடியிருப்பார். பாட்டு பின்னிசையாக ஒலிக்கும் - அந்த பாட்டில் 'பெருமழக்காலம்' என்று வரிகள் வரும்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ப்ரகாஷ்.
சுல்தானும், கோபிநாத்தும் சொல்லி இருக்காங்க இந்த மலையாளப் படத்தைப் பற்றி.
இப்பொ பார்த்தால் ரெண்டு படத்தோட அருமையும் விட்டுப் போயிடுமோனு பயமா இருக்கு.
கொஞ்ச நாள் கழித்துப் பார்க்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் சுல்தான்.
எனக்குத் தெரியாமல் போச்சு.
இங்க வந்தாதான் படங்கள் பார்க்கும் வழக்கம். சென்னை போனால் வேலை சரியாக இருக்கும்.

எது முதல்ல வந்ததுனு தெரியலையே.
ஹிந்தியா, மலையாளமா.

காவ்யா, மீரா இரண்டு பேருமே நல்ல நடிகைகள்.
முடிந்தால் கேட்டுப் பார்க்கிறேன் வீடியோ கடையில்.
நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

கோபி, பெருமழைக்காலம் என்கிற பேரே நல்லா இருக்கு.
சோகமாவும் இருக்கு.

நம்ம ஊரு பாட்டு ஒண்ணும் ஆ ஈன, மழை பொழியனு வரும்.
அதாவது எல்லாவித இடர்களும் ஒரே நேரத்தில வருகிற மாதிரி.
சுவையாவும், சோகமாவும் இருக்கும்.
எல்லாத்தையும் எப்படி சமாளிப்பது என்கிறதுதானெ வாழ்க்கை.:))

Thenammai Lakshmanan said...

அருமையான விமர்சனம் வல்லிம்மா.

அவர்கள் துன்பம் பார்த்து என்னவோ போலிருக்கு..

வல்லிசிம்ஹன் said...

படத்தை இன்னும் நன்றாக விமரிசித்திருக்கலாம் தேனம்மா. வந்து படித்துக் கருத்தும் சொன்னதற்கு நன்றிப்பா.